Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


ஆந்திராவை உடைத்து தெலுங்கானா மாநிலம் அமைக்க ஒப்புதல்: காங்., செயற்குழு, ஐ.மு.கூ., கூட்டத்தில் அனுமதி

Posted:

புதுடில்ல : தெலுங்கானா பகுதி மக்களின், அரை நூற்றாண்டு கால கனவு, நேற்று நனவானது. நாட்டின், 29வது மாநிலமாக, தெலுங்கானா உதயமாகிறது. ஆந்திராவை உடைத்து, தனி தெலுங்கானா மாநிலம் அமைக்க, ஐ.மு., கூட்டணி ஒருங்கிணைப்பு குழு மற்றும் காங்கிரஸ் செயற்குழு கூட்டங்களில், நேற்று ஒப்புதல் அளிக்கப்பட்டது."ஆந்திராவின், மேடக், மெகபூப் நகர், அடிலாபாத், ஐதராபாத் உள்ளிட்ட, 10 மாவட்டங்களை பிரித்து, தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க வேண்டும்' என்பது, தெலுங்கானா பகுதி மக்களின், 50 ஆண்டுகளுக்கும் மேலான கோரிக்கை. இதற்காக, ஆந்திராவில், பல போராட்டங்கள் நடத்தப்பட்டன. தெலுங்கானா ...

கூடங்குளம் மின்சாரத்தில் பங்கு கேட்டு தென் மாநிலங்கள்போட்டா போட்டி

Posted:

"கூடங்குளம் அணுமின் நிலையத்தில், உற்பத்தியாகும் மின்சாரம் அனைத்தையும், தமிழகத்துக்கு தரக்கூடாது' என, தென் மாநிலங்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளன. இந்த மின்சாரத்தில், தங்களுக்கும் அதிக பங்கு தரவேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளன.இதுதொடர்பாக, டில்லியில் நேற்று மத்திய அரசின் தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:பலத்த எதிர்ப்புகளையும், தடைகளையும் தாண்டி, கூடங்குளம் அணுமின் நிலையத்தில், மின் உற்பத்தி துவங்கியுள்ளது. ஆனாலும், முழுவீச்சில் உற்பத்தி துவங்க, இன்னும் சில நாட்களாகும். இங்கு உற்பத்தியாக உள்ள, மின்சாரம் அனைத்தையும், தமிழகத்துக்கே வழங்க ...

அத்வானி வருகையால் பரபரப்பு : போலீஸ் பாதுகாப்பு வளையத்துக்குள் சேலம்

Posted:

சேலம்: சேலம் பா.ஜ., பிரமுகர், ஆடிட்டர் ரமேஷ் படுகொலையை கண்டித்து, நடக்கும் கூட்டத்தில் கலந்து கொள்ள, அத்வானி வருவதால், சேலம் மாநகரம், போலீஸ் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.சேலத்தில், ஆடிட்டர் ரமேஷ் படுகொலை செய்யப்பட்டார். அவரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவிக்கவும், கொலையை கண்டித்து நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ளவும், பாரதிய ஜனதா தேசிய தலைவர்களில் ஒருவரான அத்வானி, நாளை, சேலம் வருகிறார்.சேலம், விமான நிலையத்தில் இருந்து, பலத்த போலீஸ் பாதுகாப்புடன், சேலம் மரவனேரியில் உள்ள, ஆடிட்டர் ரமேஷ் வீட்டுக்கு அழைத்து ...

சேமிப்பு கிடங்கில் தானியங்களில் பூச்சிகள்: மக்கள் அலறியடித்து ஓட்டம்

Posted:

கோவை:அரசு தானிய சேமிப்பு கிடங்கில், போதிய, பராமரிப்பு இல்லாததால், ஆயிரக்கணக்கான பூச்சிகள், தானியங்களை சேதம் செய்கின்றன. குடியிருப்புகளிலும், நுழைவதால், பொதுமக்கள் அலறியடித்து ஓடுகின்றனர்.கோவை, பீளமேடு ஹட்கோ காலனி பகுதியில், 30 ஏக்கர் பரப்பில், மத்திய அரசின், இந்திய உணவுக்கழகத்துக்கு சொந்தமான, தானிய சேமிப்புக்கிடங்கில், கோதுமை, அரிசி உள்ளிட்ட, தானியங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. தற்போது, 87,000 டன் உணவு தானியங்கள், 100 மற்றும் 75 கிலோ மூட்டைகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. போதிய, பராமரிப்பு இல்லாததால், தானிய பூச்சிகள் அதிகரித்துள்ளன.மேலும், இப்பூச்சிகள், ...

போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் தாசில்தார் சம்பளம் குறைப்பு

Posted:

சென்னை: தமிழகத்தில், ஆறாவது ஊதியக்குழுவில் இருந்த, முரண்பாடுகளைக் களைந்து, அரசு ஊழியர்களுக்கு, சமீபத்தில் புதிய ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டது. இதன் மூலம், லட்Œக்கணக்கான அரசு ஊழியர்கள் பயன்பெற உள்ளனர். அதேநேரம், போலீஸ் இன்ஸ்பெக்டர், தாசில்தார், இளநிலைப் பொறியாளர் உட்பட பலரின் சம்பளம் குறைக்கப்பட்டிருப்பது, சம்பந்தப்பட்டவர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.மத்திய அரசின், ஆறாவது ஊதியக்குழு பரிந்துரைத்தபடி, 2009ம் ஆண்டு, தமிழக அரசு ஊழியர்களுக்கு, புதிய சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டது. இதில், பல குறைபாடு இருப்பதாகவும், அவற்றை சரி செய்ய ...

