Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Daily Thanthi

Daily Thanthi


மராட்டியம் நிலச்சரிவு

Posted: 10 Jul 2013 01:12 PM PDT

மராட்டியத்தில் நிலச்சரிவில் குடிசை வீட்டுக்குள் புதைந்த நிலையில் ஒருவர் உயிருக்கு போராடுவதையும், அவரை தீயணைப்பு படையினர் மீட்க முயற்சிப்பதையும் படத்தில் பார்க்கிறீர்கள்.

கர்நாடகா

Posted: 10 Jul 2013 01:10 PM PDT

கர்நாடகாவில் ஏழை குடும்பங்களுக்கு கிலோ அரிசி ஒரு ரூபாய் விலையில் வழங்கும் 'அன்ன பாக்ய' திட்டத்தை பெங்களூர் சுதந்திர பூங்காவில்  முதல்-மந்திரி சித்தராமையா குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தபோது எடுத்தபடம். அருகில் பொதுவினியோகத்துறை மந்திரி தினேஷ் குண்டுராவ் மற்றும்  எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.
 

அமர்நாத் யாத்திரை

Posted: 10 Jul 2013 01:07 PM PDT

ஜம்மு காஷ்மீர்: குகைக்கோவிலில் பனி லிங்கத்தை தரிசிக்க அமர்நாத் யாத்திரை செல்லும் பக்தர்கள்.

காஷ்மீர்

Posted: 10 Jul 2013 01:06 PM PDT

காஷ்மீர் மாநிலம் குப்வாரா பகுதியில் ரோந்து சென்ற பாதுகாப்பு படையினர் மீது அங்கு மறைந்திருந்த தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். சம்பவத்தை அடுத்து தீவிரவாதிகளை நோக்கி தாக்குதல் நடத்த தயாராக இருந்த ராணுவ வீரர்கள்.

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி

Posted: 10 Jul 2013 01:04 PM PDT

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் ஐ.ஐ.டி. வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியுடன் கிராம பெண்கள் 'டப்லெட்' குறித்து பேசிய காட்சி. உடன் மாநில முதல் மந்திரி அசோக் கெலட்.

அரூர்–சேலம் பிரதான சாலையில் பரபரப்பு: 10 கி.மீ. தூரம் நடுரோட்டில் நடந்து சென்ற யானைகள் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

Posted: 10 Jul 2013 11:55 AM PDT

பொம்மிடி

அரூர்–சேலம் பிரதான சாலையில் 10 கிலோமீட்டர் தூரம் யானைகள் நடுரோட்டில் நடந்து சென்றதால் சுமார் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.

யானைகள் அட்டகாசம்

கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக 6 யானைகள் புகுந்து அட்டகாசம் செய்து வந்தன. இந்த யானைகள் ஏற்காடு, சேர்வராயன் மலைப்பகுதி வழியாக மீண்டும் நேற்று முன்தினம் தர்மபுரி மாவட்ட எல்லையான மஞ்சவாடி வனப்பகுதிக்குள் நுழைந்தன.

பசுமை தீர்ப்பாயத்தில் நிபுணர்குழு அறிக்கை தாக்கல்: "ஸ்டெர்லைட் ஆலையை அகற்றும் வரை அறப்போர் தொடரும்"; வைகோ அறிக்கை

Posted: 10 Jul 2013 11:53 AM PDT

சென்னை

ஸ்டெர்லைட் ஆலையை அகற்றும் வரை அறப்போர் தொடரும் என்று வைகோ கூறி உள்ளார்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

பசுமைத் தீர்ப்பாயம்

டெல்லியில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலை குறித்த வழக்கு விசாரணைக்கு இன்று (நேற்று) எடுத்துக்கொள்ளப்பட்டது. அந்த ஆலையில் கடந்த மார்ச் 23–ந் தேதி நச்சுப் புகை வெளியேறி தூத்துக்குடி மக்கள் பாதிக்கப்பட்டு, தொடர் போராட்டங்கள் நடைபெற்றது.

3 நாடுகள் கிரிக்கெட் இலங்கை அணியை தோற்கடித்து இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதி வெஸ்ட் இண்டீஸ் வெளியேற்றம்

Posted: 10 Jul 2013 11:30 AM PDT

போர்ட் ஆப் ஸ்பெயின்,

3 நாடுகள் கிரிக்கெட் போட்டியில் கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி 81 ரன் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி  இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. வெஸ்ட் இண்டீஸ் அணி இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்து வெளியேறியது.

கடைசி லீக் ஆட்டம்

வெஸ்ட் இண்டீஸ், இந்தியா, இலங்கை ஆகிய 3 நாடுகள் இடையேயான ஒருநாள் கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா இரண்டு முறை மோத வேண்டும். லீக் ஆட்டங்கள் முடிவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

முத்தரப்பு கிரிக்கெட் கோப்பை யாருக்கு? இந்தியா–இலங்கை இன்று மோதல்

Posted: 10 Jul 2013 11:25 AM PDT

போர்ட் ஆப் ஸ்பெயின்,

முத்தரப்பு கிரிக்கெட் போட்டியில் கோப்பை யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டியில் இன்று இந்தியா–இலங்கை அணிகள் மோதுகின்றன.

இறுதிப்போட்டி

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது. இதன் லீக் ஆட்டங்கள் முடிவில் இந்தியா, இலங்கை அணிகள் முறையே முதல் இரண்டு இடங்களை பிடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறின. வெஸ்ட் இண்டீஸ் அணி வாய்ப்பை இழந்து வெளியேறியது. கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி இன்று (வியாழக்கிழமை) போர்ட் ஆப் ஸ்பெயினில் நடக்கிறது. இதில் இந்தியா–இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்திய ஆக்கி அணியின் புதிய பயிற்சியாளராக கவுசிக் நியமனம்

Posted: 10 Jul 2013 11:23 AM PDT

புதுடெல்லி,

இந்திய ஆண்கள் ஆக்கி அணியின் பயிற்சியாளராக முன்னாள் வீரர் கவுசிக் நியமிக்கப்பட்டுள்ளார்.

நோப்ஸ் நீக்கம்

ஒலிம்பிக் போட்டியில் 8 முறை தங்கப்பதக்கம் வென்றுள்ள இந்திய ஆண்கள் ஆக்கி அணி தற்போது மோசமான நிலையில் உள்ளது. 2008–ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறாத இந்திய ஆக்கி அணி, கடந்த ஆண்டு நடந்த லண்டன் ஒலிம்பிக் போட்டியில் கடைசி இடமே பிடித்தது. அடுத்த ஆண்டு நடைபெறும் உலக கோப்பை போட்டிக்கு நேரடியாக தகுதி பெறவில்லை.



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™