puthiyathalaimurai.tv online |
- ஆஷஸ் கிரிக்கெட்: வலுவான நிலையில் இங்கிலாந்து
- ட்ரூகாலர் தகவல்கள் திருட்டு !
- வட மாநிலங்களில் வெங்காயம் விலை உயர்வால் விற்பனை மந்தம்
- கபினியில் 40,000 கனஅடி நீர் வெளியேற்றம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும்
- எகிப்தில் முர்சியை மீண்டும் அதிபர் பதவியில் அமர்த்தக் கோரி பேரணி
- பில்லூர் அணை நிரம்பியது: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
- கூடங்குளத்தில் 6 மாதத்தில் 2ஆவது அணு உலையில் உற்பத்தி : நாராயணசாமி
- வேலைநிறுத்தத்துக்கு பிறகு கடலுக்குச் சென்ற புதுக்கோட்டை மீனவர்கள்
- விருதுநகரில் பருப்பு வியாபாரியிடம் மோசடி: 3 பேர் கைது
- திருவண்ணாமலை, திருப்பூரில் சாலை விபத்துகளில் 5 பேர் பலி
| ஆஷஸ் கிரிக்கெட்: வலுவான நிலையில் இங்கிலாந்து Posted: 19 Jul 2013 11:11 PM PDT ஆஷஸ் கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணி 264 ரன்கள் பெற்று வலுவான நிலையில் உள்ளது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இந்த போட்டி நடைபெறறு வருகிறது. இந்த போட்டியின் முதல் நாளில் 7 விக்கெட் இழப்புக்கு 287 ரன்கள் எடுத்திருந்த இங்கிலந்து அணி, 2ஆவது நாளான நேற்று மேலும் 74 ரன்கள் சேர்த்து 361 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கடைசி விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ப்ராட் 33 ரன்களும், ஸ்வான் 28 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் ரியான் ஹாரிஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினர். முதல் இன்னிங்ஸை விளையாடிய ஆஸ்திரேலிய அணி, இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 128 ரன்களுக்கு சுருண்டது. ஸ்வான் 5 விக்கெட்டுகள் சாய்த்தார். 233 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடத் தொடங்கிய இங்கிலாந்து அணி, 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில், 3 விக்கெட்டுகளை இழந்து 31 ரன்கள் எடுத்திருந்தது. |
| Posted: 19 Jul 2013 11:08 PM PDT தொலைபேசி எண்களை உலகளாவிய தொகுப்பாக வைத்திருக்கும் ட்ரூகாலர் இணையதளத்தை சிரியன் எலக்ட்ரானின் ஆர்மி என்ற பெயரிலான குழு ஒன்று ஹேக் செய்து, அதனுள் இருந்த தகவல்களை திருடியுள்ளது. ட்ரூகாலர் சர்வரிலிருந்து 7-க்கும் மேற்பட்ட தரவுதளங்களை (டேட்டாபேஸ்) ஹேக்கர்கள் எடுத்துள்ளனர். அதில், ஒரு தரவு தளத்தில் 450 ஜிபி அளவுள்ள தகவல்கள் இருந்துள்ளது. “மன்னிக்கவும் ட்ரூகாலர்… எங்களுக்கு உங்கள் தகவல் தேவைப்பட்டது. நன்றி" என்று டிவிட்டரில் அந்த ஹேக் கும்பல் தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல், ட்ரூ காலர் தரவுதள (டேட்டாபேஸ்) நுழைவு கடவுச்சொல்லையும் அது வெளியிட்டிருந்தது. பொதுவாக ட்ரூ காலரில் பதிவு செய்பவர்கள் தங்கள் ஃபேஸ்புக், கூகுள், டிவிட்டர், யாஹூ நுழைவு மூலம் பதிவு செய்யலாம். அதன்படி ஹேக்கர்கள் திருடிய தரவுதளத்தில் இருந்து, பயனரின் பெயர் கடவுச்சொல் உள்ளிட்ட தகவல்களும் களவாடப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ட்ரூகாலர் மறுப்பு இந்நிலையில், சைபர் தாக்குதல் நடந்திருப்பது உண்மை தான் என்று ஒப்புக்கொண்டுள்ள ட்ரூகாலர், பயனர்களின் கடவுச்சொல் உள்ளிட்ட தகவல்கள் திருடப்பட்டிருப்பது உண்மையல்ல என்று தெரிவித்துள்ளது. சைபர் தாக்குதல் நடந்த உடனேயே, சர்வர் இயக்கம் நிறுத்தப்பட்டதாகவும் அது தெரிவித்துள்ளது. மேலும், பயனர்களின் சமூக வலைதள கடவுச்சொலை சேமித்துவைப்பது இல்லை என்றும் ட்ரூகாலர் தெரிவித்துள்ளது. ட்ரூகாலர் என்றால் என்ன? ட்ரூகாலர் என்பது செல்பேசியில் பயன்படுத்தப்படும் அப்ளிகேசன். இது, உலகளாவிய தொலைபேசி எண் தொகுப்பு கருவி. அதாவது, இதனை ஒருமுறை செல்பேசியில் நிறுவும் போது, பயனர்களின் தொடர்புகள் ட்ருகாலர் தரவுதளத்தில் சேமிக்கப்படும். இதுப்போன்று ஒவ்வொருவருடைய செல்பேசி தொடர்புகளையும் அது எடுத்துக்கொண்டு மிகப்பெரிய தொடர்பு பட்டியலை வைத்திருக்கும். இதனால் பயன் என்னவென்றால், நமக்கு வரும் ஒரு தொலைபேசி அழைப்பு எண்ணுக்குரியவர் நம் தொடர்பில் இல்லை என்றாலும், அந்த எண் வைத்துள்ள இன்னொருவரின் செல்பேசியில் இருந்து ட்ரூகாலரில் பதிவாகியிருந்தால், அந்த பெயர் நமது தொலைபேசியில் தெரியும். 2 கோடி தொடர்புகள் ட்ரூகாலரில் பதிவாகியுள்ளதாக அந்த நிறுவனம் கடந்த ஜூன் மாதம் அறிவித்தது. இதில், 10 லட்சம் இந்தியர்களின் தொடர்பு எண்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹேக்கர்கள் எப்படி திருடினர்? சிரியன் எலக்ட்ரானிக் ஆர்மி எனும் ஹேக்கர் கும்பல்தான் ட்ரூகாலரை தாக்கியது. ட்ரூகாலர் தனது இணையதளத்தை வேர்ட்ப்ரஸ் எனும் தகவல் மேலாண்மை கருவியை கொண்டு வடிவமைத்துள்ளது. வேர்ட்பிரஸ் என்பது திறந்தமூலநிரல் (ஓப்பன் சோர்ஸ்) ஆகும். இதனை புதுப்பிக்காமல் பழைய பதிப்பையே பயன்படுத்தியதால் ஹேக்கர்கள் எளிதாக சைபர் தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. |
| வட மாநிலங்களில் வெங்காயம் விலை உயர்வால் விற்பனை மந்தம் Posted: 19 Jul 2013 11:00 PM PDT வட மாநிலங்களில் வெங்காயத்தின் விலை திடீர் என அதிகரித்து இருப்பதால் அதன் விற்பனை மந்தமாகி உள்ளது. மகராஷ்டிர மாநிலம் மும்பையில் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை 32 ரூபாய் முதல் 40 ரூபாய வரை விற்கப்படுகிறது. இந்த விலை உயர்வுக்கு மழையும் , முறையற்ற போக்குவரத்துமே காரணம் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதேபோன்று மத்திய பிரதேச மாநிலம் போபாலிலும் வெங்காயத்தின் விலை கொடிகட்டி பறக்கிறது . இதனால் பிற காய்கறிகளின் விலையும் உயர்ந்து இருப்பதாக வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர். வெங்காயம் மட்டுமல்ல, பிற காய்கறிகளின் விலையும் அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வு அனைவருக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். |
| கபினியில் 40,000 கனஅடி நீர் வெளியேற்றம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் Posted: 19 Jul 2013 10:50 PM PDT காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கன மழையால் கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஏற்கனவே கபினி அணை முழுக் கொள்ளளவை எட்டியதால், கூடுதலாக வரும் நீர் அனைத்தும் காவிரி ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. இன்று காலை நிலவரப்படி கபினி அணைக்கு 35 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 40 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை தொடர்வதால், கபினியில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் விரைவில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை அடையும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. |
| எகிப்தில் முர்சியை மீண்டும் அதிபர் பதவியில் அமர்த்தக் கோரி பேரணி Posted: 19 Jul 2013 10:48 PM PDT எகிப்தில் அதிபர் பதவியில் இருந்து அகற்றப்பட்ட முர்சியை மீண்டும் பதவியில் அமர்த்தக்கோரி அவரது ஆதரவாளர்கள் பேரணி நடத்தனர். அதேசமயம் முர்சியின் எதிர்ப்பாளர்கள் தாரிர் சதுக்கம் மற்றும் அதிபர் மாளிகைக்கு முன்பு போராட்டம் நடத்தினர். முர்சி பதவியில் இருந்து அகற்றப்பட்டது சரிதான் என அவர்கள் கூறினர். இந்நிலையில் ஜனநாயக முறைப்படி தேர்வு செய்யப்பட்ட ஒருவரை பதவிநீக்கம் செய்தது நியாயமற்றது என இஸ்லாமிய சகோதரத்துவ கட்சியினர் தெரிவித்தனர். அவர்கள் அமெரிக்க கொடிக்கு தீவைத்தனர். இதனிடையே மான்செளரா பகுதியில் முர்சி ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 2 பேர் உயிரிழந்தனர். |
| பில்லூர் அணை நிரம்பியது: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை Posted: 19 Jul 2013 10:45 PM PDT மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணை, நிரம்பியுள்ளது. இதையடுத்து பவானி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 100 அடி உயரமுள்ள பில்லூர் அணையில், பாதுகாப்பு காரணத்திற்காக 98 அடி உயரம் வரை மட்டுமே நீர் அனுமதிக்கப்படுகிறது. இதனால், அணைக்கு வரும் 9 ஆயிரம் கன அடி தண்ணீர், பவானி ஆற்றின் வழியாக முழுமையாக வெளியேற்றப்படுகிறது. இதனால், பவானி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள், பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கடந்த பல நாட்களாக இயக்கப்படாமல் இருந்த பில்லூர் நீர் மின் நிலையம், நேற்று முதல் இயங்கி வருகிறது. அங்கிருந்து 100 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்படுவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| கூடங்குளத்தில் 6 மாதத்தில் 2ஆவது அணு உலையில் உற்பத்தி : நாராயணசாமி Posted: 19 Jul 2013 10:43 PM PDT கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 2ஆவது அணு உலை இன்னும் 6 மாதத்திற்குள் செயல்படும் என மத்திய இணையமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்திற்கு தேவையான மின்சாரத்தை வழங்க பிரதமர் மன்மோகன்சிங் நடவடிக்கை எடுப்பார் என உறுதியளித்தார். நாடாளுமன்றத்தில் உணவுப் பாதுகாப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டால், அதனை எதிர்க்கும் மாநிலங்களும் நடைமுறைப்படுத்தியே ஆக வேண்டும் என நாராயணசாமி தெரிவித்தார். |
| வேலைநிறுத்தத்துக்கு பிறகு கடலுக்குச் சென்ற புதுக்கோட்டை மீனவர்கள் Posted: 19 Jul 2013 10:40 PM PDT 4 நாள் வேலை நிறுத்தத்திற்கு பிறகு, புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் இன்று கடலுக்கு சென்றனர். அரசு அறிவித்த மானியவிலை டீசல் அனைத்து விசைப்படகு மீனவர்களுக்கும் வழங்கப்பட்டது. ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினம் ஆகிய இரண்டு மீன்பிடி தளங்களிலிருந்தும் சுமார் 650 விசைப்படகுகள் கடலுக்கு செல்கின்றன. படகு ஒன்றுக்கு மாதம்தோறும் 1,500 லிட்டர் டீசலை மானிய விலையில் அரசு அளித்து வருகிறது. லிட்டருக்கு 9 ரூபாய் 22 பைசா என்ற விலையில் வழங்கப்படும் இந்த டீசலை கடந்த 2 மாதங்களாக மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் முறையாக வழங்கவில்லை என மீனவர்கள் குற்றம்சாட்டினர். இதைக் கண்டித்து புதுக்கோட்டை மீனவர்கள் கடந்த புதன்கிழமை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய மீன்வளத்துறை அதிகாரி, மானிய விலை டீசலை வழங்க உறுதியளித்தார். இதைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. |
| விருதுநகரில் பருப்பு வியாபாரியிடம் மோசடி: 3 பேர் கைது Posted: 19 Jul 2013 10:33 PM PDT விருதுநகரில் பருப்பு வியாபாரியிடம் 79 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 488 டன் உளுந்தை மோசடி செய்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கணவன், மனைவி ஆகிய 2 பேர் தலைமறைவாக உள்ளனர். ஐசிஏ காலணியைச் சேர்ந்த சக்திவேல் ராஜாவிடம் உளுத்தம்பருப்பை உடைத்துத் தருவதாகக் கூறி இவர்கள் மோசடி செய்துள்ளனர். |
| திருவண்ணாமலை, திருப்பூரில் சாலை விபத்துகளில் 5 பேர் பலி Posted: 19 Jul 2013 10:27 PM PDT திருவண்ணாமலை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் இருவேறு சாலைவிபத்துகளில் 5 பேர் பலியாயினர். 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தில் 3 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மங்கையர்க்கரசி, தமிழ்ச்செல்வி, கார் ஓட்டுநர் மஞ்சுநாதன் ஆகியோர் உயிரிழந்தவர்கள். 4 பேர் படுகாயம் அடைந்தனர். போலீசார் இதைத் தெரிவித்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் அனைவரும் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். திருப்பூர், பெருமாநல்லூர் சாலையில் அண்ணாநகர் என்ற இடத்தில் வீட்டுக்குள் இருந்த தாய், மகள் இருவரும் பலியாகினர். ஊழியர்களை ஏற்றிக்கொணடு வந்த தனியார் பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீட்டிற்குள் புகுந்ததால் வீட்டிற்குள் இருந்த மல்லிகாதேவி என்பவரும், அவரது 3 வயது மகள் பவளக்கொடியும் உயிரிழந்தனர். வீட்டிறகுள் இருந்த சிறுவன் மோகனும், பேருந்துக்குள் இருந்த 8 பேரும் படுகாயம் அடைந்தனர். |
| You are subscribed to email updates from புதிய தலைமுறை To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
தொலைபேசி எண்களை உலகளாவிய தொகுப்பாக வைத்திருக்கும் ட்ரூகாலர் இணையதளத்தை சிரியன் எலக்ட்ரானின் ஆர்மி என்ற பெயரிலான குழு ஒன்று ஹேக் செய்து, அதனுள் இருந்த தகவல்களை திருடியுள்ளது.