இறந்துவிட்டாரா நடிகை கனகா? வீண் பரபரப்பை ஏற்படுத்திய "டிவி' சேனல்கள்

Posted:

சென்னை: "புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நடிகை கனகா காலமானார்' என்று, "டிவி' சேனல்கள், நேற்று பிற்பகல் வெளியிட்ட தகவல், தமிழகம் முழுவதும், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், உயிருடன் உள்ள நடிகை கனகா, ""நான் நலமுடன் உள்ளேன். ஆண்களை பிடிக்காததால், திருமணம் செய்து கொள்ளாமல், தனிமையில் வசித்து வருகிறேன். எனக்கு புற்றுநோய் இருப்பதாக கூறி, தேவதாஸ் என்பவர், என் சொத்துகளை அபகரிக்க பார்க்கிறார்,'' என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.கடந்த, 1989ல் வெளியான, "கரகாட்டக்காரன்' படத்தின் கதாநாயகியாக, தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகி, பரபரப்பாக பேசப்பட்டவர் நடிகை கனகா. ...

10ம் வகுப்பு மாணவியிடம் "சில்மிஷம்': தனியார் பள்ளி செயலருக்கு தர்ம அடி

Posted:

திருப்பூர்: திருப்பூரில், தனியார் பள்ளியில் படித்த, 10ம் வகுப்பு மாணவியிடம், "சில்மிஷம்' செய்த பள்ளி செயலரை, பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து, போலீசில் ஒப்படைத்தனர்.திருப்பூர், காலேஜ் ரோடு, மாஸ்கோ நகரில், அன்னை மெட்ரிக் பள்ளி உள்ளது; எல்.கே.ஜி., முதல், 10ம் வகுப்பு வரை, 500 பேர் படிக்கின்றனர். தாளாளராக லட்சுமியும், பள்ளி செயலராக அவரது கணவர் கதிரேசனும், பள்ளி நிர்வாகத்தை கவனிக்கின்றனர். நேற்று முன்தினம், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, சிறப்பு வகுப்பு நடந்தது. காலை, 7:00 மணிக்கு துவங்கிய வகுப்புக்கு, அப்பகுதியைச் சேர்ந்த மாணவி, ஏழு நிமிடம் தாமதமாக வந்துள்ளார். மாணவியை, ...

போலி சான்றிதழ்: மாநகராட்சி ஆசிரியர் நியமனத்தில் புது சர்ச்சை...

Posted:

சென்னை :சென்னை:சென்னை மாநகராட்சியில் இடைநிலை ஆசிரியர்களாக பணி நியமனம் செய்யப்பட்ட பலர், போலி சான்றிதழ்கள் கொடுத்து பணியில் சேர்ந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து விரிவான விசாரணை நடந்து வருவதால், சிக்குவோர் மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ், 122 துவக்க பள்ளிகள், 92 நடுநிலை பள்ளிகள், 36 உயர்நிலை பள்ளிகள், 32 மேல்நிலை பள்ளிகள், 30 மழலையர் பள்ளிகள், ஒரு உருது மேல்நிலை பள்ளி, ஒரு தெலுங்கு மேல்நிலை பள்ளி என, மொத்தம் 284 பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் மொத்தம் 90 ஆயிரத்திற்கும் ...

போதையால் அவலம்: மதுவுக்கு அடிமையாகும் துப்புரவு ஊழியர்கள்

Posted:

திருப்பூர்:தினமும் துர்நாற்றத்தில் பணிபுரியும் மாநகராட்சி துப்புரவு ஊழியர்கள், மது போதைக்கு அடிமையாகின்றனர்; அவர்களுக்கு "கவுன்சிலிங்' அளித்து, போதை மறுவாழ்வு மையங்களில் சிகிச்சையளிக்க வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.திருப்பூர் மாநகராட்சியில் 781 துப்புரவு ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்; மகளிர் குழு உறுப்பினர்கள் 1,030 பேரும் இதில், ஈடுபடுகின்றனர். குப்பை அள்ளுதல், ரோடுகளை சுத்தம் செய்தல், சாக்கடை அடைப்பு நீக்குதல் என சுகாதாரமில்லாத இடங்களிலும், துர்நாற்றம் வீசுகிற பகுதிகளிலும் தினமும் பணியாற்றுகின்றனர். அவர்களில் பெரும் பாலானோர் மது ...

பிரதமர் பதவிக்கு தகுதியானவர் நிதிஷ் குமார்: சத்ருகன் சின்கா போட்ட "ஜால்ரா'வால் சர்ச்சை

Posted:

பாட்னா: "பீகார் முதல்வர், நிதிஷ் குமார், பிரதமர் பதவிக்கு பொருத்தமானவர்' என, பாலிவுட் நடிகரும், பாரதிய ஜனதா எம்.பி.யுமான, சத்ருகன் சின்காவும், பீகார் பா.ஜ., செய்தி தொடர்பாளர், ராம்கிஷோர் சிங்கும், பாராட்டியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

பாலிவுட் நடிகர் சத்ருகன் சின்கா, 2009 லோக்சபா தேர்தலில், பா.ஜ., சார்பில், பாட்னா, சாகெப் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி., யானார். அதற்கு முன், இரண்டு முறை, ராஜ்யசபா எம்.பி.,யாக இருந்த சின்கா, வாஜ்பாய் தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணி அரசில், மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தார்.
"சத்ரு'வுக்கு இடமில்லை: ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™