Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


இப்படியொரு கொடுமை இம்மனிதருக்குத் தேவையா?…

Posted: 19 Jul 2013 11:21 PM PDT

இப்படியொரு கொடுமை இம்மனிதருக்குத் தேவையா?…

This posting includes an audio/video/photo media file: Download Now

சச்சின் எனது சூப்பர் ஹீரோ

Posted: 19 Jul 2013 11:19 PM PDT

மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் தான் எனது வாழ்நாள் சூப்பர் ஹீரோ என்று இளம் கேப்டன் விராத் கோஹ்லி கூறியுள்ளார். இங்கிலாந்தில் நடந்த மினி உலக கோப்பை போட்டி மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடந்த முத்தரப்பு ஒருநாள் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்த இந்திய அணி, அடுத்து ஜிம்பாப்வே சென்று 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரில் கேப்டன் டோனிக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதால், இந்திய அணி இளம் வீரர் விராத் [...]

இன்று இலங்கை , தென் ஆப்ரிக்கா மோதல்

Posted: 19 Jul 2013 11:13 PM PDT

இலங்கை , தென் ஆப்ரிக்க அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி கொழும்பு, பிரேமதாசா மைதானத்தில் இன்று நடக்கிறது. இலங்கை சென்றுள்ள தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணி 5 ஒருநாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகளில் மோதுகிறது. முதலில் ஒருநாள் தொடக்கிறது. கொழும்பு, பிரேமதாசா மைதானத்தில் இன்று நடக்கும் முதல் ஒருநாள் போட்டி, இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்குகிறது. வெஸ்ட் இண்டீசில் நடந்த முத்தரப்பு ஒருநாள் தொடரின் பைனலில் இலங்கை அணி குறிப்பிடட்ட [...]

மனுஷன் தற்கொலை பண்றாருனு தவறா நினைச்சிக்காதீங்க….

Posted: 19 Jul 2013 11:11 PM PDT

மனுஷன் தற்கொலை பண்றாருனு தவறா நினைச்சிக்காதீங்க….

This posting includes an audio/video/photo media file: Download Now

பாகிஸ்தான்-வெஸ்ட்இண்டீஸ் மோதிய ஆட்டம் டையில் முடிந்தது

Posted: 19 Jul 2013 11:09 PM PDT

பாகிஸ்தான்- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய 3-வது ஒருநாள் போட்டி செயிண்ட் லுசியாவில் நேற்று நடந்தது. வெஸ்ட்இண்டீசுக்கு முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு  229 ரன் எடுத்தது. கேப்டன் மிஸ்பா- உல்- ஹக் 75 ரன்னும், உமர் அக்மல் 31 பந்தில் 40 ரன்னும் எடுத்தனர். வெஸ்ட்இண்டீஸ் தரப்பில் பிராவோ, ஜேசன் ஹோல்டர் தலா 2 விக்கெட்டும், கேமர் ரோச், டாரன் சமி தலா 1 விக்கெட் கைப்பற்றினார்கள். [...]

அமெரிக்க துணை ஜனாதிபதி ஜோ பிடென் 22-ந்தேதி இந்தியா வருகை

Posted: 19 Jul 2013 11:02 PM PDT

அமெரிக்க துணை ஜனாதிபதி ஜோ பிடென் இந்தியா வருகிறார். பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் தலைவர்களை சந்தித்து பேசுகிறார். அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக பதவி வகிப்பவர் ஜோ பிடென் (70). இவர் இந்தியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டார். இந்த பயணத்தின் முதல் கட்டமாக அவர் வரும் 22-ந்தேதி (திங்கட்கிழமை) இந்தியா வருகிறார். புதுடெல்லி மற்றும் மும்பையில் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். அப்போது ஜோ பிடென் பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் தலைவர்களை சந்தித்து பேசுகிறார். [...]

இந்தியாவில் ஜனநாயகம் மீது 55 சதவீத மக்களுக்கு நம்பிக்கை இல்லை: கருத்துக்கணிப்பில் தகவல்

Posted: 19 Jul 2013 10:58 PM PDT

ஜனநாயகம் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை பற்றி சமீபத்தில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. 22 மாநிலங்களில் சுமார் 5500 பேரிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. ஜனநாயகம் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று 55 சதவீத மக்கள் கருத்துக் கணிப்பில் கூறியுள்ளனர். கடந்த 2005–ம் ஆண்டு இதேபோன்று சர்வே நடத்தப்பட்டிருந்தபோது 47 சதவீத பேர் தங்களுக்கு ஜனநாயகம் மீது நம்பிக்கை இல்லை என்று கூறியிருந்தனர். கடந்த 8 ஆண்டுகளில் ஜனநாயகம் மீது நம்பிக்கை [...]

ஜெயலலிதா சொத்து வழக்கு சுதாகரன் திருமண அலங்காரம் கலை இயக்குனரிடம் விசாரணை

Posted: 19 Jul 2013 10:48 PM PDT

முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் தனி நீதிமன்றத்தில் நீதிபதி பாலகிருஷ்ணா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் பங்களா, ஐதராபாத்தில் உள்ள பங்களா மற்றும் சோழிங்கநல்லூர் பங்களா போன்றவற்றை கட்டிய தலைமை பொறியாளர் மோகன் மற்றும் எலட்க்ரிகல் இன்ஜினியர் பொற்செல்வன் ஆகியோரிடம் ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் விசாரணை நடத்தினார். பின்னர் சுதாகரன் திருமணத்தின் போது அலங்கார வளைவுகள் அமைத்தது தொடர்பாக கலை இயக்குனர் கோபிகாந்த்திடம் குறுக்கு விசாரணை நடத்தினார். விசாரணையில் [...]

உத்தரகாண்டில் சேதமடைந்த சுற்றுலா தலங்களை சீரமைக்க ரூ.3,560 கோடி நிதியுதவி தேவை

Posted: 19 Jul 2013 10:46 PM PDT

உத்தரகாண்டில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் சேதமடைந்த சுற்றுலா கட்டமைப்பு வசதிகளை சீரமைக்க, மத்திய அரசு ரூ.3 ஆயிரத்து 560 கோடி நிதியுதவி அளிக்க வேண்டும் என உத்தரகாண்ட் அரசு கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து உத்தரகாண்ட் சுற்றுலாத்துறை அமைச்சர் அம்ரிதா ராவத் கூறியதாவது: வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் சேதமடைந்த உத்தரகாண்ட் சுற்றுலாத் தலங்களில் கட்டமைப்பு வசதிகளை சீரமைக்க குறுகிய காலத் திட்டமாக ரூ.258.74 கோடியும், இடைக்கால திட்டமாக ரூ.322.07 கோடியும், நீண்ட கால திட்டமாக ரூ.2 ஆயிரத்து [...]

காகம் விரட்டினால் சனி பிடிப்பார் ஜோதிடர் கூறியதால் விரக்தி இன்ஜினியர் தற்கொலை

Posted: 19 Jul 2013 10:41 PM PDT

காகம் விரட்டினால் சனி பிடிக்கும் என்று ஜோதிடர் கூறியதால் இன்ஜினியர் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். கர்நாடகா மாநிலம் கதக் மாவட்டம் லக்ஷ்மேஸ்வரா பகுதியை சேர்ந்தவர் விருபாட்சா. இவரது மகன் ஆனந்த் (23). பெங்களூர் எச்ஏஎல் நிறுவனத்தில் பயிற்சி பொறியாளராக வேலை பார்த்து வந்தார். பெங்களூர் அருகே வாடகை வீட்டில் தனது தம்பியுடன் வசித்து வந்தார். 2 தினங்களுக்கு முன்பு காலையில் வேலைக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து வெளியே வந்தபோது காகங்கள் அவரை துரத்தி தலையில் தாக்கின. [...]


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™