Tamil News | Online Tamil News |
- தஞ்சை பகுதியில் மீத்தேன் வாயு எடுக்க தமிழக அரசு தடை: விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுமா என ஆராய குழு
- பீகாரில் மதிய உணவு சாப்பிட்டு குழந்தைகள் பலி: கவனமாய் செயல்பட மத்திய அரசு "வேண்டுகோள்'
- தி.மு.க.,வில் குஷ்புவுக்கு நெருக்கடி; வெளியேற திட்டமா?
- "மிஸ்டர் 11 லட்சம் என்றால்... அது, கருணாநிதி!': சொல்கிறார் ஸ்டாலின்
- கிரானைட் முறைகேடு; அரசிற்கு 1200 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக மீண்டும் 2 வழக்குகள்
- போலீஸ் அதிகாரிகளுக்கு "இனோவா' கார்: தமிழக அரசு அனுமதி
- அனல்மின் நிலைய உற்பத்தி அதிகரிப்பு: 11 மெகாவாட்டை தாண்டியது
- தமிழக எல்லையில் நவீன சோதனை சாவடி திட்டம்: பணியை துவங்குவது எப்போது?
- ஓடும் ரயிலில் அடிபட்டு இளவரசன் இறப்பு: "எய்ம்ஸ்' டாக்டர்கள் அறிக்கை
- தமிழகத்திற்கு என்.எல்.சி.,யின் 3.56 சதவீத பங்கு: அதிகாரம் வழங்கப்பட்ட அமைச்சர்கள் குழு அனுமதி
| தஞ்சை பகுதியில் மீத்தேன் வாயு எடுக்க தமிழக அரசு தடை: விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுமா என ஆராய குழு Posted: சென்னை: ""காவிரி டெல்டா மாவட்டங்களில், நிலக்கரி படுகை மீத்தேன் எரிவாயு திட்டத்தால், விவசாயத்துக்கு பாதிப்பு ஏற்படுமா என ஆய்வு செய்ய, தமிழக அரசு குழு அமைக்க உள்ளது. குழு அறிக்கை அளித்து, அதன் அடிப்படையில், அரசு ஒரு முடிவு எடுக்கும் வரை, மத்திய அரசு அனுமதிபெற்றுள்ள நிறுவனம், எந்தப் பணியையும் மேற்கொள்ளக் கூடாது,'' என, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.அவரது அறிக்கை: தஞ்சை, திருவாரூர் ஆகிய காவிரி டெல்டா மாவட்டங்களில், நிலக்கரி படுகை மீத்தேன் வாயு குறித்து ஆய்வு செய்து, உற்பத்தி செய்ய, தனியார் நிறுவனத்திற்கு, மத்திய அரசு அனுமதி அளித்து உள்ளது. ... |
| பீகாரில் மதிய உணவு சாப்பிட்டு குழந்தைகள் பலி: கவனமாய் செயல்பட மத்திய அரசு "வேண்டுகோள்' Posted: சாப்ரா: பீகாரில், அரசு துவக்கப் பள்ளியில் நேற்று முன்தினம், மதிய உணவு சாப்பிட்டு இறந்த குழந்தைகள் எண்ணிக்கை, நேற்று, 22 ஆக அதிகரித்துள்ளது. கெட்டுப் போன உணவுப் பொருட்களை பயன்படுத்தி, உணவு சமைத்து வழங்கியதால் தான், குழந்தைகள் பலியாக நேர்ந்தது என்பது, முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஐக்கிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த, முதல்வர், நிதிஷ்குமார் தலைமையிலான பீகார் மாநிலம், சாப்ரா மாவட்டத்தில், தர்மசதி காண்டவான் என்ற கிராமத்தில் உள்ள, 1 முதல், 5ம் வகுப்பு வரையிலான துவக்கப் பள்ளியில், குழந்தைகளுக்கு, மதிய உணவு கொடுக்கப்பட்டது. சாப்பிட்ட சில ... |
| தி.மு.க.,வில் குஷ்புவுக்கு நெருக்கடி; வெளியேற திட்டமா? Posted: ராஜ்யசபா தேர்தலில், தி.மு.க., வெற்றிக்காக பாடுபட்ட பொருளாளர் ஸ்டாலின், வெற்றி பெற்ற கனிமொழி எம்.பி., ஆகியோருக்கு நடிகை குஷ்பு வாழ்த்து தெரிவிக்கவில்லை. இதனால், கட்சியில் அவருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி, தி.மு.க., நடத்திய ஆர்ப்பாட்டங்களில், நடிகை குஷ்பு இடம் பெறாமல் ஓரங்கட்டப்பட்டார். பெண்களின் கற்பு பற்றி நடிகை குஷ்பு தெரிவித்த கருத்தினால், அவருக்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பியது. அரசியல் கட்சிகளின் எதிர்ப்புகளை சமாளிக்க, அரசியல் கட்சியில் சேர, குஷ்பு முடிவெடுத்தார். காங்கிரசில் ... |
