Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


""விவசாயத்தை அழித்து வரும் ரியல் எஸ்டேட் தொழிலைத் தடுத்து நிறுத்த தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும்?''

Posted: 23 Jul 2013 01:26 PM PDT

"நெல்' விளைந்த கழனிதோறும் இன்று (சர்வே) "கல்' விளையும் காட்சி, நம்மனோர் கண்களில் குருதியைச் சிந்தச் செய்கின்றது.

ஆதலினால் காதல் செய்வீர்!

Posted: 23 Jul 2013 01:20 PM PDT

இளவரசன் - திவ்யா காதல் சோகமாக முடிந்தது. இளவரசன் பிணமானார். திவ்யா நடைப்பிணமாக இருக்கிறார்.

இலக்கு, வெகு தொலைவில்...

Posted: 23 Jul 2013 01:18 PM PDT

பிற மாநிலங்களுக்குச் சுற்றுலாச் செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை 2012-ஆம் ஆண்டில் 15.6 விழுக்காடு அதிகரித்துள்ளது.

முல்லைப் பெரியாறு அணை வழக்கு: தமிழகத்தின் உரிமையை தெளிவுபடுத்த வேண்டும்

Posted: 23 Jul 2013 01:14 PM PDT

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை தெளிவுபடுத்தும்படி உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு கூறியுள்ளது.

கூடங்குளம் வழக்கு: உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு தள்ளிவைப்பு

Posted: 23 Jul 2013 01:13 PM PDT

கூடங்குளம் அணு உலை இயக்கத்தை தொடங்குவதற்கு அணுசக்தி ஒழுங்கு முறை வாரியம் அளித்த அனுமதியை ரத்து செய்யக் கோரும் வழக்கில் தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

என்.எல்.சி. விவகாரம்: ஜெயலலிதா செயல்பாட்டில் காழ்ப்புணர்வு இல்லை

Posted: 23 Jul 2013 01:11 PM PDT

என்.எல்.சி. விவகாரத்தில் முதல்வர் ஜெயலலிதாவின் செயல்பாட்டில், எவ்வித காழ்ப்புணர்வும் தனக்கு இல்லை என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

திருநகரில் விவேகானந்தர் ரதத்துக்கு சிறப்பான வரவேற்பு

Posted: 23 Jul 2013 01:10 PM PDT

திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள திருநகருக்கு செவ்வாய்க்கிழமை வருகைபுரிந்த சுவாமி விவேகானந்தர் ரதத்துக்கு, ஏராளமான பொதுமக்கள், மாணவ, மாணவியர் சிறப்பான வரவேற்பளித்தனர்.

சொட்டு நீர்ப்பாசன முறையை விவசாயிகள் கற்றுக் கொள்ளவேண்டும்: ஆட்சியர்

Posted: 23 Jul 2013 01:10 PM PDT

குறைந்த அளவு தண்ணீரில் அதிக மகசூல் பெறும் சொட்டு நீர்ப்பாசன முறையை விவசாயிகள் கற்றுக் கொள்ளவேண்டும் என்று, மாவட்ட ஆட்சியர் எல். சுப்பிரமணியன்   வலியுறுத்தியுள்ளார்.

விசாரணைக் குழு முன்பு ஆஜராவதில் இருந்து ராமதாஸூக்கு விலக்கு அளியுங்கள்: பாமக மனு

Posted: 23 Jul 2013 01:10 PM PDT

விழுப்புரத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற சம்பவத்தைத் தொடர்ந்து வட மாவட்டங்களில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்களில் பொதுச் சொத்துகளுக்கு சேதங்கள் ஏற்பட்டன.

குற்றவியல் துறை அதிகாரிகள் பணியிடம் விதிப்படி நிரப்பப்பட்டுள்ளதா?

Posted: 23 Jul 2013 01:10 PM PDT

குற்றவியல் துறை உயர் அதிகாரிகள் பணியிடம் விதிப்படி  நிரப்பப்பட்டதா? என அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.   பல ஆண்டுகளாக காலியாக உள்ள குற்றவியல் துறை

கந்து வட்டி புகார்: கணவன், மனைவி கைது

Posted: 23 Jul 2013 01:09 PM PDT

மதுரையில் கந்து வட்டி கேட்டு மிரட்டியதாக எழுந்த புகாரின்பேரின் பேரில், போலீஸார் செவ்வாய்க்கிழமை கணவன், மனைவி மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.   மதுரை செல்லூர் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் கருப்பாயி, கூலித் தொழிலாள

இந்து அமைப்பினர் தொடர் படுகொலை: பாஜகவின் 3 பேர் கொண்ட குழு விசாரணை

Posted: 23 Jul 2013 01:09 PM PDT

இந்து அமைப்பைச் சேர்ந்தோர் தமிழகத்தில் தொடர்ந்து படுகொலை செய்யப்படுவதற்கான பின்னணி தொடர்பாக ஆராய்வதற்காக 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்தார்.

தடை ஓட்டப் போட்டியில் மதுரை காவல்துறை அணி வெற்றி

Posted: 23 Jul 2013 01:09 PM PDT

திருச்சியில் நடைபெற்ற காவல் துறையினருக்கான 35 ஆவது மண்டலக் குழு விளையாட்டுப் போட்டியின் தடை ஓட்டப் பிரிவில், மதுரை அணி 2 ஆம் இடத்தைப் பிடித்துள்ளது.

மதுரை மாநகராட்சி பள்ளி நூலகங்களுக்கு ரூ.2.40 லட்சம் புத்தகங்கள்

Posted: 23 Jul 2013 01:09 PM PDT

  மதுரை மாநகராட்சி பள்ளி நூலகங்களுக்கு ரூ. 2.40 லட்சம் மதிப்பிலான நூல்கள், பள்ளித் தலைமை ஆசிரியர்களிடம் வழங்கப்பட்டன.   மதுரை மாநகராட்சி பள்ளி நூலகங்களுக்கு புத்தகங்கள் வழங்கும் விழா, செவ்வாய்க்கிழமை மடீட்ச

தண்டவாள ஆய்வின் போது ரயில் மோதி பொறியாளர் சாவு

Posted: 23 Jul 2013 01:08 PM PDT

மதுரை அருகே தண்டவாள ஆய்வில் ஈடுபட்டிருந்த ரயில்வே பொறியாளர், வைகை எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்

டி.கல்லுப்பட்டி அருகே 4 வயது சிறுவன் கொன்று புதைப்பு

Posted: 23 Jul 2013 01:08 PM PDT

மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி அருகேயுள்ள வன்னிவேலம்பட்டியில், 4 வயது சிறுவனின் கழுத்தை நெரித்து கொன்று புதைத்த இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

மாவட்டம் முழுவதும் சத்துணவு மையங்களில் திடீர் சோதனை

Posted: 23 Jul 2013 01:08 PM PDT

மதுரை மாவட்டம் முழுவதும் சத்துணவு மையங்களில் ஆட்சியர் மற்றும் துணை ஆட்சியர் நிலையிலான அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை திடீர் சோதனை மேற்கொண்டனர்.

உசிலம்பட்டி அருகே மண் சரிந்து இருவர் சாவு

Posted: 23 Jul 2013 01:07 PM PDT

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பகுதி எழுமலை அருகேயுள்ள இ.கோட்டைபட்டியில், திங்கள்கிழமை கிணறு தோண்டும்போது மண் சரிந்து இருவர் உயிரிழந்தனர்.

அபராதம் எனக் கூறி பணம் வசூலிப்பதாக அதிகாரிகள் மீது புகார்: ஆட்டோ ஓட்டுநர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

Posted: 23 Jul 2013 01:07 PM PDT

அபராதம் எனும் பெயரில் ஆட்டோ ஓட்டுநர்களிடம் போக்குவரத்துப் பிரிவு அதிகாரிகள் பணம் வசூலிப்பதாகக் கூறி, மதுரை மாவட்ட ஒருங்கிணைந்த அபே ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜூலை 25 மின் தடை

Posted: 23 Jul 2013 01:07 PM PDT

தனியாமங்கலம் துணை மின் நிலையத்தில் ஜூலை 25-ஆம் தேதி (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன.     எனவே, அன்றைய

பல்கலைக்கழக துறைத் தலைவர் நியமனத்தை எதிர்த்த மனு தள்ளுபடி

Posted: 23 Jul 2013 01:06 PM PDT

மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஜெனிடிக் என்ஜினீயரிங் துறைத் தலைவர் நியமனத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்துள்ளது.   பல்கலைக்கழக ஜீனோமிக்ஸ் துறைத் தலைவர் டாக்டர் எஸ். கிருஷ்ணசாமி தாக்கல் செய்திருந்

மதுரையில் 50 ஆண்டுகள் பழமையான கட்டடங்கள் அகற்றப்படும்

Posted: 23 Jul 2013 01:06 PM PDT

மதுரை மாநகரில் 50 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் பழமையான, பழுதடைந்த கட்டடங்கள் பற்றிய ஆய்வு நடைபெற்று வருவதாகவும், இந்தக் கட்டடங்களை இடித்து அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆணையர் ஆர்.நந்தகோபால் தெரிவித்தார்.

மாணவர் காங்கிரஸ் தலைவர் யார்?

Posted: 23 Jul 2013 01:06 PM PDT

மாணவர் காங்கிரஸ் தேர்தலுக்கான வாக்குப்பதிவு சத்தியமூர்த்திபவனில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை புதன்கிழமை காலை 9.30 மணிக்கு நடைபெறுகிறது.

கே.புதூர் வார்டு அலுவலகம் முற்றுகை

Posted: 23 Jul 2013 01:06 PM PDT

  மதுரை மாநகராட்சி 45 ஆவது வார்டு பகுதியில், கடந்த சில நாள்களாக குடிநீர் விநியோகம் நடைபெறாததைக் கண்டித்து, செவ்வாய்க்கிழமை பொதுமக்கள் கே.புதூரிலுள்ள வார்டு அலுவலகத்தைப் பூட்டி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலூரில் தூசிப் புயல்: பொதுமக்கள் அவதி

Posted: 23 Jul 2013 01:05 PM PDT

மேலூர் பெரியகடை வீதி - அழகர்கோவில் சாலை அமைக்கும் பணி நிறுத்தப்பட்டதை அடுத்து, அப்பகுதியில் வாகனங்கள் செல்லும்போது கடும் தூசிப் புயல் ஏற்படுவதால், பொதுமக்கள் மூச்சு விட முடியாமல் திணறுகின்றனர்.

ரூபாய் மதிப்பு சரிவு ஏழைகளையும் பாதிக்கும்

Posted: 23 Jul 2013 01:05 PM PDT

ரூபாய் மதிப்பு சரிந்து வருவது நாட்டின் கௌரவத்துக்கு விழுந்த சம்மட்டி அடியாகும். இது சாமானிய மக்களின் வேதனையை மேலும் அதிகரிக்கும் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

மதுரை

Posted: 23 Jul 2013 01:05 PM PDT

ராணுவத்துடன் மோதல்: பயங்கரவாத இயக்க தளபதி சாவு

Posted: 23 Jul 2013 01:01 PM PDT

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த கமாண்டர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஹைதராபாதில் சுவர் இடிந்து விழுந்து 6 பேர் சாவு

Posted: 23 Jul 2013 01:00 PM PDT

ஆந்திர மாநிலத் தலைநகர் ஹைதராபாதில் சுவர் இடிந்து அருகில் உள்ள குடிசைகள் மீது விழுந்ததில் 2 குழந்தைகள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.

அமர்நாத்துக்கு 706 பக்தர்கள் பயணம்

Posted: 23 Jul 2013 12:59 PM PDT

தெற்கு காஷ்மீர் பகுதியில் அமைந்துள்ள அமர்நாத்தில் பனி லிங்கத்தை தரிசிக்க 706 பக்தர்கள் யாத்திரையாக செவ்வாய்க்கிழமை ஜம்மு அடிவார முகாமிலிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

குஜராத் கலவரம் பற்றிய கருத்து: சோனியா காந்தியுடன் ஷகீல் அகமது சந்திப்பு

Posted: 23 Jul 2013 12:59 PM PDT

குஜராத் கலவரத்துக்குப் பிறகுதான் இந்தியன் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பு தோன்றியது என்று சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட காங்கிரஸ் தலைவர் ஷகீல் அகமது தில்லியில் சோனியா காந்தியை செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார்.

உள்ளாட்சித் தேர்தலில் வன்முறை: காங்கிரஸ், மார்க்சிஸ்ட் மீது மம்தா குற்றச்சாட்டு

Posted: 23 Jul 2013 12:57 PM PDT

மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தலின்போது நிகழ்ந்த வன்முறைக்கு காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளே காரணமென முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழகத்தின் உரிமையை தெளிவுபடுத்த வேண்டும்

Posted: 23 Jul 2013 12:57 PM PDT

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை தெளிவுபடுத்தும்படி உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு கூறியுள்ளது.

உத்தரகண்ட் அரசு மந்த கதியில் செயல்படுகிறது

Posted: 23 Jul 2013 12:57 PM PDT

உத்தரகண்ட்டில் ஏற்பட்ட இயற்கைச் சீற்றத்துக்குப் பிறகு மீட்புப் பணிகளை மேற்கொள்வதில் மாநில அரசு மந்த கதியில் செயல்பட்டு வருவதாக பாஜக தலைவரும், முன்னாள் முதல்வருமான பி.சி.கந்தூரி (படம்) குற்றம் சாட்டியுள்ளார்.

மரபணு மாற்றுப்பயிர்: வயல்வெளி சோதனைக்கு நிரந்தரத் தடை வேண்டும்

Posted: 23 Jul 2013 12:56 PM PDT

மரபணு மாற்றுப் பயிர்களுக்கான வயல்வெளிச் சோதனைகளை  நிரந்தரமாகத் தடை செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வல்லுநர் குழு பரிந்துரைத்துள்ளது.

ஷீலா தீட்சித்துக்கு சாதனையாளர் விருது

Posted: 23 Jul 2013 12:56 PM PDT

இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு (அசோசேம்) சார்பில், முதல்வர் ஷீலா தீட்சித்துக்கு "2013-ஆம் ஆண்டு பெண் சாதனையாளர் விருது' செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

செப்டம்பரில் மன்மோகன் சிங் அமெரிக்கா பயணம்

Posted: 23 Jul 2013 12:56 PM PDT

பிரதமர் மன்மோகன் சிங் 6 நாள் பயணமாக அமெரிக்காவில் செப்டம்பர் மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

டாக்டருக்கு ரூ. 2 லட்சம் இழப்பீடு: ரயில்வேக்கு உத்தரவு

Posted: 23 Jul 2013 12:55 PM PDT

ரயில் பயணத்தின்போது உடமைகள் திருடுபோன வழக்கில் உடமைகளை பறிகொடுத்த மருத்துவருக்கு ரூ.2 லட்சம் நஷ்டஈடு வழங்க தேசிய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டது.

சுற்றுலாப் பயணிகள் வருகை:ஆந்திரத்துக்கு முதலிடம்

Posted: 23 Jul 2013 12:55 PM PDT

கடந்த ஆண்டு அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றுள்ள பெருமையை ஆந்திரப் பிரதேச மாநிலம் பெற்றுள்ளது. இந்த மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பதி கோவிலுக்கு ஏராளமானோர் வருவதே இதற்கு காரணமாகும். 2012-ம் ஆண்டு ஆந்திரத்துக்கு 20 கோடியே 68 லட்சம் பேர் வருகை புரிந்துள்ளனர்.

பிரதமர் பதவிக்கு தகுதியற்றவர் மோடி: ஐக்கிய ஜனதா தளம்

Posted: 23 Jul 2013 12:54 PM PDT

குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, பிரதமர் பதவிக்குத் தகுதியற்றவர் என்று ஐக்கிய ஜனதா தளம் கட்சி சாடியுள்ளது.

சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு: சிக்கல்களைத் தீர்க்க ஒழுங்குமுறை ஆணையம்

Posted: 23 Jul 2013 12:54 PM PDT

சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக் கொள்கை தொடர்பான சிக்கல்களைத் தீர்க்க ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்று மாநிலங்களவை திமுக உறுப்பினரும், தொழில் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுத் தலைவருமான திருச்சி சிவா வலியுறுத்தினார்.

நரேலாவில் என்கவுன்ட்டர்: இளைஞர் சாவு

Posted: 23 Jul 2013 12:53 PM PDT

ஹரியாணாவைச் சேர்ந்த அமித் தாஹியா என்ற இளைஞர், தில்லி புறநகர் நரேலாவில் ""என்கவுன்ட்டரில்'' கொல்லப்பட்டதாக போலீஸார் கூறினர்.

ஆவணப்பட தயாரிப்பாளர் மரணம்: நகைக் கடைக்காரர், மகன் கைது

Posted: 23 Jul 2013 12:53 PM PDT

தில்லி கிரீன் பார்க்கில் ஆவணப் படத் தயாரிப்பாளர் ஆனந்த் பாஸ்கர் மோர்லா (32) மின்சாரம் பாய்ந்து இறந்தது தொடர்பாக கம்லேஷ் பன்ஸல் என்ற நகைக் கடைக்காரரையும் மற்றும் துருவ் பன்ஸல் என்ற அவரது மகனையும் போலீஸார் கைது செய்தனர்.

கிரேட்டர் நொய்டாவில்சிறுமி பலாத்காரம் 2 பேர் கைது

Posted: 23 Jul 2013 12:52 PM PDT

கிரேட்டர் நொய்டாவில் 12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஆட்டோ ஓட்டுநர், அவரது வீட்டு உரிமையாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

சரப்ஜித் சிங் உடமைகளை மீட்க நடவடிக்கை எடுங்கள்

Posted: 23 Jul 2013 12:52 PM PDT

லாகூர் சிறையில் கொல்லப்பட்ட இந்தியக் கைதி சரப்ஜித் சிங்கின் உடமைகளை இந்தியாவுக்கு திரும்ப கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் அவரது சகோதரி செவ்வாய்க்கிழமை முறையிட்டார்.

ஓம் பிரகாஷ் செüதாலாவின் இடைக்கால ஜாமீன் நீட்டிப்பு

Posted: 23 Jul 2013 12:52 PM PDT

: ஹரியாணா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் செüதாலாவுக்கு அடுத்த மாதம் 12-ஆம் தேதி வரை ஜாமீன் நீட்டிப்பு செய்து தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி சித்தார்த் மிருதுள் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.

"இந்தியன் முஜாஹிதீன் பற்றிய உள்துறை அமைச்சகத்தின் நிலைப்பாடு தெளிவானது'

Posted: 23 Jul 2013 12:52 PM PDT

தடைசெய்யப்பட்ட இந்தியன் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பு குறித்த மத்திய உள்துறை அமைச்சகத்தின் நிலைப்பாடு மிகவும் தெளிவானது என்று இணை அமைச்சர் ஆர்.பி.என்.சிங் தெரிவித்தார்.

தில்லி காவல் துறை தலைமையக புதிய கட்டடத்துக்கு அடுத்த வாரம் அடிக்கல்

Posted: 23 Jul 2013 12:52 PM PDT

தில்லி காவல் துறை தலைமையகத்துக்காக ரூ. 1,096 கோடியில் கட்டப்படவுள்ள 17 மாடி கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா அடுத்த வாரம் நடைபெற உள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

"இரும்புச் சத்து மாத்திரை:ஹரியாணாவில் 879 குழந்தைகளுக்கு பாதிப்பு உண்மைதான்

Posted: 23 Jul 2013 12:51 PM PDT

ஹரியாணா மாநிலத்தில் இரும்புச்சத்து மாத்திரை மற்றும் குடல் புழு நீக்குவதற்கான மாத்திரைகளைச் சாப்பிட்ட 879 குழந்தைகளுக்கு வயிற்று வலி ஏற்பட்டது உண்மைதான் என்று அந்த மாநிலத்தில் செயல்படும் தேசிய ஊரக சுகாதார இயக்கத்தைச் சேர்ந்த ஒரு அதிகாரி செவ்வாய்க்கிழமை கூறினார்.

பயங்கரவாதத்தின் அடையாளம் பாஜக

Posted: 23 Jul 2013 12:51 PM PDT

பயங்கரவாதத்தின் அடையாளம் பாரதிய ஜனதா கட்சி என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மீம் அஃப்சல் கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் மீண்டும் சேர மாட்டேன்: விவேக் எம்.பி.

Posted: 23 Jul 2013 12:51 PM PDT

ஆந்திரத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி அண்மையில் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி (டி.ஆர்.எஸ்.) கட்சியில் சேர்ந்த விவேக் எம்.பி. மீண்டும் காங்கிரஸ் கட்சியில் சேர மாட்டேன் என்று கூறினார்.

வீட்டில் பெண்களைத் தாக்கி ரூ. 50 லட்சம் கொள்ளை

Posted: 23 Jul 2013 12:50 PM PDT

நொய்டாவில் வீட்டில் இருந்த முதியவரையும், இரு பெண்களையும் தாக்கி ரூ. 50 லட்சம் மதிப்பிலான நகை, பணம் மற்றும் பொருள்களை கொள்ளையடித்ததாக 4 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

இணையதளத்தில் ஆபாசக் காட்சி: ஆய்வு செய்ய டிஎம்ஆர்சி நடவடிக்கை

Posted: 23 Jul 2013 12:50 PM PDT

தில்லி மெட்ரோ ரயில் நிலையத்தில், பாலியல் ரீதியாக நாகரீகமற்ற முறையில் இளம்ஜோடிகள் நடந்துகொண்ட காட்சிகள் இணையதளத்தில் வெளியான விடியோ பதிவை, பாதுகாப்பு ஆ

"மதத்தின் அடிப்படையில் நாட்டை பிளவுபடுத்தகாங்கிரஸ் முயற்சி'

Posted: 23 Jul 2013 12:49 PM PDT

மதத்தின் அடிப்படையில் நாட்டை பிளவுபடுத்த காங்கிரஸ் முயன்று வருகிறது என்று பாரதிய ஜனதா கட்சி செவ்வாய்க்கிழமை குற்றம்சாட்டியுள்ளது.

லோக் ஜனசக்தி கட்சியில் பாஸ்வானின் மகனுக்கு முக்கிய பொறுப்பு

Posted: 23 Jul 2013 12:49 PM PDT

லோக் ஜனசக்தி கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவராகத் தன் மகன் சிராக் பாஸ்வானை கட்சித் தலைவர் ராம் விலாஸ் பாஸ்வான் நியமித்துள்ளார். இதை பாஸ்வான், தில்லியில் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்கள் துணிச்சலுடன் பேச வலியுறுத்தல்

Posted: 23 Jul 2013 12:49 PM PDT

மதவாத விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்கள் துணிச்சலுடன் பேசவேண்டும் என்றும், வரும் மக்களவைத் தேர்தலில் பொதுவான திட்டத்தை முன்னிறுத்தி பிரசாரம் மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் மணீஷ் திவாரி கேட்டுக் கொண்டார்.

உம்மன் சாண்டி அரசு மீது நீதிமன்றம் அதிருப்தி: பதவி விலக எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

Posted: 23 Jul 2013 12:49 PM PDT

சோலார் பேனல் மோசடி வழக்கில் கேரள முதல்வர் உம்மன் சாண்டி அரசு மீது உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. இதையடுத்து, அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சியான மார்க்சிஸ்ட் வலியுறுத்தியுள்ளது.

லாலுவுக்கு எதிரான கால்நடை தீவன ஊழல் வழக்கில் நீதிபதியை மாற்ற உச்ச நீதிமன்றம் சம்மதம்

Posted: 23 Jul 2013 12:48 PM PDT

பிகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்துக்கு எதிரான கால்நடை தீவன ஊழல் வழக்கில் நீதிபதியை மாற்ற உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ஒப்புக்கொண்டுள்ளது.

மனுநீதி நாள்: ரூ.15 லட்சத்தில் நலத்திட்ட உதவி

Posted: 23 Jul 2013 12:48 PM PDT

கீழ்குமாரமங்கலத்தில் நடந்த சிறப்பு மனுநீதிநாள் முகாமில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை சுற்றுச்சூழல் மற்றும் மாசுகட்டுப்பாட்டுத்துறை அமைச்சர்  எம்.சி.சம்பத் வழங்கினார்.

கடல் சூழலில் மாற்றம் : மீன் வரத்து குறைவு

Posted: 23 Jul 2013 12:47 PM PDT

ஆழ்கடல் சீற்றம் மற்றும் நீரோட்ட மாற்றம் காரணமாக கடலூர் மீன்பிடி துறைமுகத்துக்கு சில நாள்களாக மீன்வரத்து குறைந்துள்ளது.

கண் மருத்துவர்களுக்கு சேவைக்கான விருது

Posted: 23 Jul 2013 12:47 PM PDT

மாவட்ட லயன்ஸ் சங்கம் சார்பில் கடந்தாண்டு கண்தான சேவையில் சிறந்து விளங்கிய டாக்டர்களுக்கு விருது வழங்கப்பட்டது.

கவிஞர் வாலிக்கு கடலூரில் அஞ்சலி

Posted: 23 Jul 2013 12:47 PM PDT

மறைந்த திரைப்பட கவிஞர் வாலிக்கு கடலூர் மாவட்ட பாரதிதாசன் இலக்கிய மன்றம் சார்பில் கவிதாஞ்சலி நிகழ்ச்சி நடத்தப்

இழப்பீடு கிடைக்கவில்லை

Posted: 23 Jul 2013 12:46 PM PDT

என்.எல்.சி.க்கு நிலம் கொடுத்து 55 ஆண்டுகளாகியும் இழப்பீடு கிடைக்கவில்லை என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

சத்துணவு மையங்களை கண்காணிக்க தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்

Posted: 23 Jul 2013 12:46 PM PDT

சத்துணவு மையங்களை தலைமை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும் என கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

அனாதையாக தவித்த ஒன்றரை வயது பெண் குழந்தை மீட்பு

Posted: 23 Jul 2013 12:45 PM PDT

வாலாஜாபாத் அருகே அனாதையாக தவித்த ஒன்றரை வயது பெண் குழந்தை மீட்கப்பட்டு சென்னை குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

பள்ளிக்குச் சொந்தமான இடம் ஆக்கிரமிப்பு: பொதுமக்கள் புகார்

Posted: 23 Jul 2013 12:45 PM PDT

ஸ்ரீபெரும்புதூர் அருகே அரசு உயர்நிலைப் பள்ளிக்குச் சொந்தமான ரூ. 10 கோடி மதிப்பிலான நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டியவர்களிடம் இருந்து இடத்தை மீட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் புகார் மனு அ

தபால் ஊழியர்கள் நூதன போராட்டம்

Posted: 23 Jul 2013 12:44 PM PDT

காஞ்சிபுரம் தலைமை அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி தபால் ஊழியர்கள் நூதன போராட்டத்தில்  செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர்.

முக்கிய குற்றவாளி கைது; 114 பவுன் மீட்பு

Posted: 23 Jul 2013 12:44 PM PDT

சென்னையில் போலி சுங்க அலுவலகம் நடத்தி பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட வழக்கில், முக்கிய குற்றவாளியை காஞ்சிபுரம் போலீஸார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 114 பவுன் நகை, 3 கார்கள், ரூ. 4 லட்சம் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டன.

8 கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு

Posted: 23 Jul 2013 12:44 PM PDT

கூடுவாஞ்சேரியை அடுத்த வண்டலூர்- ஓட்டேரி பகுதிகளில் உள்ள கடைகளின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் மற்றும் ரொக்கத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றனர்

சஞ்சய் தத்தின் சீராய்வு மனு தள்ளுபடி

Posted: 23 Jul 2013 12:43 PM PDT

மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றவாளி என நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகர் சஞ்சய் தத் தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது.

ரோடியர் மில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 23 Jul 2013 12:42 PM PDT

புதுச்சேரி ரோடியர் மில்லை உடனடியாக இயக்கக் கோரி அனைத்துத் தொழிற்சங்கங்கள் சார்பில் தொழிற்சாலை முன்பு செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பாமக.வினர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம்

Posted: 23 Jul 2013 12:42 PM PDT

மதகடிப்பட்டு பகுதியில் வன்முறையில் ஈடுபட்டு பொதுச்சொத்துகளுக்குச் சேதம் விளைவித்த பாமகவினர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக எம்எல்ஏ ஏ.அன்பழகன் வலியுறுத்தினார்.

இன்று மாணவர் குழுமம் தொடக்க விழா

Posted: 23 Jul 2013 12:42 PM PDT

புதுவைப் பொறியியல் கல்லூரி மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பியல் துறையில் மாணவர் குழுமம் தொடக்க விழா புதன்கிழமை (ஜூலை 24) நடைபெறுகிறது.

அதிமுகவுக்கு பாமக பதில்

Posted: 23 Jul 2013 12:41 PM PDT

பாமக மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தைப் பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தும் தகுதி அதிமுகவுக்கு இல்லை என பாமக தெரிவித்துள்ளது.

ரூ. 20 லட்சம் மதிப்பு புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

Posted: 23 Jul 2013 12:41 PM PDT

புதுச்சேரியில் விற்பனை செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை தாசில்தார் ரமேஷ் தலைமையிலான அதிகாரிகள் பறிமுதல் செய்து எரித்து அழித்தனர்.

சுகாதாரமான சத்துணவு வழங்குவதை உறுதி செய்ய உத்தரவு

Posted: 23 Jul 2013 12:41 PM PDT

சுகாதாரமான-ஆரோக்கியமான சத்துணவு வழங்குவதை உறுதி செய்யும் நெறிமுறைகளை கடைபிடிக்க சத்துணவு அமைப்பாளர்களுக்கு ஆட்சியர் வா.சம்பத் உத்தரவிட்டுள்ளார்.

திருவிளக்கு பூஜை

Posted: 23 Jul 2013 12:40 PM PDT

வானூர் அருகே உள்ள பட்டானூர் கலைவானர் நகர் பகுதியில் உள்ள பாலநாகமுத்து அம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை அண்மையில்

எழுசெம்பொன் கிராமத்தில் நோய் தடுப்பு  முகாம்

Posted: 23 Jul 2013 12:40 PM PDT

விழுப்புரம் அருகே உள்ள எழுசெம்பொன் கிராமத்தில் நோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம் அண்மையில் நடைபெற்றது.

சமூக நலத்துறை  திட்டங்கள் ஆய்வு

Posted: 23 Jul 2013 12:39 PM PDT

விழுப்புரம் மாவட்டத்தில் சமூக நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம், விழுப்புரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நுகர்பொருள் விநியோகஸ்தர் நலச்சங்கக் கூட்டம்

Posted: 23 Jul 2013 12:39 PM PDT

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் அமுதசுரபி நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் நலச்சங்க கூட்டம், திங்கள்கிழமை நடைபெற்றது. சங்க தலைவர் கே.ராமசுப்பிரமணியன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் ரஹமத்துல்லா வரவேற்றார். கரூர் வைசியா வங்கி மேலாளர் திலீப்கு

குடிநீர் பிரச்னை: கவுன்சிலர்கள் போராட்ட எச்சரிக்கை

Posted: 23 Jul 2013 12:38 PM PDT

குடிநீர்ப் பிரச்னையை தீர்க்கவில்லை எனில் கவுன்சிலர்களை திரட்டி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என ஆளும் கட்சி கவுன்சிலர் பேசியது நகர்மன்றக் கூட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

வேளாண் படிப்புகளுக்கு அதிக வேலைவாய்ப்பு

Posted: 23 Jul 2013 12:38 PM PDT

வேளாண்மை படிப்புக்கு அதிக வேலைவாய்ப்பு உள்ளது. குறிப்பாக வங்கி, காப்பீட்டுக் கழகங்கள் உள்ளிட்டவற்றில் அதிக வேலைவாய்ப்பு உள்ளது என அண்ணாமலைப் பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா தெரிவித்தார்.

நகை மதிப்பீட்டாளர் பயிற்சிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

Posted: 23 Jul 2013 12:38 PM PDT

தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

விளையாட்டு வீரர்களை கண்டறியபள்ளிகளுக்கு அழைப்பு

Posted: 23 Jul 2013 12:37 PM PDT

சர்வதேச விளையாட்டு வீரர் கண்டறியும் திட்டத்தில், பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்று பயனடையலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளின் பயிர் காப்பீடு கட்டணத்தை அரசே செலுத்த வலியுறுத்தல்

Posted: 23 Jul 2013 12:37 PM PDT

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் பயிர் காப்பீடு கட்டணத்தை தமிழக அரசே செலுத்த வேண்டும் என தமிழக உழவர் முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.

நியமனம்

Posted: 23 Jul 2013 12:37 PM PDT

தென்னக ரயில்வேயின் சிதம்பரம் ரயில் நிலைய ஆலோசனைக் குழு உறுப்பினராக சிதம்பரத்தைச் சேர்ந்த தமிழ்நாடு நுகர்வோர் குழுமச் செயலர் சி.டி.அப்பாவு  மூன்றாவது முறையாக நியமிக்கப்பட்டுள்ளார்.

நின்ற லாரி மீது பஸ் மோதல்: 15 பேர் காயம்

Posted: 23 Jul 2013 12:36 PM PDT

சாலையோரத்தில் நின்றுக் கொண்டிருந்த லாரி மீது அரசு பஸ் மோதியதில் 15 பேர் காயமடைந்தனர். சிதம்பரத்திலிருந்து கடலூர் நோக்கி அரசு பஸ் செவ்வாய்க்கிழமை மதியம் வந்துக் கொண்டிருந்தது. கடலூர் சிப்காட் அருகே பச்சையாங்குப்பம் என்ற இடத்தில் சாலையோரத்தில் நிறுத்தி ஐஸ் ஏற்றிக் கொண்டிருந்த லாரியின் பின்புறத்தில் அரசு பஸ் மோதியது.

நினைவாற்றலை மேம்படுத்த மாணவர்களுக்குப் பயிற்சி

Posted: 23 Jul 2013 12:34 PM PDT

சிதம்பரம் மிட்டவுன் ரோட்டரி சங்கம், ஆக்ஸ்போர்டு ஆங்கிலப் பயிற்சி மையம், நிர்வாகத் திறன் வளர் மையம் ஆகியவை இணைந்து சிதம்பரம் அண்ணாமலைநகரில் மாணவர்களுக்கான நினைவாற்றல் மேம்படுத்தும் பயிற்சி முகாமை ஞாயிற்றுக்கிழமை நடத்தியது.

கொள்ளிடத்தில் கதவணை கட்டக் கோரி வாகனப் பேரணி

Posted: 23 Jul 2013 12:34 PM PDT

கொள்ளிடம் ஆற்றில் மழைநீரைத் தேக்க கதவணை அமைக்கக் கோரி கொள்ளிடம் கீழணைப் பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் காட்டுமன்னார்கோவிலிருந்து கடலூர் வரையிலான விவசாயிகள் பங்கேற்கும் இருசக்கர வாகனப் பேரணி ஜூலை 26-ஆம் தேதி நடைபெறுகிறது.

தமிழகத்தில் மக்கள்தொகை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது

Posted: 23 Jul 2013 12:33 PM PDT

தமிழகத்தில் மாநில அரசு எடுத்த நடவடிக்கையால் மக்கள் தொகை கட்டுப்படுத்தப்பட்டுவருவதாக திருவள்ளூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உலக மக்கள் தொகை தின கருத்தரங்கில்

போயிங் சி-17 வரவால் விமானப் படையின் பலம் அதிகரிப்பு

Posted: 23 Jul 2013 12:33 PM PDT

இந்திய விமானப்படையில் போயிங் சி-17 ரக விமானத்தைச் சேர்த்த பின்னர், படையின் பலம் அதிகரித்துள்ளது.

பள்ளியை முற்றுகையிட்ட கிராம மக்கள்

Posted: 23 Jul 2013 12:33 PM PDT

சரக்கு வாகனம் மோதி பள்ளி வேனில் சென்ற கரடிப்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவன் திவாகர் திங்கள்கிழமை உயிரிழந்தார். இதையடுத்து மாணவன் படித்த தனியார் பள்ளியை கரடிப்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் செவ்வாய்க்கிழமை  முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.

31-ல் உள்ளூர் விடுமுறை

Posted: 23 Jul 2013 12:33 PM PDT

திருத்தணியில் நடைபெறும் ஆடிக்கிருத்திகை திருவிழாவை முன்னிட்டு திருவள்ளுர் மாவட்டத்துக்கு ஜூலை 31-ல் உள்ளுர் விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவ் அறிவித்துள்ள

நரேந்திர மோடிக்கு விசா வழங்கக் கூடாது

Posted: 23 Jul 2013 12:32 PM PDT

குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு விசா வழங்கக் கூடாது என்று அதிபர் ஒபாமாவுக்கு இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

பூட்டிய குடிசையில் தீ: பொருள்கள் சேதம்

Posted: 23 Jul 2013 12:32 PM PDT

திருத்தணி அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலை, பூட்டிய குடிசை வீடு திடீரென தீப்பிடித்து எரிந்து சாம்பலானது.

ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்

Posted: 23 Jul 2013 12:32 PM PDT

: நூறு நாள் வேலை வழங்காததை கண்டித்து திருவாலங்காடு ஒன்றிய அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டு ஆணையரிடம் புகார் மனு கொடுத்தனர்.

மழை நீரை சேமித்தால் குடிநீர் பிரச்னை தீரும்

Posted: 23 Jul 2013 12:31 PM PDT

மழை நீரை சேமித்தால் நிலத்தடி நீர்மட்டும் உயரும். அதன் மூலம் இம்மாவட்டத்தில் குடிநீர் பிரச்னை தீரும் என செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊராட்சி தலைவர்களுக்கான மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கில் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் கூறினார்.

மருத்துவ மதிப்பீட்டு முகாம்

Posted: 23 Jul 2013 12:31 PM PDT

அனைவருக்கும் கல்வி இயக்கம், திருவள்ளூர் வட்டார வள மையம் சார்பில் ஒன்றிய அளவிலான மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீ நிகேதன் பள்ளியில் பெற்றோர் ஒருங்கிணைப்புக் கூட்டம்

Posted: 23 Jul 2013 12:31 PM PDT

திருவள்ளூர் ஸ்ரீ நிகேதன் பள்ளியில் மழலையர் வளர்ப்பு குறித்த பெற்றோர் ஒருங்கிணைப்பு கூட்டம் அண்மையில் பள்ளியின் தலைமை ஆசிரியை சுகுணா தலைமையில் நடைபெற்றது.

பாகிஸ்தான் பிரதமரை கொல்ல நடந்த சதித் திட்டம் முறியடிப்பு

Posted: 23 Jul 2013 12:30 PM PDT

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபை தற்கொலைப் படை தாக்குதல் மூலம் கொல்ல பயங்கரவாதிகள் தீட்டியிருந்த சதி முறியடிக்கப்பட்டுள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™