Tamil News | Online Tamil News |
- பா.ஜ., பிரமுகர் கொலையில் துப்பு கிடைக்காமல் போலீசார் திணறல் : குற்றவாளிகளை விரைவில் பிடிக்க புதிய வியூகம் அமைப்பு
- 7 மாதங்களில் 150 முறை அத்துமீறிய சீன ராணுவம்
- முல்லை பெரியாறு அணை விவகாரம் : சுப்ரீம் கோர்ட்டில் இறுதிகட்ட விசாரணை
- மத்திய அரசு மீது ஜெயலலிதா பாய்ச்சல்: அதிகாரத்தை இழக்கும் என கணிப்பு
- என்.எல்.சி., விவகாரம்: முதல்வருக்கு கருணாநிதி பதில் விளக்கம்
- ஏற்காடு தொகுதி இடைத்தேர்தல் தி.மு.க., புறக்கணிக்க திட்டம்?
- கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீதான வழக்குகள் தற்போது வாபஸ் இல்லை
- கோவையில் கணக்கில் வராத ரூ.250 கோடி! வரிஏய்ப்பு செய்தவர்கள் கலக்கம்
- கர்நாடக அமைச்சர்களுக்கு கார்கள்: மக்கள் வரிப்பணம் ரூ.5 கோடி வீண்
- தெலுங்கானா மாநில அறிவிப்பு விரைவில் வெளியீடு : காங்., உயர் மட்ட கூட்டத்தில் இறுதி முடிவு
| Posted: பாரதிய ஜனதா பொதுச் செயலர் சேலம் ஆடிட்டர் ரமேஷ், வேலூரில் இந்து முன்னணி அமைப்பாளர் வெள்ளையப்பன் கொலை வழக்குகளில், இதுவரை துப்பு எதுவும் கிடைக்க வில்லை. குற்றவாளிகளை விரைவில் கைது செய்யும் வகையில், அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழு, இரண்டாகப் பிரிக்கப்பட்டு, புதிய வியூகங்களுடன் களம் இறங்கி உள்ளது.இம்மாதம், 1ம் தேதி வேலூரில், மாநில இந்து முன்னணி அமைப்பாளர் வெள்ளையப்பன் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இம்மாதம், 19ம் தேதி சேலத்தில், பா.ஜ., மாநில செயலர் ஆடிட்டர் ரமேஷ் வெட்டிக் கொல்லப்பட்டார்.இந்த இரண்டு கொலைகளும், இந்து ... |
| 7 மாதங்களில் 150 முறை அத்துமீறிய சீன ராணுவம் Posted: புதுடில்லி:இந்த ஆண்டின், ஏழு மாதங்களில், இந்திய பகுதிக்குள், சீன ராணுவம், 150 முறை அத்துமீறி நுழைந்துள்ளது என்ற, அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.அண்டை நாடான சீனாவுக்கும், இந்தியாவுக்கும் இடையே, தெளிவான எல்லை, இன்னும் வரையறுக்கப்படவில்லை. தற்காலிக எல்லை மட்டுமே பிரிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில், எவ்வித தாக்குதலையும் எதிர்கொள்ளும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, இந்தோ - திபெத் எல்லை போலீஸ் படையினருடன் இணைந்து, இந்திய ராணுவம் மேற்கொண்டுள்ளது.இதை அறிந்த பிறகு, அந்தப் பகுதிகளில், இந்த ஆண்டில் மட்டும், 150 முறை, சீன ராணுவம் அத்துமீறி நுழைந்து, ... |
| முல்லை பெரியாறு அணை விவகாரம் : சுப்ரீம் கோர்ட்டில் இறுதிகட்ட விசாரணை Posted: புதுடில்லி:முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்கில், இறுதிக் கட்ட விசாரணை நேற்று துவங்கியது.முல்லைப் பெரியாறு அணையை உயர்த்த, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதை ஏற்க மறுத்த, கேரள அரசு, "கேரள நீர்ப்பாசனம் மற்றும் தண்ணீர் பாதுகாப்பு (திருத்தம்) சட்டம் - 2006' ஐ, நிறைவேற்றியது. இதன்மூலம், அணையின் நீர்மட்டத்தை, தமிழக அரசு உயர்த்துவதை தடுக்க முற்பட்டது.இந்நிலையில், கேரள அரசு இயற்றிய சட்டத்தை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில், தமிழக அரசு வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கின் இறுதிக் கட்ட விசாரணை, நீதிபதிகள் லோதா, டாட்டூ, சி.கே.பிரசாத், மதன் பி.லோகூர் மற்றும் இக்பால் ... |
| மத்திய அரசு மீது ஜெயலலிதா பாய்ச்சல்: அதிகாரத்தை இழக்கும் என கணிப்பு Posted: சென்னை:"மத்திய அரசு, சில துறைகளில், அன்னிய முதலீட்டை அதிகரிக்க அனுமதிப்பதே, ரூபாய் மதிப்பின் வீழ்ச்சிக்கு காரணம்' என, முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார். மத்திய அரசு அதிகாரத்தை இழக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை என்றும், அவர் மேலும் தெரிவித்திருக்கிறார்அவரது அறிக்கை:இந்திய ரூபாயின் மதிப்பு, வெகுவாக குறைந்து, அமெரிக்க டாலருக்கு எதிராக, ஒரு புதிய வரலாறை உருவாக்கி வருகிறது. இது, மத்திய அரசு, கொள்கை என்ற பெயரில், சில துறைகளில், நேரடியாக அன்னிய முதலீடுகளை, அதிகரிக்க அனுமதிப்பதால் ஏற்பட்டது.இந்நடவடிக்கை, தொழிலாளர் மற்றும் நாட்டு மக்களின் நலனை, ... |
| என்.எல்.சி., விவகாரம்: முதல்வருக்கு கருணாநிதி பதில் விளக்கம் Posted: சென்னை:"தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் வாங்கிக் கொள்ள தயார் என, பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதாமல் இருந்திருந்தால், தொழிலாளர்களின் போராட்டம் காரணமாக, மத்திய அரசு தானாகவே முன் வந்து, பங்குகளை விற்பனை செய்யும் முடிவை திரும்ப பெற்றிருக்கும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.அவரது அறிக்கை:முதல்வர் தன் அறிக்கையில் தெரிவித்திருப்பதைப் போல, எனக்கு ஆதங்கமோ, அரசியல் காழ்ப்போ, பொறாமையோ, விரக்தியோ நிச்சயமாகக் கிடையாது. ஆனால், முதல்வருக்கு எப்போதும் தன்னால் தான் நடந்தது என்று சொல்லிக் கொள்வதில் ஒரு ஆர்வமும், ஆசையும் உண்டு.எந்தப் ... |
| ஏற்காடு தொகுதி இடைத்தேர்தல் தி.மு.க., புறக்கணிக்க திட்டம்? Posted: சென்னை:ஏற்காடு தொகுதி அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., பெருமாள் மாரடைப்பால் மரணம் அடைந்ததை தொடர்ந்து, இன்னும் ஆறு மாதத்திற்குள், அத்தொகுதி இடைத்தேர்தலை சந்திக்கவுள்ளது. புதுக்கோட்டை இடைத்தேர்தலை புறக்கணித்தது போல, ஏற்காடு இடைத்தேர்தலையும் புறக்கணிக்க தி.மு.க., திட்டமிட்டுள்ளது என, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.அ.தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற பின், திருச்சி மேற்கு, சங்கரன்கோவில், புதுக்கோட்டை ஆகிய மூன்று தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில், அ.தி.மு.க., அமோக வெற்றி பெற்றது. திருச்சி மேற்கு, சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் மட்டும் தி.மு.க., போட்டியிட்டது. சங்கரன் ... |
| கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீதான வழக்குகள் தற்போது வாபஸ் இல்லை Posted: சென்னை:"கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீதான வழக்குகளை, தற்போது வாபஸ் பெறும் சூழ்நிலை இல்லை; சூழ்நிலை உகந்ததாக மாறினால், வழக்குகளை வாபஸ் பெறுவது பற்றி பரிசீலிக்கப்படும்' என, சென்னை ஐகோர்ட்டில், அட்வகேட்-ஜெனரல் சோமயாஜி தெரிவித்தார். இவ்வழக்கின் மீதான உத்தரவை, தேதி குறிப்பிடாமல் ஐகோர்ட் தள்ளிவைத்தது."பூவுலகின் நண்பர்கள்' என்ற அமைப்பின் அறங்காவலரான, சென்னை, வடபழனியைச் சேர்ந்த, சுந்தரராஜன் என்பவர், தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: கிரிமினல் வழக்குகள் சுப்ரீம் கோர்ட் உத்தரவில், 15 ... |
| கோவையில் கணக்கில் வராத ரூ.250 கோடி! வரிஏய்ப்பு செய்தவர்கள் கலக்கம் Posted: கோவையில் கடந்த ஆண்டில் மட்டும், 250 கோடி ரூபாய் வரை, வரிஏய்ப்பு கணக்குகள் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.தனி நபரின் வருமானம், தொழில் நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களின் வருமானம் என, அனைத்து பிரிவினரும் வருமானவரியை முறையாக செலுத்துகின்றனரா என, வருமான வரி புலனாய்வு பிரிவு கண்காணிக்கிறது.சந்தேகத்துக்குரிய வகையில், போலி கணக்கு காண்பிக்கும், வருமானவரி செலுத்துவோர் குறித்து தகவல் கிடைத்ததும், புலனாய்வுப் பிரிவு களத்தில் இறங்குகிறது.சில தொழில்அதிபர்கள், நிறுவனங்கள் தங்களது வரவு, செலவு இனங்களில், போலி கணக்கு காட்டியும், போலி பெயரில் ... |
| கர்நாடக அமைச்சர்களுக்கு கார்கள்: மக்கள் வரிப்பணம் ரூ.5 கோடி வீண் Posted: பெங்களூரு:கர்நாடக அமைச்சர்களுக்கு, 30 புதிய சொகுசு கார்கள் வாங்க, மக்கள் வரிப்பணம், ஐந்து கோடி ரூபாய் வீணடிக்கப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன், பாரதிய ஜனதா அரசில் வாங்கப்பட்ட பல கார்களை, தற்போதைய காங்கிரஸ் அமைச்சர்கள் தொட்டுக்கூட பார்க்காததால், அரசுக்கு வீண் செலவு ஏற்பட்டுள்ளது. |
| தெலுங்கானா மாநில அறிவிப்பு விரைவில் வெளியீடு : காங்., உயர் மட்ட கூட்டத்தில் இறுதி முடிவு Posted: இம்மாதம், 31ம் தேதி அல்லது ஆக., 3ம் தேதி, காங்கிரஸ் உயர்மட்டக் குழு டில்லியில் கூடுகிறது. அந்தக் கூட்டத்தில், தெலுங்கானா மாநிலம் அமைப்பது குறித்த, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. இரு தினங்களுக்கு முன், ஆந்திர மாநில சபாநாயகர் மனோகர், டில்லி வந்திருந்தார். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ் தலைவர் சோனியா, பிரதமர் மன்மோகன் சிங், மாநில பொறுப்பாளர் திக்விஜய் சிங் மற்றும் குலாம் நபி ஆசாத் ஆகியோருடன், அவர் ஆலோசனை நடத்தினார்.இந்த ஆலோசனையின் போது, ஆந்திர மாநில சட்டசபையின் சிறப்புக் கூட்டத்தை கூட்டுவது என்றும், அதில் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜூலை 24,2013 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |