Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


தனி தெலுங்கானா விவகாரம்: ஆந்திராவை பிரித்தால் மோசமான முடிவு ஏற்படும்- கிரன்குமார் ரெட்டி

Posted: 27 Jul 2013 10:55 PM PDT

ஆந்திராவை பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அடுத்த மாதம் முதல் வாரத்தில் தெலுங்கானா தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர் பார்க்கப்படுகிறது. ஆனால் மாநிலத்தை பிரிக்க கடலோர ஆந்திரா, ராயலசீமா பகுதியை சேர்ந்த எம்.பி.க்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். ஆந்திர முதல்–மந்திரி கிரன்குமார் ரெட்டியும் தனது

தாயை 6 ஆண்டுகள் இருட்டறையில் அடைத்து வைத்த அதிகாரி

Posted: 27 Jul 2013 10:51 PM PDT

இமாச்சல பிரதேசம் மாநிலத்தில் உள்ள கேகர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் ரகுபீர் சிங். மாநில கால்நடை துறையில் துணை இயக்குனராக இருக்கிறார். இவருடைய தம்பி முரளி லால். இவர் வக்கீலாக இருக்கிறார். இவர்களுடைய தாயார் பெயர் ரேஷ்மி தேவி (வயது 91). இவருடைய கணவர் 6 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அதன் பிறகு தாயாரை கவனிக்க மகன்கள் விரும்பவிலலை. இதனால் அவரை ஒரு இருட்டறையில் அடைத்து வைத்தனர். 6 வருடமாக அவர் அந்த அறையிலேயே இருந்தார். எப்போதாவது ரோட்டியை அவருக்கு உணவாக கொடுப்பார்கள். அதை சாப்பிட்டுவிட்டு வேறு எங்கும் செல்ல முடியாமல் அறையிலேயே முடங்கி கிடந்தார்.

திருப்பதியில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்: தரிசனத்துக்கு 20 மணி நேரம் ஆகிறது

Posted: 27 Jul 2013 10:44 PM PDT

திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். விடுமுறை தினமான நேற்று திருமலையில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. இதனால் ஏழுமலையானை தரிசனம் செய்ய கால தாமதம் ஏற்பட்டது. தர்ம தரிசனத்துக்கு 20 மணி நேரம் ஆனது. வை குண்ட கியூ காம்ப்ளக்ஸ் முழுவதும் நிறைந்து பக்தர்கள் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு

சோலார் பேனல் மோசடி: சிறையில் உள்ள சரிதா நாயருடன் தாயார் சந்திப்பு

Posted: 27 Jul 2013 10:23 PM PDT

கேரளாவில் சோலார் பேனல் மோசடி வழக்கு விசுவரூபம் எடுத்து உள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ள தொழில் அதிபர் பிஜு ராதாகிருஷ்ணன், அவரது மனைவி சரிதா நாயர், கேரள டி.வி. நடிகை ஷாலு மேனன் ஆகியோருடன் கேரள அரசு உயர் அதிகாரிகள், முதல்–மந்திரி உம்மன் சாண்டியின் உதவியாளர்கள் தொடர்பு கொண்டு உள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

பெண் மீது ஆசிட் வீசியவர் போலீஸ் நிலையத்தில் தற்கொலை: கொலை செய்ததாக பெற்றோர் புகார்

Posted: 27 Jul 2013 09:28 PM PDT

டெல்லி அருகே உள்ள காசியாபாத்தை சேர்ந்தவர் லகான் சக்சேனா (வயது 30). அதே ஊரை சேர்ந்த திருமணமான பெண்ணை ஆசைக்கு இணங்கும்படி வற்புறுத்தினார். இதற்கு அந்த பெண் எதிர்ப்பு தெரிவித்தார். அதனால் கோபம் அடைந்த லகான் சக்சேனா அந்த பெண் மீது ஆசிட் வீசினார். பலத்த காயங்களுடன் அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். லகான் சக்சேனா விஜய நகர் போலீசில் சரணடைந்தார். அவரை போலீஸ் காவலில் வைத்து விசாரித்து வந்தனர்.

டெல்லியில் இன்று அதிகாலை பாராளுமன்றம் அருகே துப்பாக்கி சூடு: பைக் சாகச வீரர் பலி

Posted: 27 Jul 2013 09:15 PM PDT

டெல்லி பாராளுமன்றம் தெருவில் உள்ள வின்ஸ்டர் பிளேஸ் என்ற இடத்தில் இன்று அதிகாலை 2 மணியளவில் இளைஞர்கள் பைக் சாகசத்தில் ஈடுபட்டனர். மிகவும் அபாயகரமான இந்த சாகச நிகழ்ச்சியில் 30 வாலிபர்கள் இருந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த ரோந்து போலீசார் வின்ஸ்டர் பிளேஸ் பகுதிக்கு வந்தனர். இது பாதுகாப்பான பகுதி, இங்கு பைக் சாகசம் செய்யக்கூடாது. உடனே இங்கிருந்து செல்லுங்கள் என்று கூறினார்கள். ஆனால் இளைஞர்கள் அங்கிருந்து செல்ல மறுத்தனர். அதோடு போலீசார் மீது கற்களை

உத்தர பிரதேசத்தில் மத கலவரம்: 2 பேர் கொலை

Posted: 27 Jul 2013 09:10 PM PDT

உத்தரபிரதேசம் மாநிலம் மீரட் மாவட்டத்தில் நக்லாமால் என்ற கிராமம் உள்ளது. இங்கு உள்ள கோவிலில் திருவிழா நடந்தது. பகதர்கள் பஜனை பாடல்களை பாடினார்கள். அது ஸ்பீக்கரில் ஒளிபரப்பப்பட்டது. இதற்கு மற்றொரு மதத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஸ்பீக்கரை ஆப் செய்ய சொன்னார்கள். இதற்கு கோவில் தரப்பை சேர்ந்தவர்கள் சம்மதிக்கவில்லை. இதனால் இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. பயங்கர ஆயுதங்களுடன் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் ஒரு பெண் உள்பட 2 பேர் உயிர் இழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம்

தன்னைக் கடித்த பாம்பை திருப்பிக் கடித்துக் கொன்ற விவசாயி

Posted: 27 Jul 2013 08:52 PM PDT

பாம்பென்றால் படையும் நடுங்கும் என்று கூறுவார்கள். ஆனால், தன்னைக் கடித்த பாம்பைத் திருப்பிக் கடித்தால் தனக்கு ஒன்றும் நேராது என்ற பழங்காலத்து சொல்வழக்கில் நம்பிக்கை உடைய ஒரு விவசாயி, அதேபோல் செய்த ஒரு சம்பவம் போபாலில் நடந்துள்ளது. அவரும் உயிர் பிழைத்துள்ளார்.

உணவு பாதுகாப்பு சட்டம் வரலாற்று சாதனை: ராகுல் காந்தி

Posted: 27 Jul 2013 05:13 PM PDT

அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசு உணவு பாதுகாப்பு அவசர சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த சட்டத்தின்படி, நாட்டில் உள்ள ஏழை மக்கள் 82 கோடி பேர் மலிவு விலையில் உணவு தானியங்களை ரேஷன் கடைகள் மூலம் பெற வழி பிறந்துள்ளது

16 வயது இளம் பெண்ணை வற்புறுத்தி விபசாரத்தில் ஈடுபடுத்திய 3 பேர் கைது

Posted: 27 Jul 2013 04:43 PM PDT

16 வயது இளம்பெண்ணை விபசாரத்தில் தள்ளிய 2 பெண்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். உத்தரபிரதேசம் மாநிலம், வாரனாசியை சேர்ந்த 16 வயது இளம்பெண் உடல்நலக் குறைவுக்காக ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார்

தமிழர்களுக்கான பாதுகாப்பை இலங்கை அரசு உறுதிப்படுத்த வேண்டும்: அமெரிக்காவில் அனந்த் குமார் பேட்டி

Posted: 27 Jul 2013 02:17 PM PDT

பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவருடன் அக்கட்சியின் பொதுச்செயலாளர் அனந்த் குமாரும் சென்றுள்ளார். நியூயார்க்கில் பேட்டியளித்த அனந்த் குமார்

நாய் கூட தின்னாத மதிய உணவை நாங்கள் சாப்பிட்டு பரிசோதிப்பதா?: ம.பி. ஆசிரியைகள் போர்க்கொடி

Posted: 27 Jul 2013 01:56 PM PDT

பீகார் மாநில பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 23 மாணவ-மாணவிகள் கடந்த வாரம் பரிதாபமாக பலியாகினர். அந்த பள்ளியின் தலைமையாசிரியையை கைது செய்த போலீசார் அவர் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர்

மோடி, அத்வானி ஆகியோர் நாட்டின் பிரதமர் ஆகவே முடியாது: லல்லு ஆரூடம்

Posted: 27 Jul 2013 01:10 PM PDT

நரேந்திர மோடி, அத்வானி ஆகியோர் ஒருபோதும் நாட்டின் பிரதமர் ஆக முடியாது என லல்லு பிரசாத் யாதவ் கூறினார். பீகார் மாநில முன்னாள் முதல் மந்திரியும், ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சியின் தலைவருமான லல்லு பிரசாத் யாதவ் உத்தரபிரதேச மாநிலம் வாரனாசி நகரில் உள்ள கேதாரீஸ்வரர்

எனது ஆட்சியை கலைக்க மத்திய அரசு சதி செய்கிறது: மம்தா பானர்ஜி 'பகீர்' தகவல்

Posted: 27 Jul 2013 12:57 PM PDT

எனது தலைமையிலான மேற்கு வங்காள மாநில அரசை கலைக்க மத்திய அரசு சதி செய்து வருகிறது என மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். மாநில பட்ஜெட்டை நிறைவேற்ற நேற்று மேற்கு வங்காள மாநில சட்டசபையின் சிறப்புக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது சட்டசபையில் மம்தா பானர்ஜி

எகிப்து ராணுவ துப்பாக்கிச் சூட்டில் முர்சி ஆதரவாளர்கள் 120 பேர் பலி - 4 ஆயிரம் பேர் படுகாயம்

Posted: 27 Jul 2013 12:32 PM PDT

தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிய எகிப்து முன்னாள் அதிபர் முஹம்மது முர்சிக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிபர் பதவியில் இருந்து அவர் விலக வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஒரு மாதத்திற்கும் மேலாக மக்கள் போராட்டத்திற்கு

ரூ.3 லட்சம் கேட்டு 2 1/2 வயது குழந்தையை கடத்திய 11 வயது சிறுவன் பிடிபட்டான்

Posted: 27 Jul 2013 11:52 AM PDT

அரியானா மாநிலம், ரோட்டக் நகரில் ரூ.3 லட்சம் கேட்டு 2 1/2 வயது குழந்தையை கடத்திய 11 வயது சிறுவனை போலீசார் சிறார் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர்

ஆம் ஆத்மி கட்சி கிளையை கர்நாடகத்தில் தொடங்கி வைத்தார் அரவிந்த் கெஜ்ரிவால்

Posted: 27 Jul 2013 10:47 AM PDT

பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக நாடு முழுவதும் கட்சி கிளைகளை தொடங்கி வரும் ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று கர்நாடக மாநில கட்சி கிளையை பெங்களூரில் தொடங்கி வைத்தார்

மூணாறு பகுதியில் வரலாறு காணாத மழை

Posted: 27 Jul 2013 06:57 AM PDT

கேரள மாநிலம் மூணாறில் கடந்த மாதம் 30ம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை பெய்யத் தொடங்கியது. அன்று முதல் இன்று வரை மூணாறில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

பீகாரில் பள்ளிக்கு பூச்சிக்கொல்லி மருந்து கொண்டு வந்த ஆசிரியர் சிறையில் அடைப்பு

Posted: 27 Jul 2013 06:26 AM PDT

பீகார் மாநிலம் சாப்ரா அருகில் உள்ள தொடக்கப்பள்ளியில் கடந்த 16-ம் தேதி மதிய உணவு சாப்பிட்ட குழந்தைகளில் 23 பேர் பலியானது நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. விசாரணையில், மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மதிய உணவு திட்டத்தின்மீது

ஜம்மு காஷ்மீரில் மாடுமேய்த்த சிறுமியை கடத்தி பலாத்காரம்: பொதுமக்கள் போராட்டம்

Posted: 27 Jul 2013 05:18 AM PDT

ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வார் மாவட்டம் பாத்கோட் கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி, கடந்த 24-ம் தேதி மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது 4 பேர் கொண்ட ஒரு கும்பல் அவரை துப்பாக்கி முனையில் மிரட்டி, கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. இது தொடர்பாக அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். அதில், கிராம பாதுகாப்பு


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™