| "மிஸ்டர் 11 லட்சம் என்றால்... அது, கருணாநிதி!': சொல்கிறார் ஸ்டாலின் Posted: கோவை: கோவையில் நேற்று நடந்த, 116 ஜோடிகளுக்கான இலவச திருமண விழாவில், தேர்தல் நிதியாக, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலினிடம், ரூ. 1.5 கோடி வழங்கப்பட்டது. கோவை மாநகர தி.மு.க., சார்பில், இலவச திருமண விழா, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் - மனைவி துர்கா தலைமையில், குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் நடந்தது. தேர்தல் நிதியாக, ஸ்டாலினிடம் ரூ.1.5 கோடிக்கான காசோலையை, மாநகர செயலாளர் வீரகோபால் வழங்கினார். மணமக்களை வாழ்த்தி ஸ்டாலின் பேசியதாவது: தேர்தல் நிதி வழங்குவதில், பல ஆண்டுகளாக கோவை, முன்னோடியாக திகழ்கிறது. மாநகர் சார்பில் ரூ. 1.5கோடி வழங்கிய நிலையில், மாவட்டம் ... |
| கிரானைட் முறைகேடு; அரசிற்கு 1200 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக மீண்டும் 2 வழக்குகள் Posted: மேலூர்: மதுரை மேலூர் பகுதியில் முறைகேட்டில் ஈடுபட்ட பி.ஆர்.பி., மற்றும் சிந்து கிரானைட் குவாரிகள் மீது, நேற்று பதிவான இரு புகார்களில் மட்டும், அரசிற்கு 1203.10 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலூர், கீழவளவு, இ.மலம்பட்டி, திருவாதவூர் பகுதியில் செயல்பட்ட கிரானைட் குவாரிகள், அரசிற்கு சொந்தமான இடங்களில் அத்துமீறி செயல்பட்டு, கிரானைட் கற்களை வெட்டி எடுத்து, பல்லாயிரம் கோடி ரூபாய் அரசிற்கு இழப்பு ஏற்படுத்தியதாக பல வழக்குகள் ஏற்கனவே பதிவானது. அளவீடுகளில் வித்தியாசம் இருப்பதாக குவாரி தரப்பில் எதிர்ப்பு ... |
| போலீஸ் அதிகாரிகளுக்கு "இனோவா' கார்: தமிழக அரசு அனுமதி Posted: சென்னை: போலீஸ் அதிகாரிகள், 61 பேருக்கு, இனோவா கார் வாங்கவும், திருச்சி நகருக்கு, 10 ரோந்து வாகனம் வாங்கவும், தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. பிரச்னை ஏற்படும் பகுதிக்கு, விரைவாக செல்வதற்கு வசதியாக, இனோவா கார் வழங்கும்படி, போலீஸ் அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனர். அதை ஏற்று, 92 இனோவா கார் வாங்க, டி.ஜி.பி., அரசுக்கு பரிந்துரை செய்தார். இதற்கு 10.45 கோடி ரூபாய் செலவாகும் என, கணக்கிடப்பட்டது. கடந்த ஆண்டு, கலெக்டர் - எஸ்.பி., மாநாட்டில், முதல்வர் பேசும்போது, கலெக்டர் மற்றும் எஸ்.பி.,க்கள், அவர்கள் விரும்பும் வாகனத்தை, 8.50 லட்சம் ரூபாய்க்கு வாங்கிக் கொள்ள, அனுமதி அளித்தார். ... |
