Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Daily Thanthi

Daily Thanthi


3 நாடுகள் கிரிக்கெட் இந்தியா–இலங்கை ஆட்டம் மழையால் பாதிப்பு

Posted: 09 Jul 2013 01:01 PM PDT

போர்ட் ஆப் ஸ்பெயின்

வெஸ்ட் இண்டீஸ், இந்தியா, இலங்கை ஆகிய 3 நாடுகள் இடையேயான ஒருநாள் கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா இரண்டு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

3 நாடுகள் கிரிக்கெட் இலங்கை அணிக்கு 2-வது வெற்றி வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது

Posted: 09 Jul 2013 12:59 PM PDT

போர்ட் ஆப் ஸ்பெயின்,

3 நாடுகள் கிரிக்கெட் போட்டியில் 5-வது லீக் ஆட்டத்தில் இலங்கை அணி 39 ரன் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி 2-வது வெற்றியை ருசித்தது.

3 நாடுகள் கிரிக்கெட்

வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, இந்தியா ஆகிய 3 நாடுகள் இடையேயான ஒருநாள் கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா இரண்டு முறை மோத வேண்டும். புள்ளிகள் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.

ஆஷஸ் தொடர் இங்கிலாந்து&ஆஸ்திரேலியா மோதும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்

Posted: 09 Jul 2013 12:47 PM PDT

நாட்டிங்காம்,

ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து-ஆஸ்திரேலியா இடையேயான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் இன்று தொடங்குகிறது.

ஆஷஸ் பிறந்த கதை

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி முதல் முறையாக இங்கிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் (ஓவல் மைதானம்) டெஸ்ட் போட்டியில் 1982-ம் ஆண்டு ஆகஸ்டு 29-ந் தேதி வீழ்த்தி தொடரை கைப்பற்றியது.

மைதானத்தில் வாக்குவாதம் விவகாரம்: சுரேஷ்ரெய்னா, ரவீந்திர ஜடேஜா மன்னிப்பு கேட்டனர்

Posted: 09 Jul 2013 12:44 PM PDT

புதுடெல்லி,

மைதானத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவத்துக்காக சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் மன்னிப்பு கேட்டுள்ளனர்.

மைதானத்தில் வாக்குவாதம்

ஆட்டத்தில் முன்னேற்றம் ஏற்படாததால் இந்திய ஆக்கி அணி பயிற்சியாளர் மைக்கேல் நோப்ஸ் நீக்கம்

Posted: 09 Jul 2013 12:41 PM PDT

புதுடெல்லி,

இந்திய ஆக்கி அணியின் ஆட்ட திறனில் முன்னேற்றம் ஏற்படாததால் தலைமை பயிற்சியாளர் மைக்கேல் நோப்ஸ் நீக்கப்பட்டுள்ளார்.

மைக்கேல் நோப்ஸ் நீக்கம்

இந்திய ஆக்கி அணியின் தலைமை பயிற்சியாளராக ஆஸ்திரேலியாவை சேர்ந்த மைக்கேல் நோப்ஸ் 2011-ம் ஆண்டில் ஒப்பந்தம் செய்யப்பட்டார். அவரது பதவி காலம் 5 ஆண்டுகளாகும்.

தமிழ்நாட்டில் சில இடங்களில் இன்று மழை பெய்யும் நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவிப்பு

Posted: 09 Jul 2013 12:40 PM PDT

சென்னை

தமிழ்நாட்டில் சில இடங்களில் இன்று (புதன்கிழமை) மழை பெய்யும் என்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய சில பகுதிகளில் பெய்துவருகிறது. கடந்த 10 நாட்களுக்கு மேலாக வால்பாறை, கூடலூர் பஜார், கோவை மாவட்டத்தில் சில பகுதிகள் ஆகிய இடங்களில் மழை பெய்துவருகிறது.கர்நாடகம், ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. அதன்காரணமாக அந்த 3 மாநிலங்களிலும் அநேகஇடங்களில் மழை பெய்துவருகிறது.

சுசீந்திரம்

Posted: 09 Jul 2013 12:39 PM PDT

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் பகுதியில் மனதை மயக்கும் இயற்கை அழகு. லேசான சாரல் மழையில் மேக கூட்டங்கள் மலையை முத்தமிடும் காட்சி.
 

அகில இந்திய கைப்பந்து போட்டி வருமான வரி அணி வெற்றி

Posted: 09 Jul 2013 12:30 PM PDT

சென்னை,

அகில இந்திய கைப்பந்து போட்டியில் சென்னையில் நேற்று நடந்த ஆட்டத்தில் வருமான வரி அணி வெற்றி பெற்றது.

அகில இந்திய கைப்பந்து

நெல்லை பிரண்ட்ஸ் கிளப் மற்றும் டாக்டர் சிவந்தி கிளப் சார்பில் Ôதினத்தந்திÕ, தேசிய கனிம வள மேம்பாட்டு கார்ப்பரேஷன், பனிமலர் என்ஜினீயரிங் கல்லூரி ஆகியவை ஆதரவுடன் அண்ணாச்சி பி.ஜான் நினைவு 40-வது அகில இந்திய கைப்பந்து போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

குற்றாலம் மெயின் அருவி

Posted: 09 Jul 2013 12:28 PM PDT

திருநெல்வேலி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவியில் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது எடுத்த படம்.

ஜெகநாதர் கோவிலில் நரேந்திரமோடி*

Posted: 09 Jul 2013 12:25 PM PDT

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள ஜெகநாதர் கோவிலில் முதல்-மந்திரி நரேந்திர மோடி சிறப்பு பூஜை செய்தபோது எடுத்த படம். ஆண்டுதோறும் நடைபெறும் ஜெகநாதர் ரதயாத்திரை, இன்று நடைபெறுகிறது.
 



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™