Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


பீகார் சம்பவம்: மதிய உணவில் பூச்சிக்கொல்லி இருந்தது தடயவியல் ஆய்வில் நிரூபணம்

Posted: 20 Jul 2013 08:26 PM PDT

பீகார் மாநிலம் சரன் மாவட்டத்தில் உள்ள தரம்சதி தொடக்கப்பள்ளியில் கடந்த சில தினங்களுக்கு முன் மதிய உணவு சாப்பிட்ட குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதில் 23 குழந்தைகள் உயிரிழந்தனர். 24 குழந்தைகள் மற்றும் பெண் சமையலர் ஆகியோர் பாட்னா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தரமற்ற மற்றும் விஷத்தன்மை கொண்ட உணவை வழங்கியதால் குழந்தைகள் இறந்ததாக பீகார் அரசு உறுதி செய்தது. இந்நிலையில் பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கிய மதிய உணவு மற்றும் சமையலுக்கு பயன்படுத்தப்பட்ட எண்ணை [...]

சென்னையில் மழை நீடிக்கும் என்று வானிலை மையம் தகவல்

Posted: 20 Jul 2013 08:24 PM PDT

தென்மேற்கு பருவமழை மற்றும் வெப்ப சலனம் காரணமாக கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை 8.30 மணி அளவிலான மழை அளவு பதிவுகளின் படி, தமிழ்நாட்டில் அதிகபட்சமாக, நீலகிரி மாவட்டம் நடுவட்டம் பகுதியில் 9 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. இந்த நிலையில் சென்னையில் சென்னை சென்டிரல், எழும்பூர் பகுதிகள், தாம்பரம் மற்றும் பல்லாவரம் பகுதிகள், பெரம்பூர் மற்றும் அயனாவரம் பகுதிகள், பூந்தமல்லி மற்றும் மதுரவாயல் பகுதிகள், வேளச்சேரி மற்றும் தரமணி [...]

போட்டியில் இருந்து ஒதுங்குகிறார் டக்ளஸ்? – குறுக்குவழியில் முதல்வராக முயற்சி

Posted: 20 Jul 2013 08:22 PM PDT

வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளராக, முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் களமிறக்கப்பட்டுள்ள நிலையில், வடக்கு முதல்வர் பதவிக் கனவுடன் இருந்த ஈபிடிபி பொதுச்செயலர் டக்ளஸ் தேவானந்தா தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து ஒதுங்க முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவதாயின், டக்ளஸ் தேவானந்தா தற்போது வகித்து வரும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி மற்றும் அமைச்சர் பதவிகளைத் துறக்க வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் சி.வி.விக்னேஸ்வரன் களமிறக்கப்பட்டுள்ள நிலையில், முதல்வர் பதவியைக் கைப்பற்றும் [...]

எயிட்ஸ் நோய் காரணமாக இந்த ஆண்டின் முதல் அரையாண்டு பகுதியில் சுமார் 16 பேர் உயிரிழப்பு

Posted: 20 Jul 2013 08:19 PM PDT

இலங்கையில் தீவிரமாக பரவத் தொடங்கியிருக்கும் எயிட்ஸ் நோய் காரணமாக இந்த ஆண்டின் முதல் அரையாண்டு பகுதியில் சுமார் 16 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தம் மற்றும் வெளிநாட்டு தொண்டு நிறுவனங்களின் படையெடுப்பு என்பன காரணமாக அண்மைக்காலங்களில் எயிட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிக்கத தொடங்கியுள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டின் முதல் 6 மாத காலப் பகுதியில் நாட்டில் 16 பேர் எயிட்ஸ் நோயினால் உயிரிழந்துள்ளதாக எச்.ஐ.வி. மற்றும் எயிட்ஸ் [...]

தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக சந்திரிக்கா குமாரதுங்கவை களம் இறக்கும் முயற்சி

Posted: 20 Jul 2013 08:17 PM PDT

எதிர்வரும் வடமேல் மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவை களம் இறக்கும் முயற்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுவதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவர் சரத் பொன்சேகாவே அதற்கான முயற்சிகளை முன்னெடுத்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவுடன் இணைந்து தான் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாக அண்மையில் அவர் பகிரங்கமாக அறிவித்திருந்தார். இதன் பின்புலத்தில் தற்போது வடமேல் மாகாண சபைத் தேர்தலில் பொன்சேகா கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக [...]

தமிழ் மக்களை விற்று அரசியல் செய்வதே சம்பந்தனின் தேவை – மீள்குடியேற்ற அமைச்சர்

Posted: 20 Jul 2013 08:15 PM PDT

தமிழ் மக்களை விற்று அரசியல் செய்வதே சம்பந்தனின் தேவை என மீள்குடியேற்ற அமைச்சர் குணரத்ன வீரகோன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பது சம்பந்தனின் தேவை இல்லை என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். 2006ம் ஆண்டு இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் வாழ்ந்த சம்பூர் – கூனித்தீவைச் சேர்ந்த 89 குடும்பங்களை மூதுார் பிரதேச செயலாளர் என்.பிரதீபன் தலைமையில் நேற்று சனிக்கிழமை மீள்குடியேற்றம் செய்யும் நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்நிகழ்வில் மீள்குடியேற்ற அமைச்சர் குணரத்ன வீரகோன் [...]

கலகம் செய்த அகதிகளை ஆஸி. பொலிஸ் அடக்கினர்

Posted: 20 Jul 2013 08:13 PM PDT

பசிஃபிக் தீவுத் தேசமான நவ்றுவில் அவுஸ்திரேலியா நடத்தும் தஞ்க் கோரிக்கையாளர் தடுப்பு முகாமில் கலவரம் வெடித்ததை அடுத்து அங்கு பொலிசார் தலையிட்டு ஒழுங்கை ஏற்படுத்தினர்.   வெள்ளிக்கிழமையன்று அம்முகாமின் கட்டிடங்கள் பலவற்றுக்கு தீ வைக்கப்பட்டதகாகவும், முகாமின் மருத்துவ மையம் அழிக்கப்பட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.   தஞ்சக் கோரிக்கையாளர்கள் 150 பேர் இந்தக் கலவரத்தில் ஈடுபட்டதாக அவுஸ்திரேலிய குடிவரவு அதிகாரிகள் கூறுகின்றனர்.   படகில் அவுஸ்திரேலியாவுக்கு வர முற்படும் தஞ்சக் கோரிக்கையாளர்களைத் தடுப்பதற்கான கடுமையான புதிய நடவடிக்கைகள் பற்றி [...]

சிவகாசியில் கள்ள நோட்டு தருவதாக மோசடி: 10 பேர் கைது

Posted: 20 Jul 2013 08:11 PM PDT

விருதுநகர் மாவட்டம் சிவகாசி-திருத்தங்கல் ரோட்டில் உள்ள ஒரு ஓட்டல் அருகில் நிறுத்திவைத்திருந்த ஒரு வாகனத்தை போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அந்த வாகனத்தில் இருந்த 5 பேர் சிவகாசிக்கு பட்டாசு வாங்க வந்திருப்பதாக தெரிவித்தனர். அதிகாலை நேரத்தில் பட்டாசு வாங்க வந்ததாக கூறியது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து அந்த வாகனத்தில் இருந்து 5 பேரையும் பிடித்து தனித்தனியாக விசாரித்தனர். அந்த வாகனத்தை சோதனை செய்ததில் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த [...]

சர்வதேச டென்னிஸ் போட்டி: திவிஜ்–ராஜா ஜோடி அரை இறுதிக்கு தகுதி

Posted: 20 Jul 2013 08:09 PM PDT

ஏ.டி.பி.கிளாரோ ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி கொலம்பியா நாட்டில் உள்ள போகோடாவில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் இரட்டையர் பிரிவில் கால் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் திவிஜ் ஷரன்–புராவ் ராஜா ஜோடி, நிகோலஸ் மன்ரே (அமெரிக்கா)–வாசெக் பொஸ்பிஸ் (கனடா) ஜோடியை எதிர்கொண்டது. இதில் திவிஜ் ஷரன்–புராவ் ராஜா ஜோடி 3–6, 6–3, 10–6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது

தெற்காசிய கால்பந்து போட்டி: இந்தியா–இலங்கை இன்று மோதல்

Posted: 20 Jul 2013 08:08 PM PDT

16 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான தெற்காசிய கால்பந்து போட்டி நேபாள தலைநகர் காட்மாண்டுவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் 30–ந் தேதி வரை நடக்கிறது. இதில் கலந்து கொள்ளும் அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான், நேபாளம், பூடான் ஆகிய அணிகளும், 'பி' பிரிவில் இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் அணியில் உள்ள மற்ற அணியுடன் தலா ஒரு முறை லீக் ஆட்டத்தில் மோத வேண்டும். [...]


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™