மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- தனி தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு: ராயலசீமா, கடலோர ஆந்திராவில் நாளை முழு அடைப்பு
- உத்தரகாண்ட் மறுசீரமைப்புப் பணி: பிரதமர் தலைமையில் அமைச்சர் குழு அமைப்பு
- ஜம்மு காஷ்மீர் தலைமைச் செயலகத்தில் தீ விபத்து
- தென்மேற்கு பருவமழை தீவிரம்: கேரளாவில் மீண்டும் கனமழை
- உ.பி.யில் போட்டியிட நரேந்திரமோடி முடிவு: முலாயம்சிங் சவாலை ஏற்கிறார்
- உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயதை குறைக்க வேண்டும்: நீதிபதி ஆர்.எம். லோதா
- அரசின் செயல்பாட்டில் நீதித்துறை தலையீடு இருந்தால் பிரச்சினைகள்தான் ஏற்படும்: கபில் சிபல்
- நிலக்கரி ஊழல்: அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
- மேற்கு வங்கத்தில் சிக்கலான பஞ்சாயத்து தேர்தல் இன்று நடக்கிறது
- உ.பி. பாரதீய ஜனதா அரசியலில் மோடியால் மாற்றத்தை கொண்டுவரமுடியாது: முலாயம் சிங்
- பெங்களூர்: 5 மாதமாக சிறுமியை கற்பழித்து வந்தவர் கைது
- இஷ்ரத் ஜகான் தீவிரவாதியா என்பது கண்டுபிடிக்கப்படும்: சுஷில் குமார் ஷிண்டே
- எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் மீதான சுப்ரீம் கோர்ட் உத்தரவு: அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யலாம் என தகவல்கள்
- உ.பி-ல் 4 வயது சிறுமி கடத்தி, கற்பழித்து கொலை: 50 கத்திக்குத்து காயங்களுடன் சடலம் கண்டுபிடிப்பு
- சூரிய மின்சக்தி ஊழல்: ராஜினாமா செய்ய மாட்டேன்- உம்மன்சாண்டி
- ஜார்க்கண்டில் ஜனாதிபதி ஆட்சி பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: பா.ஜனதா வலியுறுத்தல்
- இந்தியாவில் தங்கக்கட்டிகள்-காசுகள் விற்பனை நிறுத்தம்: வர்த்தக கூட்டமைப்பு அறிவிப்பு
- 2ஜி வழக்கு: தயாளு அம்மாள் உடல்நிலையை ஆய்வு செய்ய சுப்ரீம் கோர்ட் உத்தரவு
- ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை விலக்கிக் கொள்ள கவர்னர் பரிந்துரை
- புகழ்பெற்ற பூரி ஜெகநாதர் கோவில் தேரோட்டம் கோலாகலமாக நடந்தது: பக்தர்கள் பரவசம்
| தனி தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு: ராயலசீமா, கடலோர ஆந்திராவில் நாளை முழு அடைப்பு Posted: 10 Jul 2013 10:52 PM PDT ஆந்திராவை பிரித்து தனி தெலுக்கானா மாநிலம் அமைப்பது குறித்து டெல்லியில் நாளை காங்கிரஸ் தலைவர்களுடன் சோனியா காந்தி ஆலோசனை நடத்துகிறார். கூட்டத்தில் பங்கேற்க ஆந்திர முதல்–மந்திரி கிரண் குமார் ரெட்டி, துணை முதல்–மந்திரி தாமோதரராஜ நரசிம்மா, மாநில காங்கிரஸ் தலைவர் சத்யநாராயணா ஆகியோர் அழைக்கப்பட்டு உள்ளனர். தனி தெலுக்கானா குறித்த வரைபடம், விவரங்கள், மக்களின் கருத்துக்கள் அடங்கிய அறிக்கையை தயார் செய்து வரும்படி அவர்கள் பணிக்கப்பட்டு உள்ளனர். |
| உத்தரகாண்ட் மறுசீரமைப்புப் பணி: பிரதமர் தலைமையில் அமைச்சர் குழு அமைப்பு Posted: 10 Jul 2013 10:40 PM PDT உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த மாதம் பெய்த கடும் மழை காரணமாக, வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். |
| ஜம்மு காஷ்மீர் தலைமைச் செயலகத்தில் தீ விபத்து Posted: 10 Jul 2013 10:31 PM PDT ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் தலைமைச்செயலம் அருகே 2 மாடி கட்டிடம் உள்ளது. இதில் அரசின் பல்வேறு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இன்று காலை இந்த கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. |
