Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


கருணாநிதிக்கு ஆஸ்திரிய நாட்டு அஞ்சல் தலை: "பேஸ்புக்' தகவலால் பெரும் பரபரப்பு

Posted:

சென்னை:தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு, ஆஸ்திரியா நாட்டில் வெளியிடப்பட்ட அஞ்சல் தலை, பணம் செலுத்தி, கோரிக்கையின் பேரில் பெறப்பட்ட அஞ்சல் தலை என, "பேஸ்புக்' பதிவர்கள் அம்பலப்படுத்தி உள்ளனர். இதனால், "பேஸ்புக்'கில் தி.மு.க.,வினர் கடுமையான கேலிக்கு உள்ளாகி வருகின்றனர்.ஆஸ்திரிய நாட்டில் வாழும் தி.மு.க., ஆதரவாளரின் முயற்சியால், அந்நாட்டு தபால் துறை, தி.மு.க., தலைவர் கருணாநிதியின் படம் கொண்ட அஞ்சல் தலையை வெளியிட்டுள்ளது. இந்த அஞ்சல் தலை, கருணாநிதியின் படம், வயது மற்றும் தி.மு.க., கொடியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை ஆஸ்திரியாவின் உள்ளூர், வெளிநாட்டு அஞ்சல்களில் ...

செவ்வாய் கிரக ஆராய்ச்சி பயணம் எதற்காக? இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் விளக்கம்

Posted:

பெங்களூரு:""செவ்வாய் கிரகத்தை ஆராய, "இஸ்ரோ' மேற்கொள்ளும் பயணம் மற்றும் ஆய்வுகள், பெருமைக்காக அல்ல; வியாபார நோக்கமே அதில் முன்னிற்கிறது,'' என, "இஸ்ரோ' தலைவர், கே.ராதாகிருஷ்ணன் கூறினார்."இஸ்ரோ' தலைவர், ராதாகிருஷ்ணன் நேற்று கூறியதாவது:"சிகப்பு கோள்' என அழைக்கப்படும், செவ்வாய் கிரகத்தை ஆராய, செயற்கைக்கோளை, "இஸ்ரோ' அனுப்ப உள்ளது. இந்த ஆண்டு, ஆகஸ்ட் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை, எந்த தேதியிலாவது செவ்வாய் ஆராய்ச்சி பயணம் துவங்கும்.பி.எஸ்.எல்.வி., ராக்கெட் மூலம், செயற்கைக்கோள், செவ்வாய் கிரகத்திற்கு ஏவப்படும். நவம்பர் மாதம் இந்த பயணம் துவங்கும் என, ...

வாக்காளர்களை கவரும் திறமை நரேந்திர மோடிக்கே உள்ளது: ராஜ்நாத் சிங் புகழாரம்

Posted:

புதுடில்லி:""தமிழகம், ஆந்திராவில் துவங்கி, மேற்கு வங்கம் வரை, அனைத்து மாநிலங்களிலும் உள்ள வாக்காளர்களையும் கவரக் கூடிய ஆற்றல், நரேந்திர மோடி ஒருவருக்கு தான் உள்ளது. இதனால் தான், பா.ஜ.,வின் தேர்தல் பிரசார குழு தலைவராக, அவரை நியமித்தோம்,'' என, பா.ஜ., தேசிய தலைவர், ராஜ்நாத் சிங் கூறினார்.

அமெரிக்கா பயணம்:
அமெரிக்காவுக்கு ஐந்து நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள, பா.ஜ., தேசிய தலைவர், ராஜ்நாத் சிங், நியூயார்க்கில், நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:"அடுத்த லோக்சபா தேர்தலுக்கான பா.ஜ.,வின், பிரதமர் வேட்பாளருக்கான போட்டியில், நீங்களும் இடம் ...

குளுகுளு ஏற்காட்டில் இடைத்தேர்தல் பேச்சு துவங்கியது: பல முனை போட்டிக்கு வாய்ப்பு?

Posted:

அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., மறைவால், ஏற்காடு தொகுதியில் இடைத்தேர்தல் நடப்பது உறுதியாகி உள்ளது. லோக்சபா தேர்தலுக்கு முன்னோட்டமாகக் கருதப்படும் இத்தேர்தலை சந்திக்க, முக்கியக் கட்சிகள் தயாராகி வருகின்றன. எனவே, பல முனைப் போட்டிக்கு வாய்ப்பு உள்ளது என்ற பேச்சு, மக்கள் மத்தியில் எழுந்து உள்ளது.சேலம் மாவட்டத்தில், பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட ஏற்காடு தொகுதியின், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., பெருமாள், கடந்த, 18ம் தேதி, மரணம் அடைந்தார். இதனால், இத்தொகுதியில், இடைத் தேர்தல் உறுதியாகி உள்ளது. காலியாகியுள்ள இடத்தை நிரப்புவதற்கான தேர்தல், அடுத்த ஆறு மாதத்திற்குள் நடக்க ...

ஜனாதிபதி பதவியில் பிரணாப் முகர்ஜி ஓராண்டு சாதனை

Posted:

புதுடில்லி:ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, நாட்டின் முதல் குடிமகன் பொறுப்பில் அமர்ந்து, இம்மாதம், 25ம் தேதியுடன் ஓராண்டு நிறைவடைகிறது. இந்த காலகட்டத்தில், ராஷ்டிரபதி பவனை, பொதுமக்களின் பவனாக மாற்றியுள்ளார்; அதன் பழமை மற்றும் சிறப்பை மேம்படுத்தி உள்ளார்.

காங்கிரஸ்காரர்:
காங்கிரஸ் கட்சியில், 40 ஆண்டுகளுக்கும் மேலாக பல பொறுப்புகளை வகித்த, மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த பிரணாப் முகர்ஜி, கடந்த ஆண்டு, 25ம் தேதி, ஜனாதிபதியாக பொறுப்பேற்றார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரதிபா பாட்டீல் பதவிகாலம் முடிவடைந்ததை அடுத்து, பிரணாப் அடுத்த ஜனாதிபதியாக ...

பத்திரிகை துறையில் அன்னிய முதலீடு : உள்துறை அமைச்சகம் கடும் எதிர்ப்பு

Posted:

புதுடில்லி:பத்திரிகை துறையில், சில்லரை வர்த்தகத்துக்கான அன்னிய முதலீட்டின் அளவை அதிகரிப்பதற்கு, மத்திய உள்துறை அமைச்சகம், கடும் எதிர்ப்புத் தெரிவித்து உள்ளது. "இதுபோன்ற முடிவுகளால், உள்நாட்டுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும்' என்றும் எச்சரித்து உள்ளது.மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது:தொலைத் தொடர்பு, இன்சூரன்ஸ் ஆகிய துறைகளில், சில்லரை வர்த்தகத்துக்கான, அன்னிய முதலீட்டின் அளவை அதிகரிக்கும் முடிவை, மத்திய அரசு, சமீபத்தில் எடுத்தது. இதைத் தொடர்ந்து, பத்திரிகை, செய்தி சேனல்கள், ரேடியோ ஆகிய துறைகளில், அன்னிய முதலீட்டின் அளவை, 26 ...

நிதி நிறுவனங்களின் கவர்ச்சிகர விளம்பரங்களுக்கு தடை?

Posted:

புதுடில்லி:""நிதி நிறுவனங்களின், கவர்ச்சிகர விளம்பரங்களுக்கு தடை விதிக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது; அத்தகைய நிறுவனங்களைக் கட்டுப்படுத்த, புதிய விதிமுறைகள் விரைவில் வகுக்கப்படும்,'' என, மத்திய கம்பெனி விவகாரங்கள் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு), சச்சின் பைலட் கூறினார்.

ஏமாற்றும் கும்பல்கள் அதிகரிப்பு:
கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு, பொதுமக்களிடம் பணத்தை திரட்டி, ஏமாற்றும் கும்பல்கள், நிறுவனங்கள் நாடு முழுவதும் செயல்படுகின்றன. சட்டத்தின் ஓட்டைகள் மற்றும் சட்டத்தின் பலவீனமான அம்சங்களை பயன்படுத்தி, நிதி திரட்டி, ...

இந்திய பகுதிக்குள் குதிரைகளில் ஊடுருவிய சீன ராணுவ வீரர்கள்

Posted:

புதுடில்லி:ஜம்மு - காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில், கடந்த, 16ம் தேதி, சீன ராணுவத்தினர் ஊடுருவியதாக, தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.இதுதொடர்பாக, ராணுவ வட்டாரங்கள் கூறியதாவது:சீன ராணுவத்தினர், 50 பேர், கடந்த, 16ம் தேதி குதிரை மற்றும் கோவேரி கழுதைகளில், ஜம்மு - காஷ்மீரில் லடாக் அருகேயுள்ள, சூமர் பகுதியில் ஊடுருவினர். 16ம் தேதி மாலை அங்கு வந்த அவர்கள், 17ம் தேதி காலை வரை தங்கியிருந்தனர். அந்த சீன ராணுவ வீரர்களை, இந்திய ராணுவ வீரர்கள் எதிர்கொண்ட போது, இரு தரப்பினருக்கும் இடையே, கொடி அணிவகுப்பு நடந்தது. பின், சீன ராணுவ வீரர்கள், தங்கள் பகுதிக்கு திரும்பிச் ...

அமைதியை குலைக்கும் குற்றவாளி வரைபடம் வெளியீடு: ஆடிட்டர் ரமேஷ் படுகொலையை அடுத்து பரபரப்பு

Posted:

சென்னை:சேலத்தில், பா.ஜ., பொதுச் செயலர், ஆடிட்டர் ரமேஷ் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், அதிக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்வழக்கில், தொடர்புடையதாகக் கருதப்படும் ஒருவனின் வரைபடத்தை, போலீசார் நேற்று வெளியிட்டுள்ளனர். இந்நிலையில், இந்த வழக்கு மற்றும் வேலூரைச் சேர்ந்த, இந்து முன்னணி மாநில செயலர், வெள்ளையப்பன் படுகொலை வழக்குகளை விசாரிக்க, சி.பி.சி.ஐ.டி., டி.ஜி.பி., தலைமையில், சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.சேலத்தில், கடந்த, 19ம் தேதி இரவு, பா.ஜ., மாநில பொதுச் செயலரான ஆடிட்டர் ரமேஷை, மூவர் கும்பல் சரமாரியாக வெட்டி படுகொலை ...

பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்களை தங்கள் பக்கம் இழுக்கும் நிதிஷ் கட்சி: அதிருப்தியாளர்கள் மூலம் பலத்தை பெருக்க திட்டம்

Posted:

பாட்னா:பீகாரில் பல ஆண்டுகளாக நீடித்த, பாரதிய ஜனதா - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி உடைந்ததை அடுத்து, பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்களை தங்கள் பக்கம் இழுக்கும் உள்அடி வேலைகளில், ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஈடுபட்டுள்ளது. பீகாரில், முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான, ஐ.ஜ.த., - பா.ஜ., கூட்டணி ஆட்சி இருந்தது. பா.ஜ.,வின் லோக்சபா தேர்தல் பிரசாரக் குழு தலைவராக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி நியமிக்கப்பட்டதை விரும்பாத, நிதிஷ் குமார், பா.ஜ.,வை கடுமையாக விமர்சித்தார். இதையடுத்து, பீகாரில், ஐ.ஜ.த., - பா.ஜ., கூட்டணியில் பிளவு ஏற்பட்டது. பா.ஜ., சார்பில், அமைச்சர்களாக இருந்தவர்கள் பதவி விலகினர். ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™