Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


ஆபாச இணையதளங்களை தடை செய்ய மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கெடு

Posted:

புதுடில்லி:"சர்வதேச ஆபாச இணையதளங்களை, தடை செய்வது கஷ்டமான காரியம்; இது குறித்து பல்வேறு அமைச்சகங்களுடன் ஆலோசித்து, முடிவு செய்வதற்கு இன்னும் சில காலம் ஆகும்' என, மத்திய அரசு, சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்தது."பெருகி வரும் ஆபாச இணையதளங்களால், பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரிக்கின்றன. இவற்றை தடை செய்ய, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கமலேஷ் வஸ்வானி என்பவர், சுப்ரீம் கோர்ட்டில், பொதுநலன் கோரும் மனு தாக்கல் செய்திருந்தார்.அந்த மனு, தலைமை நீதிபதி, அல்டமாஸ் கபீர் தலைமையிலான, "டிவிஷன் பெஞ்ச்' முன், சில மாதங்களுக்கு முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த ...

தி.மு.க., "மாஜி' அமைச்சர்கள் மீதான வழக்குகளுக்கு உயிரூட்டும் முயற்சி தோல்வி

Posted:

சென்னை : தி.மு.க., முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதை எதிர்த்து, அப்பீல் மனுக்கள் தாக்கல் செய்ய, கால தாமதம் ஏற்பட்டதை, ஏற்கக் கோரிய மனுக்களை, ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.கடந்த, 1996 - 2001 வரை, தி.மு.க., ஆட்சியில், அமைச்சர்களாக கோ.சி.மணி, நேரு, ஐ.பெரியசாமி பதவி வகித்தனர். வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்திருப்பதாக, மூவர் மீதும், முன்னாள் அமைச்சர் ரகுபதி, முன்னாள் மேயர் குழந்தைவேலு மீதும், அடுத்து வந்த அ.தி.மு.க., ஆட்சியில், லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.இந்த வழக்கில், கோ.சி.மணியை, கும்பகோணம், ...

விஜயகாந்த் மீது கொலை முயற்சி வழக்கு : கவர்னரை சந்திக்க எம்.எல்.ஏ.,க்கள் முடிவு

Posted:

தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் மீது, கொலை முயற்சி வழக்கு தொடரப்பட்டுள்ளது தொடர்பாக, கவர்னரை சந்தித்து முறையிட, அக்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் தயாராகி வருகின்றனர்.அரசு தொடர்ந்த அவதூறு வழக்கில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், கடந்த, 1ம் தேதி நாகர்கோவில் கோர்ட்டில் ஆஜரானார். அப்போது, வழக்கறிஞர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. அரசு வழக்கறிஞர் கொடுத்த புகாரின் பேரில், நேற்று முன்தினம், விஜயகாந்த் மீது, கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது.ரிஷிவந்தியம் தொகுதியில், புதிய எம்.எல்.ஏ., அலுவலகம் திறந்து, நலத்திட்ட உதவி வழங்க சென்ற, விஜயகாந்திற்கு, வழக்கு குறித்து தகவல் ...

தமிழில் வாதாடியதால் வழக்குகள் தள்ளுபடி: ஐகோர்ட் அதிரடி

Posted:

மதுரை:இரு வழக்குகளில், மனுதாரர்களின் வழக்கறிஞர், தமிழில் வாதிடுவேன் என்பதை, ஏற்க முடியாத நிலையில், மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுவதாக, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.கோவில்பட்டி, ஆயிஷா பானு தாக்கல் செய்த மனுவில், "கணவர் பக்கீர் மைதீன், சவுதி அரேபியாவில், கூலித்தொழிலாளியாக வேலைக்குச் சென்றார். அங்கு பாஸ்போர்ட்டை தொலைத்து, சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவிக்கிறார். அவரை மீட்டு, ஒப்படைக்க, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என, குறிப்பிட்டுள்ளார்.கன்னியாகுமரி அடக்கச்சி சுந்தரராஜன், "விளவங்கோடு மிடாலனில் வீடு கட்ட, வரைபட அனுமதி வழங்க, கருங்கல் ...

பிரதமர் வேட்பாளராக ராகுலை அறிவிக்க போவதில்லை: காங்.,

Posted:

புதுடில்லி:""காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்து, லோக்சபா தேர்தல் நடந்து முடிந்தபின் தான், முடிவு செய்யப்படும். பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளராக, நரேந்திர மோடியை அறிவிப்பது குறித்து, எங்களுக்கு கவலை இல்லை,'' என, காங்., பொதுச் செயலர், திக்விஜய் சிங் கூறினார்.

லோக்சபா தேர்தல்:
காங்., பொதுச் செயலர் திக்விஜய் சிங், செய்தியாளர்களிடம் கூறியதாவது:அடுத்த லோக்சபா தேர்தலுக்கான, காங்கிரசின் பிரதமர் வேட்பாளர் யார் என்றும், மன்மோகன் சிங், மீண்டும் பிரதமர் ஆவாரா என்றும் கேட்கப்படுகிறது. காங்கிரசை பொறுத்தவரை, தேர்தலுக்கு முன், ...

இளவரசன் இறுதி சடங்கில் கலந்து கொள்ள விருப்பம் இல்லை : திவ்யா சார்பில் மனு

Posted:

தர்மபுரி:"இளவரசனின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள விருப்பம் இல்லை' என, அவரது காதல் மனைவி திவ்யா, கலெக்டருக்கு, மனு கொடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.கடந்த, 4ம் தேதி, இளவரசன், தர்மபுரி அரசு கலைக் கல்லூரி பின்புறம் உள்ள, ரயில் தண்டவாளத்தில், பிணமாக கிடந்தார். பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் இளவரசன், "என் சாவுக்கு யாரும் காரணமில்லை' என, எழுதிய கடிதம் மற்றும் விசாரணை அடிப்படையில், இளவரசன் தற்கொலை செய்து கொண்டார் என, போலீசார் அறிவித்தனர்.இளவரசனின் தந்தை இளங்கோ மற்றும் அவரது உறவினர்கள், இளவரசன் கொலை செய்யப்பட்டதாக கூறி வருகின்றனர். "இளவரசனின் இறுதிச் ...

குஜராத் கலவர விஷயத்தில் நான் தவறு செய்யவில்லை : நரேந்திர மோடி மனம் திறந்த பேட்டி

Posted:

ஆமதாபாத் : ""குஜராத்தில், 2002ல், நடந்த கலவரத்தின்போது, நான் செய்ததெல்லாம், சரியானது தான். சுப்ரீம் கோர்ட் அமைத்த, சிறப்பு புலனாய்வு குழு, இந்த விவகாரத்தில், என்னை குற்றமற்றவன் என, அறிவித்துள்ளது,'' என, குஜராத் முதல்வர், நரேந்திர மோடி, கலவரம் உள்ளிட்ட பல விஷயங்கள் தொடர்பாக, பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.

கோத்ரா ரயில் எரிப்பு:
குஜராத்தில், 2002ல், கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து, பெரும் கலவரம் வெடித்தது. ஏராளமான சிறுபான்மையினர் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக, அம்மாநில முதல்வர், நரேந்திர மோடிக்கு எதிராக, எதிர்க்கட்சிகள் தொடர்ந்து, புகார் ...

தெலுங்கானா கோரிக்கை:காங்கிரஸ் செயற்குழு விரைவில் கூடி இறுதி முடிவு

Posted:

புதுடில்லி :டில்லியில் நேற்று நடந்த, காங்கிரஸ் உயர்மட்டக் குழு கூட்டத்தில், தெலுங்கானா தனி மாநில கோரிக்கை தொடர்பாக, எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ""காங்கிரஸ் செயற்குழு இதுதொடர்பாக, இறுதி முடிவு எடுக்கும்,'' என, அந்தக் கட்சியின் பொதுச் செயலர், திக்விஜய் சிங் கூறினார்."ஆந்திராவை இரண்டாகப் பிரித்து, தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க வேண்டும்' எனக்கோரி, அம்மாநிலத்தில், கடந்த சில மாதங்களாக போராட்டங்கள் நடந்து வருகின்றன. தெலுங்கானா கூட்டு நடவடிக்கை குழு மற்றும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி போன்றவை, இந்தப் போராட்டங்களை நடத்தி வருகின்றன.அதேநேரத்தில், ...

கூடங்குளத்தில் மின் உற்பத்தி துவங்க ஏற்பாடுகள் தயார் : மூன்று நாட்களுக்குள் அணு உலை இயங்க வாய்ப்பு

Posted:

சென்னை :கூடங்குளம் அணு உலையில், "கட்டுப்படுத்தப்பட்ட அணு பிளவு சோதனை' மேற்கொள்ளும் பணி துவங்கி உள்ளது. எந்த நேரத்திலும் மின் உற்பத்தி துவங்கும் என, அணுசக்தி கமிஷன் வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன.நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில், 14 ஆயிரம் கோடி ரூபாயில், இந்தியா - ரஷ்யா கூட்டு முயற்சியில், தலா, 1,000 மெகா வாட் உற்பத்தி திறனுள்ள, இரு அணு உலைகள் அமைக்கப்பட்டு உள்ளன.இவற்றில், முதல் அணு உலையில், 2011, டிசம்பரில் மின் உற்பத்திக்கு திட்டமிடப்பட்டிருந்தது. கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம் மற்றும் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்குகளால், மின் உற்பத்தி ...

கல்வியை கண்டு அஞ்சும் பயங்கரவாதிகள்: ஐ.நா., சபையில் பாக்., சிறுமி மலாலா பேச்சு

Posted:

நியூயார்க்: தலிபான் பயங்கரவாதிகளால் சுடப்பட்ட பாகிஸ்தான் சிறுமி மலாலா, ஐ.நா., சபையில், நேற்று உரையாற்றினார்.

தலிபான் தாக்குதல்:
ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்த தலிபான்கள், பெண்கள் பள்ளிக்கு செல்வதை எதிர்த்தனர். பாகிஸ்தானில், பெண் கல்விக்காக பிரசாரம் செய்த, மலாலா யூசுப்சாய் என்ற மாணவியை, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், தலிபான்கள் சுட்டனர். இதில், மலாலாவுக்கு தலை மற்றும் கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில், மலாலாவுக்கு, லண்டனில் உயர் சிகிச்சை அளிக்கப்பட்டது.
கல்வி அவசியம்: ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™