| தென்மேற்கு பருவமழை தீவிரம்: கேரளாவில் மீண்டும் கனமழை Posted: 10 Jul 2013 10:30 PM PDT கேரளாவில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை குறிப்பிட்ட காலத்தில் கடந்த ஜூன் 1–ந்தேதி தொடங்கியது. இந்த மழை திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழை, கொச்சி என்று மாநிலம் முழுவதும் பரவலாக பெய்தது. தொடர்ந்து கன மழையாக நீடித்ததால் கேரளாவில் பல இடங்களில் நிலச்சரிவுகள், மரங்கள் வேரோடு சாய்தல் |
| உ.பி.யில் போட்டியிட நரேந்திரமோடி முடிவு: முலாயம்சிங் சவாலை ஏற்கிறார் Posted: 10 Jul 2013 10:15 PM PDT பாராளுமன்றத்தேர்தலில் பாரதீய ஜனதாவின் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்–மந்திரி நரேந்திரமோடியை முன் நிறுத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. பாரதீய ஜனதாவின் பிரசாரக்குழுவுக்கு தலைமை பொறுப்பு ஏற்றுள்ள மோடி இப்போதே பிரசார ஏற்பாடுகளை தொடங்கி விட்டார். அரசியலில் தனது வலது கரமாக திகழும் அமீத்ஷாவை அவர் உத்தரபிரதேச மாநில தேர்தல் பொறுப்பாளராக நியமனம் செய்துள்ளார். |
| உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயதை குறைக்க வேண்டும்: நீதிபதி ஆர்.எம். லோதா Posted: 10 Jul 2013 08:54 PM PDT உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயது தற்போது 65 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பல்வேறு தரப்பினரும், சட்ட வல்லுனர்களும் இந்த வயது வரம்பை உயர்த்த வேண்டும் என்று கூறிவருகின்றனர். இந்நிலையில் நேற்று உச்ச நீதிமன்ற நீதிபதியான ஆர்.எம். லோதா, ஓய்வு வயதை 62 ஆக குறைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். |
| அரசின் செயல்பாட்டில் நீதித்துறை தலையீடு இருந்தால் பிரச்சினைகள்தான் ஏற்படும்: கபில் சிபல் Posted: 10 Jul 2013 08:53 PM PDT அரசின் செயல்பாட்டில் நீதித்துறை தலையீடு இருந்தால் பிரச்சினைகள்தான் ஏற்படும்" என, மத்திய சட்ட அமைச்சர் கபில் சிபல் குறை கூறியுள்ளார். டெல்லியில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் அமைச்சர் கபில் சிபல் பேசுகையில், சட்டத்தை வைத்து நாம் எதையும் செய்து விடலாம் என்றபோதிலும், அதனால் ஏற்படும் விளைவுகளையும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும் என்றும், அதனால் தான் அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு அரசுக்கென தனி அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டவர், அதிகாரத்தை அரசிடமிருந்து பிரித்து விடுவதால் அரசின் திட்டங்கள் குறித்து |
| நிலக்கரி ஊழல்: அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு Posted: 10 Jul 2013 06:21 PM PDT அனைத்து நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஆவணங்களையும் மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்தது. பிரதமர் மன்மோகன்சிங் நிலக்கரி துறை மந்திரி பொறுப்பையும் வகித்தபோது, நாட்டில் உள்ள 164 நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கீடு |
| மேற்கு வங்கத்தில் சிக்கலான பஞ்சாயத்து தேர்தல் இன்று நடக்கிறது Posted: 10 Jul 2013 06:16 PM PDT மேற்கு வங்கத்தில் தேர்தல் கமிஷன் முடிவின் படி இன்று பஞ்சாயத்து தேர்தல் நடக்கிறது. ஐந்து கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தலில் முதல் கட்டமாக மாவோயிஸ்டுகளின் முந்தைய பகுதிகளான பாங்குரா, மேற்கு மிட்னாபூர், புரூலியா மாவட்டங்களில் தேர்தல் நடைபெறுகிறது. |
| உ.பி. பாரதீய ஜனதா அரசியலில் மோடியால் மாற்றத்தை கொண்டுவரமுடியாது: முலாயம் சிங் Posted: 10 Jul 2013 05:34 PM PDT குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடியை, இந்துக்களின் புனிதத்தலமான உத்தரப்பிரதேச வாரணாசியில் நிறுத்துவதற்கு பாரதீய ஜனதா ஆலோசித்து வருகிறது. இந்நிலையில், ராம்பூர் ஜோஹர் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் உரையாற்றிய சமாஜ்வாடி கட்சித்தலைவர் முலாயம் சிங் மோடி பற்றி விமர்சித்துள்ளார். |
| பெங்களூர்: 5 மாதமாக சிறுமியை கற்பழித்து வந்தவர் கைது Posted: 10 Jul 2013 05:09 PM PDT பெங்களூர் கெங்கேரி வித்யாபீடம் பகுதியை சேர்ந்த 7-வது வகுப்பு படித்து வரும் 14 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த நாகேந்திரா(வயது 23) என்பவர் கடந்த 5 மாதங்களாக கற்பழித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த விஷயத்தை யாரிடம் சொல்லக்கூடாது என்று அவர் சிறுமியை மிரட்டியுள்ளார். இதனால் அந்த சிறுமி தனக்கு ஏற்பட்ட கொடுமை பற்றி பெற்றோர் உள்பட யாரிடமும் சொல்லவில்லை. |
| இஷ்ரத் ஜகான் தீவிரவாதியா என்பது கண்டுபிடிக்கப்படும்: சுஷில் குமார் ஷிண்டே Posted: 10 Jul 2013 02:08 PM PDT குஜராத் மாநிலத்தில் கடந்த 2004-ம் ஆண்டு நடைபெற்ற என்கவுண்டரில் கல்லூரி மாணவி இஷ்ரத் ஜகான் உள்பட 4 பேர் கொலை செய்யப்பட்டது போலி என்கவுண்டர் என சி.பி.ஐ. குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. இதனை அடுத்து இஷ்ரத் ஜகான் தற்கொலை தாக்குதல் தீவிரவாதி என மும்பை குண்டு வெடிப்பில் கைது செய்யப்பட்ட ஹெட்லி கூறியதாகவும், |
| Posted: 10 Jul 2013 01:43 PM PDT குற்ற வழக்கில் தண்டனை பெற்ற உடனேயே எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் பதவியை ரத்து செய்யலாம் என்றும், ஏற்கனவே அப்பீல் செய்தவர்களுக்கு இது பொருந்தாது என்றும் சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பை அளித்து இருக்கிறது. இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு தரப்பில் மேல்முறையீட்டு |
| உ.பி-ல் 4 வயது சிறுமி கடத்தி, கற்பழித்து கொலை: 50 கத்திக்குத்து காயங்களுடன் சடலம் கண்டுபிடிப்பு Posted: 10 Jul 2013 12:32 PM PDT உத்தரப்பிரதேச மாநில தலைநகர் லக்னோவின் கோமதி நகரை சேர்ந்த 4 வயது சிறுமி கடந்த திங்களன்று காணாமல் போனாள். இந்நிலையில், அந்த சிறுமி, உடலில் 50-க்கும் மேற்பட்ட கத்திக்குத்து காயங்களுடன் கொடூரமாக கற்பழித்து கொலை செய்யப்பட்டு ஒரு மறைவிடத்தில் கிடந்தாள். அவளது உடலை சுற்றிலும் நாய்கள் நின்று கொண்டிருப்பதை நேற்று போலீசார் கண்டுபிடித்தனர். |
| சூரிய மின்சக்தி ஊழல்: ராஜினாமா செய்ய மாட்டேன்- உம்மன்சாண்டி Posted: 10 Jul 2013 09:26 AM PDT சூரிய மின்சக்தி ஊழல் புகாரில் கேரள முதல்–மந்திரி உம்மன்சாண்டி பதவி விலகக்கோரி அம்மாநிலம் முழுவதும் இடதுசாரி ஜனநாயக முன்னணி சார்பில் முழுஅடைப்பு போராட்டம் நடந்தது. இந்தநிலையில் அமைச்சரவை கூட்டத்திற்கு பின்னர் நிருபர்களிடம் உம்மன்சாண்டி கூறுகையில், சூரிய மின்சக்தி ஊழல் விவகாரம் இடதுசாரி ஜனநாயக முன்னணியின் அரசியல் சதி. அதிகாரத்தை விலைக்கு விற்பவன் நான் அல்ல. |
| ஜார்க்கண்டில் ஜனாதிபதி ஆட்சி பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: பா.ஜனதா வலியுறுத்தல் Posted: 10 Jul 2013 09:22 AM PDT ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாரதீய ஜனதா அரசுக்கு அளித்து வந்த ஆதரவை சிபு சோரனின் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா வாபஸ் பெற்றது. இதனால் அங்கு அரசு கவிழ்ந்து ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. 6 மாத ஜனாதிபதி ஆட்சி காலம் வரும் 18–ந் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், அங்கு இதர கட்சிகள் ஆதரவுடன் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா |
| இந்தியாவில் தங்கக்கட்டிகள்-காசுகள் விற்பனை நிறுத்தம்: வர்த்தக கூட்டமைப்பு அறிவிப்பு Posted: 10 Jul 2013 08:59 AM PDT இந்தியாவில் நடப்புக் கணக்கின் பற்றாக்குறை அதிகரித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில், தங்கத்தில் முதலீடு செய்வது குறைந்தால் பணப்புழக்கம் அதிகரிக்கும் என்று நிதி மந்திரி ப.சிதம்பரம் வலியுறுத்தி வருகின்றார். இந்நிலையில், கணக்கு பற்றாக்குறையை குறைக்க மத்திய அரசு எடுத்து வரும் முயற்சிகளுக்கு உதவும் பொருட்டு, வாடிக்கையாளர்களுக்கு தங்கக் கட்டிகள், காசுகள் விற்பனையை நிறுத்தி வைப்பதாக அனைத்திந்திய ஆபரணக் கற்கள் மற்றும் நகை |
| 2ஜி வழக்கு: தயாளு அம்மாள் உடல்நிலையை ஆய்வு செய்ய சுப்ரீம் கோர்ட் உத்தரவு Posted: 10 Jul 2013 06:52 AM PDT 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு விசாரணை டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தனிக்கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் அரசு தரப்பு சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளுக்கு (வயது 82), சாட்சியம் அளிக்க நேரில் ஆஜராகுமாறு கோர்ட் உத்தரவிட்டது. |
| ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை விலக்கிக் கொள்ள கவர்னர் பரிந்துரை Posted: 10 Jul 2013 06:02 AM PDT ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாரதீய ஜனதா அரசுக்கு அளித்து வந்த ஆதரவை சிபு சோரனின் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா வாபஸ் பெற்றது. இதனால் அங்கு அரசு கவிழ்ந்து ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. 6 மாத ஜனாதிபதி ஆட்சி காலம் வரும் 18–ந் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், அங்கு இதர கட்சிகள் ஆதரவுடன் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா ஆட்சி அமைக்க உள்ளது. |
| புகழ்பெற்ற பூரி ஜெகநாதர் கோவில் தேரோட்டம் கோலாகலமாக நடந்தது: பக்தர்கள் பரவசம் Posted: 10 Jul 2013 05:19 AM PDT உலகப்புகழ் பெற்ற பூரி ஜகநாதர் ஆலய தேரோட்டம் பலத்த பாதுகாப்புக்கிடையே இன்று கோலாகலமாக நடைபெற்றது. 12ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பூரி ஜகநாதர் ஆலய தேரோட்டத்தை தரிசித்து மகிழ வெளிநாடுகளில் இருந்தும், நாட்டின் பல மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |