puthiyathalaimurai.tv online |
- ஜம்மு காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு: 2-வது நாளாக கடைகள் அடைப்பு
- அரியலூர் மாவட்டத்தில் புதிதாக மணல் குவாரி அனுமதிக்க எதிர்ப்பு
- பெரம்பலூரில் கல்விக்கடன் முகாம்
- இந்து மக்களை புண்படுத்தியாக திக்விஜய் சிங் மீது போலீசில் புகார்
- புதுக்கோட்டையில் ஒரே நாளில் 2 வீடுகளில் நகைகள் திருட்டு
- பழனி வனப்பகுதியில் வனவிலங்குகளை கண்காணிக்க நவீன கருவி
- சென்னை ஆவடியில் போலி தங்கக்கட்டிகள் பறிமுதல்
- கடல் சீற்றத்தால் படகு கவிழ்ந்து விபத்து: சென்னை மீனவர் பலி
- ஒருநாள் போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வே சென்றது
- கரூரில் மாநில அளவிலான ஜூடோ போட்டிகள்
| ஜம்மு காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு: 2-வது நாளாக கடைகள் அடைப்பு Posted: 20 Jul 2013 11:12 PM PDT ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினரால் 4 பேர் சுட்டுகொல்லப்பட்டதை கண்டித்து 2-வது நாளாக முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. ராம்பன் மாவட்டத்தில் நேற்று முன்தினம் எல்லைப் பாதுகாப்புப் படை முகாம் முன் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் 4 இளைஞர்கள் உயிரிழந்தனர். இதைக் கண்டித்து ஹூரியத் மாநாட்டு கட்சியின் தலைவர் சையத் அலி ஷா கிலானி 3 நாள் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். அதனைத்தொடர்ந்து, ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவர் யாசின் மாலிக் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரிவினைவாத அமைப்பினர் அழைப்பு விடுத்துள்ள 3 நாட்கள் போராட்டம் காரணமாக பதற்றம் நிலவுவதால் முக்கிய நகரங்களில் ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. 2-வது நாளாக ஆட்டோக்கள், கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் இயக்கப்படாததால், சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. |
| அரியலூர் மாவட்டத்தில் புதிதாக மணல் குவாரி அனுமதிக்க எதிர்ப்பு Posted: 20 Jul 2013 11:12 PM PDT அரியலூர் மாவட்டத்தில் புதிதாக வழங்கப்பட்ட மணல் குவாரி உரிமத்தை ரத்து செய்யக்கோரி பொது மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். விழுப்பணங்குறிச்சி கிராமத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் புதிதாக மணல் குவாரிக்கு வழங்கப்பட்ட அனுமதிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 37 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களை விடுவிக்க கோரியும், மணல் குவாரி ஆரம்பிக்க கூடாது என வலியுறுத்தியும் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களுடன் வட்டாட்சியர் முருகன் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து, ஐந்து மணி நேரம் நீடித்த சாலை மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது. |
| பெரம்பலூரில் கல்விக்கடன் முகாம் Posted: 20 Jul 2013 11:10 PM PDT பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற்ற கல்விக்கடன் முகாமில் 9.52 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் பெறுவதற்கான ஆணை மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்டது. பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் வளாகத்தில் நடைபெற்ற இம்முகாமில் பல்வேறு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் பங்கேற்றன. கடன் கேட்டு விண்ணப்பித்த மாணவ, மாணவிகளில் 762 பேருக்கு கடன் பெறுவதற்கான ஆணையை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார். மேலும் கடன் கேட்டு விண்ணப்பித்த மற்ற மாணவ மாணவிகளுக்கு உரிய சான்றிதழ்களை சமர்ப்பித்த பின்னர் விதிமுறைப்படி கடன் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. |
| இந்து மக்களை புண்படுத்தியாக திக்விஜய் சிங் மீது போலீசில் புகார் Posted: 20 Jul 2013 11:05 PM PDT இந்து மக்களின் மனதை புண்படுத்தும் விதமாக கருத்து தெரிவித்ததாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் திக் விஜய் சிங் மீது காவல்துறையில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் நிதியமைச்சர் ராகவ்ஜி மற்றும் இந்து கடவுள் ராமர் குறித்தும், திக்விஜய் சிங் டிவிட்டரில் விமர்சித்திருந்தார். இந்து கடவுளான ராமர் மீது நம்பிக்கை வைத்திருக்கும் மக்களின் மனதை புண்படுத்தும் விதமாக இருப்பதாக கூறி ஆர்.எஸ்.எஸ். தொண்டர் சங்கீத் வர்மா என்பவர் போபாலில் உள்ள சபுரா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். |
| புதுக்கோட்டையில் ஒரே நாளில் 2 வீடுகளில் நகைகள் திருட்டு Posted: 20 Jul 2013 10:53 PM PDT புதுக்கோட்டையில் ஒரே நாளில் 2 இடங்களில் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை சீனிவாச நகரைச் சேர்ந்த பி.எஸ்.என்.எல் ஊழியர் பாலசுப்பிரமண்யன், வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே சென்றிருந்த போது, வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் சுமார் 7 சவரன் நகைகளைத் திருடிச் சென்றனர். இதேபோல் இலுப்பூரைச் சேர்ந்த பேராசிரியர் சீனிவாசன் குடும்பத்துடன் வெளியூர் சென்ற நிலையில், அவரது வீட்டின் பூட்டை உடைத்து 9 சவரன் நகைகள், வெள்ளிப் பொருள்கள் உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். |
| பழனி வனப்பகுதியில் வனவிலங்குகளை கண்காணிக்க நவீன கருவி Posted: 20 Jul 2013 10:29 PM PDT பழனி வனப்பகுதியில் யானைகள் நடமாட்டத்தைக் கண்காணிக்கும் நவீன மின்னணு கருவி பொருத்தப்பட்டுள்ளது. வன விலங்குகள் தண்ணீர் தேடி வெளியே வந்தால், வனத்துறையினருக்கு எஸ்.எம்.எஸ் மூலம் அறிவிக்கும் வகையிலும், வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாயிகளுக்கு மைக் மூலம் முன்னெச்சரிக்கை விடுக்கும் வகையிலும் ப்ராக்ஸிமிட்டி என்ற நவீன மின்னணு கருவி பொருத்தப்பட்டுள்ளது. |
| சென்னை ஆவடியில் போலி தங்கக்கட்டிகள் பறிமுதல் Posted: 20 Jul 2013 10:27 PM PDT சென்னை ஆவடியில் போலி தங்கக் கட்டிகளை விற்க முயன்ற பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்த அவர்கள் இருவரும், ஆவடியில் அடகுக்கடை ஒன்றில் போலி தங்கக் கட்டிகளை விற்க பேரம் பேசியுள்ளனர். அவர்களை கைது செய்த ஆவடி காவல்துறையினர், 5 கிலோ போலி தங்கக்கட்டிகளையும் பறிமுதல் செய்துள்ளனர். |
| கடல் சீற்றத்தால் படகு கவிழ்ந்து விபத்து: சென்னை மீனவர் பலி Posted: 20 Jul 2013 10:24 PM PDT சென்னை அயோத்தி குப்பத்தைச் சேர்ந்த ராமலிங்கம் (53) என்பவர் மீன் பிடிக்கச் சென்ற போது கடல் சீற்றம் காரணமாக படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலியானார். ஞாயிறு அதிகாலை 4 மணிக்கு சக மீனவர்கள் ஐந்து பேருடன் மீன் பிடிக்கச் சென்ற போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் மேலும் ஒருவர் காயம் அடைந்துள்ளார். படகு கவிழ்ந்ததை அடுத்து சக மீனவர்கள் கடலில் தத்தளித்த நிலையில் படகை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். |
| ஒருநாள் போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வே சென்றது Posted: 20 Jul 2013 10:12 PM PDT ஒருநாள் போட்டியில் பங்கேற்பதற்காக, விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வே புறப்பட்டுச் சென்றது. ஜிம்பாப்வேயில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி, 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. வரும் 24ம் தேதி முதல் ஒருநாள் போட்டி தொடங்குகிறது. ஆகஸ்ட் 3ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் தோனி, அஸ்வின், புவனேஸ்குமார், உமேஷ் யாதவ் மற்றும் இஷாந்த் சர்மா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இளம் வீரரான கஷ்மீரைச் சேர்ந்த பந்துவீச்சாளர் பர்வேஸ் ரசூல், ஜெய்தேவ் உனட்கட் உள்ளிட்ட இளம் வீரர்கள் விராட்கோலி தலைமையிலான அணியில் இடம் பெற்றுள்ளனர். |
| கரூரில் மாநில அளவிலான ஜூடோ போட்டிகள் Posted: 20 Jul 2013 10:00 PM PDT கரூரில் தொடங்கிய மாநில அளவிலான சப் ஜூனியர் ஜூடோ போட்டியில் தமிழகம் முழுவதும் இருந்து 800க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். 11முதல் 15வயது வரையுள்ள வீரர்களின் எடை அடிப்படையில் போட்டிகள் நடைபெற்றன. இறுதிப்போட்டிகள் இன்று நடைபெற உள்ளன. இறுதிப்போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் ஆகஸ்ட் மாதம் மணிப்பூரில் நடைபெற உள்ள தேசிய ஜூடோ போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பினை பெறுவர். |
| You are subscribed to email updates from புதிய தலைமுறை To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |