Daily Thanthi |
- கே.ஆர்.எஸ். அணை
- ஒகேனக்கல் அருவி
- ஜம்மு காஷ்மீர்
- பாரதீய ஜனதா
- பழங்குடியினர் போராட்டம்
- ஜிம்பாப்வேக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணி எளிதில் வெற்றி விராட் கோலி சதம் அடித்தார்
- தென் ஆப்பிரிக்க வீரர் அம்லா காயம் 3–வது போட்டியில் ஆடுவது சந்தேகம்
- ரஷிய போல்வால்ட் வீராங்கனை இசின்பயேவா ஓய்வு பெறுகிறார்
- மாற்று திறனாளிகளுக்கான உலக செஸ் போட்டி: தமிழக வீராங்கனை ஜெனிதா சாம்பியன்
- ஆஸ்திரேலியாவுக்கு சென்றபோது அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து 4 பேர் பலி
| Posted: 24 Jul 2013 01:51 PM PDT கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. தொடர் மழை காரணமாக மண்டியா மாவட்டத்தில் 124.80 அடி உயரம் கொண்ட கே.ஆர்.எஸ். அணை தனது முழு கொள்ளளவையும் எட்டியுள்ளது. இதனால் அணையில் அலை போல் தண்ணீர் ஆர்ப்பரிக்கும் காட்சி. |
| Posted: 24 Jul 2013 01:48 PM PDT காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து இருப்பதால் ஒகேனக்கல் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்கும் பகுதியில் புதுவெள்ளம் கொட்டும் காட்சி. |
| Posted: 24 Jul 2013 01:46 PM PDT இந்தியா எல்லைக்குள் சீன ராணுவம் ஊடுருவியதை கண்டித்து காஷ்மீரில் ஜம்மு மேற்கு சட்டமன்ற இயக்கத்தினர் போராட்டம் நடத்தினர். |
| Posted: 24 Jul 2013 01:41 PM PDT கோவை வந்த பாரதீய ஜனதா மத்திய குழுவினர் பிரகாஷ் ஜாவடேகர், நிர்மலா சீத்தாராமன், அனந்த் ஹெக்டே, மாநில தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்திய போது எடுத்த படம். |
| Posted: 24 Jul 2013 01:22 PM PDT ஒடிசா மாநிலம் காலாகாந்தி மாவட்டம் நியாம்கிரி மலையில் பாக்சைட் சுரங்கம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பழங்குடியினர் போராட்டம் நடத்தினர். |
| Posted: 24 Jul 2013 12:47 PM PDT ஹராரே, ஜிம்பாப்வேக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சுலபமாக வெற்றி பெற்றது. விராட் கோலி சதம் விளாசினார். ஒரு நாள் தொடர் விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தியா – ஜிம்பாப்வே அணிகள் இடையிலான 5 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரில் முதலாவது ஆட்டம் ஹராரேயில் நேற்று நடந்தது. இந்திய அணியில் அம்பத்தி ராயுடு, ஜெய்தேவ் உனட்கட் சர்வதேச ஒரு நாள் போட்டியில் அறிமுகம் ஆனார்கள். புஜாரா, பர்வேஸ் ரசூலுக்கு ஆடும் லெவன் அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. |
| தென் ஆப்பிரிக்க வீரர் அம்லா காயம் 3–வது போட்டியில் ஆடுவது சந்தேகம் Posted: 24 Jul 2013 12:44 PM PDT
இலங்கைக்கு எதிரான 2–வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பீல்டிங் செய்கையில் தென் ஆப்பிரிக்க வீரர் ஹசிம் அம்லா காயம் அடைந்து வெளியேறினார். அவர் 3–வது ஒருநாள் போட்டியில் ஆடமாட்டார் என்று தெரிகிறது. இலங்கை வெற்றி |
| ரஷிய போல்வால்ட் வீராங்கனை இசின்பயேவா ஓய்வு பெறுகிறார் Posted: 24 Jul 2013 12:42 PM PDT
ரஷிய போல்வால்ட் வீராங்கனை இசின்பயேவா மாஸ்கோவில் அடுத்த மாதம் நடக்கும் உலக தடகளத்துடன் ஓய்வு பெறுகிறார். சாதனை புயல் போல்வால்ட் (கம்பூன்றி தாண்டுதல்) விளையாட்டின் ராணி என்று அழைக்கப்படுபவர் ரஷியாவின் யுலினா இசின்பயேவா. 31 வயதான இவர் ஏராளமான சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆவார். |
| மாற்று திறனாளிகளுக்கான உலக செஸ் போட்டி: தமிழக வீராங்கனை ஜெனிதா சாம்பியன் Posted: 24 Jul 2013 12:39 PM PDT
மாற்று திறனாளிகளுக்கான உலக செஸ் போட்டி செக்குடியரசு நாட்டில் நடந்தது. இதில் பெண்களுக்கான தனிநபர் பிரிவில் 9 சுற்றுகள் முடிவில் 3 வெற்றி, 3 தோல்வி, 3 டிரா என்று மொத்தம் 4.5 புள்ளிகள் பெற்ற தமிழக வீராங்கனை ஜெனிதா அன்டோ சாம்பியன் பட்டத்தை வென்றார். சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி விளையாடும் ஜெனிதாவுக்கு இந்த வெற்றியின் மூலம் பெண்கள் சர்வதேச பெண்கள் மாஸ்டர் அந்தஸ்து கிடைத்துள்ளது. |
| ஆஸ்திரேலியாவுக்கு சென்றபோது அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து 4 பேர் பலி Posted: 24 Jul 2013 12:26 PM PDT ஜகர்த்தா, ஆஸ்திரேலியாவுக்கு அகதிகளாக சென்றவர்களின் படகு, இந்தோனேஷியா கடலில் கவிழ்ந்தது. இதில் 4 பேர் உயிரிழந்தனர்.
|
| You are subscribed to email updates from Daily Thanthi To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
கொழும்பு,
மாஸ்கோ,
புதுடெல்லி,
அகதிகள் பெருக்கம்