Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


நெய்வேலியில் காலவரையற்ற ஸ்டிரைக் தொடர்கிறது : பற்றாக்குறையை சமாளிக்க மின் வாரியம் ஏற்பாடு

Posted:

நெய்வேலி நிலக்கரி நிறுவன (எல்.எல்.சி.,) தொழிலாளர்களின் காலவரையற்ற போராட்டம் நீடிப்பதால், மின் பற்றாக்குறையை சமாளிக்க, தமிழக அனல்மின் நிலையங்களில், பராமரிப்பு பணி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டு, முழுவீச்சில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.என்.எல்.சி., நிறுவனத்தின், ஐந்து சதவீத பங்குகளை, தனியாருக்கு விற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 12,800 நிரந்தர மற்றும், 13,000 ஒப்பந்த தொழிலாளர்கள், காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.நெய்வேலியில், என்.எல்.சி., பங்கு விற்பனைக்கு எதிராக, அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில், தொடர் முழக்கப் போராட்டம் ...

"சேது திட்டத்துக்காக என்னை அழித்துக் கொள்வேன்' : கருணாநிதி ஆவேசம்

Posted:

திருவாரூர்: ""சேது சமுத்திரத் திட்டத்துக்காக, என்னையும் அழித்துக் கொள்ள தயாராக இருக்கின்றேன்,'' என, திருவாரூரில் நடந்த பொதுக்கூட்டத்தில், தி.மு.க., தலைவர் கருணாநிதி ஆவேசமாக பேசினார்.திருவாரூர் தெற்கு வீதியில், கருணாநிதியின், 90வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் மற்றும் லோக்சபா தேர்தல் நிதியளிப்பு விழா நேற்று நடந்தது. மாவட்டச் செயலாளர் கலைவாணன் தலைமை வகித்தார்.தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசியதாவது:சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றினால், தூத்துக்குடி துவங்கி வேதாரண்யம், கடலூர் துறைமுகம் வரை, விரிவடைந்து, நம்முடைய வணிகம் முழுவதும் பரவிடும். உலக தொடர்பு ...

தே.மு.தி.க., தலைமையில் புது அணி உருவாகுமா?

Posted:

லோக்சபா தேர்தலுக்கு தயாராகும் வகையில், தே.மு.தி.க., தலைமையில், பா.ஜ., கொங்கு முன்னேற்ற கழகம், இந்திய ஜனநாயக கட்சி உட்பட மேலும் சில கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும் திட்டத்தை, அகில இந்திய ஜனதா கட்சியின் தலைவர், சுப்ரமணியசாமி வகுத்துள்ளார். பா.ஜ.,வுடன் ஜனதா கட்சியை இணைத்த பின், அ.தி.மு.க., - தி.மு.க.,வுக்கு போட்டியாக, புது அணி உருவாக்கும் பணி துவக்கப்படும் என, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

காங்கிரஸ் மீது அதிருப்தி:
ராஜ்யசபா தேர்தலில், தே.மு.தி.க., வேட்பாளருக்கு ஆதரவு அளிக்காமல், காங்கிரஸ் "கை'யை விரித்து விட்டதால், அக்கட்சியின் மீது தே.மு.தி.க., ...

இளவரசனின் சாவில் மர்மம்? போலீஸ் விசாரணைக்கு பின்னரே முடிச்சு அவிழும்

Posted:

இளவரசன் தற்கொலை குறித்து, அவரது உறவினர்கள் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பி வருகின்றனர். "அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது, முழு விசாரணைக்கு பின்னரே தெரிய வரும்' என, போலீசார் தெரிவித்தனர்.இது குறித்து போலீசார் கூறியதாவது:இளவரசன் சம்பவ இடத்தில், ரயில்வே சிறு பாலத்தின் மேல் அமர்ந்திருக்கிறார். அவர், தற்கொலை முடிவுடன் வந்திருக்க வாய்ப்பு இல்லை. குறிப்பிட்ட அந்த நேரத்தில், அந்த வழியாக ரயில் வந்த நிலையில், திடீரென தற்கொலை முடிவு எடுத்திருக்கலாம்.அதனால், ரயிலில் பக்க வாட்டில் ஓடி சென்று விழுந்திருக்க வாய்ப்புள்ளது. அவர் ...

உரிமம் இல்லாமல் செயல்படும் 2,000 டாஸ்மாக் பார்கள் : அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு

Posted:

சென்னை:டாஸ்மாக் கடைகளில், உரிமம் இல்லாமல் செயல்படும், 2,000 பார்களால், அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.புள்ளிவிவரம்:சென்ற மார்ச் மாத நிலவரப்படி, தமிழகத்தில், சென்னை மண்டலத்தில், 1,085; கோவை மண்டலத்தில், 954; மதுரை மண்டலத்தில், 1,752; சேலம் மண்டலத்தில், 1,336; திருச்சி மண்டலத்தில், 1,711 என, மொத்தம், 6,838 டாஸ்மாக் கடைகள் உள்ளன.மொத்த கடைகளில், 4,367 கடைகளில் மட்டுமே அரசு அனுமதியுடன் பார்கள் செயல்பட்டு வருகின்றன. எஞ்சியுள்ள, 2,471 கடைகளில், 2,000க்கும் மேற்பட்ட கடைகளில், அரசு அனுமதி இல்லாமல், பார்கள் இயங்கி வருகின்றன.பார் நடத்துவதற்கான "டெண்டர்' ஆண்டுக்கு ஒரு ...

அயோத்தியில் பிரமாண்டமான ராமர் கோவில் கட்டுவோம்: பா.ஜ.,

Posted:

அயோத்தி : லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில், அயோத்தி விவகாரத்தை, பா.ஜ., மீண்டும் கையில் எடுத்துள்ளது. அயோத்திக்கு நேற்று வந்த, உ.பி., மாநில பா.ஜ., மேலிட பொறுப்பாளரான, அமித் ஷா, ""மிக விரைவில், அயோத்தியில், பிரமாண்டமான ராமர் கோவிலை கட்டுவோம்,'' என்றார்.

கைது செய்யப்பட்டால்:
அடுத்தாண்டில் லோக்சபா தேர்தல் நடக்கவுள்ளது. இதற்காக, அரசியல் கட்சிகள், இப்போதே தயாராகி வருகின்றன. உணவு பாதுகாப்பு மசோதாவை அவசர சட்டத்தின் மூலம் நிறைவேற்றிய, காங்., கட்சி, அதன் மூலம், தேர்தலில், கணிசமான ஓட்டுகளை அறுவடை செய்ய நினைக்கிறது.பிரதான எதிர்க்கட்சியான, பா.ஜ.,வும், ...

உரத்த சிந்தனை : நஞ்சாகும் பண்பாடு : - எம்.எம்.கே.இப்ராகிம்

Posted:

உலக நாடுகள் ஒன்றோடொன்று, போட்டி போட்டு வளர்ந்து வரும், இன்றைய நவீன உலகின் பரிணாம வளர்ச்சிக்கு, மனிதனின் அறிவு வளர்ச்சியே முக்கியமானது. அத்தகைய, அறிவை வளர்ப்பதற்கு எண்ணற்ற கல்வி வாய்ப்புகள் பெருகி வரும் வேளையில், மாணவர்களின் சிந்தனைகளை, நோக்கங்களை சீர்குலைக்கும் வைரஸ் கிருமியாக, சினிமாக்கள் பெருக்கெடுத்து வருகின்றன.நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி, இந்த நாடு இருக்கிறது என, பறை சாற்றிய எம்.ஜி.ஆர்., மாணவர்களுக்கு அறிவுரை வழங்கக் கூடிய கதாபாத்திரத்தில் நடித்தார். கவிஞர்களும், படைப்பாளிகளும், சமூக பொறுப்புணர்வோடு, பெரிய அளவில் பணம் சம்பாதிக்கும் நோக்கம் ...

குற்றவாளியான பன்சாலை சுதந்திரமாக உலாவ விடுவதா?சி.பி.ஐ., நடவடிக்கைக்கு எதிர்ப்பு

Posted:

புதுடில்லி: ரயில்வே வாரியத்தில், "பசையுள்ள' பதவி பெறுவதற்காக, ரயில்வே வாரிய உறுப்பினர், லஞ்சம் கொடுத்த விவகாரத்தில், முன்னாள் ரயில்வே அமைச்சர், பவன்குமார் பன்சாலை, அரசு தரப்பு சாட்சியாக, சி.பி.ஐ., சேர்த்துள்ளதற்கு, நேற்று கோர்ட்டில், கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. "குற்றம் சுமத்தப்பட வேண்டியவரை, சுதந்திரமாக உலாவ விடுவதா' என்றும், வழக்கறிஞர் கேள்வி எழுப்பினார்.

"ஆதாரங்கள் இல்லை':
ரயில்வே வாரியத்தில், அலுவலர் பிரிவுக்கான உறுப்பினராக இருந்தவர், மகேஷ் குமார். இவர், அதே வாரியத்தில், "பசையுள்ள' பதவியாகக் கருதப்படும், எலக்ட்ரிக்கல் ...

நிதிஷ் குமாரை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்: நரேந்திர மோடி ஆவேசம்

Posted:

பாட்னா:""பா.ஜ.,வுடனான கூட்டணியை முறித்த, பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மீது, மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர்,'' என, பா.ஜ., தேர்தல் பிரசார குழு தலைவர், நரேந்திர மோடி பேசினார்.குஜராத் முதல்வரும், பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவருமான, நரேந்திர மோடி, சமீபத்தில், அந்தக் கட்சியின் தேர்தல் பிரசார குழு தலைவராக நியமிக்கப்பட்டார். இதனால், அதிருப்தி அடைந்த பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் தலைவருமான, நிதிஷ் குமார், பா.ஜ.,வுடனான கூட்டணியை முறித்தார்.இந்நிலையில், லோக்சபா தேர்தல் பிரசார ஏற்பாடுகளை மேற்கொள்வது தொடர்பாக, நரேந்திர மோடி, ஒவ்வொரு மாநிலங்களுக்கும் சென்று, ...

அமைச்சர் பதவி கேட்டு ஜார்க்கண்ட் சுயேச்சைகள் முரண்டு : ஓரிரு நாளில் புதிய அரசு அமையலாம் என எதிர்பார்ப்பு

Posted:

புதுடில்லி: ஜார்க்கண்டில், அடுத்த ஓரிரு நாட்களில், காங்கிரஸ் - ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி அரசு அமையலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தாலும், அரசுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ள சுயேச்சைகள், தங்களுக்கு அமைச்சர் பதவி வேண்டும் என, முரண்டு பிடிப்பதால், புதிய அரசு அமைப்பது, பெரும் சவாலாகவே இருக்கும் என, நம்பப்படுகிறது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில், 2010 செப்டம்பரில், பா.ஜ., மற்றும் சிபு சோரனின், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவான, ஜே.எம்.எம்., இணைந்து கூட்டணி அரசு அமைத்தன. முதல்வராக, பா.ஜ.,வை சேர்ந்த, அர்ஜுன் முண்டா பதவி வகித்தார். இந்த அரசுக்கு ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™