Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


1 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1

Posted: 16 Jul 2013 02:42 PM PDT

சென்னை:வார்டு தோறும் 1 கிலோ பிளாஸ்டிக் குப்பையை சேகரித்து கொடுத்தால், குலுக்கல் முறையில் அரை கிராம் தங்கம் மற்றும் கைக்கடிகாரம் வழங்கும் திட்டத்தை மாநகராட்சி அறிமுகப்படுத்த உள்ளது. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் பிளாஸ்டிக் குப்பையை சேகரித்து, அதை துகள்களாக்கி, சாலை அமைப்பதில் பயன்படுத்த, பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி எடுத்து வருகிறது. முதலில், மக்கும் குப்பை, மக்காத குப்பை என, தனித்தனியாக தொட்டி வைக்கப்பட்டது. எனினும், இந்த திட்டத்தை மாநகராட்சி, பெரிய அளவில் செயல்படுத்தாமல், ...

நம் உறவுகளில் ஒருவர் செய்த குல்பி போட்டோ :)

Posted: 16 Jul 2013 02:32 PM PDT

உறவுகளே, ஒரு சந்தோஷமான செய்தி, நம் உறவுகளில் ஒருவர் செய்த குல்பி இது பார்த்து மகிழுங்கள்   இவ்வளவு அருமையாக செய்த அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்  

இந்த நாள் என்ன தெரியுமா

Posted: 16 Jul 2013 12:30 PM PDT

கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் 94 மொட்டுக்கள் உதிர்ந்து ஒன்பதாம் ஆண்டு நினைவு நாள் (16.07.2013) இன்று. உயிர் நீத்த பிஞ்சுகளுக்கு எங்கள் கண்ணீர்க் அஞ்சலி!! கல்வியை கடைச்சரக்காக மாற்றி நீங்கள் வைத்த தீ தாண்டா எம்முடைய 94 குழந்தைகளை கருக்கியது. இன்னும் ஒருவருக்கு கூட தண்டனை தரப்படவில்லை என்பதே நீதியின் கொடுமை!!! கடந்த 2004ம் ஆண்டு ஜூலை 16ந் தேதி கும்பகோணம் காசிராமன் தெருவில் இயங்கி வந்த கிருஷ்ணா பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 94 பள்ளி குழந்தைகள் உடல் கருகி உயிரிழந்தனர். 18 குழந்தைகள் ...

உங்களுடைய கடவுச்சொல் (Password) இதுவா என்று கொஞ்சம் பாருங்கோ!…

Posted: 16 Jul 2013 11:38 AM PDT

ஐடி செக்கியூரிட்டி என்ற அமைப்பு மக்கள் இ-மெயில்களுக்கு அதிகம் பயன்படுத்தும் எளிதாக கண்டுபிடிக்க கூடிய டாப் 10 பாஸ்வோர்ட்களை வெளியிட்டுள்ளது. மக்கள் அதிகமாக "123456″ "password" "welcome" "ninja" போன்றவைகளையே பாஸ்வோர்டாக பயன்படுத்துகின்றனர். மக்கள் அதிகம் பயன்படுத்தும் எளிதாக கண்டுபிடிக்க கூடிய டாப் 10 பாஸ்வோர்ட்களை கீழே பாருங்கள். 1. Password1 2. welcome 3. password 4. Welcome1 5. welcome1 6. Password2 7. 123456 8. Password01 ...

தர்மா அண்ணா-க்கு பிறந்த நாள் வாழ்த்துகள்...!

Posted: 16 Jul 2013 11:36 AM PDT

17 ஜூலை  அன்று பிறந்த நாள் காணும் நமது சிறப்பு பதிவாளர் தர்மா அண்ணா அவர்களுக்கு ஈகரை உறவுகள் சார்பாக வாழ்த்துகள்........ மேலும் இன்று பிறந்த நாள் காணும் அனைத்து ஈகரை உறவுகளுக்கும் ஈகரை சார்பாக பிறந்த நாள் வாழ்த்துகள்

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Posted: 16 Jul 2013 11:33 AM PDT

சூப்பருங்க மகிழ்ச்சி

சூப்பர் 'மெத் மெத்' இட்லியும் நானும் :) ஃபோட்டோவுடன்

Posted: 16 Jul 2013 10:35 AM PDT

மற்றும் ஒரு அனுபவ கட்டுரை எழுத போகிறேன் இது ரொம்ப வித்தியாசமான அனுபவம் .... நான் இப்படி எழுதுவது  நிறைய பேருக்கு ஆச்சர்யமாக இருக்கும்.... ஆனால் இது உண்மை நான் எவ்வளவோ 'தளிகைகளை' (food items ) அநாயசமாக செய்வேன். ஆனால், எல்லோரும் left and right easy ஆக  செய்யும் இட்லிக்கும்  எனக்கும் போன ஜன்மத்துப்பகை ஆமாம் ... எனக்கு  'மெத் மெத்' இட்லி செய்ய வராது... உங்களுக்கு புரியும்படி  சொல்லணும் என்றால்....." நான் செய்த இட்லி யை எடுத்து அடிச்சா நாயி செத்துப்போகும்" அவ்வளவுதான்.     ஆனாலும் ...

கண்ணாடி மீன்- Transparent Fish

Posted: 16 Jul 2013 10:31 AM PDT

அனைத்தும் அழகு ...!!!

Posted: 16 Jul 2013 09:56 AM PDT

உன் இடையில் மடிப்பு அழகு ...
உன் நடையில் சுவடு அழகு ...
உன் சடையில் பூ அழகு ...
உன் விழியில் மை அழகு ...

உன் பேச்சில் வார்த்தை அழகு ...
உன் மூச்சில் காற்றழகு ..
உன் பார்வையில் வீச்சழகு!

உன் சொல்லழகு
உன் பல்லழகு
உன் உள்ளம் அழகு
உன் புருவ வில்லழகு!

உன் காலழகு
உன் மேலழகு
உன் கண்ணழகு
உன் மெய் அழகு,
உன்னை வர்ணித்தஅனைத்தும் அழகு ...!!!

இதயம் என்ன நிலையோ...?

Posted: 16 Jul 2013 09:50 AM PDT

நீ மழையில் ..
நனைந்தாய் -உனக்கு
உடல் சுடுகிறது ..
ரணகளமாய் ..
மழைத்தூறலுக்கே ..
இந்த கதியாகி விட்டாய் ..
உன்னை காணும் போதெல்லாம் ..
இதயத்தில் தூறல் தூறல் ..
இதயம் என்ன நிலையோ...?

பெஞ்சிலும் ரப்பரும்

Posted: 16 Jul 2013 09:36 AM PDT

பென்சில்: என்னை மன்னிக்க வேண்டும். ரப்பர்: எதற்காக மன்னிப்பு? பென்சில்: நான் தவறு செய்யும் போதெல்லாம் நீ சரி செய்கிறாய். ஆனால் ஒவ்வொரு முறையும் நீ தேய்ந்து போகிறாய். என்னால் தானே உனக்கு அந்த பாதிப்பு? ரப்பர்: நீ தவறு செய்யும்போது சரி செய்வதற்காகவே நான் படைக்கப் பட்டிருக்கிறேன். என் பணியை நான் செய்கிறேன்.அதில் எனக்குப் பூரண மகிழ்ச்சியே. எனக்குத் தெரியும்,நான் கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்ந்து ஒரு நாள் இல்லாமல் போய் விடுவேன். இதுதான் வாழ்க்கை .. நன்றி முகநூல் ..

இறைச்சியாகும் நாகபாம்பு! நேரடிக் காட்சிகள்!!

Posted: 16 Jul 2013 08:59 AM PDT

பூமியில் தோன்றியுள்ள ஆச்சரியமான விலங்குகளில் ஒன்று தான் Siamese cobra என்ற நாகபாம்பு வகை இனங்கள். தென்கிழக்கு ஆசியாவின் பண்ணைகளில் வளர்க்கப்படும் இவை அபூர்வ மருந்துகளாகவும் பயன்படுகின்றன. பாம்பை வெட்டி உறுப்புக்களை பிரித்தெடுக்கும் காட்சிகளை இதய பலவீனமானவர்கள் பார்க்க வேண்டாம். இந்தக் காட்சிகள் ரஷ்யாவில் படமாக்கப்பட்டுள்ளன.

திகைக்க வைக்கும் திசு வாழை! ....

Posted: 16 Jul 2013 08:52 AM PDT

ஒரு தார் 1,000 ரூபாய். அறுவடை செய்து 15 நாள்வரை இருப்பு வைக்கலாம். சுற்று வட்டார வாழை வியாபாரிகள் மற்றும் விவசாயிகளிடம்... 'பெரிய வாழைத்தார்...' என்று ஆரம்பித்தாலே போதும், 'ஓ... சுந்தரம் தோப்புல விளைஞ்சதைத்தானே சொல்றீங்க!' என்று சொல்லும் அளவுக்கு பிரபலமாகி இருக்கிறார், தஞ்சாவூர் மாவட்டம், மகாராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த சுந்தரம். அவருடைய தோப்பில் எட்டடி உயரத்துக்கு விளைந்த வாழைத்தார்கள் தேடித்தந்த பெருமை இது! ''நாங்க 50 ஏக்கர்ல விவசாயம் செஞ்சுட்டு இருக்கோம். 30 ஏக்கர்ல நெல், 10 ஏக்கர்ல ...

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நிலக்கடலை…!

Posted: 16 Jul 2013 08:43 AM PDT

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நிலக்கடலை…! நிலக்கடலை குறித்த மூட நம்பிக்கைகள் அவ நம்பிக்கைகள் இந்தியாமுழுவதும் சர்வதேச நிறுவனங்களால் திட்டமிட்டு பரப்பிவிடப்பட்டுள்ளது. நம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில் அதுகொட்டை வைக்கும் பருவம் வரை வயலில் எலிகள் அவ்வளவாகஇருக்காது. ஆனால் நிலக்கடலை காய்பிடிக்கும் பருவத்துக்கு பிறகுஎலிகள் அளவு கடந்து குட்டி போட்டிருப்பதை காணலாம். நிலக்கடலைசெடியை சாப்பிடும் ஆடு, மாடு, நாய், வயல் வெளியே சுற்றி உள்ளபறவைகள் எல்லாம் ஒரே நேரத்தில் ...

நீயே சொல்லிவிடு..!

Posted: 16 Jul 2013 08:39 AM PDT

என்னவளே..!
உன்னிடம் இரண்டு கேள்வி ...?
என் இதயதில் ...
இருக்கிறாயா...?
என் ஆத்மாவில் ..
இருக்கிறாயா ...?

நீயே சொல்லிவிடு..!

எதுவரை உன் மௌனம் ..?
என் இதயம் நிற்கும் வரையா ..?
என் உயிர் போகும் வரையா ...?

புத்திசாலியான திருடன்

Posted: 16 Jul 2013 08:22 AM PDT

திருடர்கள் பலவிதம். ஒவ்வொரு திருடரும் ஒவ்வொரு விதம். திருடர்களை அறிந்து கொள்வதற்கு முன்னர் 'திருட்டு' என்றால் என்ன என்பதைப் பார்ப்போம். 'ஒருவருக்குச் சொந்தமான ஒன்றை அவரது அனுமதி இன்றி உடமை கொள்ளல் திருட்டு' ஆகும். இங்கே அனுமதி என்பது கொடுப்பவரின் உரிமை மாற்றம். அதாவது ஒன்றை நாம் எமது சொந்தம் ஆக்குவதற்கு அதன் உரிமையாளர் அதன் மீதான தனது உரிமையை எமக்கு மாற்றம் செய்தல் வேண்டும். உரிமை மாற்றம் செய்யப்படாமல் நாம் உடமை கொள்ளும் அனைத்தும் திருட்டுத்தான். திருட்டு இரண்டு வகையானது. ஒன்று ...

வாங்க இது மாதிரி கல்யாணத்துக்கு போவோம்

Posted: 16 Jul 2013 08:11 AM PDT

டைனமிக் கல்யாணம் வாழ்க யாராவது புதுக்கோட்டைகாரர்கள் இருக்கீங்களா பாஸ்

சனிதோஷம் போக்கும் அனுமன் வழிபாடு!

Posted: 16 Jul 2013 08:05 AM PDT

சனியின் பிடியில் இருந்து எவரும் தப்ப முடியாது. சிவபெருமான் முதல் கொண்டு அனைத்து தெய்வங்களும் கூட சனியின் பிடியில் சிக்கியுள்ளனர். ஆனால் விநாயகரும், ஆஞ்சநேயரும் இதில் இருந்து தனித்து சனியின் பிடியில் சிக்காமல் தப்பியவர்கள் ஆவர். சனீஸ்வரன் பிடிக்க சென்ற போது 'இன்று போய் நாளை வா' என்று கூறியே அவரது பிடியில் இருந்து தப்பியவர் விநாயகர். சனீஸ்வரன் ஆஞ்சநேயரை பிடிக்கும் நோக்கில் அவர் இருப்பிடம் நோக்கிச் சென்றார். அப்போது ராமரை எண்ணி துதித்து கொண்டிருந்தார் ஆஞ்சநேயர். இதனை மறைந்திருந்து பார்த்துக் ...

உன் உயிர் முடியும் வரை ...!!!

Posted: 16 Jul 2013 08:00 AM PDT

என் கண்
காத்திருக்கின்றது..,
உன் கருவிழியை
பார்க்க ....!!!

என் சுவாசம்
காத்திருக்கின்றது..,
உன் மூகினூடாக..
உன் இதயத்தை அடைய ...!!!

என் இடது இதய அறை
காத்திருக்கின்றது..,
உன் வலது இதய அறை
சேர .....!!!

என் உயிர்
காத்திருக்கின்றது..,
உன் உயிர் முடியும் வரை ...!!!
சுமக்க ....!!!

மீண்டும் மாயன்கள்!

Posted: 16 Jul 2013 07:54 AM PDT

மாயன் இனத்தவரை அவ்வளவு சீக்கிரம் எவரும் மறந்திருக்கமாட்டார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மாயன்கள் அவர்களது நாட்காட்டி, உலக அழிவு என முழு உலகையுமே நடுங்கச் செய்திருந்தது அவர்கள் தொடர்பான செய்திகள் மற்றும் வதந்திகள். இந்நிலையில் மெக்சிகோவின் கிழக்குப் பகுதியில் உள்ள மழைக்காடுகளுக்குள் மாயன்களின் நகரொன்றை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பல நூறு வருடங்களாக அடர்ந்த காட்டுக்குள் மறைந்து கிடந்த மேற்படி நகரின் மூலம் மாயன் இனம் 1000 ஆண்டுகளுக்கு முன்னர் எவ்வாறு அழிந்து போனது தொடர்பில் ...

70 வயது வயதில் தன்னந்தனியாக, கடல் வழியாக உலகை சுற்றி வந்து 70 வயது மூதாட்டி சாதனை!

Posted: 16 Jul 2013 07:48 AM PDT

  தன்னந்தனியாக கடல் வழியாக உலகை சுற்றிவந்து இங்கிலாந்தை சேர்ந்த 70 வயது பெண் சாதனை படைத்துள்ளார். மேற்கு லண்டனை சேர்ந்த ஜியேன் சாக்ரட்டீஸ் என்ற அந்த பெண் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் கனடாவில் உள்ள விக்டோரியா துறைமுகத்தில் இருந்து இந்த சாகச பயணத்தை தொடங்கினார். கணவருடன் பலமுறை கடல் பயணம் சென்றிருக்கும் ஜியேன் சாக்ரட்டீஸ், கணவர் இறந்த பின்னர் தன்னந்தனியாக கடல் வழியாக 25 ஆயிரம் மைல் பயணித்து உலகை சுற்றிவந்து 259 நாட்களில் இந்த சாதனையை படைத்துள்ளார். இதன் மூலம் கடல் வழியாக தன்னந்தனியாக ...

தமிழில் வாதாட மறுப்பு: மீண்டும் ஒரு மொழிப்போருக்கு தமிழ் இனம் தயாராக வேண்டும்!

Posted: 16 Jul 2013 07:47 AM PDT

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோட்டிற்குட்பட்ட ஒரு கிராமத்தில் தான் கட்டியுள்ள வீட்டிற்கு திட்ட அனுமதி அளிக்க கருங்கல் கிராம பஞ்சாயத்திற்கு உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட மனுவில், மனுதாரர் சார்பில் வாதாடிய வழக்கு ரைஞரும், தமிழில் வாதாட உரிமை கோரி 2010-ம் ஆண்டில் நடந்த சாகும்வரை பட்டிணிப் போராட்டத்தில் ஈடுபட்ட போராளியுமான பகத்சிங், தனது வாதத்தை தமிழில் பேசத் தொடங்கியதும், அதனை ஏற்க மறுத்த நீதிபதி இந்திய அரசமைப்பு பிரிவு ...

நட்பின் முகவ்ரிகள் தொலைவதில்லை ! நூல் ஆசிரியர் கவிஞர் மா .தாமோதரன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

Posted: 16 Jul 2013 07:46 AM PDT

நட்பின் முகவ்ரிகள் தொலைவதில்லை ! நூல் ஆசிரியர் கவிஞர் மா .தாமோதரன் . மின் அஞ்சல் mathamotharan@gmail.com நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . வெளியீடு யாழினி .30/8 கன்னிக்கோயில் முதல் தெரு ,அபிராம புரம் .சென்னை .600018. விலை ரூபாய் 50.மின் அஞ்சல் minminihaiku@gmail.com நூல் ஆசிரியர் கவிஞர் மா .தாமோதரன் அவர்கள் அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றபோதும் இலக்கியப் பணியில் இருந்து என்றும் ஓய்வு பெறாதவர் .தொடர்ந்து இயங்கி வரும் படைப்பாளி .கவிதை எழுதும் எல்லோருக்கும் முதலில் வருவது காதல் கவிதைதான் ...

பாம்பை தின்னும் சின்ன பொண்ணு

Posted: 16 Jul 2013 07:46 AM PDT

உணவுகளின் போட்டோகள் -நீர் தோசை, இட்லி வடகறி போடோகள்

Posted: 16 Jul 2013 07:32 AM PDT

நான் இங்கு போடப்போகும் போட்டோகள் நான் மற்றும் எங்க கிருஷ்ணா சமைக்கும் போது எடுத்தவை உங்களின் பார்வைக்காக யாருக்காவது போட்டோ பார்த்து செய்ய வேண்டும் என்று தோன்றினால், உணவின் பெயரை சொல்லி "ஓட்டு " வில் இருக்கும் சந்தேகத்திரி இல் கேளுங்கள் சரியா? எப்போதும் போல் உங்கள் ஆதரவு தேவை

என்னை ஆட்கொண்டது ..!

Posted: 16 Jul 2013 07:25 AM PDT

உன்னை பிரிய போகும் நான்கு நாட்களும் துயரம் என்னை ஆட்கொள்ளும் என்று எண்ணினேன் - ஆனால் என்னை ஆட்கொண்டதோ உன் நினைவுகள்...!        

இளம் பெண்களுக்கு ஏற்ற சிறப்பான 10 பொழுதுபோக்குகள்!

Posted: 16 Jul 2013 07:25 AM PDT

ஓய்வு நேரத்தில் செய்வது பொழுதுபோக்கு ஆகும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பொழுதுபோக்கு உள்ளது. சிலருக்கு நடனம், சிலருக்கு வாத்தியங்கள், சிலர் தொலைக்காட்சி பார்ப்பார்கள், சிலர் கணினியில் விளையாடுவார்கள், புத்தகங்கள் படிப்பார்கள். இவ்வாறு பல பொழுது போக்குகள் உள்ளன. இயந்திரமயமான இவ்வுலகத்தில் படிப்பதும், வேலை செய்வது மட்டும் வாழ்க்கை அல்ல. ஒய்வுக்கென சிறிது நேரத்தை ஒதுக்கி பிடித்த பொழுது போக்கில் ஈடுபட வேண்டும். இவ்வாறு செய்வது உடலுக்கும் மனதுக்கும் நன்மை பயக்கும். அதிலும் விடுமுறை நாட்கள் வந்துவிட்டால், ...

தந்திக்கு வந்தது இறுதி! கவிஞர் இரா .இரவி !

Posted: 16 Jul 2013 07:07 AM PDT

தந்திக்கு வந்தது இறுதி! கவிஞர் இரா .இரவி ! விடுதலை பெறுமுன்னே வந்தசேவை தந்தி! விடுதலைப் பெற்று விட்டது தந்தி ! விஞ்ஞான கண்டுபிடிப்பால் வந்தது ! விஞ்ஞான வளர்ச்சியால் வழக்கொழிந்தது ! நஷ்டத்தில் இயங்கியதால் உன்னை ! இஷ்டத்திற்கு முடித்து விட்டனர் கதையை ! செல்லிடப் பேசிகள் வருகையால் ! செல்லாக் காசாகி மதிப்பிழந்தது ! பயன் இல்லா முதியோரை இன்று ! பையன்களை முதியோர் இல்லம் சேர்ப்பதுபோல ! பயன்படுத்துவோர் குறைந்திட்டதால் ! புழக்கத்தில் இருந்த தந்தி முடிந்தது ! வாகனம் செல்லாத ...

தந்திக்கு வந்த நிலை ....

Posted: 16 Jul 2013 07:05 AM PDT

காத்திருங்கள் ....
என்னும் சில வருடங்களில் ...
தந்திக்கு வந்த நிலை ....
நம் அரிசிக்கு வரும் ...!!!

பீசா ..KFC மோகத்தால் ...
அரிசிப்பாவனை.இன்றிலிருந்து ..
நிறுத்தப்படுகிறது என்று அறிவித்தாலும் ...
ஆச்சரிப்பட ஒன்றுமில்லை ...!!!

தனிமையிலும் இனிமை ...!

Posted: 16 Jul 2013 07:00 AM PDT

நம்மை சுற்றி நிறைய பேர் இருந்து கொண்டிருந்தாலும் நாம் ஏதோ தனிமையில் இருப்பதை போன்ற உணர்வு பலரையும் ஆட்கொள்ளத் தான் செய்கிறது. அதுவே திருமணமாகி, கணவரோடு புதுப்பெண் புதிய நகருக்கு வாழப்போனால், தனிமையில் தவித்துத்தான் போகிறார்கள். புதிய மனிதர்கள், புதிய மொழி, புதிய கலாசாரம் போன்றவைகள் எல்லாம் சேர்த்து அவர்களை தவிக்கவைத்து, தனிமைப்படுத்துகிறது. இது பற்றிய மத்திய அரசின் ஆய்வறிக்கை ஒன்று 'இந்தியாவில் 61 சதவீத நகர்ப்புற பெண்களும், 91 சதவீத கிராமப்புற பெண்களும் திருமணத்திற்கு பிறகு புதிய இடங்களுக்கு ...

தந்திக்கு வந்த தந்தி ...!!!

Posted: 16 Jul 2013 06:59 AM PDT

என் பூட்டனார் காலத்திற்கு முன்னிருந்து ... மங்களத்துக்கும் தந்தி ...!!! அமங்களத்துக்கும் தந்தி ...!!! அமர்க்களத்துக்கும் தந்தி ...!!! வந்த செய்தி என்னவென்று ... பிரித்து பார்ப்பதற்கு முன் .. பாட்டி ஒருபக்கம் ஓலமிடும் ...!!! அம்மா ஒருபக்கம் ... தலை தலையாக அடிக்கும் ...!!! ஏன் கத்துறியல் என்று என் பாட்டன் ... ஒருபுறம் கத்தும் ....!!! பிரித்த செய்தி மங்களம் ... நான் வீட்டுக்கு வருகிறேன் .. அம்மா என்று மூத்த மகனின் .. தூரத்து செய்தி அது ....!!! இத்தனை இத்தனை .. சம்பவங்கள் ...

தமிழர்களே தமிழை அவமதிப்பதா!

Posted: 16 Jul 2013 06:40 AM PDT

இப்போது பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம் ஆகிய இரண்டிலுமே மொழிப் புலமை இருப்பதில்லை. அம் மொழிமீது மாணவர்களுக்கு உள்ள ஆர்வக்குறைவும் அவற்றைக் கற்றுத்தரும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பற்ற உணர்வுமே இதற்குக் காரணங்களாகும். இந்த நிலையில் பெற்றோரும் தனியார் பள்ளிக்கூட நிர்வாகங்களும் தமிழைப் புறக்கணிப்பதைப் பார்த்தால் நெஞ்சம் பதறுகிறது. தமிழர்களே தமிழுக்குத் துரோகம் செய்யலாமா? கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு தொலைக்காட்சியில் பெற்றோர் மற்றும் அவர்களுடைய குழந்தைகள் பங்கேற்ற விவாத ...

சிவப்பு அணு.

Posted: 16 Jul 2013 06:40 AM PDT

நம் ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுவின் வேகம் அதிசயதக்கது.
ஒரு சிவப்பு அணு ,ஒரு இடத்தில் ஆரம்பித்து  ஒரு இடம் விடாமல்,உடல் முழுதும் சுற்றி, மறுமுறை தான் புறப்பட்ட இடத்திற்கே வந்து சேர்வதற்கு 20 வினாடிகளுக்கும் குறைவாகவே ஆகிறது.
அதிசயதக்க வேகம் !

ரமணியன்.
நன்றி : TOI /சென்னை

கண்ணீர் வரும் போது ..

Posted: 16 Jul 2013 06:28 AM PDT

நறுமணம் தேடி ..
வண்டு வருவதுபோல் ...
உன்னை தேடி நான் வந்தேன் ...

உன்னை நினைத்தால் கண்ணீர் ..
வருகிறது ...!!!
கண்ணீர் வரும் போது ..
உன் நினைவு வருகிறது ...!!!

மரம் நிழல் தரும் ...
நீயும் காதல் நிழல் தருகிறாய் ..
நிழலில் நிற்கத்தான் ...
யாருமில்லை ...!!!

கஸல் தொடர் ...

ஈகரையில் புதியவரா நீங்கள்? உங்களுக்காக!!

Posted: 16 Jul 2013 06:06 AM PDT

ஈகரையில் புதிதாக இணைந்து இருக்கும், இப்போது விருந்தினராக இணைந்து , பின்பு உறுப்பினராக தங்களை இணைந்து கொண்டு நல் பல ஆக்கங்களை தர இருக்கும் தாய் தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கங்கள் , நன்றிகளும் கூட ... ஈகரையில் புதிதாக இணைந்த பின்பு என்ன செய்வது , எப்படி பின்னோட்டம் இடுவது என்று தயக்கங்களும், கேள்விகளும் இருக்கும் . உங்களுக்காக இது ! 1. முதலில் ஈகரை தளத்திற்கு என்று விதி முறைகள் உள்ளது .. அதை முதலில் வாசிக்கவும் இங்கே http://www.eegarai.net/t3170-topic?tid=a2494046ecbb4b4726797bdd4dda705c 2. ...

ஆண்ட்ராயிடு அலைபேசி மென்பொருட்கள் - தொடர் பதிவு (தினமும்)

Posted: 16 Jul 2013 05:55 AM PDT



235 ஆண்ட்ராயிடு மென்பொருட்கள்



தரவிறக்க

Code:


http://billionuploads.com/ipxwbgkygnyn



எல்லாத்தையும் முழுங்கி ஏப்பம் விடுது பாருங்க...

Posted: 16 Jul 2013 04:52 AM PDT

பூவியம்...!

Posted: 16 Jul 2013 04:50 AM PDT

கவிதைப் போட்டியின் பரிசுகள் அனுப்பப் பட்ட விபரம்.

Posted: 16 Jul 2013 04:32 AM PDT

கவிதைப்போட்டியில் வெற்றி பெற்றவர்களில் கிழ்க்கண்ட நபர்களுக்குப் பரிசுகள் அனுப்பியுள்ளோம். வங்கி மூலமாக அவர்கள் கொடுத்த வங்கி கணக்குக்கு அனுப்பப் பட்டுள்ளது. சரி பார்த்து உடனடியாக வந்து சேர்ந்தமைக்கான அல்லது பெற்றுக்கொண்டமைக்கான ஒப்புதலை இங்கு பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இந்தப் பட்டியலில் இடம்பெறாதவர்களுக்கு இன்னும் ஓரிரு நாட்களில் அனுப்பப் படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். முதல் பரிசு திருமதி சைலஜா(மைதிலி நாராயணன்) 5 ௦௦௦ இரண்டாம் பரிசு சச்சிதானந்தம் 3 000 ராம் ...

நான் ரசித்தவை - மது

Posted: 16 Jul 2013 04:14 AM PDT

நான்-நீ

Posted: 16 Jul 2013 04:04 AM PDT

சூரியனை பார்த்து பனி உருகுவதுபோல்-நான் நீ என்னை பார்க்கும்போதெல்லாம் உருகிக்கொண்டிருக்கிறேன்    

சவுதியை நடுங்க வைக்கும் வைரஸ் நோய் ஆந்திராவில் பரவும் அபாயம்

Posted: 16 Jul 2013 03:57 AM PDT

சவுதியில் கரோனா என்ற வைரஸ் நோய் பரவி வருகிறது. இந்த நோய் தாக்கியவர்கள் கடுமையான காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டு உயிர் இழக்கிறார்கள். பன்றி காய்ச்சலை விட கொடுமையான இந்த நோய்க்கு சவுதியில் இதுவரை 40 பேர் பலியாகி உள்ளனர். பலர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நோய் ஆந்திராவில் பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் சவுதியில் வசித்து வந்த மகமத் சபீர் (36) என்ற வாலிபர் ஐதராபாத்தில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு வந்திருந்தார். அங்கு அவர் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிர் ...

ஆடிப்பிறப்பில கூடி நாம்

Posted: 16 Jul 2013 03:57 AM PDT

நாளைக்கு
ஆடிப்பிறப்பாம் - நல்லாக்
கூடிக் கூழும் குடிக்கலாம்
ஆடிக் கொழுக்கட்டையும் விழுங்கலாம்
தேடிப் பிடி நண்பர்/நண்பி முகவரிகளை
ஓடிப் போய் அவர்கள் வீட்டில குந்தி
உண்டு களிக்கலாம் நண்பா!

பேஸ்புக் சிரிப்பு மனிதர்: பிறரைக் கேலி பண்ண நாம் பயன்படுத்தும் அந்த முகத்தின் சொந்தக்காரர்!

Posted: 16 Jul 2013 03:31 AM PDT

பேஸ்புக் போன்ற சமூக வலைத்­த­ளங்­களை பயன்­ப­டுத்தும் பெரும்­பா­லா­னோ­ருக்கு அந்த சிரிப்பு மனி­தரின் ஓவியம் நன்கு அறி­மு­க­மா­ன­தாகும். மற்­ற­வர்­களின் தகவல், கருத்­து­களை வேடிக்­கை­யாக மறு­த­லிக்கும் சந்­தர்ப்­பங்­களில் அந்த விநோத சிரிப்பு மனிதர் ஓவியம் குறி­யீ­டாக பயன்­ப­டுத்­தப்­ப­டு­வ­துண்டு. ஆனால், அந்த ஓவியம் வெறும் கற்­பனை ஓவி­ய­மல்ல. உண்­மை­யாக வாழும் ஒரு­வரின் முகத்­தேற்­றமே அது. உலகின் முன்­னணி கூடைப்­பந்­தாட்ட வீரர் முகத்­தோற்­றத்தில் வரை­யப்­பட்­ட­துதான் அந்த ஓவியம். யோ ...

காதலியிடம் குறை காணாதீர்கள்

Posted: 16 Jul 2013 02:49 AM PDT

காதலியிடம்
குறை காணாதீர்கள்
அவள்
என்ன செய்வாள் பாவம்?
அது
காதலின் குறை ...
காதலில் குறை காணாதீர்கள்..
அது
என்ன செய்யும் ...?
இறைவனின் குறை .....!!!

காதல் முடிவில் ...
தொடங்கும் புள்ளி ....

நீ
வெறுப்பில் பேசினாலும்
அது
இறைவனின் பேச்சைப்போல் ..
ஆசிர்வதிப்பதாய்ப் பட்டது

கசல் தொடர் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™