Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


திருவனந்தபுரம் அருகே பிளஸ்–1 மாணவி கடத்தி கற்பழிப்பு: வாலிபர் கைது

Posted: 20 Jul 2013 11:02 PM PDT

திருவனந்தபுரம் அருகே உள்ள ஆராலுமூடு பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 23), கூலித்தொழிலாளி. கடந்த 17–ந்தேதி மாலை இவர், அருகில் உள்ள பாலராமபுரம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக பள்ளி சீருடை அணிந்த ஒரு மாணவி நடந்து சென்று கொண்டிருந்தார்

கோதாவரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு: 100–க்கும் மேற்பட்ட கிராமங்கல் மூழ்கியது

Posted: 20 Jul 2013 10:50 PM PDT

ஆந்திராவில் பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக தெலுங்கானா பகுதியில் உள்ள நிஜாமாபாத், கரீம்நகர், கம்மம், வரங்கல், கிழக்கு கோதாவரி, பிரகாசம், மெடக் ஆகிய 8 மாவட்டங்கள் வெள்ளத்தில் சிக்கி உள்ளது. இதில் கம்மம் மாவட்டத்தில்தான் வெள்ளப்பாதிப்பு அதிகமாக உள்ளது. கோதாவரி ஆற்றில் வரலாறு காணாத வகையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. 24 ஆண்டுகளுக்கு பிறகு இப்போதுதான் ஜூலை மாதம் பெரிய அளவில் மழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது எனக் கூறப்படுகிறது. ஆற்றில் 51.6 அடி உயரத்துக்கு தண்ணீர்

திருப்பதியில் சத்ராஸ்தாபன உற்சவம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

Posted: 20 Jul 2013 10:34 PM PDT

திருப்பதியில் வார விடுமுறையான நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. ஏழுமலையானை தரிசிக்க பக்தர்களுக்கு 16 மணி நேரம் ஆனது. இந்த நிலையில் திருமலையில் உள்ள நாராயணகிரியில் சத்ராஸ்தாபனம் உற்சவம் நேற்று நடைபெற்றது. மகாவிஷ்ணு மகாவை குண்டத்தில் இருந்து பூலோக வைகுண்டமான திருமலையில் கால்பாதித்த தினமே சத்ராஸ்தாபான

சோலார் பேனல் மோசடி: மாஜிஸ்திரேட்டிடம் சரிதா நாயர் ரகசிய வாக்குமூலம்

Posted: 20 Jul 2013 10:25 PM PDT

சூரிய ஒளி மூலம் மின்சாரம் பெறும் சோலார் பேனல் கருவி அமைத்து தருவதாக கேரளாவில் பலரிடம் கோடிக் கணக்கில் பணம் மோசடி நடந்தது. இதுதொடர்பாக தொழில் அதிபர் பிஜு ராதாகிருஷ்ணன், அவரது மனைவி சரிதா நாயர், கேரள டி.வி. நடிகை ஷாலுமேனன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த மோசடி கும்பலுக்கு கேரள அரசு அதிகாரிகளும்

கிராமப்புற பிரச்சனைகளை ஊடகங்கள் கவனிப்பதில்லை: அன்னா ஹசாரே

Posted: 20 Jul 2013 10:17 PM PDT

சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே நேற்று டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவர் ஊடகங்களின் செயல்பாடு குறித்து கருத்து தெரிவித்தார்.

ஒடிசாவில் ஆஸ்பத்திரியில் பிறந்த 9 குழந்தைகள் திடீர் சாவு: விசாரணைக்கு உத்தரவு

Posted: 20 Jul 2013 09:32 PM PDT

ஒடிசா மாநிலம் சம்பல்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள பிரசவ வார்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக பிறந்த குழந்தைகள் திடீர் என்று இறந்தன

பாதுகாப்பு பிரச்சினைகள் நீடிக்கும் டிரீம்லைனர் விமானங்கள்

Posted: 20 Jul 2013 09:06 PM PDT

பாட்டரி பிரச்சினைகளால் போயிங் நிறுவனத்தின் 50 ட்ரீம்லைனர் விமானங்கள் கடந்த ஜனவரியில் நிறுத்தப்பட்டன. இவை சரிசெய்யப்பட்டபின், இத்தகைய விமானங்கள் மே மாதத்தில் மீண்டும் பயன்பாட்டிற்கு வந்தன. தற்போது சென்ற வாரத்திலிருந்து மீண்டும் இந்த விமானங்களில் சிறுசிறு பிரச்சினைகள் வர ஆரம்பித்துள்ளன. சென்ற வாரம் லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எத்தியோப்பியன் விமான நிறுவனத்தைச் சேர்ந்த ட்ரீம்லைனர் விமானம் திடீரெனத் தீப்பிடித்துள்ளது. தரையிறக்கப்பட்டு சில மணி நேரங்கள் ஆன நிலையில் இந்த சம்பவம் நடந்ததால், பாதுகாப்பு

உயர்கல்வியில் 10 சதவீத மாணவர்கள் மட்டுமே அரசு மானியத்தை பயன்படுத்துகின்றனர்: ஜெய்ராம் ரமேஷ்

Posted: 20 Jul 2013 08:48 PM PDT

மத்திய கிராமப்புற மேம்பாட்டுத் துறை மந்திரி ஜெய்ராம் ரமேஷ் நேற்று ஜார்கண்ட் மாநிலம் சைய்பாசா நகரில் கோல்கன் பல்கலைக்கழகத்தின் முதல் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு பேசினார்.

சென்னை பயணிகளிடம் ஓடும் ரெயிலில் முகமூடி கொள்ளையர்கள் அட்டூழியம்

Posted: 20 Jul 2013 04:51 PM PDT

கடந்த வியாழக் கிழமை, சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து டெல்லிக்கு 'ஜி.டி. எக்ஸ்பிரஸ்' ரெயில் வழக்கம்போல் புறப்பட்டுச் சென்றது. உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால் அமைந்து உள்ள ஆக்ரா

சொத்து குவிப்பு புகார்: முலாயம் சிங்குக்கு எதிரான வழக்கை முடிக்க திட்டம்?- எதிர்கட்சிகள் குற்றச்சாட்டு

Posted: 20 Jul 2013 10:41 AM PDT

மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு முலாயம் சிங்கின் சமாஜ்வாடி கட்சி வெளியில் இருந்து ஆதரவு அளித்து வருகிறது. உணவு பாதுகாப்பு சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு சமாஜ்வாடி கட்சியின் ஆதரவு மிகமிக முக்கியமானதாக உள்ளது. இதனால் முலாயம் சிங் மீதான சொத்து குவிப்பு வழக்கை வெளிப்படையாக முடித்து வைக்கும் நிலையில் சி.பி.ஐ. செயல்படுவதாக எதிர்க்கட்சிகள்

பீகார் சம்பவம்: மதிய உணவில் பூச்சிக்கொல்லி இருந்தது தடயவியல் ஆய்வில் நிரூபணம்

Posted: 20 Jul 2013 09:27 AM PDT

பீகார் மாநிலம் சரன் மாவட்டத்தில் உள்ள தரம்சதி தொடக்கப்பள்ளியில் கடந்த சில தினங்களுக்கு முன் மதிய உணவு சாப்பிட்ட குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதில் 23 குழந்தைகள் உயிரிழந்தனர். 24 குழந்தைகள் மற்றும் பெண் சமையலர் ஆகியோர் பாட்னா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தரமற்ற மற்றும் விஷத்தன்மை

சுவிட்சர்லாந்து பெண் கற்பழிப்பு வழக்கில் 6 பேருக்கு ஆயுள் தண்டனை: மத்திய பிரதேச கோர்ட் தீர்ப்பு

Posted: 20 Jul 2013 08:13 AM PDT

இந்தியாவில் சைக்கிள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட சுவிட்சர்லாந்து நாட்டு பெண், கடந்த மார்ச் மாதம் 15-ம் தேதி மத்திய பிரதேசத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இது தொடர்பாக டாட்டியா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மார்ச் 26-ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். ஜாரியா கிராமத்தைச்

பஞ்சாயத்து தேர்தலில் மோதல்: திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. காயம்

Posted: 20 Jul 2013 06:46 AM PDT

மேற்கு வங்க மாநிலத்தில் ஜூலை 11-ம் தேதி தொடங்கி 5 கட்டங்களாக தேர்தலை நடத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதனால் நீண்ட இழுபறிக்குப் பிறகு பலத்த பாதுகாப்புடன் பஞ்சாயத்து தேர்தல் நடைபெற்று வருகிறது. இதுவரை 3 கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. தேர்தலையொட்டி பல்வேறு பகுதிகளில் வன்முறைச் சம்பவங்களும் தொடர்ந்து

