Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


உரத்த சிந்தனை : காகிதமாகும் இந்திய பணம் : - வி.கோபாலன் - வங்கி அதிகாரி

Posted:

வரலாறு காணாத ரூபாயின் வீழ்ச்சி. ஒரு டாலருக்கு, 61 ரூபாய் என்ற விகிதத்தில், ரூபாய் மதிப்பு குறைந்தது. நம் இந்திய கரன்சி, ஒரு அமெரிக்க டாலருக்கு எதிராக, 53 முதல் 54 ரூபாய் வரை என்ற அளவில் தான் இருந்தது. ஜூன் மாதம் முதல் வாரத்தில் இந்த நிலை, கொஞ்சம் ஆட்டம் கண்டது. நான்கு நாட்கள் இடைவெளியில், 54 ரூபாய் என்ற அளவிலிருந்து, 60 ரூபாய் என்ற அளவிற்கு குறைந்தது. ரூபாயின் மதிப்பு மேலும் குறைவதை தடுத்து நிறுத்த, ரிசர்வ் வங்கி தலையிட்டு, தன் கைவசம் உள்ள அமெரிக்க டாலரிலிருந்து ஒரு பகுதியை வெளியே விட்டு, ரூபாயின் சரிவை கொஞ்சம் தடுத்து நிறுத்தியது. இருந்தாலும், அடுத்த சில ...

கருணாநிதி மனைவி தயாளுவிடம் டில்லி டாக்டர்கள் பரிசோதனை : கோர்ட்டில் நேரில் ஆஜராக முடியுமா என ஆய்வு

Posted:

சென்னை:தி.மு.க., தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளுவின் உடல் நிலை குறித்து, டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர் குழு, நேற்று பரிசோதனை செய்தது. இக்குழு அளிக்கும் அறிக்கையின்படி, "2ஜி' வழக்கின் சாட்சியான அவர், நேரடியாக கோர்ட்டில் ஆஜராக வேண்டுமா என்பதை, சுப்ரீம் கோர்ட் முடிவு செய்யும்.தயாளு, "2ஜி' வழக்கில் சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளார். "அவர், நேரில் ஆஜராக வேண்டும்' என, டில்லி விசாரணை கோர்ட் உத்தரவிட்டது. இந்த உத்தரவிலிருந்து தயாளுவுக்கு விலக்க அளிக்க வேண்டும் என, அவரது மகள் செல்வி, சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்தார்.அம்மனுவில், "என் தாய் தயாளு, 2012, ஜூன் ...

"புல் மீல்ஸ்' விவகாரத்தில் "அந்தர்பல்டி' அடித்தது காங்கிரஸ்

Posted:

வறுமைக்கோடு பற்றி, திட்டக் கமிஷன் தெரிவித்த கருத்தை நியாயப்படுத்த முற்பட்டு, அதில், தோற்றுப் போய் விட்டதால், இந்த விவகாரத்தில், காங்கிரஸ் பல்டி அடித்துள்ளது. அதனால், இந்தப் பிரச்னை, புதிய வடிவத்தை எட்டியுள்ளது."நாள் ஒன்றுக்கு, நகரங்களில், 32 ரூபாயும், கிராமங்களில், 27 ரூபாயும், சம்பாதிப்பவர்களாக இருந்தால், அவர்கள் எல்லாம் வறுமைக் கோட்டிற்கு மேலே உள்ளவர்கள்' என, சமீபத்தில், மத்திய திட்டக் கமிஷன் தெரிவித்திருந்தது. இந்தக் கருத்துக்கு, நாடு முழுவதும், பலத்த எதிர்ப்பு கிளம்பியது.ஆனாலும், திட்டக் கமிஷனின் கருத்தை, நியாயப்படுத்தும் முயற்சியில், காங்கிரஸ் ...

272 இடங்களை கைப்பற்ற பாரதிய ஜனதா வியூகம்

Posted:

புதுடில்லி:வரவிருக்கும் லோக்சபா தேர்லில், 272 இடங்களுக்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று, ஆட்சியைக் கைப்பற்ற, பாரதிய ஜனதா வியூகம் வகுத்துள்ளது. இதற்காக, நாடு முழுவதும் உள்ள கட்சியின் ஆதரவாளர்கள், பல்துறை வல்லுனர்கள் மற்றும் இளைஞர் பிரதிநிதிகளின் கருத்தை கேட்டுள்ள அக்கட்சி, இளைஞர்களை அதிக அளவில் ஈர்த்து வெற்றியை தங்கள் பக்கம் திருப்ப பலவிதமான பிரசாரங்களில் ஈடுபட முடிவு செய்து உள்ளது.அடுத்த ஆண்டு மே மாதத்துடன், நடப்பு 15வது லோக்சபாவின் பதவிக் காலம் நிறைவடைகிறது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த,பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு ...

தி.மு.க., வேகமாக எதிர்ப்பதால் யாருடன் காங்., கூட்டணி?

Posted:

ராஜ்யசபா தேர்தலில், தி.மு.க.,வுக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்த பின், தி.மு.க., - காங்., கட்சிகள் இடையே மீண்டும் கூட்டணி மலரும் என்ற எதிர்பார்ப்பில் தொய்வு ஏற்பட்டுள்ளது. காங்கிரசுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என்ற அடிப்படையில், அக்கட்சியை வேகமாக தி.மு.க., எதிர்த்து வருவதால், காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடுமா அல்லது தே.மு.தி.க.,வுடன் கூட் டணி அமைத்து போட்டியிடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தி.மு.க.,வுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்க வேண்டும் என்பதில், மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன், அகில இந்திய காங்கிரஸ் செயலர் திருநாவுக்கரசர் ஆகியோர் விரும்புகின்றனர். ...

