Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


பார்லிமென்ட் சுமுகமாக செயல்பட லோக்சபா சபாநாயகர் விருப்பம்

Posted:

புதுடில்லி: ""பார்லிமென்ட் கூட்டத் தொடர் சுமுகமாக நடைபெறுவதற்கு, அனைத்து உறுப்பினர்களுக்கும் பொறுப்பு உள்ளது,'' என, லோக்சபா சபாநாயகர், மீரா குமார் தெரிவித்தார்.

பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடர், ஆகஸ்ட், 5ம் தேதி துவங்குகிறது. கடந்த முறை நடந்த, இரண்டாம் கட்ட பட்ஜெட் கூட்டத் தொடர், அமளியால் முற்றிலும் பாதிக்கப்பட்டது.லோக்சபா சபாநாயகர், மீரா குமார் கூறியதாவது: லோக்சபா, 545 உறுப்பினர்களை உள்ளடங்கியது. லோக்சபா சுமுகமான முறையில் செயல்படுவதற்கு அனைத்து உறுப்பினர்களின் ஒத்துழைப்பு தேவை. இரண்டு உறுப்பினர்கள், இடையூறு செய்தாலும், சபையை ...

இந்து அமைப்புகளை அச்சுறுத்தவே தாக்குதல்: பா.ஜ.,

Posted:

சென்னை : ""அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில், இந்து அமைப்புகள் மீது, தமிழகத்தில் தாக்குதல் நடந்து வருகின்றன,'' என, பா.ஜ., செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜாவடேகர் கூறினார்.பா.ஜ., தமிழக பொதுச் செயலர் ஆடிட்டர் ரமேஷ் கொலை மற்றும் கடந்த, ஒன்பது மாதங்களில், இந்து அமைப்புகள் மீது நடந்த தாக்குதல் குறித்து, உண்மை அறிய, பிரகாஷ் ஜாவடேகர், ஆனந்தகுமார் ஹெக்டே, நிர்மலா சீதாராமன் ஆகியோர் கொண்ட குழுவை, பா.ஜ., தலைமை அமைத்தது.இக்குழு, வேலூர், சேலம், சென்னை ஆகிய இடங்களில் கட்சி நிர்வாகிகளை, கடந்த, மூன்று நாட்களாக சந்தித்தனர். ஆடிட்டர் ரமேஷ், வெள்ளையப்பன், டாக்டர் அரவிந்த ரெட்டி ...

முதியவரை வலுக்கட்டாயமாக தூக்கி வந்து சாகடித்த திரிணமுல் காங்கிரஸ் கட்சியினர்

Posted:

கோல்கட்டா:மேற்கு வங்க உள்ளாட்சி தேர்தலில் ஓட்டுப் போடுவதற்காக, நோயால் பாதிக்கப்பட்ட முதியவரை, ஆளும் கட்சியினர், வேகாத வெயிலில், வலுக்கட்டாயமாக தூக்கி வந்ததால், அவர், பரிதாபமாக இறந்து போனார்.மேற்கு வங்கத்தில், மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, உள்ளாட்சி தேர்தல்களுக்கான அறிவிப்பு, சில மாதங்களுக்கு முன் வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்தே, அங்கு, பல்வேறு அரசியல்கலாட்டாக்கள் அரங்கேறின.கருத்து வேறுபாடு:தேர்தலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யும் விஷயத்தில், முதல்வர் மம்தா பானர்ஜிக்கும், மேற்கு ...

மரணமடைந்த தம்பதியின் குழந்தைகள் சுடுகாட்டில் குடியமர்த்தப்பட்ட சோகம்

Posted:

பிரதாப்கர்:உ.பி.,யில், பிரதாப்கர் மாவட்டத்தில், ஒரு கிராமத்தில், எய்ட்சால் பாதிக்கப்பட்டு பலியான தம்பதி யின், ஐந்து குழந்தைகள், கிராம மக்களால் புறக்கணிக்கப்பட்டனர். அவர்களுக்கும், எய்ட்ஸ் பாதிப்பு இருக்கும் என, அஞ்சி, ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் இருக்கும் சுடுகாட்டில், குடியமர்த்தப்பட்டனர்.

5 குழந்தைகள் :
உ.பி., மாநிலம் பிரதாப்கர் மாவட்டத்தில், ஜமுவா கிராமத்தில், ஒதுக்குப்புறமாக உள்ள சுடுகாட்டில், தற்காலிகமாக குடில் அமைத்து, ஒரு சிறுமி உட்பட ஐந்து குழந்தைகள் தங்கவைக்கப்பட்டு இருந்தனர். இதில் ஏழு வயது சிறுவனும் அடக்கம். இதில், 17 ...

காவிரி டெல்டா இல்லாத மாவட்ட பகுதிகளில் 17.3 லட்சம் பேருக்கு ரூ.801 கோடி வினியோகம்

Posted:

காவிரி டெல்டா பாசனம் அல்லாத, 23 மாவட்ட பகுதிகளில் வறட்சி நிவாரணம் வழங்கும் பணி, 96 சதவீதம் நிறைவடைந்துள்ளது. இதுவரை, 801 கோடி ரூபாய், 17.3 லட்சம் விவசாயிகளுக்கு, அவர்களின் வங்கி கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் பருவமழை பொய்த்ததால், சென்னை தவிர, 31 மாவட்டங்களும் வறட்சி மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. காவிரி டெல்டா மாவட்டங்களில், ஒரு ஏக்கருக்கு, 15 ஆயிரம் ரூபாய் என, 3.52 லட்சம் விவசாயிகளுக்கு, 524.25 கோடி ரூபாய், அவர்களின் வங்கி கணக்கில் சேர்க்கப்பட்டது."காவிரி டெல்பா பாசனம் இல்லாத, 23 மாவட்டங்களில் உள்ள பகுதிகளுக்கு, 835.21 கோடி ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும்' ...

இந்து இயக்க தலைவர்கள் மீதான தாக்குதல்; தமிழக டி.ஜி.பி., நீண்ட விளக்கம்

Posted:

சென்னை:""முன்விரோதம் காரணமாகவோ, ஏதேனும் ஒரு இயக்கத்தை அச்சுறுத்துவதற்காகவோ, மத நல்லிணக்கத்தை குலைக்கும் விதமாகவோ, தனி நபர் மீது தாக்குதல் நடந்தால், கடும் நடவடிக்கை தொடரும்,'' என, தமிழக டி.ஜி.பி., ராமானுஜம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, நேற்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:இந்துமுன்னணி, பா.ஜ., தலைவர்கள், வேலூர் மற்றும் சேலத்தில் கொல்லப்பட்டதை தொடர்ந்து, "இந்து அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்களை குறி வைத்து, தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படுகிறது. இது தொடர்பாக, போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை' என, இந்து அமைப்புகளின் தலைவர்கள் சிலர், அறிக்கை ...

இலங்கையில் பொது ஓட்டெடுப்பு: கருணாநிதி அடுத்தகட்ட யோசனை

Posted:

சென்னை:"அனைத்து நாடுகளிலும், வாழும் இலங்கை தமிழர்களிடையே, பொது ஓட்டெடுப்பு நடத்தி, அவர்களின் கருத்தைக் கேட்டு தீர்வு காண்பது தான், இலங்கை தமிழர்களின் நலனுக்கு உகந்த தீர்வாக இருக்கும்' என, தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.அவரது அறிக்கை:விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை கைது செய்து, இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும் என, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய ஜெயலலிதாவே, தற்போது, அவற்றையெல்லாம் மறந்துவிட்டு, "இலங்கையிலே, 13 து சட்டத் திருத்தம் நீர்த்துப் போகாமல் பாதுகாக்கப்பட வேண்டும்' என, பிரதமருக்கு அவசர கடிதம் எழுதி, அதற்கு பிரதமரும் பதில் ...

ஏழைகள் சாப்பாடு குறித்த விவகாரம் விஸ்வரூபம் : 1 ரூபாய்க்கு கிடைக்கிறது என்கிறார் பரூக்

Posted:

புதுடில்லி:குறைந்த விலை சாப்பாடு குறித்த பிரச்னை, மேலும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. காங்., தலைவர்களைத் தொடர்ந்து, காங்., கூட்டணியில் அங்கம் வகிக்கும், மத்திய அமைச்சர் பரூக் அப்துல்லாவும், ஏழைகளின் சுயமரியாதையுடன் விளையாடியுள்ளார். "1 ரூபாய்க்கு கூட சாப்பாடு கிடைக்கிறது. சாப்பாட்டின் விலை எல்லாம், அதை சாப்பிடுபவர்களின் மனதைப் பொறுத்தது' என, தத்துவத்தை உதிர்த்துள்ளார். இதற்கு, எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

திட்டக் கமிஷன் அறிக்கை:
மத்திய திட்டக் கமிஷன், மூன்று நாட்களுக்கு முன், அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், "நம் ...

தெலுங்கானா விவகாரத்தில் காங்., முடிவு : அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாகும்

Posted:

புதுடில்லி:தெலுங்கானா விவகாரத்தில், நெருக்கடி அதிகரித்ததை அடுத்து, காங்., கட்சியின் உயர்மட்டக் குழு, நேற்று அவசர ஆலோசனை நடத்தியது. இதில், இறுதி முடிவு எடுக்கப்பட்டு விட்டதாகவும், எந்த நேரத்திலும் அறிவிப்பு வெளியாகும் என்றும், தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, கடந்த, 50 ஆண்டு கால, தெலுங்கானா விவகாரத்துக்கு, தீர்வு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது."ஆந்திராவை இரண்டாக பிரித்து, தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க வேண்டும்' என, தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த, பொதுமக்கள், அரசியல்வாதிகள், 50 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர்.இந்த காரணத்துக்காகவே, சந்திரசேகர ராவ் ...

இன்ஜினியரிங் கல்லூரிகளில் காலி இடங்கள்: முடிந்தது கவுன்சிலிங்; ஆக., 1ல் வகுப்புகள் ஆரம்பம்

Posted:

அண்ணா பல்கலையில், 36 நாட்களாக நடந்து வந்த பி.இ., பொது சேர்க்கை கலந்தாய்வு, நேற்றுடன் முடிவடைந்தது. எதிர்பார்த்தது போலவே, 77 ஆயிரம் இடங்கள் நிரம்பவில்லை. இதனால், 100க்கும் மேற்பட்ட தனியார் பொறியியல் கல்லூரிகள், போதிய அளவு மாணவர்கள் இல்லாமல், தவிக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளன. பொறியியல் கல்லூரிகளில் ஆக., 1ம் தேதி வகுப்புகள் துவங்குகின்றன.உயர்கல்வி என்றாலே, பொறியியல், மருத்துவம் ஆகிய, இரண்டு படிப்புகள் தான், மாணவர் மனதிலும், பெற்றோர் மனதிலும், பெரும்பாலும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன. ஏராளமான துறைகள், விதம் விதமாக, வேலை வாய்ப்புகளை கொட்டிக் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™