Daily Thanthi |
- இங்கிலாந்துக்கு பதிலடிகொடுக்குமா ஆஸ்திரேலியா? ஆஷஸ் 2–வது டெஸ்ட் இன்று தொடக்கம்
- பாகிஸ்தானுக்கு எதிரான 2–வது ஒருநாள் கிரிக்கெட் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி
- 150 பள்ளி அணிகள் பங்கேற்கும் மாநில கைப்பந்து போட்டி காஞ்சீபுரத்தில் இன்று தொடக்கம்
- மாநில அளவிலான பள்ளி, கல்லூரி செஸ் போட்டி சென்னையில் நடக்கிறது
- உலக கோப்பை வில்வித்தை இந்திய பெண்கள் அணி கால் இறுதிக்கு தகுதி
- டோனியின் நெருங்கிய நண்பரான முன்னாள் ரஞ்சி வீரர் மரணம்
- இலங்கை அணியின் கேப்டனாக சன்டிமால் நியமனம்
- இலங்கை பிரிமியர் லீக் போட்டிக்கு திடீர் சிக்கல்
- ஆன்மிக சிந்தனை
- ஆண்டியார்
| இங்கிலாந்துக்கு பதிலடிகொடுக்குமா ஆஸ்திரேலியா? ஆஷஸ் 2–வது டெஸ்ட் இன்று தொடக்கம் Posted: 17 Jul 2013 12:54 PM PDT லண்டன், இங்கிலாந்துக்கு எதிராக லண்டனில் இன்று தொடங்கும் ஆஷஸ் 2–வது டெஸ்டில் பதிலடி கொடுக்கும் முனைப்புடன் ஆஸ்திரேலியா வியூகங்களை வகுத்து வருகிறது. ஆஷஸ் டெஸ்ட் மைக்கேல் கிளார்க் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டி கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் டிரென்ட்பிரிட்ஜில் நடந்த முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து 14 ரன் வித்தியாசத்தில் வெற்றி கண்டு தொடரில் 1–0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. |
| பாகிஸ்தானுக்கு எதிரான 2–வது ஒருநாள் கிரிக்கெட் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி Posted: 17 Jul 2013 12:53 PM PDT கயானா பாகிஸ்தானுக்கு எதிரான 2–வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 37 ரன் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது. 2–வது ஒருநாள் போட்டி மிஸ்பா உல்–ஹக் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் கயானாவில் நடந்த முதலாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 126 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. |
| 150 பள்ளி அணிகள் பங்கேற்கும் மாநில கைப்பந்து போட்டி காஞ்சீபுரத்தில் இன்று தொடக்கம் Posted: 17 Jul 2013 12:47 PM PDT சென்னை, 150 பள்ளி அணிகள் பங்கேற்கும் மாநில அளவிலான கைப்பந்து போட்டி காஞ்சீபுரத்தில் இன்று தொடங்குகிறது. மாநில பள்ளி கைப்பந்து மறைந்த இந்திய கைப்பந்து சம்மேளன தலைவர் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு மாநில அளவிலான பள்ளி கைப்பந்து போட்டி காஞ்சீபுரத்தில் நடத்தப்படுகிறது. |
| மாநில அளவிலான பள்ளி, கல்லூரி செஸ் போட்டி சென்னையில் நடக்கிறது Posted: 17 Jul 2013 12:45 PM PDT சென்னை, திருவள்ளூர் மாவட்ட செஸ் சங்கம் சார்பில் டி.ஐ.சைக்கிள்ஸ் ஆப் இந்தியா ஆதரவுடன் மாநில அளவிலான பள்ளி, கல்லூரி மாணவ–மாணவிகளுக்கான செஸ் போட்டி நடத்தப்படுகிறது. 8, 10, 12, 14, 25 வயதுக்கு உட்பட்ட 5 பிரிவுகளில் நடத்தப்படும் இந்த போட்டி சென்னை முகப்பேரில் உள்ள அமுதா மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் வருகிற 20 மற்றும் 21–ந் தேதிகளில் நடக்கிறது. இந்த போட்டியில் ஒவ்வொரு பிரிவில் முதலிடம் பிடிப்பவர்களுக்கும் சைக்கிள் பரிசாக வழங்கப்படும். |
| உலக கோப்பை வில்வித்தை இந்திய பெண்கள் அணி கால் இறுதிக்கு தகுதி Posted: 17 Jul 2013 12:44 PM PDT கொல்கத்தா, |
| டோனியின் நெருங்கிய நண்பரான முன்னாள் ரஞ்சி வீரர் மரணம் Posted: 17 Jul 2013 12:42 PM PDT ராஞ்சி, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோனிக்கு, சிறு வயது முதல் நண்பராகவும், அவருடன் இணைந்து ரஞ்சி கோப்பை போட்டியில் விளையாடியவருமான சந்தோஷ் லால் கணையம் வீக்கத்தால் பாதிக்கப்பட்டு மயங்கிய நிலையில் ராஞ்சி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். மேல் சிகிச்சைக்காக அவரை டெல்லி ஆஸ்பத்திரியில் சேர்க்க டோனி எல்லா உதவிகளும் செய்தார். கடந்த திங்கட்கிழமை டெல்லி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட சந்தோஷ் லால் சிகிச்சை பலனின்றி நேற்று காலை மரணம் அடைந்தார். |
| இலங்கை அணியின் கேப்டனாக சன்டிமால் நியமனம் Posted: 17 Jul 2013 12:39 PM PDT கொழும்பு, இலங்கைக்கு சென்றுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது. இரு அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி கொழும்பில் நாளை மறுதினம் நடக்கிறது. |
| இலங்கை பிரிமியர் லீக் போட்டிக்கு திடீர் சிக்கல் Posted: 17 Jul 2013 12:38 PM PDT கொழும்பு, ஐ.பி.எல். கிரிக்கெட் பாணியில் இலங்கை கிரிக்கெட் வாரியமும் இலங்கை பிரிமியர் லீக் (எஸ்.எல்.பி.எல்.) என்ற பெயரில் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது. இந்த நிலையில் இந்த கிரிக்கெட் லீக் தொடர்ந்து நடக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. |
| Posted: 17 Jul 2013 12:06 PM PDT |
| Posted: 17 Jul 2013 12:05 PM PDT |
| You are subscribed to email updates from Daily Thanthi To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |