Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


காங்கிரசுக்கு எதிரான கோபத்தை ஓட்டுகளாக்க வேண்டும்: பா.ஜ.க.வினருக்கு சுஷ்மா அறிவுரை

Posted: 19 Jul 2013 11:19 PM PDT

காங்கிரஸ் கட்சிக்கு எதிரான மக்களின் கோபத்தை ஓட்டுகளாக்கும் பணியில் பா.ஜ.க.வினர் ஈடுபட வேண்டும் என சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார். மேற்கு டெல்லியில் பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பேசிய பாராளுமன்ற எதிர்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் கூறியதாவது:-

பீகார்: குழந்தைகள் சாவுக்கு கெட்டுப்போன அரிசி-சமையல் எண்ணெய் காரணம் - விசாரணை அறிக்கையில் தகவல்

Posted: 19 Jul 2013 11:05 PM PDT

பீகார் மாநிலம், பாட்னா மாவட்டம், கண்டமான் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் கடந்த திங்கட்கிழமை மதிய உணவு சாப்பிட்ட 23 மாணவ-மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவத்தையடுத்து அந்த பள்ளியின் தலைமையாசிரியை மற்றும் மதிய உணவுக்கு தேவையான மளிகைப் பொருட்களை சப்ளை செய்த அவரது

2014-ம் ஆண்டு தொங்கு பாராளுமன்றம் அமையும்: கருத்துக்கணிப்பில் தகவல்

Posted: 19 Jul 2013 10:39 PM PDT

மும்பையைச் சேர்ந்த இடெல்வெய்ஸ் நிதி சேவை நிறுவனம் 2014-ம் ஆண்டு நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தல் குறித்து கருத்துக்கணிப்பு நடத்தியது. வட்டார அரசியலை அடிப்படையாகக் கொண்டு இது நடத்தப்பட்டது.

இந்தியாவில் ஜனநாயகம் மீது 55 சதவீத மக்களுக்கு நம்பிக்கை இல்லை: கருத்துக்கணிப்பில் தகவல்

Posted: 19 Jul 2013 10:37 PM PDT

ஜனநாயகம் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை பற்றி சமீபத்தில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. 22 மாநிலங்களில் சுமார் 5500 பேரிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. ஜனநாயகம் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று 55 சதவீத மக்கள் கருத்துக் கணிப்பில் கூறியுள்ளனர். கடந்த 2005–ம் ஆண்டு இதேபோன்று சர்வே நடத்தப்பட்டிருந்தபோது 47 சதவீத பேர் தங்களுக்கு ஜனநாயகம் மீது நம்பிக்கை இல்லை என்று கூறியிருந்தனர்.

மதிய உணவு சாப்பிட பள்ளி குழந்தைகள் மறுப்பு: பீகார் மாநில அரசு திணறல்

Posted: 19 Jul 2013 10:29 PM PDT

பீகார் மாநிலத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை மதிய உணவு சாப்பிட்ட பள்ளிக் குழந்தைகள் 23 பேர் பலியானார்கள். சமையலுக்கு பயன்படுத்தப்பட்ட எண்ணை மற்றும் அரிசியில் பூச்சிக்கொல்லி மருந்து கலவை அதிக அளவில் இருந்ததே மதிய உணவு விஷமானதற்கு காரணம் என்று தெரிய வந்துள்ளது. 23 மாணவர்கள் பலியானதைத் தொடர்ந்து பீகார் மாநிலம் முழுவதும் பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் மதிய உணவு மீது பயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பீதியை தணிக்க பீகார் மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துள்ளது.

டெல்லி அருகே மனைவி மற்றும் 2 உதவியாளர்களை துப்பாக்கியால் சுட்ட ராணுவ அதிகாரி

Posted: 19 Jul 2013 10:16 PM PDT

டெல்லி அருகே உள்ள குர்கானைச் சேர்ந்தவர் மேஜர் குல்தீப் சிங். இவர் ராணுவத்தில் சுபேதாராக பணியாற்றி வருகிறார். குடும்பத்துடன் அங்கு ராஜீவ் நகரில் வசித்து வருகிறார். நேற்று இவருக்கும் மனைவி ராஜ்பாலா (40)வுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அது முற்றியதால் ஆத்திரம் அடைந்த குல்தீப் சிங் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார். துப்பாக்கி குண்டுகள் சீறிப்பாய்ந்து மனைவி வயிற்றை துளைத்தது. அருகில் இருந்த 2 உதவியாளர்கள் மீதும் குண்டு காயம் ஏற்பட்டது.

வெள்ளத்தை கடக்க கட்டிலில் தூக்கி வந்த பெண்ணுக்கு நடு ஆற்றில் இரட்டை குழந்தை பிறந்தது

Posted: 19 Jul 2013 10:09 PM PDT

ஆந்திராவில் கடலோர ஆந்திரா மற்றும் தெலுங்கானா பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளது. ஆதிலாபாத் மாவட்டத்தில் ஆதிவாசிகள் நிறைந்த லக்னாபூர் கிராமத்தில் சாலை வசதி கிடையாது. பக்கத்து ஊருக்கு செல்ல வேண்டும் என்றால் அங்குள்ள வாகு ஆற்றை கடந்துதான் செல்ல வேண்டும். தற்போது பலத்த மழையால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இந்த ஊரைச் சேர்ந்த மீராபாய் என்ற கர்ப்பிணி பெண்ணுக்கு நேற்று பிரசவவலி ஏற்பட்டது. வேதனையில் அவர் துடித்தார். ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு

பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை ஆதரிக்க மாட்டோம்: மம்தா பானர்ஜி

Posted: 19 Jul 2013 09:41 PM PDT

மேற்கு வங்க முதல்–மந்திரி மம்தா பானர்ஜி பர்பும் மாவட்டம் ராம்பூர் ஹத் நகரில் நடந்த உள்ளாட்சித் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசினார். அவர் கூறியதாவது:– காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கடந்த 9 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து வருகிறது

உத்தரகாண்ட் சீரமைப்பு பணிகளுக்கு ரூ. 13 ஆயிரம் கோடி: மத்திய அரசிடம் கோரிக்கை

Posted: 19 Jul 2013 09:16 PM PDT

உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த மாதம் ஏற்பட்ட பெரும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். அம்மாநிலம் உள்கட்டமைப்பு முற்றுலும் உருக்குலைந்து போனது. அங்கு மறுசீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

பாராளுமன்ற தேர்தலில் காங். பிரசார குழு பொறுப்பாளராக ராகுல் காந்தி நியமிக்கப்படுகிறார்

Posted: 19 Jul 2013 08:21 PM PDT

பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் பிரசார குழு தலைவராக ராகுல் காந்தி நியமிக்கப்படுவார் என்று அந்த கட்சியின் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் கூறினார்.காங்கிரஸ் பொதுச் செயலாளரும், செய்தி தொடர்பாளருமான திக்விஜய்சிங் நேற்று புனேயில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:– குஜராத் முதல்–மந்திரி நரேந்திர மோடி வகுப்புவாத குற்றச்சாட்டுகளை கூறி, இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் இடையே வேறுபாடு, வெறுப்புணர்வை ஏற்படுத்த முயற்சிக்கிறார். காங்கிரஸ் கட்சி எப்போதுமே மதசார்பின்மை கட்சியாக விளங்குகிறது. நாங்கள் அனைத்து மதங்களையும் மதிக்கிறோம்.ஆர்.எஸ்.எஸ்., விசுவ இந்து பரிஷத் போன்ற அமைப்புகளை தடை செய்ய வேண்டும் என்று மாயாவதி கூறி உள்ளார். இந்த அமைப்புகளை தடை செய்வதன் மூலம் எந்த பயனும் அளிக்காது. நாம் வகுப்புவாத கொள்கை, வெறுப்புணர்ச்சி, வன்முறை ஆகியவற்றை எதிர்த்து போராட வேண்டும்.

படுபித்ரியில் கஞ்சா விற்ற 4 பேர் கைது

Posted: 19 Jul 2013 05:25 PM PDT

உடுப்பி மாவட்டம் படுபித்ரியில் ஒரு வணிக வளாகம் பின்புறம் கஞ்சா விற்பதாக படுபித்ரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு 4 பேர்

மாலேகான் குண்டுவெடிப்பு: வழக்கில் விடுவிக்க கோரி 5 பேர் கோர்ட்டில் மனு

Posted: 19 Jul 2013 02:40 PM PDT

நாசிக் மாவட்டம் மாலேகானில் கடந்த 2006–ம் ஆண்டு நடந்த குண்டுவெடிப்பில் 37 பேர் பரிதாபமாக இறந்தனர். இந்த வழக்கில் கைதான நூருல்ஹூதா சம்சோதாதா, ஷாபீர் அகமது, ரேஸ் அகமது, முகம்மது ஷாகீது, அப்ரர் அகம்து குலாம் ஆகிய 5 பேர் தங்களை குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்க கோரி மும்பை சிறப்பு கோர்ட்டில் மனு செய்தனர்.

டெல்லியில் ராணுவ அதிகாரி, வீட்டில் பிணமாக கிடந்தார்

Posted: 19 Jul 2013 01:26 PM PDT

ராணுவத்தில் மேஜர் ஜெனரலாக பணியாற்றி வந்தவர் ராஜ்பால் சிங். தேசிய மாணவர் படை பிரிவுக்கு மாறுதல் செய்யப்பட்டு, பீகார்-ஜார்கண்ட் மாநில கூடுதல் டைரக்டர் ஜெனரலாக பாட்னாவில் பணியாற்றி வந்தார்.

மும்பையில் குருட்டுப்பெண் மானபங்கம்: பணம் பறிப்பு புகாரை வாபஸ் பெறும்படி மிரட்டல்

Posted: 19 Jul 2013 08:30 AM PDT

மும்பையில் குருட்டுப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர். அகமதாபாத்தைச் சேர்ந்த 37 வயதான ஒரு பெண்ணும், அவரது கணவரும் சமீபத்தில் பிழைப்புக்காக மும்பை வந்தனர். அந்த பெண்ணின் கணவரும் பார்வையில்லாதவர்தான். அவர் ஆயுர்வேத நிபுணர். கடந்த மாதம் இவரை தொலைபேசியில்

பா.ஜனதா தேர்தல் பணிகளுக்கு 20 குழுக்கள் அறிவிப்பு: அத்வானி வழிநடத்துவார்

Posted: 19 Jul 2013 08:22 AM PDT

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தல் மற்றும் மாநில சட்டமன்றத் தேர்தல்களை எதிர்கொள்ள பா.ஜனதா தயாராகி வருகிறது. பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் கட்சியின் தேர்தல் பிரச்சாரக்குழு தலைவராக மோடி நியமிக்கப்பட்டு தேர்தல் பணிகள் தொடங்கின. இந்நிலையில் தேர்தல் தொடர்பான பல்வேறு அம்சங்களை கவனிக்கும் குழுக்கள்

மோடி மதவாதி அல்ல என்று கூறமுடியாது: அன்னா ஹசாரே

Posted: 19 Jul 2013 07:08 AM PDT

சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே இன்று டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:- நரேந்திர மோடி மதவாதியல்ல என்று நான் சொன்னதில்லை. என்னிடம் எந்த ஆதாரமும் இல்லாததால் அதுபற்றி கூற முடியாது. அதேபோல் நான் அவரை ஒருபோதும் பாராட்டியதும் இல்லை. அடுத்த தேர்தலில் பா.ஜனதா கட்சிக்கு மோடி தலைமை தாங்குகிறார். பா.ஜனதா

2ஜி வழக்கில் அரசு தரப்பு சாட்சியாகிறார் அனில் அம்பானி: கோர்ட் அனுமதி

Posted: 19 Jul 2013 06:02 AM PDT

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில், அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டெலிகாம் நிறுவனத்திற்கு அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதல் அலைக்கற்றை லைசென்ஸ் பெறுவதற்காக, ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தை பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. மேலும் இதுதொடர்பாக 2011ம் ஆண்டு ரிலையன்ஸ் நிறுவனத்தின் 3 அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்.

தொடரும் மதிய உணவு சோகம்: கோவாவில் 20 குழந்தைகளுக்கு வாந்தி-மயக்கம்

Posted: 19 Jul 2013 05:48 AM PDT

பீகார் மாநிலத்தில் மதிய உணவு சாப்பிட்ட குழந்தைகளில் 23 பேர் உயிரிழந்ததையடுத்து நாடு முழுவதிலும் மதிய உணவு திட்டத்தை கண்காணிக்க அதிகாரிகள் முடுக்கி விடப்பட்டுள்ளனர். இருப்பினும் ஆங்காங்கே மதிய உணவில் உள்ள குறைபாடுகள் வெளிப்பட்டு வருகின்றன. பீகார், டெல்லி மற்றும் தமிழ்நாட்டில் மதிய உணவு சாப்பிட்ட குழந்தைகள் பாதிக்கப்பட்டதைத்

தரமற்ற மதிய உணவு வழங்கியதால் ஆத்திரம்: பீகாரில் ஆசிரியர்களுடன் மாணவர்கள் மோதல்

Posted: 19 Jul 2013 04:55 AM PDT

பீகார் மாநிலம் சரன் மாவட்டத்தில் அரசு வழங்கும் இலவச மதிய உணவை சாப்பிட்ட குழந்தைகள் வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் 27 குழந்தைகள் பரிதாபமாக இறந்துள்ளனர். இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த மத்திய அரசு, மதிய உணவின் தரத்தை ஆய்வு செய்வதற்காக தனி குழுவை அமைக்க முடிவு செய்துள்ளது.

உத்தரகாண்டில் மீண்டும் கன மழை: நிலச்சரிவால் வீடுகள் சேதம்

Posted: 19 Jul 2013 04:45 AM PDT

உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த மாதம் பெய்த தொடர் மழையால் இமயமலைப் பகுதியில் யாத்திரை சென்ற ஏராளமான பக்தர்கள் பலியாகினர். கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கணக்கிலடங்காத சேதம் ஏற்பட்டுள்ளது. மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 5500ஐ எட்டும் என அஞ்சப்படுகிறது. தொடர்ந்து நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™