Tamil News | Online Tamil News |
- இதுவரை நிரம்பிய இன்ஜினியரிங் இடங்கள் 60 ஆயிரம்: 70 ஆயிரம் இடங்கள் காலியாக இருக்கும்
- தே.மு.தி.க., அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் கட்சியை விட்டு நீக்கம்? 13ம் தேதி விஜயகாந்த் இறுதி முடிவு
- "தாயகம்' காக்க "யாசகம்' கேட்டு வைகோ கெஞ்சல்
- ஆசிட் விற்பனைக்கு தடை விதிக்காதது ஏன்? மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்
- எல்லையில் சீன ராணுவம் மீண்டும் அத்துமீறி அட்டூழியம்
- "அடுத்த ஜென்மத்தில் ஒரே ஜாதியில் பிறக்க ஆசை': பரபரப்பை ஏற்படுத்திய இளவரசனின் கடைசி கடிதம்
- பாகிஸ்தான் நினைத்திருந்தால் 10 ஆண்டுகளுக்கு முன்னரே, ஒசாமா "குளோஸ்'
- "பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு தோல்வி அடைந்து விட்டது': பா.ஜ., விமர்சனம்
- ஆசிரியர்களுக்கு காபி, வடை "கட்': நிதி பற்றாக்குறையால் பயிற்சிகளும் குறைப்பு
- தமிழக அரசுக்கு என்.எல்.சி., பங்கு விற்பனை குறித்து நாளை முடிவு: மத்திய பங்கு விற்பனை துறை சிறப்பு கூட்டம்
| இதுவரை நிரம்பிய இன்ஜினியரிங் இடங்கள் 60 ஆயிரம்: 70 ஆயிரம் இடங்கள் காலியாக இருக்கும் Posted: சென்னை: இன்ஜினியரிங் படிப்பு சேர்க்கையில், இதுவரை, 60 ஆயிரம் இடங்கள் நிரம்பியுள்ளன. இன்னும், 21 நாட்களில், மேலும், 50 ஆயிரம் இடங்கள் நிரம்பினாலும், 70 ஆயிரம் இடங்கள் வரை காலியாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.மாநிலம் முழுவதும், 560 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதில், அரசு பொறியியல் கல்லூரி, அரசு உதவி பெறும் கல்லூரி மற்றும் தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில், அரசு ஒதுக்கீட்டின் கீழ், 2 லட்சம் இடங்கள் உள்ளன. இதனை நிரப்புவதற்கான கலந்தாய்வு, கடந்த மாதம், 17ம் தேதி துவங்கியது. 21ம் தேதி முதல்: பெரும்பான்மை மாணவர் பங்கேற்கும் ... |
| தே.மு.தி.க., அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் கட்சியை விட்டு நீக்கம்? 13ம் தேதி விஜயகாந்த் இறுதி முடிவு Posted: ராஜ்யசபா தேர்தலில், கட்சி மாறி அ.தி.மு.க.,விற்கு ஓட்டளித்த, தே.மு.தி.க., அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் ஏழு பேருக்கும், விளக்கம் அளிப்பதற்கான கெடு, இன்றுடன் முடிவடைகிறது. ஏழு பேரையும் கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்குவதில், விஜயகாந்த் உறுதியாக உள்ளார். வரும், 13ம் தேதி, தனது முடிவை அறிவிக்க உள்ளார். ஆனால், அத்திட்டத்தை தள்ளிப் போடுமாறு, மாநில நிர்வாகிகள் சிலர், அவரை வலியுறுத்தி வருகின்றனர். அதிருப்தியாளர்கள்: தே.மு.தி.க., அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் சுந்தர்ராஜன், தமிழழகன், மைக்கேல் ராயப்பன், நடிகர் அருண் பாண்டியன், சுரேஷ்குமார், சாந்தி, ... |
| "தாயகம்' காக்க "யாசகம்' கேட்டு வைகோ கெஞ்சல் Posted: "கட்சி அலுவலகமான, தாயகத்தை நடத்த, நிதி வழங்குங்கள்' என, யாசகம் கேட்கும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது, ம.தி.மு.க.,வினரையே அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. குற்றச்சாட்டு: பேச்சாற்றலால், 20 ஆண்டு பார்லிமென்டில், தி.மு.க.,வின் முகமாக பிரதிபலித்து, தமிழகத்தில், தி.மு.க.,வின் அடுத்த தலைவர் என்ற இடத்துக்கு முன்னேறி, விடுதலை புலிகள் மூலம், தி.மு.க., தலைவர் கருணாநிதியை, அகற்றிவிட்டு, தி.மு.க.,வை கைப்பற்ற திட்டமிட்டவர் என்ற குற்றச்சாட்டில், 1993, அக்., 3ல், தி.மு.க.,வில் இருந்து, வெளியேறியவர் வைகோ. "நாங்கள் தான் உண்மையான தி.மு.க.,' என, ஆதரவு திரட்டி, 1994 மே, 6ம் ... |
| ஆசிட் விற்பனைக்கு தடை விதிக்காதது ஏன்? மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் Posted: புதுடில்லி: "ஆசிட் வீச்சு காரணமாக, இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனாலும், இந்த குற்றங்களை தடுப்பதற்கோ, ஆசிட் விற்பனையை தடை செய்வதற்கோ, மத்திய அரசு, போதிய தீவிரம் காட்டவில்லை. இன்னும், ஒரு வாரத்துக்குள், இது தொடர்பாக, ஒரு கொள்கையை உருவாக்கா விட்டால், கடுமையான உத்தரவை பிறப்பிக்க நேரிடும்' என, மத்திய அரசுக்கு, சுப்ரீம் கோர்ட், கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. டில்லி இளம் பெண்: டில்லியைச் சேர்ந்த இளம் பெண், லட்சுமி. இவரை, ஒரு இளைஞர், திருமணம் செய்ய முடிவு செய்தார். இதற்கு, லட்சுமி மறுப்பு தெரிவித்தார். கோபமடைந்த, அந்த ... |
| எல்லையில் சீன ராணுவம் மீண்டும் அத்துமீறி அட்டூழியம் Posted: லே: எல்லையில் மீண்டும், சீன ராணுவம் அத்துமீறி நுழைந்து, அங்கு அமைக்கப்பட்டிருந்த கேமராக்களை உடைத்தும், பதுங்கு குழிகளை சேதப்படுத்தியும் அட்டூழியம் செய்துள்ளது. எல்லை பிரச்னை: அண்டை நாடான சீனாவுக்கும், இந்தியாவுக்கும், நீண்டகாலமாக எல்லைப் பிரச்னை உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே, ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின், லே பகுதியில், நடைமுறை எல்லை கட்டுப்பாட்டுக் கோடு உள்ளது. அந்த கோட்டை ஒட்டி, இந்திய பகுதியில் அமைந்துள்ள இடங்களை, தங்கள் பகுதி என, கூறி வரும் சீன ராணுவம், அவ்வப்போது, அந்த பகுதிகளில் அத்துமீறலில் ஈடுபடுவது வழக்கம். கடந்த, ... |
| "அடுத்த ஜென்மத்தில் ஒரே ஜாதியில் பிறக்க ஆசை': பரபரப்பை ஏற்படுத்திய இளவரசனின் கடைசி கடிதம் Posted: தர்மபுரி: இளவரசன் தற்கொலை செய்து கொள்வதற்கு முன், தன் பெற்றோர், திவ்யா, அண்ணன் பாலாஜி ஆகியோருக்கு எழுதிய, நான்கு பக்க கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "அடுத்த ஜென்மத்தில், ஒரே ஜாதியில் பிறந்து திருமணம் செய்து கொள்ள ஆசை' என, அதில், குறிப்பிட்டுள்ளார். தற்கொலைக்கு முன், இளவரசன் எழுதிய நான்கு பக்க கடிதத்தை, போலீசார் கைப்பற்றியுள்ளனர். அந்த கடிதத்தை எடுத்தது யார் என்ற சர்ச்சை, ஒரு பக்கம் இருக்க, இளவரசன் கடைசி கடிதமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில், திவ்யாவுக்கு உருக்கமாக எழுதியுள்ளார். அதில் எழுதப்பட்டுள்ளதாவது: ... |
| பாகிஸ்தான் நினைத்திருந்தால் 10 ஆண்டுகளுக்கு முன்னரே, ஒசாமா "குளோஸ்' Posted: இஸ்லாமாபாத்: சர்வதேச பயங்கரவாதி, ஒசாமா பின் லேடனை, பல ஆண்டுகளுக்கு முன்னரே பிடித்திருக்கலாம்; ஆனால், பாகிஸ்தான் அதை செய்ய தவறிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவில், 2001ம் ஆண்டு, நியூயார்க்கில், இரட்டை கோபுர உலக வர்த்தக கட்டடம், தீவிரவாத தாக்குதலுக்கு உள்ளானது. இந்த தாக்குதலுக்கு காரணமான, அல்கொய்தா அமைப்பை சேர்ந்த, ஒசாமா பின் லேடனை, சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்த அமெரிக்கா, அவனை தேடும் பணிகளில் ஈடுபட்டது. ஆப்கானிஸ்தான் மலைக் குகைகளில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவல்களின் அடிப்படையில், அந்நாட்டின் மீது அமெரிக்கா போர் தொடுத்தது. ... |
| "பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு தோல்வி அடைந்து விட்டது': பா.ஜ., விமர்சனம் Posted: புத்த கயா: "பயங்கரவாதத்தை கட்டுப்படுத்தும் விஷயத்தில், காங்., தலைமையிலான, மத்திய அரசு, ஒட்டு மொத்தமாக தோல்வி அடைந்து விட்டது. ஓட்டு வங்கி அரசியலுக்காக, உள்நாட்டு பாதுகாப்பை விட்டு கொடுப்பதன் காரணமாகவே, புத்த கயா போன்ற இடங்களில் தாக்குதல்கள் நடக்கின்றன' என, மத்திய அரசை, பா.ஜ., தலைவர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர். மகாபோதி கோவில்: பீகார் மாநிலம், புத்த கயாவில், வரலாற்று பிரசித்தி பெற்ற, மகாபோதி கோவில் உள்ளது. இரண்டு நாட்களுக்கு முன், இங்கு, தொடர் குண்டு வெடிப்புகள் நிகழ்த்தப்பட்டன. இதில், இரண்டு புத்த துறவிகள் காயடைந்தனர். இது ... |
| ஆசிரியர்களுக்கு காபி, வடை "கட்': நிதி பற்றாக்குறையால் பயிற்சிகளும் குறைப்பு Posted: மதுரை: நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டதால், அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ், அளிக்கப்படும் பயிற்சி வகுப்பில் வழங்கப்பட்ட காபி, வடை, பிஸ்கட் , "கட்' ஆனது, ஆசிரியர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில், 2002 முதல், அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ், 6, 7, 8ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு செயல்வழிக் கற்றல் பயிற்சியும், ஒன்றாம் வகுப்பு முதல், ஐந்தாம் வகுப்பு ஆசிரியர்களுக்கு எளிய படைப்பாற்றல் கல்வி பயிற்சியும் அளிக்கப்படுகின்றன. ஓர் ஆண்டுக்கு, இரு பிரிவிலும், 10 பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். இதில், அனைத்து ஆசிரியர்களும் பங்கேற்பது ... |
| Posted: புதுடில்லி: நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனமான, என்.எல்.சி.,யின் பங்குகளை விற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தொழிலாளர்கள் போராட்டம், எட்டாவது நாளை எட்டியுள்ளது. இந்நிலையில், பங்குகளை வாங்க முன்வந்துள்ள தமிழக அரசு கோரிக்கை குறித்து, மத்திய அரசின் பொதுத் துறை பங்குகள் விற்பனை துறை, நாளை முடிவு செய்கிறது.என்.எல்.சி.,யின், 5 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்க, மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கு, தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இது தொடர்பாக, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, முதல்வர் ஜெயலலிதா கடிதம் ஒன்றை எழுதினார். அதில், என்.எல்.சி.,யின் பங்குகளை, தமிழக ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜூலை 10,2013 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |