Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


தெலுங்கானா விவகாரத்தால் காங்கிரசுக்கு சோதனை : இன்று செயற்குழுவில் முக்கிய முடிவு?

Posted:

புதுடில்லி :தனி தெலுங்கானா மாநிலம் அமைப்பதற்கு ஆதரவாகவும், எதிராகவும், ஆந்திராவில் போராட்டங்கள் வலுத்து வருவதால், மத்தியிலும், மாநிலத்திலும், ஆளும் கட்சியாக இருக்கும் காங்கிரசுக்கு, கடும் சோதனை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக, காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில், இன்று, முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.ஆந்திராவை இரண்டாகப் பிரித்து, தனி தெலுங்கானா மாநிலம் அமைப்பதற்கு, காங்., தலைமையிலான மத்திய அரசு முடிவெடுத்து விட்டதாக, பேச்சு எழுந்துள்ளது. ஆனால், தனி மாநிலம் அமைப்பதற்கு, ஆந்திராவில், தெலுங்கானா அல்லாத, மற்ற பகுதிகளில் ...

ரூ.100 கோடிகொடுத்தால் ராஜ்யசபா எம்.பி., சீட் கிடைக்குமாம்: காங்கிரஸ் மூத்த எம்.பி.,

Posted:

புதுடில்லி:""நூறு கோடி ரூபாய் இருந்தால், ராஜ்யசபா எம்.பி., சீட் வாங்கிவிடலாம்,'' என, காங்கிரஸ், எம்.பி., ஒருவர் பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.அரியானா மாநிலத்தில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, பூபிந்தர் சிங் ஹூடா தலைமையிலான காங்கிரஸ் அரசு பதவியில் உள்ளது. அந்த மாநிலத்தை சேர்ந்த, காங்கிரஸ், ராஜ்யசபா எம்.பி., பிரேந்தர் சிங்.

பதவி கிடைக்கவில்லை:
முதல்வர், ஹூடாவின் எதிர்ப்பாளராக விளங்கும் இவரை சமாதானப்படுத்த, மத்திய அரசு, மத்திய இணையமைச்சர் பதவி வழங்க இருந்தது. சமீபத்தில், மாற்றியமைக்கப்பட்ட, மத்திய அமைச்சரவையின் போது, பிரேந்தர் ...

கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்பட தடையில்லை

Posted:

சென்னை:கூடங்குளம் அணுமின் நிலையம் இயங்க, அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம் அனுமதியளித்த உத்தரவை, ரத்து செய்யக் கோரிய மனுவை, சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது."பூவுலகின் நண்பர்கள்' என்ற அமைப்பின் அறங்காவலரான, சென்னை, வடபழனியைச் சேர்ந்த, சுந்தரராஜன் என்பவர், தாக்கல் செய்த மனு:சுப்ரீம் கோர்ட் தன் உத்தரவில், 15 பரிந்துரைகளைக் குறிப்பிட்டிருந்தது. முக்கியமாக, "கூடங்குளத்தில் அமைதி திரும்ப, போராட்டக்காரர்கள் மீது பதிவு செய்யப்பட்ட, கிரிமினல் வழக்குகளை வாபஸ் பெற முயற்சி மேற்கொள்ள வேண்டும்; பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' ...

மேட்டூர் அணை நீர் ஆக., 2ம் தேதி திறப்பு

Posted:

மேட்டூர் :மேட்டூர் அணை நீர்மட்டம், மளமளவென, உயர்ந்து வருவதால், ஏற்கனவே அறிவித்ததற்கு 10 நாட்கள் முன்னதாக, ஆக., 2ம் தேதியே, பாசனத்துக்கு நீர் திறக்க, தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.காவிரி நீர்பிடிப்பு பகுதியில், பருவமழை தீவிரம் அடைந்ததால், கர்நாடகா அணைகள் நிரம்பின. இவற்றில் இருந்து வெளியேறும் உபரி நீர், மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. இதனால், மேட்டூர் அணை நீர்மட்டம், நேற்று, 101 அடியாகவும், நீர் இருப்பு, 66 டி.எம்.சி.,யாகவும் அதிகரித்தது. அணைக்கு, 88,988 கன அடி நீர் வந்தது. 35 நாட்களில், மேட்டூர் அணை நீர்மட்டம், 86 அடியும், நீர் இருப்பு, 63 ...

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறும்: கருணாநிதி

Posted:

சென்னை:"அடுத்த மாதம் நடைபெறவுள்ள பார்லிமென்ட் கூட்டத் தொடரில், மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.அவரது அறிக்கை:மகளிர் இட ஒதுக்கீடு மசோதா, பார்லிமென்டின் ஒவ்வொரு கூட்டத் தொடரிலும் நிறைவேற்றப்பட்டு விடும் என்ற எதிர்பார்ப்பு இருப்பதும், பின் ஏதோ, ஒரு காரணத்தால், அந்த மசோதா நிறைவேற்றப்படாமல் போய் விடுவதும் வழக்கமாக இருந்து வருகிறது.தி.மு.க., ஆட்சியில் நடந்த தலைமைச் செயலக புதிய கட்டடத் திறப்பு விழாவில் சோனியாவும், பிரதமரும் கலந்து கொண்டனர். அப்போது சோனியா பேசுகையில், "கருணாநிதியின் ஆதரவு இல்லாமல் இது ...

அமைச்சர்களுக்கான உதவியாளர் நியமனம் : விதிமுறைகளை தளர்த்தியது மத்திய அரசு

Posted:

புதுடில்லி:மத்திய அமைச்சர்களுக்கான, பியூன் உள்ளிட்ட தனி பணியாளர்களை நியமிப்பதற்கான, கல்வி தகுதி விதிமுறைகளை, மத்திய அரசு தளர்த்தி உள்ளது.மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:மத்திய அமைச்சர்களாக பதவி வகிப்போருக்கு, அவர்களுக்கான சில வேலைகளை செய்வதற்காக, பியூன் உள்ளிட்ட, தனி பணியாளர்கள் நியமிக்கப்படும் நடைமுறை உள்ளது.இந்த பணியிடங்களை நிரப்புவதற்கு, சில விதிமுறைகள் மற்றும் கல்வி தகுதிகளை மத்திய, பணியாளர் மற்றும் பயிற்சி துறை நிர்ணயித்து உள்ளது.குறிப்பாக, "மத்திய அரசின் மற்ற துறைகளில், இது போன்ற பணியிடங்களுக்கு, எந்த மாதிரியான கல்வி தகுதி ...

குரூப்-4 தேர்வு: பாதுகாப்பை பலப்படுத்தாவிட்டால் சிக்கல் தான்!

Posted:

"அடுத்த மாதம், 25ம் தேதி நடக்க உள்ள குரூப் - 4 தேர்வு தொடர்பான பணிகளில், பாதுகாப்பை பலப்படுத்த, தேர்வாணையம் தவறினால், கேள்வித் தாள், "லீக்' ஆகும் அபாயம் எழலாம்' என, பல தரப்பில் இருந்தும், இப்போதே, எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.முந்தைய ஆட்சி காலத்தில், டி.என்.பி.எஸ்.சி.,யில், நடந்த பல்வேறு முறைகேடுகள், அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், வெளிச்சத்திற்கு வந்தன. இதனால், தேர்வாணையத்தின் மீதான மதிப்பும், நம்பிக்கையும் நிலைகுலைந்துபோனது. இந்நிலையில், ஓய்வு பெற்ற, ஐ.பி.எஸ்., அதிகாரியான நடராஜை, தேர்வாணையத்தின் புதிய தலைவராக நியமித்து, முதல்வர் ஜெயலலிதா, நடவடிக்கை ...

அரிசி, கோதுமைக்கு தனி சரக்கு ரயில் இயக்கப்படுமா?

Posted:

வட மாநிலங்களில் இருந்து, உரம் படிந்த சரக்கு ரயில்களில், தமிழகத்திற்கு, அரிசி, கோதுமை போன்ற உணவுப் பொருட்கள் கொண்டு வரப்படுவதால், அவற்றின் தரம் மிகவும் மோசமாக உள்ளது.

பொது வினியோக திட்டம்:
தமிழகத்தில், ரேஷன் கடைகளில், அரிசி இலவசமாகவும், கோதுமை, ஒரு கிலோ, 7.50 ரூபாய்க்கும் வழங்கப்படுகிறது. பொது வினியோக திட்டத்தில், மாதம் ஒன்றுக்கு, 3.20 லட்சம் டன் அரிசி; 13,800 டன் கோதுமை வினியோகம் செய்யப்படுகிறது. மொத்த அரிசியில், 2.80 லட்சம் டன்னும், முழு கோதுமையும் மத்திய ஒதுக்கீடு மூலம் பெறப்படுகிறது.தமிழகத்திற்கு, மேற்கு வங்கம், ஆந்திரா, பஞ்சாப், அரியானா ஆகிய ...

நீச்சல் உடை கொண்டு வராததற்காக பிரம்படி, ஆபாச வசைமாரி: கோவை தனியார் பள்ளி மாணவியர் கண்ணீர்!

Posted:

கோவை:கோவையிலுள்ள பிரபல தனியார் பள்ளியில், நீச்சல் உடை கொண்டு வராததற்காக, பத்தாம் வகுப்பு மாணவியரை பள்ளி தாளாளரே நேரடியாக அடித்து, ஆபாசமாகப் பேசிய விவகாரம், வெளியில் வந்துள்ளது.கோவை நகரில், மாநகராட்சிப்பகுதியை ஒட்டியுள்ள ஊரகப் பகுதியில், பிரபல தனியார் பள்ளி ஒன்று உள்ளது. சி.பி.எஸ்.இ., கல்வி முறைப்படி, பாடம் கற்பிக்கும் இந்தப் பள்ளியில்தான் கோவையிலுள்ள பெரும்பாலான வி.ஐ.பி.,க்களின் குழந்தைகள் படிக்கின்றனர். இப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு, பள்ளி வளாகத்திலுள்ள நீச்சல் குளத்திலேயே வாரமிரு நாட்கள் நீச்சல் கற்றுத்தரப்படுகிறது. இதற்கான ...

கேதார்நாத் கோவிலின் உட்புறம் சீரானது : வெளிப்புறத்தை சரி செய்ய ஆண்டுகள் பலவாகும்

Posted:

டேராடூன் : பேய் மழை மற்றும் பெருவெள்ளத்தால் கடுமையாக சேதமடைந்துள்ள கேதார்நாத் கோவிலின் உட்புறம் சீரானது. வெளிப்புறத்தில் குவிந்து கிடக்கும் பாறைகளை அகற்ற, கனரக இயந்திரங்களை கொண்டு செல்ல முடியாத அளவிற்கு, பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், அப்பகுதியை சரி செய்யும் பணி, அடுத்த ஆண்டு வரை நீடிக்கலாம். பேய் மழை : உத்தரகண்ட் மாநிலத்தில், கடந்த மாதம், 16 மற்றும் 17ம் தேதிகளில், பேய் மழை பெய்தது. இதனால், காட்டாறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, மந்தாகினி, அலக்நந்தா, கங்கை நதிகளில் பயங்கர வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால், இந்துக்களின் புனிதத்தலங்களான, ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™