| அனல்மின் நிலைய உற்பத்தி அதிகரிப்பு: 11 மெகாவாட்டை தாண்டியது Posted: சென்னை: தமிழகத்தில், நேற்று அனல் மற்றும் காற்றாலை மின் உற்பத்தி அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக, நேற்று, மொத்த மின் உற்பத்தி, 11 ஆயிரம் மெகாவாட்டை தாண்டியது. ஜூன் மாதம் முதல், தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்து வருகிறது. இதனால், அணைகளில் நீர் வரத்து அதிகரித்து உள்ளது. நீர் வரத்து அதிகரிப்பால், நீர் மின் உற்பத்தி நிலையங்களில், மின் உற்பத்தி சூடு பிடித்து உள்ளது. அதே நேரத்தில், காற்றாலைகள் மூலம், தினசரி, 2,000 முதல், 2,500 மெகாவாட் வரை, மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. காற்றாலை, அனல் மின் உற்பத்தி நிலையங்கள், முழு அளவில் இயங்குவதால், தமிழகத்தில் மொத்த மின் ... |
| தமிழக எல்லையில் நவீன சோதனை சாவடி திட்டம்: பணியை துவங்குவது எப்போது? Posted: தமிழக எல்லைப் பகுதியில், வாகனச் சோதனைக்காக, நவீன சோதனைச் சாவடி அமைக்கும் பணி, எப்போது துவங்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழகத்தின் முக்கிய எல்லைப் பகுதிகளில் வந்து செல்லும் வாகனங்களை, சோதனை செய்யும் பணிக்காக, போக்குவரத்து துறை சார்பில், சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆந்திர எல்லை: குறிப்பாக, தமிழக - ஆந்திர எல்லைப் பகுதியில் அமைந்துள்ள, பெத்திக் குப்பம்; தமிழக - கர்நாடகா எல்லைப் பகுதியான, ஓசூர்; தமிழக - கேரளா எல்லைப் பகுதியான, கோயம்புத்தூர் என, 19 இடங்களில், சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மாநிலத்திற்குள் ... |
| ஓடும் ரயிலில் அடிபட்டு இளவரசன் இறப்பு: "எய்ம்ஸ்' டாக்டர்கள் அறிக்கை Posted: தர்மபுரி: "ஓடும் ரயிலில் அடிபட்டு, இளவரசனின் இறந்துள்ளார்' என, இளவரசன் உடலை மறு பிரேத பரிசோதனை செய்த டில்லி, "எய்ம்ஸ்' டாக்டர்கள் அறிகையில் தெரிவித்துள்ளனர். காதல் கலப்பு திருமணம் செய்த இளவரன் கடந்த, 4ம் தேதி தர்மபுரி அரசு கலைக்கல்லூரி பின்புறம் ரயில் தண்டவாளம் அருகே பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டிருப்பதாக, அவரது தந்தை இளங்கோ மற்றும் உறவினர்கள் குற்றம்சாட்டினர். இளவரசனின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் ரமேஷ் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற, "டிவிஷன் பெஞ்ச்', டில்லி, ... |
| தமிழகத்திற்கு என்.எல்.சி.,யின் 3.56 சதவீத பங்கு: அதிகாரம் வழங்கப்பட்ட அமைச்சர்கள் குழு அனுமதி Posted: புதுடில்லி: என்.எல்.சி.,யின், 3.56 சதவீத பங்குகளை, தமிழக அரசின் பொதுத் துறை நிறுவனங்களுக்கு விற்க, மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் தலைமையிலான அதிகாரம் வழங்கப்பட்ட அமைச்சர்கள் குழு, ஒப்புதல் அளித்தது.தொழிலாளர்கள் எதிர்ப்பு: என்.எல்.சி.,யின் 5 சதவீத பங்குகளை, தனியாருக்கு விற்க முடிவு செய்யப்பட்டதும், இந்த நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை சமாளிக்க, விற்கப்படும் பங்குகளை தமிழக அரசே வாங்க முன்வந்தது. இதற்கு, இந்திய பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, "செபி' ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, தமிழக அரசின் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜூலை 18,2013 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |