ஈகரை தமிழ் களஞ்சியம் |
- ரகசியங்கள் திருட்டை தடுக்க கணனிக்கு பதில் தட்டச்சு - ரஷ்யா அதிபர் அதிரடி!
- திருமணம்
- இனியவனானேன் ...!!!
- "I love you so much"….கதறி அழும் திவ்யா….!
- அதிகூடிய கொள்ளளவு கொண்ட டிவிடி கண்டுபிடிப்பு
- 1000மதிப்பீடுகள் தி கிரேட் ராஜு சரவணன்(டெக்லஸ்)
- இத்தாலியருக்கும் ஐரோப்பியருக்கும் உள்ள வித்தியாசம் (நகைசுவைக்காக)
- எனக்கும் கற்றுக்கொடு
- உன்னை யாராவது பூபோல் ..
- எல்லா நோய்களுக்கும் பிளேடு சிகிச்சை – டெல்லி அதிர்ச்சி வீடியோ
- என் வாழ்க்கை இல்லை ..
- நீ யார்?
- புதிதாய் பிறந்தேன் ......
- குட்டி குட்டி சைக்கிள்!
- காதலில் ரோஜாவை ..
- உன் உயிர் காதலன் ...!!!
- சிறு செயல் போதும் ..
- இல்லறமும் நல்விருந்தும்
- உங்களுடைய படம் வேறு இணைய தளத்தில்.
- விடா முயற்சி விஸ்வரூபா வெற்றி -நண்பென் டா
- எனக்கு பிடித்தவை (தொடர் கவிதை)
- காதல்
- காத்துக்கொண்டிருக்கிறேன்
- உன் தொலைபேசி அழைப்பு...
- காதல் தான் ஓசை ..!!!(கஸல் )
- பாவியாகிவிட்டேனா ..?(கஸல் )
- எப்படி பிரிந்திருப்பது ...!!! (கஸல் )
- இத பாக்காதீங்க...! - மதுமிதா
- உங்களுக்கென்று ஒரு வெப்சைட் ஆரம்பிக்கனுமா?
- ஆண் குழந்தைகளுக்கான அழகான தமிழ் பெயர்கள்
- கோலம் போடுவது எறும்புகளுக்காக!
- நான் ரசித்தவை - மது
- வீட்டுக் குறிப்புகள்
- சிவகார்த்திகேயனுக்காக ஹன்ஷிகாவிற்கு 1 கோடி குடுத்த தயாரிப்பாளர்?
- குங்குமம் இட்டுக் கொள்வது எதற்காக
- முகநூலில் ரசித்தவை-2
- ஏர்செல்லின் மற்றுமொரு கஷ்டமான கேள்வி?
- கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 4
- தமிழை வாசிக்க வைப்போம்...
- இரயில் பயணத்தில்.....
- எனது ஆன்டிராய்டு மொபைல்க்கு தமிழ் கீபோர்டு மென்பொருள் தேவை?உதவி செய்யுங்கள் நண்பர்களே?
| ரகசியங்கள் திருட்டை தடுக்க கணனிக்கு பதில் தட்டச்சு - ரஷ்யா அதிபர் அதிரடி! Posted: 12 Jul 2013 11:53 AM PDT சமீபகாலமாக உலகமெங்கும் நடக்கும் சைபர் கிரைமை தடுக்க பல்வேறு நாடுகள் பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகிறது. இந்நிலையில் ரகசியங்கள் திருட்டை தடுக்க ரஷிய அதிபர் மாளிகையில் கணனிகளுக்கு பதிலாக மீண்டும் தட்டச்சு எந்திரகள் பயன்படுத்தப்படுகின்றன. இப்போது உபயோகிக்கும் கணனிகள் பயன்பாட்டுக்கு வருவது முன்பு அலுவலகங்களில் தட்டச்சுகள் பயன்படுத்தப்பட்டன. தற்போது அவை ஓரங்கட்டப்பட்டு அனைத்து ஆவணங்களும் கணனிகள் வழியாக தயாரிக்கப்படுகிறது. இதனால், பல ரகசியங்கள் திருடப்படுகின்றன. விக்கி லீக் இணைய ... |
| Posted: 12 Jul 2013 11:48 AM PDT கரம் கொடுக்க காத்திருக்கிறேன் இருகரம் நீட்டி ஏற்றுக்கொள்வேன் -உன்னை என்றென்றும்...... |
| Posted: 12 Jul 2013 11:46 AM PDT என் இனியவளே...! இன்றாவது கோபப்படு ..!!! நீ எதை கொடுத்தாலும் இனிமையாய் தான் இருக்கிறது எனக்கு...! உன்னால் தான் நான் இனியவனானேன் ...!!! |
| "I love you so much"….கதறி அழும் திவ்யா….! Posted: 12 Jul 2013 11:44 AM PDT இளவரசன் தனக்குக் கடைசியாக எழுதிய கடிதம் குறித்து கேள்விப்பட்டு அவரது காதல் மனைவி திவ்யா கதறி அழுபடி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது . அவருக்கு ஆறுதல் சொல்ல வழி தெரியாமல் குடும்பத்தினர் திகைத்துப் போயுள்ளனர். இளவரசன் மரணம் தற்கொலை என்பது கிட்டத்தட்ட உறுதியாகி வருகிறது. இதுதொடர்பாக அவர் எழுதிய கடைசிக் கடிதங்கள் என்று போலீஸார் சிலவற்றை வெளியிட்டுள்ளனர். இவை உண்மையிலேயே இளவரசன் எழுதியதா என்பது குறித்து ஆராய தடயவியல் சோதனைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தநிலையில் இளவரசனின் கடிதம் குறித்து அறிந்து ... |
| அதிகூடிய கொள்ளளவு கொண்ட டிவிடி கண்டுபிடிப்பு Posted: 12 Jul 2013 11:38 AM PDT பல லட்சம் கொள்ளளவுடைய டிவிடியை கண்டுபிடித்துள்ளதாக கண்டுபிடிப்பாளர்கள் தெரிவித்துள்ளார்கள். இந்த தொழில்நுட்ப கண்டுபிடிப்பால் பல நன்மைகள் இருக்கின்றன என்று தெரியவருகிறது அதாவது,ஆப்டிகல் விஞ்ஞானத்தை 1873 ஆம் ஆண்டே எர்னஸ்ட் அப்பே கண்டுபிடித்திருந்தாலும் அதில் மாபெரும் முன்னேற்றமோ அல்லது பெரிய கண்டுபிடிப்போ இல்லை. அதை போக்கும் வண்ணம் ஸ்வின்பர்ன் பல்கலைகழகத்தில் விரிவுரையாளர்கள் கூடி அவர்கள் தலைமையில் பொறியியள் விஞ்ஞானிகள் ஒரு புது வகை டிவிடியை கண்டுபிடித்திருக்கின்றனர். இது சிடி / டிவிடி ... |
