Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


நாட்டில் ஏழைகள் எண்ணிக்கை குறைந்து விட்டதா? இல்லவே இல்லை என்கிறது பாரதிய ஜனதா

Posted:

புதுடில்லி: "மத்திய திட்டக்கமிஷன் வெளியிட்டுள்ள, வறுமை கோட்டிற்கு கீழே வாழும் ஏழைகள் எண்ணிக்கை குறைந்து விட்டது என்ற புள்ளிவிவரம், ஏழைகளை வேண்டுமென்றே வஞ்சிக்கும் மத்திய அரசின் சதித்திட்டம்' என, பாரதிய ஜனதா கண்டனம் தெரிவித்துள்ளது.

புள்ளிவிவர அறிக்கை:
பிரதமர் மன்மோகன் சிங்கை தலைவராகவும், மான்டேக் சிங் அலுவாலியாவை துணைத் தலைவராகவும் கொண்ட மத்திய திட்டக்கமிஷன், நேற்று முன்தினம், புள்ளிவிவர அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், நாட்டில் ஏழைகள் எண்ணிக்கை குறைந்து விட்டது; மக்களின் வருமானம் அதிகரித்து விட்டது என்ற, ரீதியில் ...

எம்.பி.,க்களின் கையெழுத்தை போலியாக போட்டு மோசடி : மோடிக்கு எதிராக நடந்த சதியின் பின்னணியில் யார்?

Posted:

புதுடில்லி:குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு, அமெரிக்கா, "விசா' வழங்கக் கூடாது என கேட்டு, அமெரிக்க அதிபர், பராக் ஒபாமாவுக்கு, 65 எம்.பி.,க்கள் கடிதம் எழுதியதாக வெளியான விவகாரத்தில், திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. மூத்த எம்.பி.,க்களில் ஒருவரான, சீதாராம் யெச்சூரி, தான் அந்த கடிதத்தில் கையெழுத்திடவில்லை என தெரிவித்துள்ளார். அது போலவே, தி.மு.க., - எம்.பி., கே.பி.ராமலிங்கமும் தெரிவித்துள்ளார். இது குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என, பாரதிய ஜனதா கோரிக்கை விடுத்துள்ளது. பா.ஜ., தேர்தல் பிரசார குழுவின் தலைவராக, குஜராத் முதல்வர், நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டதை ...

பா.ஜ.,வுடன் இணைந்து போராட தே.மு.தி.க., தயார்

Posted:

இந்து இயக்க பிரமுகர்கள் கொலை செய்யப்படுவதை கண்டித்து, பா.ஜ., சார்பில் நடக்கும் போராட்டங்களில், அக்கட்சியுடன் இணைந்து போராட தே.மு.தி.க., தலைமை, ரகசிய ஆதரவு தெரிவித்துள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.இந்து இயக்க பிரமுகர்கள் கொலையை கண்டித்து, பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. ஆனால், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், இவ்விஷயத்தில் கண்டனம் தெரிவிக்காமல் மவுனம் காத்து வந்தார்.இந்நிலையில், தே.மு.தி.க., மாநில பொருளாளர் இளங்கோவன், சேலம் மாவட்டத்தை சேர்ந்த எம்.எல்.ஏ.,க்கள் மோகன்ராஜ் மற்றும் சுபா ஆகியோர், விஜயகாந்த் உத்தரவின் பேரில், படுகொலை செய்யப்பட்ட ...

கருணாநிதியுடன் காங்., தலைவர்கள்: இரு கட்சிகளிடம் "இணக்கம்' உருவாகுமா?

Posted:

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில், சென்னையில் இன்று நடைபெறவுள்ள, இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க, தி.மு.க., தலைவர் கருணாநிதி, தமிழக காங்., தலைவர் ஞானதேசிகன், முன்னாள் எம்.எல்.ஏ., பீட்டர் அல்போன்ஸ் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தி.மு.க., - காங்., கூட்டணி இல்லை என்ற நிலையில், கருணாநிதியுடன் காங்., தலைவர்கள், "கை' கோர்ப்பதால், மீண்டும் இரு கட்சிகளிடம், "இணக்கம்' உருவாகுமா என்ற எதிர்பார்ப்பு கட்சி வட்டாரங்களில் எழுந்துள்ளது.அ.தி.மு.க., சார்பில் இம்மாதம், 27ம் தேதி, ஊட்டியில் நடைபெற இருந்த இப்தார் நிகழ்ச்சி, ஏற்காடு தொகுதி எம்.எல்.ஏ., ...

குற்றச்சாட்டுக்களை ரத்து செய்ய கோரி சுப்ரீம் கோர்ட்டில் கனிமொழி மனு

Posted:

புதுடில்லி: "2ஜி' வழக்கில், சி.பி.ஐ., தன் மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்களை ரத்து செய்யக் கோரி, தி.மு.க., - எம்.பி., கனிமொழி, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில், சி.பி.ஐ., தன் மீது தொடர்ந்துள்ள வழக்குகளை ரத்து செய்யக் கோரி, தி.மு.க., - எம்.பி., கனிமொழி, டில்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்குகளை, சுப்ரீம் கோர்ட் கண்காணிப்பதால், டில்லி ஐகோர்ட் விசாரிக்க மறுத்து விட்டது.இதையடுத்து, கனிமொழி, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இதில் அவர் கூறியுள்ளதாவது:கலைஞர் "டிவி' நிர்வாக பொறுப்பில் இருந்து, 2007ம் ஆண்டு, ஜூன் ...

வெள்ளையப்பன், ஆடிட்டர் ரமேஷ் கொலை: 4 பேர் பற்றி தகவல் தந்தால் ரூ.20 லட்சம் பரிசு அறிவிப்பு

Posted:

சென்னை:"வேலூர் வெள்ளையப்பன், சேலம் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்குகளில் தேடப்பட்டு வரும், போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக் உள்ளிட்ட, நால்வர் பற்றிய தகவல் அளித்தால், ஐந்து லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும்' என்று, தமிழக டி.ஜி.பி., அறிவித்துள்ளார்.இதுகுறித்து, தமிழக டி.ஜி.பி., அலுவலகம் நேற்று இரவு வெளியிட்ட செய்திக் குறிப்பு: வேலூரில், ஜூலை, முதல் தேதி, வெள்ளையப்பன் என்பவரும், சேலத்தில், ஜூலை, 19ம் தேதி, ஆடிட்டர் ரமேஷ் என்பவரும் கொலை செய்யப்பட்ட வழக்குகளில், முதல்வர் ஜெயலலிதா உத்தரவின்படி, சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு, தீவிர விசாரணை ...

பா.ஜ.,வில் 1,000 பேரை சேர்த்தால் நரேந்திர மோடியை சந்திக்கலாம்

Posted:

கான்பூர்:"பா.ஜ.,வில், 1,000 இளைஞர்களை, புதிதாக சேர்க்கும் நிர்வாகிகளுக்கு, குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை சந்திக்கும் வாய்ப்பு அளிக்கப்படும்' என, உ.பி., மாநில பா.ஜ., அறிவித்துள்ளது.குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, பா.ஜ., தேர்தல் பிரசார குழு தலைவராக, நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, ஒவ்வொரு மாநிலமாக சென்று, கட்சி நிர்வாகிகளை சந்தித்து, தேர்தல் ஏற்பாடுகளை முடுக்கி விட்டு வருகிறார். இந்நிலையில், உ.பி., மாநில பா.ஜ.,வின் மூத்த நிர்வாகியான, பால் சந்திர மிஸ்ரா கூறியதாவது:நரேந்திர மோடிக்கு, அனைத்து மாநிலங்களிலும் செல்வாக்கு அதிகரித்துள்ளது. இதனால், உ.பி., மாநில ...

படிப்பை தொடர விரும்புகிறார் தர்மபுரி திவ்யா: ஐகோர்ட்டில் மனநல டாக்டர் அறிக்கை தாக்கல்

Posted:

சென்னை:படிப்பைத் தொடர விரும்புவதாகவும், எதிர்காலம் பற்றிய, உறுதியான எண்ணத்துடன் இருப்பதாகவும், தர்மபுரி திவ்யா குறித்து, சென்னை ஐகோர்ட்டில், அரசு டாக்டர் அறிக்கை அளித்துள்ளார்.கலப்பு திருமணம்:தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த, இளவரசன், திவ்யா, இருவரும் கலப்பு திருமணம் செய்து கொண்டனர். திவ்யாவின் தாயார் தேன்மொழி, தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவைத் தொடர்ந்து, ஒரு கட்டத்தில், தாயாருடன் செல்ல, திவ்யா விருப்பம் தெரிவித்து, தாயாருடன் சென்றார். இதையடுத்து, தர்மபுரியில், ரயில் தண்டவாளம் அருகில், இளவரசனின் உடல் கிடந்தது.இளவரசன் மரணத்திற்கு சி.பி.ஐ., விசாரணை ...

6 ஏக்கர் பரப்பில் 600 மரங்களுடன் "ஆக்சிஜன்' தொழிற்சாலை

Posted:

கோவை: கோவை நகரின் மத்தியில், 6 ஏக்கர் பரப்பில் 600 மரங்களுடன், பிரமாண்டமான மரப்பூங்கா உருவாகி வருகிறது; இதேபோல, பிற "ரிசர்வ் சைட்'களிலும் மரங்கள் வளர்த்தால், கோவையே பசுமை நகரமாக விரைவில் உருமாறும்.கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், 1,600க்கும் அதிகமான "ரிசர்வ் சைட்'கள் உள்ளன. இவற்றில், நூற்றுக்கும் உட்பட்ட இடங்கள் மட்டுமே, மாநகராட்சி நிர்வாகத்தால் மேம்படுத்தப்பட்டுள்ளன. சில இடங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன; பெரும்பான்மையான பொது ஒதுக்கீட்டு இடங்கள், பராமரிப்பின்றி, முட்புதர்காடுகளாக மாறியுள்ளன. மாநகரில், ஏழு லட்சத்துக்கும் அதிகமான வாகனங்கள் வலம் ...

மதுரை ராணி மங்கம்மாள் "பேலஸ்' இடிப்பு : அ.தி.மு.க., பிரமுகர் அடாவடி

Posted:

மதுரை:மதுரையில், புராதன சின்னமாக கருதப்படும் ராணி மங்கம்மாள் "பேலஸை' இடித்த, அ.தி.மு.க., பிரமுகரின் செயல், மக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை வடக்கு ஆவணி மூலவீதியில், மீனாட்சி அம்மன் கோயில் அருகே, ராணி மங்கம்மாள் "பேலஸ்' உள்ளது. 1689ல், கருங்கற்களால் கட்டப்பட்ட அக்கட்டடம், தற்போது பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதார அமைப்பின் கீழ்இயங்கும், பெரியாறு, வைகை வடிநில வட்டம் கண்காணிப்பு பொறியாளர் அலுவலகமாக செயல்படுகிறது. புராதன சின்னமான அக்கட்டத்திற்கு, பாதிப்பு வராமல் பொதுப்பணித் துறையினர் பாதுகாத்து வருகின்றனர். கட்டடத்தின் பின்புறம், ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™