Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


உள்துறை அமைச்சர் தகவல்: வழிபாட்டு தலங்களுக்கு சி.ஐ.எஸ்.எப்., பாதுகாப்பு வழங்கப்படுமா?

Posted:

""முக்கிய வழிபாட்டுத்தலங்களுக்கு, மத்திய தொழில் பாதுகாப்பு போலீஸ் படை பாதுகாப்பு வழங்குவது குறித்து, ஆலோசித்து, முடிவெடுக்கப்படும்,'' என, மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே கூறினார்.

டில்லியில் நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், அமைச்சர், சுஷில்குமார் ஷிண்டே கூறியதாவது:
நிதிஷ் கோரிக்கை:
புத்த கயா மகாபோதி கோவிலில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தை அடுத்து, அம்மாநில முதல்வர் நிதிஷ்குமாரிடம் இருந்து, கோரிக்கை வந்துள்ளது. சி.ஐ.எஸ்.எப்., எனப்படும், மத்திய தொழில் பாதுகாப்பு போலீஸ் படை பாதுகாப்பு வழங்கும்படி ...

என்.எல்.சி., போராட்டத்தால் பாதிப்பில்லை: மின் உற்பத்தி அதிகரிப்பு

Posted:

சென்னை :பங்கு விற்பனையை எதிர்த்து, என்.எல்.சி., தொழிலாளர்கள், எட்டாவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். "இப்போராட்டத்தால், இதுவரை தமிழகத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை' என, மின்வாரியம் அதிகாரிகள் கூறுகின்றனர்.தமிழகத்தில், நீர், அனல், எரிவாயு, காற்றாலை உள்ளிட்ட எரிசக்தி ஆதாரங்களின் மொத்த மின் உற்பத்தி திறன், 18,514 மெகா வாட். இவற்றில், நீர் மின் திட்டங்கள் மூலம், 2,237 மெகா வாட்டும், அனல் மின் திட்டங்கள் மூலம், 2,970 மெகா வாட் மின்சாரமும் உற்பத்தி செய்ய முடியும். மின் பற்றாக்குறையை, மின் தடை உள்ளிட்ட கட்டுப்பாடுகள், வெளி மாநிலங்களில் இருந்து, மின் ...

பல குரல், பல மொழிகளில் கலக்கிய "ஜெகஜால கில்லாடி' சுகாஷ்

Posted:

சென்னை : மலையாள நடிகை லீனா மரியா பாலுடன் இணைந்து, 19 கோடி ரூபாய் கடன் வாங்கி மோசடியில் ஈடுபட்ட சுகாஷ், ஸ்பானிஷ், பிரெஞ்ச், ஆங்கிலம், தமிழ் என, எட்டு மொழிகள் அறிந்தவர். சென்னையில் இருந்த போது, "ஐ.ஏ.எஸ்.,' அதிகாரி என தன்னை கூறிக் கொண்டு, 10 பாதுகாவலர்களுடன் வலம் வந்தது, போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், சுகாஷ் மீது தற்போது, தமிழகம் மற்றும் கர்நாடகத்தில் மட்டும், 14 வழக்குகள் உள்ளன.சென்னை, அம்பத்தூரில், 19 கோடி ரூபாய் மோசடி மற்றும் சேலையூரில் ஜவுளி வியாபாரியிடம் மோசடி உள்ளிட்ட வழக்குகளில், டில்லியில் கைது செய்யப்பட்ட சுகாஷை, சென்னை மத்திய குற்றப்பிரிவு ...

18 நாளில், 20 ஆயிரம் பேர் "ஆப்சென்ட்': பி.இ., சேர்க்கையில் அதிர்ச்சி

Posted:

சென்னை :பி.இ., பொதுப் பிரிவு சேர்க்கை கலந்தாய்வு முடிந்த, 18 நாட்களில் மட்டும், 20 ஆயிரம் மாணவர்கள், "ஆப்சென்ட்' ஆகியிருப்பது, அண்ணா பல்கலையை, அதிர்ச்சியடைய வைத்துள்ளது.கடந்த மாதம், 21ம் தேதி, பொதுப் பிரிவு கலந்தாய்வு துவங்கியது. 9ம் தேதி வரையிலான, 18 நாட்களில், மொத்தம், 82,447 மாணவர்கள், கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டனர். இவர்களில், 62,996 மாணவர்கள், சேர்க்கை உத்தரவுகளை பெற்றுள்ளனர்; 19,224 மாணவர்கள், "ஆப்சென்ட்' ஆகியுள்ளனர். இது, 23.32 சதவீதம்.கலந்தாய்வுக்கு வந்து, 227 மாணவர், எந்தப் பிரிவையும் தேர்வு செய்யாமல் சென்றுள்ளனர். 18 நாட்களில், அதிகமான மாணவர்கள், "ஆப்சென்ட்' ...

எல்லையில் ரோந்து செல்வதை மாற்ற முடியாது: சீன வெளியுறவு அதிகாரி விளக்கம்

Posted:

பீஜிங்:"இந்தியாவை ஒட்டியுள்ள எல்லைப் பகுதியில், வழக்கமான ரோந்து பணியில் ஈடுபடும் திட்டத்தை, மாற்றிக் கொள்ள முடியாது' என, சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.சீனாவுக்கும், இந்தியாவுக்கும், நீண்ட காலமாக எல்லைப் பிரச்னை உள்ளது.கடந்த, ஏப்., 20ம் தேதி, ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின், லே பகுதியில் நுழைந்த, சீன ராணுவ வீரர்கள், 21 நாட்கள் அங்கேயே முகாமிட்டு, எல்லையில் பதற்றத்தை ஏற்படுத்தினர்.இந்நிலையில், லே பகுதியின் மற்றொரு இடமான, சுமர் என்ற இந்திய கிராமம் அருகே, சீன ராணுவம் அத்துமீறி நுழைந்து, அட்டூழியம் புரிந்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.இரு ...

தயாளுவின் உடல்நிலையை பரிசோதிக்க மருத்துவ குழு

Posted:

புதுடில்லி:"2ஜி' ஸ்பெக்ட்ரம் வழக்கில், நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க கோரியுள்ள, தி.மு.க., தலைவர், கருணாநிதியின் மனைவி தயாளுவின் உடல்நிலையை பரிசோதிக்க, மருத்துவ குழுவை அமைக்கும்படி, "எய்ம்ஸ்' மருத்துவமனை இயக்குனருக்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது."2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், கலைஞர் "டிவி'க்கு பல நிறுவனங்கள் வழியாக கைமாறிய, 200 கோடி ரூபாய் குறித்து சி.பி.ஐ., விசாரணை நடத்தியது.இதில், தி.மு.க., தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு, அரசு தரப்பு சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளார். இது தொடர்பான விசாரணையில் ஆஜராகும்படி, தயாளுவுக்கு சிறப்பு கோர்ட் ...

"மாமூல்' கேட்டு டிரைவர்கள் மீது தாக்கு : அடியாட்களுடன் போலீஸ் ஏட்டு அடாவடி

Posted:

கிருஷ்ணகிரி :"மாமூல்' தர மறுத்த லாரி டிரைவர்களை, போலீஸ் ஏட்டு, அடியாட்கள் மூலம் தாக்கியதைக் கண்டித்து, பொதுமக்கள், சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.கிருஷ்ணகிரி மாவட்டம், குருவிநாயனப்பள்ளியில், போலீஸ் சோதனைச் சாவடி உள்ளது. இது, ஆந்திர மாநில நுழைவுப் பகுதி. இங்கு, நேற்று பிற்பகல், 2:00 மணிக்கு, ஏட்டு ராஜேந்திரன் பணியில் இருந்தார்.அப்போது, பஞ்சாப் மாநிலத்தில் இருந்து ஒரு லாரி வந்தது. லாரியை நிறுத்திய, ராஜேந்திரன் மற்றும் அவரது எடுபிடியாக இருந்த அடியாட்கள், டிரைவர்களிடம், மாமூல் பணம் கேட்டனர்.டிரைவர்கள், ஹீர்சியாபூரை சேர்ந்த பரம்ஜித் சிங், 42, குருவிந்தர் ...

கட்டடங்களால் ஆட்டம் காணும் மலை மாவட்டம் : அதிகாரிகளின் ஆசியுடன் அத்துமீறல் அதிகரிப்பு

Posted:

ஊட்டி :நீலகிரி மாவட்டத்தில், விதிமுறைகளை மீறி கட்டடங்கள் கட்டப்படுகின்றன.நீலகிரி மாவட்டத்தின் இயற்கை எழிலை காக்கவும், நிலச்சரிவு அபாயத்தை தடுக்கவும், 1993ம் ஆண்டில், அ.தி.மு.க., அரசு சார்பில் "மாஸ்டர் பிளான்' அமல்படுத்தப்பட்டது. ஊட்டி படகு இல்லம், தாவரவியல் பூங்கா, குதிரை பந்தய மைதானம், காப்புக் காடுகள் உள்ள இடங்களில் இருந்து 100 மீட்டர் தொலைவில், புதிய கட்டுமானங்கள் கட்ட தடைவிதிக்கப்பட்டது; 30 "டிகிரி' சாய்வான மலைப் பகுதிகளில் கட்டுமானங்கள் கூடாது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால், அரசியல் கட்சி பிரமுகர்களின் ஆதரவுடன், விதிமீறி கட்டடங்கள் ...

"அடுத்த குறி மும்பை!': சொல்கிறது இந்திய முஜாகிதீன்

Posted:

புதுடில்லி:பீகார் மாநிலம், புத்த கயா கோவிலில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் குறித்த வழக்கு விசாரணை, தேசிய புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குண்டுவெடிப்புக்கு பொறுப்பேற்றுள்ள, இந்திய முஜாகிதீன் அமைப்பு, தன் அடுத்த குறி, மும்பை என, "ட்விட்டரில்' குறிப்பிட்டுள்ளது.தொடர் குண்டுவெடிப்பு:பீகார் மாநிலம் புத்த கயாவில் உள்ள மகாபோதி புத்தர் கோவிலில், கடந்த, 7ம் தேதி, தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது. இதில், ஐந்து துறவிகள் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவம் குறித்த விசாரணை, என்.ஐ.ஏ., என்ற, தேசிய புலனாய்வு அமைப்பிடம் ...

தேர்தல் சட்டப்பிரிவை நீக்கி சுப்ரீம் கோர்ட் அதிரடி : தண்டனை பெற்றால் எம்.பி., - எம்.எல்.ஏ., பதவி அம்போ!

Posted:

புதுடில்லி :கிரிமினல் வழக்குகளில் தண்டிக்கப்படும், எம்.பி., அல்லது எம்.எல்.ஏ.,க்களின் பதவிகளைப் பறிக்க, சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கிரிமினல் வழக்குகளில் தண்டனை பெற்றவர்களை பாதுகாக்கும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப் பிரிவை, சுப்ரீம் கோர்ட், நேற்று அதிரடியாக ரத்து செய்துள்ளது.லில்லி தாமஸ் என்ற வழக்கறிஞரும், "லோக் பிரகார்த்தி' என்ற தன்னார்வ அமைப்பும், சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்திருந்த மனுக்களில் கூறியிருந்ததாவது:"குற்றவாளிகள், தேர்தலில் போட்டியிடக் கூடாது' என, அரசியலமைப்பு சட்டம் கூறுகிறது. ஆனால், மக்கள் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™