லோக்சபா கூட்டணிக்கு தே.மு.தி.க., முயற்சி

Posted:

ராஜ்யசபா தேர்தலில் காங்.,கட்சியிடம் ஏமாந்த தே.மு.தி.க., தலைமை, லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வுடன் கூட்டணி அமைப்பதற்கான ரகசிய பேச்சு வார்த்தையை துவங்கியுள்ளது.கடந்த, 2006ம் ஆண்டு சட்டசபை தேர்தல் முதல், உள்ளாட்சி தேர்தல், பல தொகுதி சட்டசபை இடைத் தேர்தல்களை தனித்து சந்தித்த தே.மு.தி.க., கடந்த, 2011 சட்டசபை தேர்தலில், முதல் முறையாக, அ.தி.மு. க.,வுடன் கூட்டணி அமைத்தது. தே.மு.தி.க., எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது. அதன்பின், உள்ளாட்சி தேர்தலில், ஏற்பட்ட கூட்டணி முறிவுக்கு பின், இவ்விரு கட்சிகளும், எலியும், பூனையுமாக இருந்து வருகின்றன.

தவிர்ப்பு:
தே.மு.தி.க., - எம்.எல். ...

பாசனத்திற்காக மேட்டூர் அணை ஆக., 12ம் தேதி திறப்பு: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

Posted:

சென்னை:""டெல்டா மாவட்ட விவசாயிகளின் பாசனத்திற்காக, மேட்டூர் அணையிலிருந்து, ஆக., 12ம் தேதியில் இருந்து, தண்ணீர் திறந்து விடப்படும்,'' என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.இது தொடர்பாக, அவர் வெளியிட்ட அறிக்கை:நான், மூன்றாம் முறையாக, ஆட்சி பொறுப்பேற்றதும், மேட்டூர் அணையின் நீர் இருப்பு, விவசாயிகளின் எதிர்பார்ப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு, ஜூன், 12ம் தேதி, மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்கு, தண்ணீர் திறந்து விடுவதற்கு பதிலாக, 2011ம் ஆண்டு முன் கூட்டியே, ஜூன், 6ம் தேதி, தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டேன்.இதன் காரணமாகவும், விவசாயிகளுக்கு புதிய சலுகைகளை ...

தவறான பாதையில் அழைத்து செல்லும் அரசியல் கட்சிகள்

Posted:

எந்தவொரு கட்சியிலும் பிரச்னையான நேரங்களில், பேருந்துகளை சேதப்படுத்துவதும், பயணிகளை தாக்குவதையும், வாடிக்கை கலாசாரமாக வைத்துள்ளனர்.கடந்த ஏப்ரல் மாத இறுதியில், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, 800க்கும் மேற்பட்ட, அரசு மற்றும் தனியார் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதில், 600க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டன.நஷ்டத்தில் இயங்கும் போக்குவரத்து கழகங்கள், இதிலிருந்து மீள முடியாமல் தவித்து வந்த நிலையில், கல்லூரி மாணவர்களால், அரசு பேருந்துகளுக்கு மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது."யாரு பெரிய ஆளு?' என்கிற ...

அரசு பள்ளிகளில் பெயரளவில் ஆங்கில வழி கல்வி

Posted:

தமிழக அரசு துவக்கப் பள்ளிகளில், ஆங்கில வழிக்கல்வி மாணவர்களுக்கும், தமிழ்வழி அட்டை மூலமே, பாடம் நடத்துவதால், பெயரளவில் மட்டுமே ஆங்கில வழிக்கல்வி உள்ளது. இதனால் பெற்றோர் கடும் அதிருப்திஅடைந்துள்ளனர்.

நடுநிலை பள்ளி:
தமிழகத்தில், சில ஆண்டுகளாகவே துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை, கடும் சரிவை சந்தித்து வந்தது. மக்கள் தொகை அதிகரிப்பால், ஆண்டுக்காண்டு அதிகரிக்க வேண்டிய, முதல் வகுப்பு சேர்க்கை, குறைந்து கொண்டே வந்ததற்கு முக்கிய காரணம், பிரைமரி, நர்சரி பள்ளிகள்.இதனால் கட்டணம் கட்ட வழியில்லாதவர்கள் மட்டுமே, அரசு ...

விவசாய பொருட்கள் விலை: பிரதமர் மன்மோகன் கவலை

Posted:

புதுடில்லி : அதிகரித்து வரும் பணவீக்கத்தால், விவசாய விளைபொருட்கள் விலை உயர்ந்து வருவதற்கு கவலை தெரிவித்துள்ள, பிரதமர் மன்மோகன் சிங், இப்பிரச்னைகளைத் தீர்க்க, பொருளாதார நிபுணர்கள், தகுந்த ஆலோசனைகளை வழங்க வேண்டும் என, கேட்டுக் கொண்டுள்ளார்.டில்லியில், தேசிய பொருளாதார ஆராய்ச்சிக் குழுவினர், பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போது, "மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் மற்றும் விவசாய விளைபொருட்களுக்கு, குறைந்தபட்ச ஆதரவு விலை போன்ற காரணங்களால், விவசாய செலவுகள், கடந்த நான்கைந்து ஆண்டுகளில், 20 மடங்கு ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™