Tamil News | Online Tamil News |
- தமிழக போலீஸ் தேடும் நான்கு பேர் எங்கே? மாநிலம் முழுவதும் தீவிர கண்காணிப்பு
- மோடி பக்கம் சாய்கிறதா தி.மு.க.,: எம்.பி.,க்களுக்கு கருணாநிதி எச்சரிக்கை
- டில்லியில் 5 ரூபாய்க்கு முழு சாப்பாடு: எரிச்சலூட்டுகிறார் காங்., பிரமுகர்
- அமர்த்யா சென் விருது பறிப்பா: பா.ஜ., - காங்., வார்த்தை போர்
- "மாஜி' அமைச்சர் தா.கிருஷ்ணன் கொலை வழக்கு: அழகிரி விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு
- மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு பொருளாதாரம் மட்டும் போதாது: அப்துல் கலாம்
- இலங்கை தமிழர்களுக்கான பணி தொடரும்: முதல்வருக்கு எழுதிய கடிதத்தில் பிரதமர் உறுதி
- தமிழக அரசு ஊழியர்களுக்கு புதிய ஊதிய உயர்வு அறிவிப்பு: அரசு ஊழியர் சங்கங்கள் வரவேற்பு
- மோடி விண்ணப்பித்தால் பரிசீலனை: "விசா' குறித்த சர்ச்சைக்கு அமெரிக்கா பதில்
- லஞ்சம் தர முன்வந்ததை வெளியிடுவேன்: "மாஜி' ராணுவ தளபதி வி.கே.சிங் மிரட்டல்
| தமிழக போலீஸ் தேடும் நான்கு பேர் எங்கே? மாநிலம் முழுவதும் தீவிர கண்காணிப்பு Posted: சென்னை: சேலம் ஆடிட்டர் ரமேஷ் மற்றும் வெள்ளையப்பன் கொலை வழக்குகளில் தேடப்பட்டு வரும், "போலீஸ்' பக்ருதீன், பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக், அபுபக்கர் சித்திக் ஆகிய, நால்வரையும் ஒரு வாரத்திற்குள் பிடிக்க, போலீசிற்கு, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.வேலூரில், ஜூலை 1ல், இந்து முன்னணி மாநிலச்செயலர், வெள்ளையப்பன்; சேலத்தில், 19ம் தேதி, பா.ஜ., மாநில செயலர் ஆடிட்டர் ரமேஷ் ஆகியோர், கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக, முதல்வர் ஜெயலலிதா உத்தரவின்படி, சி.பி.சி.ஐ.டி., - டி.ஜி.பி., கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும், சிறப்பு புலனாய்வு குழு (எஸ்.ஐ.டி.,), விசாரணை நடத்தி வருகிறது. ... |
| மோடி பக்கம் சாய்கிறதா தி.மு.க.,: எம்.பி.,க்களுக்கு கருணாநிதி எச்சரிக்கை Posted: "குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு, அமெரிக்க நாட்டு விசா வழங்கக் கூடாது' என, அந்நாட்டு அதிபருக்கு அனுப்பிய கடிதத்தில், தி.மு.க., - எம்.பி.,க்கள் கையெழுத்திட்டிருப்பது, அக்கட்சிக்குள் சர்ச்சையை ஏற்பட்டுத்தியுள்ளது. "இக்கோரிக்கை கடிதத்தில், கையெழுத்திட்ட தி.மு.க., - எம்.பி.,க் கள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும்' என, கட்சி தலைவர் கருணாநிதி எச்சரித்துள்ளார். மோடி குறித்து, கருணாநிதி எடுத்துள்ள இம்முடிவால், தி.மு.க.,வின் அரசியல் நிலை என்ன என்ற கேள்வியை, கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலர் எழுப்புகின்றனர்.9 தமிழக எம்.பி.,க்கள்: "நரேந்திர ... |
| டில்லியில் 5 ரூபாய்க்கு முழு சாப்பாடு: எரிச்சலூட்டுகிறார் காங்., பிரமுகர் Posted: புதுடில்லி: ""தலைநகர் டில்லியில், 5 ரூபாய்க்கு, வயிறு நிறைய மதிய உணவு சாப்பிடலாம்,'' என, டில்லி காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ரஷீத் மசூத், திருவாய் மலர்ந்து, ஏழைகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளார். தனி நபர் வருவாய்: பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய திட்டக்கமிஷன், இரண்டு நாட்களுக்கு முன் வெளியிட்ட புள்ளிவிவரத்தில், "நாட்டில் ஏழைகள் எண்ணிக்கை குறைந்து விட்டது; குடிமக்களின் தனிநபர் வருவாய் பெருகி விட்டது' என, தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு, பாரதிய ஜனதா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மத்தியில் ஆளும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் ... |
| அமர்த்யா சென் விருது பறிப்பா: பா.ஜ., - காங்., வார்த்தை போர் Posted: ""பொருளாதார மேதை அமர்த்யா சென்னுக்கு வழங்கப்பட்ட, "பாரத ரத்னா' விருது, எக்காரணம் கொண்டும் திரும்பப் பெற மாட்டாது,'' என, காங்கிரஸ் எம்.பி.,யான, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை இணையமைச்சர், சசி தரூர் தெரிவித்து உள்ளார். மேற்கு வங்கத்தைப் பூர்வீகமாகக் கொண்ட பொருளாதார மேதை அமர்த்யா சென், நோபல் பரிசு பெற்றுள்ளார். அவரைக் கவுரவிக்கும் விதமாக, சில ஆண்டுகளுக்கு முன், நாட்டின் உயரிய விருதான, "பாரத ரத்னா'வும் வழங்கப்பட்டது."டிவி' நிகழ்ச்சி: நான்கு நாட்களுக்கு முன், "டிவி' நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமர்த்யா சென், குஜராத் முதல்வர், நரேந்திர ... |
| "மாஜி' அமைச்சர் தா.கிருஷ்ணன் கொலை வழக்கு: அழகிரி விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு Posted: மதுரை: மதுரையில், தி.மு.க., முன்னாள் அமைச்சர் தா.கிருஷ்ணன் கொலை வழக்கில், அழகிரி எம்.பி., உட்பட 12 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யும் முயற்சியில், போலீசார் ஈடுபட்டுள்ளனர். தி.மு.க., ஆட்சியில் (1996-2001) நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்தவர், தா.கிருஷ்ணன். மதுரை கே.கே.நகரில் வசித்தார். ஆட்சி மாற்றத்திற்கு பின், 2003 மே 20 காலை, வீட்டருகே "வாக்கிங்' சென்றபோது, வெட்டிக் கொல்லப்பட்டார். இவ்வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, முன்னாள் துணைமேயர் மன்னன் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டனர். "வழக்கு விசாரணை, மதுரையில் ... |
| மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு பொருளாதாரம் மட்டும் போதாது: அப்துல் கலாம் Posted: சென்னை: ""மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு பொருளாதார வளம் மட்டும் போதாது; அமைதியும் அவசியம். இதற்கு சமூகத்தின் நாகரிக வாழ்க்கையை உறுதிப்படுத்த வேண்டியது வழக்கறிஞர்களின் கடமை,'' என, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கூறினார். தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தின், ஏழாவது பட்டமளிப்பு விழா, கவர்னர் ரோசய்யா தலைமையில், சென்னை பல்கலைக் கழக வளாகத்தில் நேற்று நடந்தது. சட்ட பல்கலைக்கழக துணைவேந்தர் விஜயகுமார் வரவேற்றார். சட்டக் கல்வியை முடித்த, 824 மாணவர்கள், பட்டங்களை பெற்றனர்.இவர்களுக்கு, பட்டங்களை வழங்கி, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் ... |
| இலங்கை தமிழர்களுக்கான பணி தொடரும்: முதல்வருக்கு எழுதிய கடிதத்தில் பிரதமர் உறுதி Posted: சென்னை: "இலங்கைத் தமிழர்களுக்கு, தன்னாட்சி உரிமை அளிக்கும் வரை, நமது பணி தொடரும்' என, முதல்வருக்கு எழுதிய கடிதத்தில், பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். முதல்வர் ஜெயலலிதா, இம்மாதம், 14ம் தேதி, பிரதமருக்கு கடிதம் எழுதினார். அதில், "இலங்கை அரசியலமைப்பு சட்டத்தின், 13வது திருத்தத்தை, எந்த வகையிலும் ரத்து செய்வதற்கு அல்லது நீர்த்துப் போகச் செய்வதற்கு, இலங்கை அரசு, எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்க, மத்திய அரசு, அனைத்து விதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்' என, குறிப்பிட்டிருந்தார்.வலியுறுத்தல்: மேலும், "தமிழர்கள் எந்த ... |
| தமிழக அரசு ஊழியர்களுக்கு புதிய ஊதிய உயர்வு அறிவிப்பு: அரசு ஊழியர் சங்கங்கள் வரவேற்பு Posted: சென்னை: தமிழகத்தில், ஆறாவது ஊதியக் குழுவிலிருந்த, முரண்பாடுகளைக் களைந்து, அரசு ஊழியர்களுக்கு, புதிய ஊதிய உயர்வு அறிவிக்கப் பட்டுள்ளது. இதன் மூலம், லட்சக்கணக்கான அரசு ஊழியர் பயன் பெறுவர். புதிய ஊதிய உயர்வை அறிவித்த, முதல்வருக்கு, அரசு ஊழியர் சங்கங்கள் நன்றி தெரிவித்து உள்ளன. குழு நியமனம்: மத்திய அரசின், ஆறாவது ஊதியக் குழு பரிந்துரைத்தபடி, 2009ம் ஆண்டு, தமிழக அரசு ஊழியர்களுக்கு, புதிய சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டது. இதில், பல குறைபாடு இருப்பதாகவும், அவற்றை சரி செய்ய வேண்டும் என்றும், அரசு ஊழியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்தன. இது குறித்து ... |
| மோடி விண்ணப்பித்தால் பரிசீலனை: "விசா' குறித்த சர்ச்சைக்கு அமெரிக்கா பதில் Posted: வாஷிங்டன்: "குஜராத் முதல்வர் நரேந்திர மோடி விண்ணப்பித்தால், அவருக்கு விசா வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும்' என, அமெரிக்கா தெரிவித்துள்ளது. குஜராத்தில், 2002ல் நடைபெற்ற கலவரத்தில் ஏராளமானோர் பலியாயினர். இதற்கு, "முதல்வர் நரேந்திர மோடியே காரணம்' என, எதிர்க்கட்சிகள் புகார் கூறுகின்றன. இது தொடர்பாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து, மோடிக்கு வழங்கிய விசாவை அமெரிக்கா திரும்பப் பெற்றது. அது முதல் இன்று வரை, மோடிக்கு எதிரான விசா கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவில்லை. இந்நிலையில், சில மாதங்களுக்கு முன், குஜராத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட ... |
| லஞ்சம் தர முன்வந்ததை வெளியிடுவேன்: "மாஜி' ராணுவ தளபதி வி.கே.சிங் மிரட்டல் Posted: புதுடில்லி: ""ராணுவத்துக்கு, "டாட்ரா 'வாகனங்கள் கொள்முதல் செய்ததில், ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி, லஞ்சம் கொடுக்க முன்வந்தது தொடர்பான ஆவணங்களை, வெளியிடுவேன்,'' என, ஓய்வு பெற்ற ராணுவ தலைமைத் தளபதி, வி.கே.சிங் எச்சரித்துள்ளார்.வாகனங்கள் கொள்முதல்: இந்திய ராணுவத்துக்கு, "டாட்ரா' வாகனங்கள் கொள்முதல் செய்வது தொடர்பாக, ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி, தேஜிந்தர் சிங், தன்னிடம், 14 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முன் வந்தார் என, ராணுவ தலைமைத் தளபதி, வி.கே.சிங், புகார் கூறி, பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த வழக்கு தொடர்பாக, மாஜி ராணுவ அதிகாரி, தேஜிந்தர் சிங் உட்பட ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜூலை 26,2013 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |