Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


அனுமதியின்றி சுற்றுலா செல்லும் பள்ளிகளுக்கு "பாடம்': காற்றில் பறக்கவிடப்படும் விதிமுறைகள்

Posted:

மதுரை :மதுரை மாவட்டத்தில், கல்வி சுற்றுலா செல்லும்போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை பல பள்ளிகள் பின்பற்றுவதில்லை, என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் விளைவே, 4 மாணவர்களின் உயிர் பறிக்கப்பட்டுள்ளது.புத்தகங்களில் படிக்கும் பண்பாடு, கலாசாரம் மற்றும் வரலாறு சார்ந்த இடங்களுக்கு, மாணவர்களை நேரடியாக அழைத்துச் சென்று, ஆசிரியர்கள் விளக்கும்போது, அவை மாணவர்களின் மனதில் பதியும். மேலும், வகுப்புச் சூழலில் இருந்து மாறுதல் கிடைக்க, மாணவர்களை கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்வது வழக்கம்.ஆனால், இதில் "ரிஸ்க்' அதிகம் என கருதும் கல்வி அதிகாரிகள், 3 ஆண்டுகளாக ...

மேட்டூர் அணையைத் திறக்கக் கூடிய காலம் எப்போது? ஆலோசனை கூற விவசாயிகள் தயார்

Posted:

மேட்டூர் அணை முழுவதும் நிரம்பினால், சாகுபடிக்கு தண்ணீர் திறப்பது குறித்து, வேளாண் துறையினர் முதற்கட்டமாக ஆலோசித்து வருகின்றனர். ஆனால், "எங்கள் கருத்தை அறிந்த பிறகே, தண்ணீர் திறக்க வேண்டும்' என, டெல்டா விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.டெல்டா மாவட்டங்களில், ஆண்டுதோறும் குறுவை சாகுபடிக்காக, மேட்டூர் அணையில் இருந்து, ஜூன், 12ம்தேதி தண்ணீர் திறக்கப்படும். கடந்த ஆண்டு, தண்ணீர் இருப்பு குறைவாக இருந்ததால், குறுவை சாகுபடிக்கு, தண்ணீர் திறக்கவில்லை.

சலுகை
கடந்த ஆண்டை போல, இந்த ஆண்டும், குறுவை சாகுபடிக்கு, மேட்டூர் அணையில் இருந்து, தண்ணீர் ...

இது அடுத்த பரபரப்பு : போலீசை சுற்றும் "இந்தியன் பிரிமியர் லீக் சூதாட்டம்'

Posted:

சென்னை:இந்தியன் பிரிமியர் லீக் சூதாட்ட விவகாரம், புரோக்கர்களை தாண்டி தற்போது, அவர்களை காப்பாற்ற முயற்சித்ததாக, போலீஸ் அதிகாரிகளை சுற்றி வருகிறது.இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளின், ஆறாவது சீசனில், கோடிக்கணக்கில் "சூதாட்டம்' நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, ராஜஸ்தான் அணியின் வீரர்கள் கைது செய்யப்பட்டனர். சென்னையிலும், சூதாட்டம் நடந்திருப்பது அரசல் புரசலாக வெளிவந்தது.இந்நிலையில், போலி பாஸ்போர்ட் விவகாரத்தில், ஒரு நபரை, "கியூ' பிராஞ்ச் போலீசார் விசாரிக்க, அப்போது, அங்கு வந்த ஒரு நபர் மூலம், சென்னையில் பெருமளவில் சூதாட்டம் ...

தெலுங்கானா தனி மாநிலம் அடுத்த வாரம் முடிவெடுக்கிறது காங்., செயற்குழு

Posted:

ஐதராபாத் :ஆந்திராவில், தெலுங்கானா அரசியல் நாடகம், கிளைமாக்சை நெருங்குகிறது. அடுத்த வாரத்துக்குள், காங்., செயற்குழு, இது தொடர்பாக, இறுதி முடிவு எடுக்கும் என, தகவல் வெளியாகியுள்ளது."ஆந்திராவை இரண்டாக பிரித்து, தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க வேண்டும்' என, தெலுங்கானா ஆதரவாளர்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர். காங்., தலைமையிலான மத்திய அரசு, இந்த விஷயத்தில், பிடி கொடுக்காமல் காலத்தை கடத்தியது.

எதிர்ப்பு:
மத்திய அரசின் இந்த போக்கிற்கு, ஆந்திராவின் தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த, மூத்த காங்., தலைவர்கள், கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ...

இலங்கை தமிழர் விஷயத்தில் துணிச்சல் நடவடிக்கை தேவை: பிரதமருக்கு ஜெ., கடிதம்

Posted:

சென்னை :"இலங்கையில் பாரபட்சத்திற்கு இலக்காகியிருக்கும், சிறுபான்மை தமிழர்களுக்கு ஆதரவாக, மத்திய அரசு துணிச்சலான நடவடிக்கை எடுக்க வேண்டும்; பார்வையளாராக இருக்கக் கூடாது' என்று, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதிய கடிதத்தில், முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து, அவர் எழுதியுள்ள கடித விவரம்:இலங்கை தமிழர்களின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் அரசியல் சட்டத்தின், 13 வது பிரிவை நீர்த்துப் போகச் செய்யும் அல்லது ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளில், இலங்கை அரசு ஈடுபட்டுள்ளது தொடர்பாக, இந்த கடிதம் எழுதுகிறேன்.இலங்கையில் இறுதி கட்ட ...

தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டி போட்டியிட முடியுமா?

Posted:

ஐதராபாத்:"சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது' என, சுப்ரீம் கோர்ட் அளித்துள்ள தீர்ப்பால், ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் தலைவர்களும், அந்தக் கட்சித் தொண்டர்களும் கலக்கம் அடைந்துள்ளனர். தங்கள் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன், விரைவில் ஜாமினில் வெளியே வராவிட்டால், அவர் அடுத்த தேர்தலில் போட்டியிட முடியாத சூழ்நிலை உருவாகலாம் என, அஞ்சுகின்றனர்.

சிறையில் அடைப்பு:
ஆந்திர முன்னாள் காங்., முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன் மோகன் ரெட்டி. ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் தலைவரான இவர், வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்தது தொடர்பான ...

நாடு முன்னேற கல்விக்காக அதிகம் செலவிட வேண்டும்: முதல்வர் மோடி யோசனை

Posted:

புதுடில்லி :""கல்வியில் வளர்ச்சியை ஏற்படுத்தினால் மட்டுமே, நம் நாட்டில் முன்னேற்றம் ஏற்படும். கல்விக்காக அதிகம் செலவிட வேண்டும். சீனாவில், கல்விக்காக, மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 20 சதவீதம் செலவிடப்படுகிறது. நம் நாட்டில், 7 சதவீதம் செலவிடப்படுவதாக அரசு கூறுகிறது. ஆனால், வெறும், 4 சதவீதம் மட்டுமே செலவிடப்படுகிறது. இப்படியிருந்தால், நாடு எப்படி முன்னேறும்,'' என, குஜராத் முதல்வர், நரேந்திர மோடி பேசினார்.

கட்டமைப்பு வசதி :
குஜராத் முதல்வரும், பா.ஜ., பிரசார குழு தலைவருமான, நரேந்திர மோடி, புனேயில் உள்ள, பழமையான, "பெர்குஷான்' கல்லூரியில் நடந்த ...

தமிழகத்தில் இட்லி... மே.வங்கத்தில் சிக்கன்...! தேர்தலை குறிவைக்கும் "மலிவு விலை' அரசியல்

Posted:

கோல்கட்டா:தமிழகத்தில், மலிவு விலை உணவகங்களில் இட்லி விற்பனை செய்யப்படுவது போல், மேற்கு வங்கத்தில், வேன்கள் மூலமாக, சிக்கன், மீன் ஆகியவற்றை, பொதுமக்களுக்கு மலிவு விலையில் விற்கும் திட்டத்தை, அம்மாநில முதல்வர், மம்தா பானர்ஜி துவக்கியுள்ளார்.ஏழை மக்கள்:தமிழகத்தில், ஏழை மக்கள் பயனடைவதற்காக, மாநகராட்சிகளில், மலிவு விலை உணவகங்கள் துவக்கப்பட்டு, வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றன.இந்த உணவகங்களில் இட்லி, தயிர் சாதம், சாம்பார் சாதம் உள்ளிட்ட, உணவு வகைகள், மலிவு விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. இதேபோல், மலிவு விலை காய்கறி கடைகளும் துவங்கப்பட்டு ...

கூடங்குளம் மின் உற்பத்தியில் தமிழகத்திற்கு எவ்வளவு? 400 மெகா வாட் தர மத்திய அரசு திட்டம்

Posted:

""கூடங்குளம் அணுமின் நிலையத்தில், அடுத்த, 20 நாட்களில், 400 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். இந்த மின்சாரம் முழுவதும் தமிழகத்திற்கு வழங்கப்படும்,'' என, மத்திய பிரதமர் அலுவலக இணை அமைச்சர் நாராயணசாமி, நேற்று புதுச்சேரியில் நிருபர்களிடம் தெரிவித்தார்.அவர் கூறியதாவது:கூடங்குளம் அணுமின் நிலையம், தற்போது மின் உற்பத்தியைத் துவங்கி உள்ளது. 20 நாட்களில், 400 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். இந்த மின்சாரம் தமிழகத்திற்கு வழங்கப்படும். இந்த உற்பத்தி மேலும், 10 நாட்களில், 1,000 மெகா வாட்டாக உயரும்.ஆறு மாதத்தில், 2வது அணுமின் நிலையப் பணிகள் துவங்கும், ...

குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேற்ற உதவும்படி: குடியரசு கட்சி எம்.பி.,க்களுக்கு ஒபாமா வேண்டுகோள்

Posted:

வாஷிங்டன்:குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேற ஒத்துழைக்கும்படி, அமெரிக்க குடியரசு கட்சி எம்.பி.,க்களுக்கு, அமெரிக்க அதிபர் ஒபாமா வேண்டுகோள் விடுத்துள்ளார்.அமெரிக்காவில், சட்ட விரோதமாக, ஒரு கோடியே 10 லட்சம் வெளிநாட்டினர் தங்கியுள்ளனர். இவர்களில், 2.40 லட்சம் பேர் இந்தியர்கள்.சட்ட விரோதமாக தங்கியுள்ள இவர்களை வெளியேற்றும்படி, குடியரசு கட்சி எம்.பி.,க்கள் பலர் வற்புறுத்தி வருகின்றனர். ஆனால், இவர்களை வெளியேற்றுவதை தவிர்க்கும், புதிய சட்டத் திருத்த மசோதாவை ஒபாமா அறிமுகப்படுத்தி உள்ளார். இந்த மசோதாவுக்கு, அமெரிக்க செனட் சபை, ஒப்புதல் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™