Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Daily Thanthi

Daily Thanthi


‘ஹாட்ரிக்’ வெற்றியை நோக்கி இந்தியா ஜிம்பாப்வேயுடன் 3–வது ஆட்டத்தில் இன்று மோதல்

Posted: 27 Jul 2013 12:20 PM PDT

ஹராரே,

ஜிம்பாப்வேக்கு எதிரான 3–வது ஒரு நாள் போட்டியில் இன்று மோதும் இந்திய அணி 'ஹாட்ரிக்' வெற்றியை நோக்கி களம் இறங்க உள்ளது.

3–வது ஆட்டம்

ஜிம்பாப்வேக்கு சென்று 5 போட்டி கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் இந்திய அணி முதல் 2 ஆட்டங்களில் முறையே 6 விக்கெட் மற்றும் 58 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரி 2–0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

டயமன்ட் லீக் தடகளம் 100 மீட்டர் ஓட்டத்தில் உசேன் போல்ட் வெற்றி

Posted: 27 Jul 2013 12:17 PM PDT

லண்டன்,

டயமன்ட் லீக் தடகள போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதன் ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் மெதுவான தொடக்கம் கண்ட ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியனான ஜமைக்காவின் உசேன் போல்ட் 9.85 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து முதலிடத்தை பிடித்து மைதானத்தில் கூடியிருந்த 60 ஆயிரம் ரசிகர்களின் ஒட்டுமொத்த கைதட்டலையும் அள்ளினார். அமெரிக்க வீரர் மைக்கேல் ரோட்ஜெர்ஸ் (9.98 வினாடி) 2–வது இடமும், ஜமைக்கா வீரர் நெஸ்டா கார்ட்டர் (9.99 வினாடி) 3–வது இடமும் பெற்றனர்.

பிரபல டென்னிஸ் வீரர் மரின் சிலிச் ஊக்கமருந்து சோதனையில் சிக்கினார்?

Posted: 27 Jul 2013 12:12 PM PDT

ஜாக்ரெப்,

பிரபல டென்னிஸ் வீர் குரோஷியாவின் மரின் சிலிச் ஊக்கமருந்து சோதனையில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

சென்னை ஓபன் நாயகன்

உலக டென்னிஸ் தரவரிசையில் 15–வது இடம் வகிப்பவர், குரோஷியாவின் மரின் சிலிச். இதுவரை 9 சர்வதேச பட்டங்களை கைப்பற்றியுள்ளார். இதில் சென்னை ஓபனை 2009 மற்றும் 2010–ம் ஆண்டுகளில் வென்றதும் அடங்கும். கிராண்ட்ஸ்லாம் போட்டியை பொறுத்தவரை ஆஸ்திரேலிய ஓபனில் அதிகபட்சமாக 2010–ம் ஆண்டு அரைஇறுதி வரை முன்னேறி இருக்கிறார்.

கொல்கத்தாவில் இன்று நடக்கிறது இந்திய கிரிக்கெட் வாரிய செயற்குழு கூட்டம் ஐ.பி.எல். சூதாட்டம், தென் ஆப்பிரிக்க பயணம் குறித்து ஆலோசனை

Posted: 27 Jul 2013 12:09 PM PDT

கொல்கத்தா,

இந்திய கிரிக்கெட் வாரிய செயற்குழு கூட்டம் கொல்கத்தாவில் இன்று நடக்கிறது. இதில் ஐ.பி.எல்.சூதாட்ட விவகாரம் மற்றும் தென் ஆப்பிரிக்க பயணம் குறித்து ஆலோசனை செய்யப்படுகிறது.

செயற்குழு கூட்டம்

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயற்குழு கூட்டம் இடைக்கால தலைவர் ஜக்மோகன் டால்மியா தலைமையில் கொல்கத்தாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

ஆம் ஆத்மி கட்சி 28 பாராளுமன்ற தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தும் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு

Posted: 27 Jul 2013 12:07 PM PDT

பெங்களூர்

ஆம் ஆத்மி கட்சி(ஏ.ஏ.பி.)யின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் பெங்களூரில் தனது கட்சியின் கர்நாடக கிளையை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது "ஏ.ஏ.பி. கட்சியானது 2014–ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் கர்நாடகத்தில் உள்ள 28 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தும். கர்நாடக மக்களுக்கும் இந்திய மக்களுக்கும் காங்கிரஸ், பாரதீய ஜனதா கட்சிகளைவிட்டால் மாற்று கட்சிகள் எதுவும் இல்லை.

அணை நீர்மட்டம் 100 அடியை எட்டுகிறது: காவிரி டெல்டா பகுதியில் சம்பா சாகுபடிக்கு மேட்டூர் அணை 12–ந் தேதி திறப்பு- ஜெயலலிதா அறிவிப்பு

Posted: 27 Jul 2013 12:03 PM PDT

சென்னை

முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

இரண்டாம் பசுமை புரட்சி

அரக்கோணம் புதிய பஸ் நிலைய சாலையில் அவல நிலை உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை

Posted: 27 Jul 2013 11:15 AM PDT

வேலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய நகரங்களில் அரக்கோணமும் ஒன்று. இங்குள்ள ரெயில் நிலைய சந்திப்பு போலவே புதிய பஸ்நிலையமும் எந்த நேரமும் பரபரப்பானது.

15 ஆயிரம் பயணிகள்

அரக்கோணம் புதிய பஸ் நிலையத்திற்கு தினமும் காஞ்சிபுரம், சோளிங்கர், வேலூர், திருத்தணி, திருப்பதி, பூந்தமல்லி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தினமும் 150–க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் வந்து செல்கின்றன.

வேலூர் மாவட்டத்தில் முருகன் கோவில்களில் ஆடிக்கிருத்திகை விழா 31–ந் தேதி நடக்கிறது

Posted: 27 Jul 2013 11:15 AM PDT

வேலூர்,

வேலூர் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் வருகிற 31–ந் தேதி (புதன்கிழமை) ஆடிக்கிருத்திகை விழா நடக்கிறது. 30–ந் தேதி (செவ்வாய்க்கிழமை) பரணியை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் முருகன் கோவில்களுக்கு சென்று காவடி செலுத்துகின்றனர்.

ஆடிக்கிருத்திகை விழா

ஆன்மீக சிந்தனை (28-07-2013)

Posted: 27 Jul 2013 10:46 AM PDT

கன்னித்தீவு (28-07-2013)

Posted: 27 Jul 2013 10:45 AM PDT



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™