Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


அரசியல் குறுக்கீடு இன்றி சி.பி.ஐ., செயல்பட யோசனை : அதிக அதிகாரம் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் மனு

Posted:

புதுடில்லி:அரசியல் குறுக்கீடு இன்றி செயல்பட, அதிக அதிகாரம் கேட்டு, சி.பி.ஐ., அமைப்பு, சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. சி.பி.ஐ., இயக்குனரின் பதவிக் காலத்தை, மூன்று ஆண்டுகளாக நீட்டிக்க வேண்டும் என்றும், இயக்குனருக்கு, மத்திய அரசுத் துறை செயலர்களுக்கு இணையான, அந்தஸ்து வழங்க வேண்டும் என்றும், சி.பி.ஐ., வலியுறுத்தியுள்ளது. கடந்த, 2004 முதல், 2009 வரையிலான கால கட்டத்தில், நிலக்கரி சுரங்கங்களை, தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்ததில், முறைகேடு நடந்ததாக, மத்திய கணக்கு தணிக்கை அலுவலகமான, சி.ஏ.ஜி., குற்றம் சாட்டியது. சி.ஏ.ஜி., தாக்கல் செய்த இறுதி ...

ரூ.1,000 கோடி இழப்பு ஏற்படும் அபாயம்: காற்றாலை மின்சாரத்தை வாங்க மறுக்கும் மின் வாரியம்

Posted:

காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை, மின்வாரியம் ஏற்க மறுக்கிறது என்ற குற்றச்சாட்டு, மீண்டும் எழுந்துள்ளது. காற்று வீசும் நேரங்களில், உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை, முழு அளவில் பெறாவிட்டால், 1,000 கோடி ரூபாய் அளவிற்கு, இழப்பு ஏற்படும் என, காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.காற்றாலை, தாவரக் கழிவு, சர்க்கரை ஆலைகளில் செய்யப்படும் இணை மின் உற்பத்தி ஆகிய, மரபு சாரா எரிசக்தி ஆதாரங்களைக் கொண்டு, தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் மொத்த மின் உற்பத்தி, 7,999 மெகா வாட். இதில், காற்றாலை மூலம், 7,145 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி ...

சென்னையில் பெண் "தாதா' மீண்டும் உருவாகின்றனரா? ரவுடிகள் கண்காணிப்பு தீவிரம்

Posted:

சென்னை :சென்னை முழுவதும், ரவுடி கும்பல் தலைவன், ரவுடிகள் என, 160க்கும் மேற்பட்டவர்களை, போலீசார், தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். சமீபத்தில், வடசென்னையில், பழிக்குப் பழியாக நடந்த ரவுடி கொலையில், பெண்கள் சம்பந்தப்பட்டிருப்பதால், அவர்களையும் தங்கள் கண்காணிப்பு வளையத்திற்குள், போலீசார் கொண்டு வந்துள்ளனர்.தமிழக தலைநகர், சென்னையில், ரவுடிகள் நடவடிக்கை, இன்று, நேற்றல்ல; பல ஆண்டுகளாகவே தொடர்ந்து வருகிறது. சாதாரண வழிப்பறி, அடிதடியில் தொடங்கி, கொலை வரை, செய்வது இவர்கள் வாடிக்கை. அடிக்கடி சிறை சென்று வந்தாலும், இவர்கள் கொட்டம் அடங்குவதில்லை.போலீசார் ...

உருகியது அமர்நாத் பனி லிங்கம்: பக்தர்கள் கவலை

Posted:

ஜம்மு :ஜம்மு - காஷ்மீரின் அமர்நாத் குகை கோவிலில் தோன்றிய பனி லிங்கம், பெருமளவு உருகி விட்டது. இதனால், பக்தர்கள் மிகுந்த மன வருத்தம் அடைந்துள்ளனர்.

28ல் துவங்கியது:
ஜம்மு - காஷ்மீரில் உள்ள அமர்நாத் குகை கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் இயற்கையாகவே, பனி லிங்கம் உருவாகும். இதைத் தரிசிக்க, நாடு முழுவதிலும் இருந்து, ஏராளமான பக்தர்கள், புனித யாத்திரை செல்வது வழக்கம். இந்த ஆண்டிற்கான, அமர்நாத் பனிலிங்க தரிசன யாத்திரை, கடந்த மாதம், 28ம் தேதி துவங்கியது. அடுத்த மாதம், 21ம் தேதி வரை, யாத்திரை நீடிக்கும்.யாத்திரை துவங்கியது முதல், இதுவரை, இரண்டு லட்சத்திற்கும் ...

ரேஷன் கார்டுதாரர்களுக்கு நேரடி மானியம் இப்போதைக்கு இல்லை: அதிகாரி தகவல்

Posted:

புதுடில்லி: "உங்கள் பணம் உங்கள் கையில் திட்டத்தின் கீழ், ரேஷன் கார்டுதாரர்களுக்கு நேரடி மானியம் வழங்குவது குறித்து ஆலோசிக்கவில்லை,' என, மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறினார்.

சமையல் காஸ் உபயோகிப்பவர்களுக்கு, அவர்களது வங்கி கணக்கில், மானிய தொகையை வரவு வைக்கும் திட்டம், வெற்றிகரமாக செயல்படத் துவங்கியுள்ளது. இத்திட்டம், இந்தாண்டு இறுதிக்குள், முற்றிலும் செயல்படுத்தப்படும் என, மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் கூறியுள்ளார். இதன் வெற்றியை தொடர்ந்து, ரேஷன் கார்டு வைத்துள்ளவர்களுக்கு, உணவு பொருட்களுக்கான மானியம் வழங்கும் திட்டம், ...

ரயில்வே நிதி நிலைமை மோசம் : பணிகள் முடிய 50 ஆண்டுகளாகும்

Posted:

மதுரை : ""ரயில்வே நிதி நிலைமை மோசமாக உள்ளதால், நிலுவை பணிகளை முடிக்க, ஐம்பதாண்டுகளாகும்,'' என, ரயில்வே இணை அமைச்சர், கோட்லா ஜெய சூர்யா பிரகாஷ் ரெட்டி குறிப்பிட்டார்.மதுரை ரயில்வே ஸ்டேஷனை, ஆய்வு செய்த பின், அவர் அளித்த பேட்டி:கடந்த பட்ஜெட்டில், தமிழகத்திற்கு, ஏழு விரைவு, இரண்டு பயணிகள் ரயில்கள், ஐந்து ரயில்களின் சேவை நீடிப்பு, இரு ரயில்களின் சேவை அதிகரிப்பு ஆகிய அறிவிப்புகள் வெளியாயின. இதில், நான்கு விரைவு ரயில்கள் விடப்பட்டன.மீதமுள்ள, மூன்று ரயில்களும், டிசம்பர் முதல் வாரத்திற்குள் விடப்படும். இரு பாசஞ்சர் ரயில்கள் விடப்பட்டுள்ளன. வாரத்தில் ஒன்று, ...

தொலைதொடர்பு துறையில் அன்னிய முதலீடு : 100 சதவீதமாக உயர்வு: மத்திய அரசு அனுமதி

Posted:

புதுடில்லி:தொலை தொடர்பு துறையில், 100 சதவீத அன்னிய முதலீட்டுக்கு மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. பாதுகாப்புத்துறையில், அன்னிய முதலீடு, 26 சதவீதத்தில் இருந்து, 49 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது."நாட்டில் நிலவும் பொருளாதார மந்தநிலையை போக்கவும், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, பிரதமர் மன்மோகன் சிங்கும், நிதி அமைச்சர் சிதம்பரமும் சொல்லி வந்தனர். அதை, நேற்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில், செயல்வடிவம் கொடுத்து விட்டனர்.தொலை தொடர்பு துறையில், இதுவரை, 74 சதவீத அன்னிய நேரடி முதலீட்டு ...

"டெசோ' சார்பில் அடுத்த மாதம் 8ம் தேதி ஆர்ப்பாட்டம்

Posted:

சென்னை:இலங்கை அரசமைப்பு சட்டத்தின், 13வது திருத்தத்தை, முழுமையாக நிறைவேற்ற வேண்டும்; இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில், மத்திய அரசு கலந்து கொள்ளக் கூடாது என்பதை, வலியுறுத்தி, தமிழகம் முழுவதும், அடுத்த மாதம், 8ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என, "டெசோ' கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.தி.மு.க., தலைவர் கருணாநிதி தலைமையில், அறிவாலயத்தில், "டெசோ' கூட்டம் நேற்று நடந்தது. இலங்கைத் தமிழர் பிரச்னைக்குத் தீர்வு காண, 1987ல் ஓர் உடன்பாடு ஏற்பட்டது. ராஜிவ், ஜெயவர்த்தனேவும், கையெழுத்திட்ட, அந்த உடன்பாட்டின்படி, மாகாண கவுன்சிலர்களுடன் ...

திருமலையில் கிடைத்த பைபிள்: மத பிரசாரம் காரணமா?

Posted:

திருப்பதி: திருமலையில் கிடைத்த பைபிளால், மத பிரசாரம் மீண்டும் தலை தூக்கியுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.திருமலையில், தேவஸ்தானத்திற்கு சொந்தமான, கவுஸ்துபம் விருந்தினர் மாளிகையில் உள்ள, பாலாஜி பவன் ஓட்டலுக்குப் பின்புறம், ஒரு பைபிள் கிடைத்தது. ராஜமுந்திரியில் இருந்து, ஓராண்டிற்கு முன், ஒப்பந்த ஊழியர்களாக, அச்சுராஜு, 25, சத்தியவதி, 22, ஆகியோர் வந்தனர். இவர்களின், ஐந்து வயது குழந்தை ஷைலா. இரண்டு நாட்களுக்கு முன், ஓட்டலுக்குப் பின்புறம், குழந்தை ஷைலா, பைபிள் புத்தகத்தை வைத்து விளையாடிக் கொண்டிருந்தாள். அதைக் கண்டவர்கள், தேவஸ்தானத்திற்கு தகவல் ...

எண்ணெய் கசிவிற்கு காரணமான நிறுவனங்கள் மீது நடவடிக்கை

Posted:

சென்னை:வடசென்னையில், நிலத்தடி நீரில் கச்சா எண்ணெய் கலந்த விவகாரம் குறித்து, மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் கூறுகையில்,"மத்திய சுற்றுச்சூழல் அதிகாரிகளின் அறிக்கை வந்ததும், எண்ணெய் கசிவிற்கு காரணமான நிறுவனங்களை முடக்கி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்," என, தெரிவித்து உள்ளார்.

ஆய்வு விசாரணை:
தண்டையார்பேட்டை, டி.எச்., சாலை சந்திப்பில், வரதராஜ பெருமாள் கோவில் தெரு மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள வீடுகளில், ஆழ்துளை குழாய் மூலம் உறிஞ்சப்படும் நிலத்தடி நீரில் கச்சா எண்ணெய் கலந்து வருகிறது.தண்டையார்பேட்டையில் உள்ள பாரத் பெட்ரோலிய ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™