Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


மயிர் கூச்செரியும் ஒரு ஷோ.

Posted: 10 Jul 2013 11:12 PM PDT

மயிர் கூச்செரியும் ஒரு ஷோ.

This posting includes an audio/video/photo media file: Download Now

இந்த பெண்ணிடம் ஆண் குடிமகன்கள் தோற்றுப் போயிடுவாங்க போல.

Posted: 10 Jul 2013 11:09 PM PDT

இந்த பெண்ணிடம் ஆண் குடிமகன்கள் தோற்றுப் போயிடுவாங்க போல.

This posting includes an audio/video/photo media file: Download Now

சிங்கத்திற்கு போய் இப்படி சுவர்ல பல்லியா ஒட்டுறாங்களே!

Posted: 10 Jul 2013 11:08 PM PDT

சிங்கத்திற்கு போய் இப்படி சுவர்ல பல்லியா ஒட்டுறாங்களே!

This posting includes an audio/video/photo media file: Download Now

இளம்பெண்ணின் ஜீன்ஸ் பாக்கட்டில் இருந்த கலக்ஸி எஸ்-3 மொபைல் வெடித்தது!

Posted: 10 Jul 2013 10:41 PM PDT

சுவிட்சர்லாந்தை சேர்ந்த 18 வயது இளம்பெண் பேன்னி ஸ்க்லாட்டர். இவர் தனது கால்சட்டை பாக்கெட்டில் தன்னுடைய சாம்சங் கலக்ஸி எஸ் 3 மொபைலை வைத்திருந்தார். எதிர்பாராத விதமாக சாம்சங் காலக்ஸி எஸ் 3 மொபைல் அவரது பாக்கெட்டிலேயே வெடித்தது. இதனால் அவரது தொடை பகுதியில் பெருத்த காயங்கள் உண்டாகியுள்ளன. இந்த சம்பவம் குறித்து சுவிட்சர்லாந்தில் உள்ள சாம்சங் நிறுவனம் விசாரனை நடத்துவதாகவும் மற்றும் இந்த மொபைலை கொரியாவுக்கு அனுப்பி சோதித்து பார்க்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

ரூ. 2.32 கோடிக்கு ஏலம் போன ஆப்பிள் நிறுவனத்தின் முதல் கம்ப்யூட்டர்

Posted: 10 Jul 2013 10:32 PM PDT

ஆப்பிள் நிறுவனம் தயார் செய்த முதல் கம்ப்யூட்டர், ரூ. 2.32 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் தொழில்நுட்ப நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான ஸ்டீவ் வோஸ்நியாக்கினால் 1976-ம் ஆண்டு ஆப்பிள்-1 கம்ப்யூட்டர் தயாரிக்கப்பட்டது. இந்தக் கம்ப்யூட்டரின் "மதர்போர்டு' மரத்தில் பொருத்தப்பட்டிருந்தது. இதில் வோஸ்னியாக், தனது கையெழுத்திட்டிருந்தார். இக்கணினி, லண்டனில் உள்ள கிறிஸ்டீஸ் ஏல நிறுவனத்தின்மூலம் இணையத்தின் வழியாக ஏலம் விடப்பட்டது. இது, ரூ. 2.32 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டது. ஏலம் எடுத்தவர் குறித்த விவரம் தெரியவில்லை. ஆப்பிள்-1 வடிவில் [...]

This posting includes an audio/video/photo media file: Download Now

தலைமைத்துவம் பெண்களை அகம்பாவம் கொள்ள வைத்துவிடுகிறது. – சபாநாயகர் சமல் ராஜபக்ஷ

Posted: 10 Jul 2013 10:24 PM PDT

பெண்கள் கர்வம் பிடித்தவர்கள் என்றும், பெண்களின் தலைமைத்துவத்தின் எந்தவொரு விடயமும் சரிவர நடப்பதில்லை என்றும் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ கடுமையாக விமர்சித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று நாடாளுமன்ற பெண் உறுப்பினர்களின் அமைப்பின் கூட்டம் அதன் தலைவி அமைச்சர் சுமேதா ஜயசேன தலைமையில் நடைபெற்றது. அதன்போது சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, அங்கு உரையாற்றும்போதே மேற்கண்ட கருத்தை வெளியிட்டுள்ளார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர், பெண்களுடன் சேர்ந்து பணியாற்றுவது மிகவும் கடினமானது. அதிலும் பெண்கள் தலைமைத்துவத்துக்கு வந்துவிட்டால் [...]

This posting includes an audio/video/photo media file: Download Now

பொதுநலவாய மாநாடு ஏற்பாடுகளின் போது நாட்டின் தனித்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் ஒழுங்குகள் செய்யப்படும்

Posted: 10 Jul 2013 10:17 PM PDT

நாட்டின் தனித்துவ அடையாளங்களை பிரதிபலிக்கும் வகையில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாடு ஏற்பாடு செய்யப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. தேசிய தன்மையும், நாட்டின் தனித்துவ அடையாளங்களையும் பிரதிபலிக்கும் வகையில் நிகழ்வுகளை ஏற்பாடு செய்யுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாடு ஏற்பாடுகள் குறித்த கூட்டம் அலரி மாளிகையில் நடைபெற்றுள்ளது.மாநாட்டிற்கான ஏற்பாடுகள் குறித்து இந்த கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. மாநாட்டுக்கு சமாந்தரமாக பல்வேறு கண்காட்சிகள் போட்டிகள் என்பனவும் ஒழுங்கு செய்யப்பட [...]

This posting includes an audio/video/photo media file: Download Now

துளிர் விட்டு வளர்ந்து வந்த கிழக்கு மாகாண சபையை வாட்டி வதங்கவைத்த பெருமை தமிழ்த் தேசிய கூட்டமைப்பையே சாரும்

Posted: 10 Jul 2013 10:08 PM PDT

துளிர்விட்டு வளர்ந்த கிழக்கு மாகாண சபையை வதங்க வைத்த பெருமை தமிழ்த் தேசிய கூட்டமைப்பையே சாரும் என முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார். மட்டக்களப்பு மண்முனை மேற்கு கல்வி வலயத்திலுள்ள கரடியனாறு மகா வித்தியாலயத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், "1987ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தத்தின்; பிரகாரம் அமையப்பெற்ற வட கிழக்கு [...]

This posting includes an audio/video/photo media file: Download Now

செயற்கை மூச்சுக்குழல் பொருத்தப்பட்டபெண் குழந்தை சாவு : அமெரிக்காவில் சோதனை முயற்சி தோல்வி

Posted: 10 Jul 2013 09:52 PM PDT

hanna

hannaஅமெரிக்காவில் செயற்கை மூச்சுக்குழல் பொருத்தப்பட்ட 2 வயது பெண் குழந்தை இறந்து விட்டது. உலகிலேயே மிகக் குறைந்த வயதில் இந்த அறுவை சிகிச்சை செய்து கொண்ட குழந்தை இது. கொரியா மற்றும் கனடா நாட்டைச் சேர்ந்த பெற்றோருக்கு பிறந்த ஹன்னா வாரன் என்ற குழந்தை மூச்சுக் குழாய் இல்லாமலே பிறந்தது. இந்த குறைபாடுடன் பிறக்கும் குழந்தைகள் 99 சதவீதம் இறந்து விடுகின்றன. ஆனால், ஹன்னாவுக்கு வாயையும், நுரையீரலையும் இணைக்கும் வகையில் குழாய் வைத்து தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து வைத்திருந்ததால் அவள் உயிர் பிரியாமல் இருந்தது.

இந்நிலையில், ஹன்னாவுக்கு ஆய்வுக் கூடத்தில் செயற்கையாக மூச்சுக்குழாயை தயாரித்து பொரு த்தும் அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. ஹன்னாவின் எலும்பு மஜ்ஜையிலிருந்து எடுக்கப்பட்ட ஸ்டெம் செல்களையும், பிளாஸ்டிக் பைபரால் செய்யப்பட்ட குழாயையும் பயன்படுத்தி ஆய்வகத்தில் செயற்கையாக மூச்சுக்குழாயை உண்டாக்கி அதை அறுவை சிகிச்சை மூலம் இணைக்க முடிவு செய்யப்பட்டிருந்தது.

நம் உடலில் இருக்கும் எந்த வகை செல்களைப் போலவும் ஸ்டெம் செல்களை வளர்க்க முடியும். அந்த செல்களால் உருவாக்கப்பட்ட உறுப்புகளை நமது உடல் ஏற்றுக்கொள்ளும். அதுமட்டுமின்றி புதிய திசுக்கள் வளர்வதும், குணமடையும் திறனும் பெரியவர்களை விட குழந்தைகளுக்கு அதிகமாக இருக்கும். எனவே, ஹன்னாவுக்கு ஆய்வகத்தில் செயற்கை முறையில் ஸ்டெம் செல் தொழில்நுட்பம் மூலம் மூச்சுக்குழாய் உருவாக்கப்பட்டது.

இல்லினாய் குழந்தைகள் மருத்துவமனையில் கடந்த ஏப்ரல் 9ம் தேதி செயற்கை மூச்சுக்குழாய் பொருத்தும் அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. ஸ்வீடனின் ஸ்டாக்ஹோம் நகரில் அமைந்துள்ள கரோலின்ஸ்கா இன்ஸ்டிடியூட் டாக்டர் பாலோ மக்கியாரினி அந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டார். அவர் ஏற்கனவே இதுபோன்ற 6 அறுவை சிகிச்சைகளை மேற்கொண்ட அனுபவம் பெற்றவர்.

அறுவை சிகிச்சை முடிந்த ஒரு மாதத்துக்கு பிறகு ஹன்னா தானாகவே சுவாசித்து வந்தாள். ஆனால் அவரது நுரையீரல் படிப்படியாக பாதிப்படைந்து இறந்து விட்டாள். இதனால், குழந்தையின் பெற்றோர் மட்டுமின்றி டாக்டர்களுக்கு வேதனை ஏற்பட்டது. இல்லினாய் குழந்தைகள் மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் மார்க் ஹால்டர்மென் கூறுகையில், ''செயற்கை மூச்சுக்குழாய் பொருத்தும் அறுவை சிகிச்சை செய்தபோது ஹன்னாவின் உணவுக் குழாயிலும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த காயம் ஆறவே இல்லை'' என்றார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

இறந்ததாக நினைத்து உறுப்புகளை அறுத்து எடுக்க முயன்ற போது டாக்டர்களுக்கு அதிர்ச்சி அளித்த பெண்

Posted: 10 Jul 2013 09:44 PM PDT

ameri

ameriமூளைச்சாவு அடைந்து விட்டதாக கருதப்பட்ட பெண்ணின் உடல் உறுப்புகளை டாக்டர்கள் எடுக்க முயன்றபோது, அந்த பெண் கண் திறந்தார். டாக்டர்களை அதிர்ச்சியடையச் செய்த இந்த சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது. தவறாக சிகிச்சை அளித்த மருத்துவமனைக்கு ரூ.13 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்தவர் கால்லின் பர்ன்ஸ் (41). இவர் கடந்த 2009 அக்டோபரில் அதிகளவில் மருந்துகளை சாப்பிட்டதால் நினைவிழந்தார். நியூயார்க்கில் உள்ள செயின்ட் ஜோசப் மருத்துவமனையில் பர்ன்ஸ் அனுமதிக்கப்பட்டார்.

டாக்டர்கள் முறையாக சிகிச்சை அளிக்கவில்லை. அவர் சாப்பிட்ட மருந்தால் அவரது வயிறு, குடல் பகுதிகள் பாதிக்காமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. அவரது வயிற்றில் மருந்து தங்கியுள்ளதா என சோதனையிடவில்லை. மூளை செயல்படுகிறதா என்று ஸ்கேன் பரிசோதனை செய்யவில்லை. ஆனால், நீண்ட நாளாகியும் அவர் நினைவு திரும்பாததால், அவர் மூளைச்சாவு அடைந்து விட்டதாக டாக்டர்கள் முடிவெடுத்து விட்டனர்.

பர்ன்ஸ் கிட்டத்தட்ட இறந்து விட்டார் என்று அவரது உறவினர்களிடம் டாக்டர்கள் கூறவே, அவர்களும் பர்ன்ஸ் உயிரை காப்பாற்ற வைக்கப்பட்டிருந்த உபகரணங்களை அகற்ற சம்மதித்தனர். மேலும், அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்கவும் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து, பர்ன்ஸ் உறுப்புகளை எடுக்க டாக்டர்கள் முடிவு செய்தனர். உடலை வெட்டி உறுப்புகளை எடுப்பதற்கு முன் பர்ன்ஸுக்கு சில சோதனைகளை நர்ஸ் செய்தபோது அவரது உடலில் அசைவு தெரிந்தது. ஆபரேஷன் தியேட்டருக்கு அழைத்துச் சென்றபோது அவரது உதடு, நாக்கு அசைந்ததை அந்த நர்ஸ் பார்த்தார்.

ஆனால், நர்ஸ் கூறியதை டாக்டர்கள் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. அறுவை சிகிச்சைக்கு முன் பர்ன்ஸுக்கு நரம்புகளை அமைதிப்படுத்தும் மருந்து ஊசி மூலம் செலுத்தப்பட்டது. அப்போது யாரும் எதிர்பாராதவிதமாக பர்ன்ஸ் திடீரென கண் விழித்தார். அவ்வளவு பேரும் ஆடிப் போய் விட்டனர்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விசாரணையில், செயின்ட் ஜோசப் மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டது உறுதியானதால், மருத்துவமனைக்கு ரூ.13 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் மருத்துவமனையின் தரத்தை உறுதி செய்ய ஆலோசகரை நியமிக்கவும், மூளைச்சாவு அடைந்ததை கண்டுபிடிக்க நரம்பியல் நிபுணர் மூலம் தனது ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கவும் அந்த மருத்துவமனைக்கு உத்தரவிடப்பட்டது.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™