சி.ஏ.ஜி நியமனத்தை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு

Posted: 20 Jul 2013 06:31 AM PDT

மத்திய கணக்கு தணிக்கை அதிகாரியாக (சி.ஏ.ஜி.) சசி காந்த் சர்மா நியமனம் செய்யப்பட்டு பதவியேற்றுள்ளார். இந்த நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபால் சாமி, முன்னாள் கடற்படை தளபதிகள் ஆர்.எச்.தகிலியானி, எல்.ராம்தாஸ், முன்னாள் மத்திய கணக்கு தணிக்கை துணை அதிகாரி பி.பி.மாத்தூர் உள்ளிட்ட 9 பேர் சுப்ரீம்

ஆடிட்டர் ரமேஷ் கொலையை விசாரிக்க சிறப்பு விசாரணைக்குழு அமைக்க வேண்டும்: பா.ஜனதா வலியுறுத்தல்

Posted: 20 Jul 2013 05:35 AM PDT

பா.ஜனதா கட்சியின் தமிழ் மாநில பொதுச் செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் நேற்று இரவு சேலத்தில் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்திற்கு பா.ஜனதா மூத்த தலைவர் வெங்கையா கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:- பா.ஜனதா தலைவர் ஆடிட்டர் ரமேஷ் கொலை தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு விசாரணைக்குழு அமைக்க வேண்டும். உண்மையான குற்றவாளிகளை

பீகார், ஒடிசாவைத் தொடர்ந்து சத்தீஷ்கரிலும் மதிய உணவு சாப்பிட்ட 35 குழந்தைகளுக்கு பாதிப்பு

Posted: 20 Jul 2013 05:18 AM PDT

பீகாரில் மதிய உணவு சாப்பிட்ட 23 குழந்தைகள் பலியான சோகம் நெஞ்சை விட்டு அகல்வதற்குள் ஒடிசா மாநிலம், தென்கனால் மாவட்டம், சய்ராவில் நேற்று மதிய உணவு சாப்பிட்ட லத்திகா பெஹேரா (11) என்பவர் தனக்கு அளிக்கப்பட்ட உணவில் ஒரு தேள் செத்துக் கிடப்பதை கண்டு ஆசிரியர்களிடம் கூறினார்.

பீகாரில் 23 மாணவர்களை பலி வாங்கிய பள்ளி அருகில் உள்ள பள்ளியுடன் இணைப்பு

Posted: 20 Jul 2013 04:33 AM PDT

பீகார் மாநிலம் சரன் மாவட்டத்தில் உள்ள தரம்சதி தொடக்கப்பள்ளியில் கடந்த வாரம் மதிய உணவு சாப்பிட்ட குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதில் 23 குழந்தைகள் உயிரிழந்தனர். பாட்னா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பெண் சமையலர் மற்றும் 24 குழந்தைகளின் உடல்நிலை

ராமர் கோவில் கட்ட பா.ஜனதா வசூலித்த நிதி எங்கே?: தேசியவாத காங்கிரஸ் கேள்வி

Posted: 20 Jul 2013 03:56 AM PDT

உத்தரகாண்ட் வெள்ள நிவாரணத்திற்கு பா.ஜ.க. தொண்டர்கள் நாடு முழுவதும் நிதி வசூலித்து வருகின்றனர். இந்நிலையில், கோவா மாநில தலைநகர் பனாஜியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தேசியவாத காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் டிரஜானோ டி'மெல்லோ இந்த நிதி வசூலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றதிற்கு முன்கூட்டியே தேர்தல் வர வாய்ப்பு: வெங்கையா நாயுடு

Posted: 20 Jul 2013 03:38 AM PDT

பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், ஒருங்கிணைந்த பிரச்சார பயணக்குழு தலைவருமான வெங்கையா நாயுடு இன்று ஐதராபாத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:- காங்கிரஸ் கட்சி ஒவ்வொரு நாளும் இழப்பை சந்தித்து வருவதால் பாராளுமன்றத்திற்கு

காங்கிரஸ் கட்சியில் நம்பகமான முகம் இல்லை: உத்தவ் தாக்கரே

Posted: 20 Jul 2013 03:19 AM PDT

சிவ சேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-நான் அனைத்துக் கட்சிகளையும் கூறவில்லை, காங்கிரஸ் கட்சியில் நம்பத் தகுந்த முகம் இல்லை. காங்கிரஸ் அரசில் மக்கள் பணவீக்கத்தாலும் ஊழலாலும் துவண்டு போய் உள்ளனர். சாதாரண மக்கள் வாழ்க்கை


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™