Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


ஊழலில் பன்சால் தொடர்பு குறித்து ஆதாரமில்லை : சி.பி.ஐ., நற்சான்று

Posted:

புதுடில்லி :"ரயில்வே பணி நியமன முறைகேட்டில், முன்னாள் ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சாலுக்கு தொடர்பு இருந்ததற்கான எவ்வித ஆதாரமும் இல்லை' என, சி.பி.ஐ., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.ரயில்வே வாரியத்தில், முக்கியமான பதவி வாங்கித் தருவதாக கூறி, 10 கோடி ரூபாய் ஊழல் பேரம் நடந்தது. இதில், முன்னாள் ரயில்வே அமைச்சர் பன்சாலின் உறவினர், விஜய் சிங்லாவிடம், 90 லட்சம் ரூபாயை, ரயில்வே உறுப்பினர் மகேஷ்குமார் வழங்கிய போது பிடிபட்டார். இது குறித்து, விசாரணை நடத்திய, சி.பி.ஐ., குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த வழக்கில், ஏற்கனவே கைதாகியுள்ளவர்கள் உட்பட, பத்து பேர், ...

ஆடியில் கரைபுரண்டு ஓடி வருமா காவிரி கபினி அணையில் இருந்து கூடுதலாக நீர் திறப்பு

Posted:

கடந்த ஆண்டு, ஆடியில், வறண்டு கிடந்த காவிரியில், இந்த ஆண்டு தண்ணீர் கரைபுரண்டு வருமா, என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.தட்சிணாயன புண்யகாலம் துவங்கும் ஆடி மாதம், காவிரியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடும். திருச்சி, தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்ட மக்கள், காவிரியில் புனித நீராடி, குல தெய்வங்களை வழிபடுவர்.ஆடி, 1ம் தேதியை, "தலை ஆடி' என, அழைத்து, புதுமண தம்பதியர், காவிரியில் நீராடி வழிபாடு நடத்துவர். சுமங்கலி பெண்கள், தாலி பெருக்கி கட்டி கொள்வர்.ஆடிப் பெருக்கு என, பெயரிடப்பட்ட ஆடி, 18ம் தேதி பொதுமக்கள், காவிரியில் நீராடுவர். ஆடி, 28ம் தேதி காவிரியில் நீராடி, குல ...

இளவரசன் மரணம் குறித்து உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும்: கருணாநிதி

Posted:

சென்னை :"இளவரசன் மரணம் குறித்து, உயர்மட்ட விசாரணை நடத்தி, கொலை என்றால் உரியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறினார்.அவரது அறிக்கை:"தர்மபுரி மாவட்டத்தில், கடந்த ஆண்டு நடைபெற்ற ஜாதிக் கலவரம் குறித்து, விரிவான அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும்' என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. அவ்வாறே அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. அந்தக் கலவரத்தில், 250 வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளன; இரு சக்கர வாகனங்கள், வண்டிகள், ஆட்டோ உள்ளிட்ட அனைத்தும் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டுள்ளன.வீட்டிற்குள் இருந்த பீரோக்களை உடைத்து, நகைகள், பணம் ...

தேர்தல் அறிக்கையில் இலவச வாக்குறுதிகள் கூடாது : சுப்ரீம் கோர்ட்

Posted:

புதுடில்லி : "அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கையில், லேப் டாப், "டிவி', கிரைண்டர் வழங்குவதாக உறுதி அளிப்பது, நேர்மையான, சுதந்திரமான தேர்தல் நடவடிக்கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, அரசியல் கட்சிகளின் இலவச வாக்குறுதிகளை ஒழுங்குமுறை படுத்துவதற்கு, வழிகாட்டும் நெறிமுறைகளை, தேர்தல் கமிஷன் உருவாக்க வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

அ.தி.மு.க., தேர்தல் அறிக்கை:
சுப்ரமணியம் பாலாஜி என்ற வழக்கறிஞர், சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு:தமிழகத்தில், கடந்த சட்டசபை தேர்தலின்போது, தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால், மக்களுக்கு ...

கேதார்நாத் கோவில் சிலைகள், பொருட்கள் திருடப்படும் அபாயம்

Posted:

டேராடூன் : உத்தரகண்ட் மாநிலத்தில்ஏற்பட்ட பேய்மழை, பெருவெள்ளத்தில் சிக்கி சேதமடைந்துள்ள, கேதார்நாத் சிவன் கோவில் சிலைகள் மற்றும் பழமையான பொருட்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. கொள்ளையர்கள் எந்த நேரமும், அவற்றை கொள்ளையடித்துச் செல்லலாம் என்ற நிலை காணப்படுகிறது.

புராண காலத்தை சேர்ந்தது:
மந்தாகினி ஆற்றில் அமைந்துள்ள கேதார்நாத் சிவன் கோவில், புராண காலத்தை சேர்ந்தது என்று சிலரும், 3,000 ஆண்டுகளுக்கு முந்தையது என, பிறரும் கூறுகின்றனர். அந்த கோவிலை, ஆதிசங்கரர் இப்போதைய வடிவில் அமைத்தார் என்ற கருத்தும் நிலவுகிறது.இந்துக்களின் ...

வடக்கு மாகாண தேர்தலை அறிவித்தார் இலங்கை அதிபர் ராஜபக்ஷே

Posted:

கொழும்பு :இலங்கையின், வடக்கு மாகாண தேர்தலுக்குரிய முறையான அறிவிப்பை, அதிபர் ராஜபக்ஷே வெளியிட்டு உள்ளார்.கடந்த, 1987ம் ஆண்டு, இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், 1988ல், வட கிழக்கு மாகாணத்தில் தேர்தல் நடந்தது.மக்கள் விடுதலை முன்னணி கட்சி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இரண்டாக பிரிக்கப்பட்டன.ராணுவத்துக்கும், விடுதலை புலிகளுக்கும் இடையே நடந்த சண்டை, 2009ல், முடிவுக்கு வந்தது. இதையடுத்து, கடந்த ஆண்டு, கிழக்கு மாகாணத்தில் தேர்தல் நடத்தப்பட்டது.உள்நாட்டு சண்டையால், வீடுகளை ...

மீண்டும் தலைதூக்கும் கல்லூரி மாணவர்கள் மோதல்: விவரங்களை சேகரிக்க அரசு உத்தரவு

Posted:

மோதலில் ஈடுபடும் மாணவர்களின் விவரங்களை சேகரிக்குமாறு, கல்லூரி நிர்வாகத்திற்கு, இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது."எந்த கல்லூரி பெரிசு... ரூட் தல யாரு...?' என, சென்னை கல்லூரி மாணவர்களிடையே மீண்டும் மோதல் ஆரம்பமாகி உள்ளது. கடந்த ஒரு வாரமாக, பச்சையப்பன், நந்தனம், புது, மாநில கல்லூரி மாணவர்களிடையே, கற்களை வீசி தாக்குதல், மாணவர் மண்டை உடைப்பு என ,மோதல் நடந்த வண்ணம் உள்ளன.கடந்தாண்டு, மாணவர்களிடையேயான மோதல், பெரிய சர்ச்சையை கிளப்பிய நிலையில், மாணவர்களை ஒடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. இருப்பினும், அவ்வபோது, மோதல்கள் தொடர்ந்தன. இச்சூழ்நிலையில், ...

மலிவு விலையில் ஆளுக்கு 5 கிலோ அரிசி வழங்க ரூ.1.25 லட்சம் கோடி: சோனியா கனவு திட்டத்துக்கு அவசர சட்டம் பிறப்பிப்பு

Posted:

நாட்டு மக்களில், மூன்றில் இரண்டு பங்கினர், மாதம் ஒன்றுக்கு, நபர் ஒருவருக்கு, 5 கிலோ உணவு தானியங்களை, மானிய விலையில் பெற உரிமை அளிக்கும், உணவு பாதுகாப்பு தொடர்பான அவசர சட்டத்திற்கு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, நேற்று ஒப்புதல் அளித்தார். இதன்மூலம், சோனியாவின், "கனவுத் திட்டம்' நனவாகியுள்ளது. இந்தத் திட்டத்திற்கு, 1.25 லட்சம் கோடி ரூபாய் செலவாகும்.நாட்டு மக்களில், 67 சதவீதம் பேருக்கு, மானிய விலையில் உணவு தானியங்களை வழங்க வகை செய்யும், உணவு பாதுகாப்பு மசோதாவை, நிறைவேற்ற வேண்டும் என, காங்கிரஸ் தலைவர் சோனியா விரும்பினார். அதனால், இந்த மசோதாவை தயாரித்து, ...

தலையில் அடிபட்டு இளவரசன் சாவு: பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல்

Posted:

தர்மபுரி:"இளவரசன், தலையில் அடிப்பட்டதால் உயிரிழந்தார்' என, பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது.நீதிமன்ற உத்தரவுப்படி, நேற்று இரவு, 10.30 மணிக்கு, இளவரசனின் தந்தை இளங்கோவிடம், எஸ்.பி., ஆஸ்ராகார்க், பிரேத பரிசோதனை அறிக்கையை வழங்கினார்.அறிக்கையில் கூறியிருப்பதாவது;இளவரசனின் உடல், விரைப்பான நிலையில் இருந்தது. அவரது உடல் திடகாத்திரமாக இருந்தது. இடது கை மணிக்கட்டு, உள்ளங்கைகளில், கிரீஸ் படிந்திருந்தது. கைகள், விரல்களில் சிராய்ப்புகள் இருந்தன. இடது கை எலும்பு முறிவு ஏற்பட்டு, கை வீக்கம் இருந்தது.தலையின் முன் பகுதி, மூக்குப் பகுதியில் சதை சிதைந்து ...

ஜார்கண்டில் கூட்டணி அரசு அமைக்க காங்., - சிபுசோரன் கட்சி ஒப்பந்தம்

Posted:

புதுடில்லி: ஜார்கண்ட் மாநிலத்தில், கூட்டணி அரசு அமைக்க, காங்கிரஸ் மற்றும் சிபுசோரனின் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி இடையே நேற்று ஒப்பந்தம் ஏற்பட்டது. அத்துடன், அடுத்த லோக்சபா தேர்தலிலும், இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்துள்ளன.ஜார்கண்டில், முதல்வர் அர்ஜுன் முண்டா தலைமையிலான, பா.ஜ., - ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி அரசு பதவியில் இருந்தது. இந்த அரசுக்கு அளித்து வந்த ஆதரவை, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, கடந்த ஜனவரி, 8ம் தேதி விலக்கிக் கொண்டது. அதனால், அர்ஜுன் முண்டா அரசு கவிழ்ந்து, அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது; சட்டசபை ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™