| 1000மதிப்பீடுகள் தி கிரேட் ராஜு சரவணன்(டெக்லஸ்) Posted: 12 Jul 2013 11:26 AM PDT 1000 மதிப்பீடுகள் கடந்த நம்ம ராஜூசரவணனை வாழ்த்துவோம் [/size] மனமார்ந்த வாழ்த்துகள் ராஜூ ![]() |
| இத்தாலியருக்கும் ஐரோப்பியருக்கும் உள்ள வித்தியாசம் (நகைசுவைக்காக) Posted: 12 Jul 2013 11:26 AM PDT பிருனோ போஜ்ஜெட்டோ (Bruno Bozzetto) என்ற கேலிச்சித்திரக்காரர் இத்தாலியருக்கும் ஐரோப்பியருக்கும் உள்ள வித்தியாசத்தை நகைசுவை ஃபிளாஷ் வீடியோவாக காட்டுகிறார். (குறிப்பு : இது நகைசுவைக்கு மட்டுமே இத்தாலியரை சிறுமைப்படுத்துவதோ ஐரோப்பியரை பெருமைப்படுத்துவதற்க்காக போடப்பட்டது இல்லை) |
| Posted: 12 Jul 2013 11:21 AM PDT பூமாலை கட்ட தெரியுமா உனக்கு....? எனக்கும் கற்றுக்கொடு அழகிய பூ உனை கட்டி மாலையிட ஆசைப்படுகிறேன் நான்....! . |
| Posted: 12 Jul 2013 11:18 AM PDT உன்னை யாராவது நீ தேவதை போல இருக்கிறாய் என்றால் நம்பிவிடாதே....! உண்மையில் தேவதைகள் தான் உன்னை போல இருக்கும்....! . உன்னை யாராவது பூபோல் .. என்றால் மயங்கி விடாதே .. பூதான் உன்னை கண்டு .. மயங்க வேண்டும் ...!!! |
| எல்லா நோய்களுக்கும் பிளேடு சிகிச்சை – டெல்லி அதிர்ச்சி வீடியோ Posted: 12 Jul 2013 11:16 AM PDT நோயாளிகளின் உடலில் பிளேடால் கீறி ரத்தத்தை வெளியேற்றி வினோத முறையில் நோய்களை குணப்படுத்துகிறார் 79 வயது முதியவர். அவரிடம் சிகிச்சை பெற மக்கள் படையெடுத்து வருகின்றனர்.நவீன மருத்துவ முறைகளில் எவ்வளவோ முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தொழில்நுட்ப ரீதியாக பரிசோதனை முறைகள் வளர்ந்துள்ள இந்த காலத்திலும் இதுபோன்ற மருத்துவ முறைகளை மக்கள் நம்பிக் கொண்டிருப்பதுதான் வேதனையாக இருக்கிறது. தலைநகர் டெல்லியில் ஏராளமான தனியார் மருத்துவமனைகள் உள்ளன. இவற்றில் அதிநவீன கருவிகள், சிறந்த மருத்துவ நிபுணர்களை கொண்டு ... |
| Posted: 12 Jul 2013 11:15 AM PDT காற்று தொடர்பற்ற உயிர் ஏதுமில்லை எனும் உண்மை போல் உன் தொடர்பற்ற என் வாழ்க்கை இல்லை .. எப்படியும் தொற்றிக்கொள்கிறது உன் நினைவு....! |
| Posted: 12 Jul 2013 11:15 AM PDT தலை கோதும் போது தந்தையாய், தோல்சாயும் போது தோழனாய், மடி சாயும் போது தாயாய், கரம் கொடுக்கும் போது காதலனாய், இப்படி- தந்தையாய், தோழனாய், தாயாயை, காதலனாய் -என்னுள் இருக்கும், ஒருவன் யார் ? |
| Posted: 12 Jul 2013 11:13 AM PDT புழுவாய் துடித்த காலங்கள் புயலாய் நீங்கிடவே புன்னைகையால் பூத்திடவே புத்தம் புத்தம் புது மலராய் புதிதாய் பிறந்தேன் நான் ... புண்பட்ட நெஞ்சமெல்லாம் பூவோடு கொஞ்சிடவே புன்னகைகள் மிஞ்சிடவே புத்தம் புத்தம் புது மலராய் புதிதாய் பிறந்தேன் நான் ... புருவங்கள் எல்லாம் புண்பட்டு கண்ணீரில் புரண்ட காலங்கள் எல்லாம் புன்னைகையால் இருண்டு விடவே புத்தம் புத்தம் புது மலராய் புதிதாய் பிறந்தேன் நான் ... |
| Posted: 12 Jul 2013 10:41 AM PDT சின்னா ஒரு ஏழைப் பையன். சிறுவயதிலேயே குடும்பத்தை காப்பாற்றும் கடமை அவனுக்கு ஏற்பட்டு விட்டது. அதனால், வேலை செய்யக் கிளம்பிட்டான். சின்னா, பக்கத்து ஊரிலிருந்த ஒரு கிழவரின் வீட்டில் வேலை செய்து வந்தான். மாதா மாதம், அவர் கொடுக்கும் சம்பளத்தை ஊருக்கு அனுப்பிவிடுவான். இப்படியே, ஒரு வருஷமாயிற்று. ஒருநாள் சின்னாவிற்கு, தன் அம்மாவை பார்க்க வேண்டும்போல ஆசையாக இருந்தது. தன் விருப்பத்தை கிழவரிடம் சொன்ன போது, அவர் சின்னாவிடம் வாத்து ஒன்றை கொடுத்து, ""இதன் காதில் நான் சொல்லும் மந்திரத்தைச் சொன்னால், ... |
| Posted: 12 Jul 2013 10:39 AM PDT காதலில் ரோஜாவை .. அன்பாக கொடுக்க காரணம் ... உன்னை சிரிக்கவும் வைப்பேன் .. அழவும் வைப்பேன் என்கிறது ... காதல் சின்னம் ...!!! முட்களால் உடலை மட்டும் தான் காயப்படுத்த முடியும் உள்ளத்தையல்ல....! அந்த குறை.... தீரத்தான் ... ரோஜாக்களையும் படைத்தான் இறைவன்....! |
| Posted: 12 Jul 2013 10:35 AM PDT எப்போதும் உன் பின்னாலேயே தொடர்வதால் எனை நிழல் என்றோ... காவலன் என்றோ .. எண்ணி விடாதே ...!!! உன் உயிர் காதலன் ...!!! |
| Posted: 12 Jul 2013 10:26 AM PDT சிறு கல் போதும் கண்ணாடி உடைய.. !!! சிறு சொல் போதும் நட்பு உடைய ..!!! சிறு புன்னகை போதும் காதல் வர ..!!! சிறு சந்தேகம் போதும் .. காதல் தோற்க ...!!! |
| Posted: 12 Jul 2013 10:25 AM PDT விருந்து உபசரித்தல் என்பது சங்க காலத்தில் இல்லறக் கடமையாக இருந்து வந்துள்ளது. இனிய இல்லறத்தின் முக்கிய கடமைகளுள் ஒன்று விருந்து புரத்தல். ஆனால் விருந்து புரத்தல் எனப்படும் விருந்தோம்பல் காலத்தின் கட்டாயமாக, தேவை கருதியே சங்க காலத்தில் இருந்து வந்துள்ளது எனலாம். இக்காலத்தில் ஆங்காங்கு காணப்படுவது போல சங்க காலத்தில் உணவகங்கள் இல்லை. அரசர், அந்தணர், வணிகர், வேளாளர் என்னும் நால்வகைப் பிரிவினர் நாட்டில் வாழ்ந்தனர். இப்பிரிவுகள் ஒரு போதும் சாதியையோ, மதத்தையோ, உயர்வு தாழ்வு கருதியோ அமைக்கப் ... |
| உங்களுடைய படம் வேறு இணைய தளத்தில். Posted: 12 Jul 2013 09:59 AM PDT உங்களுடைய படம் வேறு இணைய தளத்தில். நீங்கள் தரவேற்றிய உங்கள் புகைபடமோ / அவதாரோ உங்களுக்கு தெரியாமலே மற்றவர்களால் உபயோகபடுத்தக்கூடிய சாத்யகூறுகள் அதிகமாகவே உள்ளன. எங்கு எங்கு உபயோகபடுத்தபட்டு உள்ளன என்ற அவா நாம் எல்லோருக்கும் இருக்கும். www.tineye.com என்கிற இணையதளத்திற்கு போனால் பதில் கிடைக்கும். என் புகைப்படம் ஈகரையில் மட்டுமே உள்ளது. ரமணியன். |
| விடா முயற்சி விஸ்வரூபா வெற்றி -நண்பென் டா Posted: 12 Jul 2013 09:40 AM PDT தாமஸ் ஆல்வா எடிசனின் நண்பர் ஒருவர், ஒரு புதிய கண்டுபிடிப்பை உருவாக்குவது என்ற வேகத்துடன் உழைத்துக் கொண்டிருந்தார். அவரது கண்டுபிடிப்பு நிறைவேறுமா என்ற சந்தேகம் எடிசனுக்கு ஏற்பட்டது. "இது வேண்டாத வேலை! வீணான முயற்சி! விட்டுவிடு! உனக்கு ஏதாவது புதியதாக செய்ய வேண்டுமென்றால், என்னுடன் சேர்ந்து உழைக்கலாம்!" என்று அழைப்பு விடுத்தார். அந்த நண்பர் கேட்கவில்லை. எடிசன் தடுத்ததையும் மீறி தன் சோதனை முயற்சியைத் தொடர்ந்தார். கடைசியில் தன் கனவை நினைவாக்குவதில் அந்த நண்பர் ஜெயித்தார். நண்பரின் ... |
| எனக்கு பிடித்தவை (தொடர் கவிதை) Posted: 12 Jul 2013 09:39 AM PDT உயிர் நண்பன் .. முதல் காதலி .. வரம்பு மீறாத பெற்றோர் ... காலைக்குளிர் .. இரவு வெயில் .. மாலை தளிர் ... ஆவியாய் அலையும் நீர் .. நீராய் மாறும் புகை .... முத்தாய் மாறும் மழைத்துளி .. ஆழ்நீரில் வெயிலில் காயும் மீன் .. அங்கேயே குளிரில் நடுங்கும் நீர் குமிழி .. காற்றில் கபடியாடும் பஞ்சு...!!! (150 வரிகளைக்கொண்ட கவிதை தொடரும் ) |
| Posted: 12 Jul 2013 09:24 AM PDT ஓவியமாய் இருந்த நான் உயிர்பெற்றேன்-நீ உன் பார்வையை என் மேல் வீசியதும்.... |
| Posted: 12 Jul 2013 09:15 AM PDT வினாடிகள் நிமிடங்களாகின! நிமிடங்கள் மணிதுளிகலாகின!! மணித்துளிகள் நாட்களாகின!!! நிர்க்க நேரமில்லாமல் சுழலும் கடிகாரத்தை பார்த்து காத்துக்கொண்டிருக்கிறேன்-அடுத்த வினாடி,நிமிடம்,மணித்துளி அடுத்த நாளும் வந்தது உன் தொலைபேசி அழைப்பு மட்டும் வரவே இல்லை?????????????????????????????????????????????? |
| Posted: 12 Jul 2013 09:10 AM PDT வினாடிகள் நிமிடங்களாகின! நிமிடங்கள் மணிதுளிகலாகின!! மணித்துளிகள் நாட்களாகின!!! நிர்க்க நேரமில்லாமல் சுழலும் கடிகாரத்தை பார்த்து காத்துக்கொண்டிருக்கிறேன்-அடுத்த வினாடி,நிமிடம்,மணித்துளி அடுத்த நாளும் வந்தது உன் தொலைபேசி அழைப்பு மட்டும் வரவே இல்லை?? இக் கவிதை தவறாக அறட்டை பகுதியில் .. மீண்டும் பதிந்தேன் கவிதை பகுதியில் .. |
| Posted: 12 Jul 2013 09:02 AM PDT நம் காதல் .. குறுங்கதையில்லை ... தொடர் கதை ... நிச்சயம் முற்றுப்பெறாது ...!!! நீ சொல்லக்கூடியதை சொல் .. நான் சொல்லமுடியாததை .... சொல்லுகிறேன் நீதான் என் உச்சரிப்பு ... நான் தான் வாக்கியம் .. காதல் தான் ஓசை ..!!! கஸல் 210 |
| Posted: 12 Jul 2013 08:53 AM PDT நீ யாரோ ..? நான் யாரோ ..? இணைத்தது .. காதலா ..? காலமா ..? நீ கனவில் கூட வரமுடியாத .. பாவியாகிவிட்டேனா ..? நம் காதல் .. பகலில் நட்சத்திரம் .. இரவில் வானவில் .. அருமையான -நம் காதல் இல்லையா ..? கஸல் 209 |
| எப்படி பிரிந்திருப்பது ...!!! (கஸல் ) Posted: 12 Jul 2013 08:46 AM PDT நான் எவ்வளவோ.. முயற்சிக்கிறேன் .. கவிதை எழுதாமல் .. விடுவோம் என்று ... முடியாது முடியாது ... நான் விட்டாலும் ... கவிதை விடாது ..!!! கவிதையை ரசிக்கும் நீ காதலையும் ரசிக்க பழகு . காதலில் நான் இடது இதய அறை-நீ வலது இதய அறை எப்படி பிரிந்திருப்பது ...!!! கஸல் -208 |
| Posted: 12 Jul 2013 08:43 AM PDT ![]() |
| உங்களுக்கென்று ஒரு வெப்சைட் ஆரம்பிக்கனுமா? Posted: 12 Jul 2013 08:37 AM PDT வணக்கம் நண்பர்களே, நம்ம ஒவ்வொருத்தர் மனதிலுமே நமெக்கென ஒரு வெப்சைட்டை சிறிய அளவிலாவது ஆரம்பித்துவிடவேண்டும் என்கிற எண்ணம் இருக்கும். ஆனால் அதற்கானா தேவைகள்தான் மாறுபடும், ஒருசிலர் அவர்களின் தொழிலை பிரபலப்படுத்துவதற்காக அவர்கள் செய்யும் தொழிலின் பெயரிலேயே வெப்சைட் ஆரம்பித்து அவர்களைப்பற்றியும் அவர்கள் செய்யும் தொழிலைப்பற்றியும் அதில் கொடுத்து அதிக வாடிக்கையாளர்களை கவர விரும்புவர். ஒருசிலர் அவர்களைப்பற்றியும் அவர்களின் எண்ணங்கள், கவிதைகள் மற்றும் கட்டுரைகளை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள வெப்சைட் ... |
| ஆண் குழந்தைகளுக்கான அழகான தமிழ் பெயர்கள் Posted: 12 Jul 2013 06:53 AM PDT அ1. அகரன்84. அரிசில்கிழான்167. அழகுமலை2. அகரமுதல்வன் 85. அரியநாயகம்168. அழகு திருமலை3. அகத்தியன்86. அரியபிள்ளை169. அழகுநம்பி4. அகவழகன்87. அரியமணி170. அழகுமுத்து5. அகமுடைநம்பி88. அரியமுத்து171. அழகு முத்துக்கோன்6. அஞ்சி89. அரிமா172. அழகுவேல்7. அஞ்சாநெஞ்சன்90. அரிமாகோ173. அழகுவேள்8. அஞ்சனவண்ணன்91. அரிமாச்செல்வன்174. அளப்பருங்கடலான்9. அஞ்சனமழகியபிள்ளை92. அரிமாப்பாண்டியன்175. அளப்பருந்தேவன்10. அஞ்சையன்93. அரிமாத்தங்கம்176. அறம்11. அசோகன்94. அருகன்177. அறம் வளர்த்தான்12. அடலேறு95. அருங்கலநாயகன்178. ... |
| கோலம் போடுவது எறும்புகளுக்காக! Posted: 12 Jul 2013 05:46 AM PDT தன் வீட்டு வாசலுக்கு வரும் பூச்சிகள் எறும்புகள் கூடப் பசியுடன் திரும்பக்கூடாது என்பதற்காக அரிசிமாவில் கோலம் போடுவது நம் தமிழர்களின் பண்பாடு. ஆனால், பசிக்கிறது என்று வாய்திறந்து கேட்டால் கூட, பார்க்காததுபோல் செல்கிறார்கள் மேல்நாட்டு கலாச்சாரத்தில் ஊ(நா)றிப் போன சில மக்கள். நன்றி - தமிழால் இணைவோம் |
| Posted: 12 Jul 2013 05:41 AM PDT ![]() |
| Posted: 12 Jul 2013 05:28 AM PDT கண்ணாடி மேஜை மீதுள்ள கறைகள் நீங்குவதற்கு டால்கம் பவுடர் அல்லது கடலை மாவைத் தூவி நன்றாக துடைத்துவிடவும். இரும்புக் கடைகளில் கிடைக்கும் சிலிகான் கார்பைட் பேப்பர் வாங்கி வந்து இலுப்பக்கட்டி/ தோசைக்கல்லில் அலம்பிவிட்டு இந்தக் காகிதத்தில் ஒரு சிறு துண்டு வெட்டி தேய்த்தால் கறுப்பெல்லாம் மறைந்துவிடும். வருடக்கணக்கில் பிசுக்குப் பிடித்திருந்தால் சில தடவைகள் தேய்த்துக் கழுவினால் சுத்தமாகிவிடும். வீட்டில் வாசற்படி, ஜன்னல் கதவுகளில் உள்ள அழுக்கைத் துணியில் மண்ணெண்ணெய் தொட்டுத் தடவி ஒரு நிமிடம் ஊறவிட்டு, ... |
| சிவகார்த்திகேயனுக்காக ஹன்ஷிகாவிற்கு 1 கோடி குடுத்த தயாரிப்பாளர்? Posted: 12 Jul 2013 05:18 AM PDT http://www.soundcameraaction.com/wp-content/uploads/2013/07/maan-karate-770x472.jpg 'அவருடன் எல்லாம் நடிக்க முடியாது' என்று மறுத்த ஹன்ஷிகாவிடம் வேறு வழியில்லாமல் சிவகார்த்திகேயனுக்காக 1 கோடி ரூபாயை இழந்திருக்கிறார் 'மான்கராத்தே' படத்தின் தயாரிப்பாளர். பாண்டிராஜ் டைரக்ட் செய்த 'மெரினா' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் விஜய் டிவியின் செல்லப்பிள்ளை சிவ கார்த்திகேயன். அந்தப்படத்தின் சாட்டிலைட் ரைட்ஸை தனக்கு உள்ள செல்வாக்கை பயன்படுத்தி அதே விஜய்டிவிக்கு மிகப்பெரிய தொகைக்கு விற்றுக் கொடுத்தார் ... |
| குங்குமம் இட்டுக் கொள்வது எதற்காக Posted: 12 Jul 2013 04:25 AM PDT 1. சுமங்கலிப்பெண்களின் தலை வகிட்டின் நுனியை சீமந்த பிரதேசம் என்பார்கள். அம்பிகையின் வகிட்டில் உள்ள குங்குமம் பக்தர்களுக்கு சேமத்தைக் கொடுக்கும். 2. சுமங்கலிப் பெண்களின் சீமந்த பிரதேசம் ஸ்ரீமகாலட்சுமியின் இருப்பிடம் சுமங்கலிகளின் சக்தி குங்குமத்தில் உள்ளது. 3. வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுப்பது, தருபவர் பெறுபவர் இருவருக்கும் மாங்கல்யத்தின் பலத்தைப் பெருக்கும். 4. குங்குமம் ஆரோக்கியமான நினைவுகளை தோற்றுவிக்கும். குங்குமம் அணிந்த எவரையும் வசியம் செய்வது கடினம். 5. பெண்கள் ... |
| Posted: 12 Jul 2013 04:15 AM PDT சரியாக தமிழ் உச்சரிப்பது பற்றிய படம் .. |
| ஏர்செல்லின் மற்றுமொரு கஷ்டமான கேள்வி? Posted: 12 Jul 2013 04:09 AM PDT you can be Aircel lucky winner to win CAR, SPORTS BIKE, IPODS, and more prizes Q) clouds bring what? A-RAIN, B- TRAIN SMS A or B to 51001 @RS 5/ day TNC apply |
| Posted: 12 Jul 2013 04:08 AM PDT முன்கதைக்கான லிங்க் - http://www.eegarai.net/t61492-3 இதன் நான்காம் பகுதியை இங்கு தொடர்கிறேன். ஜன்னல் வழி வந்த சூரியக் கதிர்கள் சுள்ளென முகத்தில் பட்டு கண்களை விழிக்கிறான் ருத்ரன், கடிகாரத்தில் மணி 9. அத்தையின் குரல் வெளியிலிருந்து : "ருத்ரா தம்பி எழிந்திரிப்பா, கண்ணன் வந்துருக்கான் பாரு" (கண்ணன் - முழுப்பெயர் வேட்டக்கண்ணன், ருத்ரனுடன் கல்லூரியில் சேர்ந்து பயின்றவன், தற்போது வேலை இல்லா பட்டதாரி, சொந்த ஊர் இதே கிராமம்தான் - வேடுவமழுதூர்) வெளியில் வந்த ... |
| Posted: 12 Jul 2013 04:08 AM PDT தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்' என்பது தேசியக் கவியின் ஆசை. ஆனால், தமிழகத்தில் பார்க்கும் இடமெல்லாம் தமிழாக இருக்கிறதா என்பதே ஆய்வுக்குரியது. இந்தியாவில் அகழ்ந்தெடுக்கப்பட்ட சுமார் ஒரு லட்சம் கல்வெட்டுகளில் 60 ஆயிரம் கல்வெட்டுகள் தமிழ் மொழியில் எழுதப்பட்டவை. இந்தியா, இலங்கை, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அலுவல் மொழியாகவும் பத்துக்கும் மேற்பட்ட நாடுகளில் சுமார் 8 கோடிக்கும் அதிகமானோர் பேசும் மொழியாகவும் இருக்கிறது தமிழ். 2,500 ஆண்டு பழமை வாய்ந்த "செம்மொழியாக' தமிழ் ... |
| Posted: 12 Jul 2013 04:05 AM PDT ஒரு நாள் தந்தையும் , அவரின் 14 வயது மகனும் ரயிலில் பிரயாணம் செய்து கொண்டிருந்தனர். அந்த சிறுவன் ஜன்னலின் வழியே வெளியே எட்டி பார்த்து, "மேகம் நம் கூடவே வருகிறது", என அவர் தந்தையிடம் கூறினான். அதற்கு தந்தையும், "ஆமா "என்று சொன்னார் . கொஞ்ச நேரம் கழித்து, " அப்பா மரம்,செடியெல்லாம் நம்மை கடந்து செல்கின்றன !!!" என்று சொன்னார். அதற்கும் தந்தை "ஆமாம்" என்று சொன்னார். இதை கவனித்து கொண்டிருந்த எதிரில் இருந்த தம்பதியினர், "இவனை கொஞ்சம் மருத்துவ மனையில் சென்று காண்பிக்க கூடாதா? ... ... |
| எனது ஆன்டிராய்டு மொபைல்க்கு தமிழ் கீபோர்டு மென்பொருள் தேவை?உதவி செய்யுங்கள் நண்பர்களே? Posted: 12 Jul 2013 04:05 AM PDT எனது ஆன்டிராய்டு மொபைல்க்கு தமிழ் கீபோர்டு மென்பொருள் தேவை?உதவி செய்யுங்கள் நண்பர்களே? |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |


