puthiyathalaimurai.tv online |
- கூடங்குளம் அணுஉலை தேவை இல்லை: சென்னையில் வைகோ பேட்டி
- கரூரில் மருந்தாளுநர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
- குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க இன்று தடை நீக்கம்
- தமிழில் வாதிட அனுமதி மறுப்பு: மதுரையில் வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்ற புறக்கணிப்பு
- தஞ்சாவூரில் கார் மோதி மாணவி பலி
- உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக ப.சதாசிவம் பதவியேற்பு
- நீலகிரி மாவட்டத்தில் மழையால் சாலை சேதம்: வாகன ஓட்டிகள் அவதி
- வேலூர் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த முதியவர் கைது
- தாமிரபரணி நீரைத் திறக்க தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் கோரிக்கை
- பிரச்னையை தீர்க்கும் இடத்திலேயே பிரச்னையாக உள்ள காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகம்
| கூடங்குளம் அணுஉலை தேவை இல்லை: சென்னையில் வைகோ பேட்டி Posted: 18 Jul 2013 10:56 PM PDT கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பில் ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ பேசினார். அப்போது அவர் தமிழகத்திற்கு கூடங்குளம் அணுஉலை தேவை இல்லை என்றார். பல ஆபத்துகள் நிறைந்த கூடங்குளத்தால் தமிழகத்தின் மின் தேவை முற்றிலுமாக பூர்த்தியாகி விடாது என்றார். ஆபத்துகள் நிறைந்த கூடங்குளம் அணுஉலை மாநிலத்தின் மின் தேவையை பூர்த்தி செய்து விடும் என்ற மாயை மத்திய மாநில அரசுகள் ஏற்படுத்தி வருகின்றன கூடங்குளத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் இருந்து தமிழகத்திற்கு வெறும் 190 மெ.வா மின்சாரமே கிடைக்கும் என சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய வைகோ தெரிவித்தார். கூடங்குளத்தில் 600 மெ.வா மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டாலும் அதில் 75 மெ.வா கூடங்குளம் அணுஉலையிலே செலவிடப்பட்டு விடும். மீதமுள்ள 525 மெ.வா மின்சாரத்தில் 45% அதாதவது 236 மெ.வா மின்சாரம் மட்டுமே தமிழகத்திற்கு வழங்கப்படும். அதிலும் மின்சாரத்தை டிரான்ஸ்மிட் செய்யும் போது ஏற்படும் இழப்பிற்குப் பிறகு வெறும் 190 மெ.வா மின்சாரம் மட்டுமே தமிழகத்திற்கு கிடைக்கும். எனவே கூடங்குளம் மின்சாரம் தமிழகத்தின் மின்தேவையை பூர்த்தி செய்யும் என்பது மாயை என்றும் வைகோ கூறினார். பல ஆபத்துக்களை கடந்த வெறும் 190 மெ.வா மின்சாரம் மட்டும் பெறுவதில் என்ன லாபம் என்று வைகோ கேள்வி எழுப்பினார். மேலும் கூடங்குளம் அணுஉலையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் கடலில் கலக்கப்பட்டால் கடல் வாழ் உயரினங்களும் பவளப்பாறைகளும் அழியும். மேலும் அணுக்கழிவுகளை எங்கே கொட்டப்போகிறார்கள் என்று மத்திய அரசு இன்னும் தெளிவுபடுத்தவில்லை என்று குற்றஞ்சாட்டினார். |
| கரூரில் மருந்தாளுநர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் Posted: 18 Jul 2013 10:24 PM PDT கரூரில், 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவமனை மருந்தாளுநர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் திருவண்ணாமலை, ஆண்டிப்பட்டியிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 600-க்கும் அதிகமான மருந்தாளுநர் பணியிடங்களை நிரப்பு வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை அனைத்து மருந்தாளுநர்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க இன்று தடை நீக்கம் Posted: 18 Jul 2013 10:20 PM PDT குற்றாலத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அங்கு அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது. கனமழையால் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து சுற்றுலாப் பயணிகள் குளிக்க நேற்று தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று தடை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. |
| தமிழில் வாதிட அனுமதி மறுப்பு: மதுரையில் வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்ற புறக்கணிப்பு Posted: 18 Jul 2013 10:13 PM PDT தமிழில் வாதாட அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து மதுரை வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்றத்தை புறக்கணிக்கின்றனர். சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தமிழில் வாதாடிய வழக்கறிஞர் பகத்சிங் என்பவரின் 2 வழக்குகள் 11-ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டன. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி தமிழில் வாதாட அனுமதிக்க முடியாது என நீதிபதி மணிக்குமார் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவர் தள்ளுபடி செய்த 2 மனுக்களும் மீண்டும் அவரது அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வருகிறது. |
| தஞ்சாவூரில் கார் மோதி மாணவி பலி Posted: 18 Jul 2013 10:09 PM PDT தஞ்சாவூரில் தாறுமாறாக ஓடிய கார் மோதி கல்லூரி மாணவி ஒருவர் பலியானார். பிரபாகரன் என்பவர் குடிபோதையில் காரை தாறுமாறாக ஓட்டியுள்ளார். இந்த கார் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரிக்கு சென்ற மாணவிகள் மீது மோதியது. இதில் புஷ்பவ்லலி என்ற மாணவி அதே இடத்தில் உயிரிழந்தார். படுகாயம் அடைந்த மற்றொரு மாணவி ஜெயந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். போலீசார் பிரபாகரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர், |
| உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக ப.சதாசிவம் பதவியேற்பு Posted: 18 Jul 2013 09:33 PM PDT உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ப.சதாசிவம் பதவியேற்றார் .அவருக்கு குடியரசுத் தலைவர் பிரணப் முகர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். உச்சநீதிமன்றத்தின் 40வது தலைமை நீதிபதியாக சதாசிவம் பதவியேற்றார்.2014ம் ஆண்டு ஏப்ரல் 26ம் தேதி வரை அவர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்றுகிறார். |
| நீலகிரி மாவட்டத்தில் மழையால் சாலை சேதம்: வாகன ஓட்டிகள் அவதி Posted: 18 Jul 2013 08:04 PM PDT நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையினால் உதகை – மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கக்கநல்லாவில் சாலை சேதம் அடைந்துள்ளது. சாலையில் ஏற்கனவே உள்ள பள்ளங்களில் மழை நீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது. இதன் காரணமாக வாகனங்கள் சென்று வருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. தமிழகம், கர்நாடகம் மற்றும் கேரளாவை இணைக்கக் கூடிய இந்த முக்கிய சாலையை உடனே சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர். |
| வேலூர் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த முதியவர் கைது Posted: 18 Jul 2013 08:02 PM PDT வேலூர் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த முதியவர் கைது. வேலூர் மாவட்டம் சு.பள்ளிப்பட்டு அருகே மாற்றுத் திறனாளி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த முதியவர் கைது செய்யப்பட்டார். வீட்டில் இருந்த அந்த பெண்ணை, குடிபோதையில் இருந்த 60 வயது முதியவரான பழனி என்பவர் 4 நாட்களுக்கு முன்பு, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கினார். இதுகுறித்து, பெண்ணின் தாயார் கொடுத்த புகாரின் பேரில், பழனியை போலீசார் கைது செய்தனர். |
| தாமிரபரணி நீரைத் திறக்க தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் கோரிக்கை Posted: 18 Jul 2013 07:47 PM PDT தாமிரபரணியில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுமாறு தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் மருதூர், ஸ்ரீவைகுண்டம் அணைகள் மூலம் சுமார் 66 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. நெல்லை மாவட்டத்தில் கார் சாகுபடிக்காக பல்வேறு அணைகள் கடந்த மாதமே திறக்கப்பட்டு விட்ட நிலையில், தூத்துக்குடி மாவட்ட அணைகள் இன்னும் திறக்கப்படவில்லை. இதனால் தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் அதிருப்தியடைந்துள்ளனர். தண்ணீர் திறக்கப்படாததைக் கண்டித்து கோரம்பள்ளம் பகுதியில் சுவரொட்டிகளை ஒட்டியுள்ள விவசாயிகள், இனியும் தாமதித்தால் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக எச்சரித்துள்ளனர். |
| பிரச்னையை தீர்க்கும் இடத்திலேயே பிரச்னையாக உள்ள காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகம் Posted: 18 Jul 2013 07:41 PM PDT அடிப்படை வசதிகள் இல்லை என்று கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்றால்… அங்கும் எவ்வித அடிப்படை வசதிகள் இல்லை என்றால் யாரிடம் சொல்வது… அப்படித்தான் இருக்கிறது இவர்களது நிலைமை. பிரச்னையை தீர்க்கும் இடத்திலேயே பிரச்னை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகம்… மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெறும் ஒவ்வொரு திங்கட்கிழமையும் தாம்பரம், பல்லாவரம், கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு, மதுராந்தகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏறத்தாழ 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இங்கு வந்து செல்வதுண்டு… ஆனால், இவர்களுக்கு எந்தவித அடிப்படை வசதியும் இல்லை என்ற குற்றச்சாட்டு வலுத்துள்ளது. தடைய மீறி போதைப்பொருள் விற்பனை மண்டிக்கிடக்கும் முட்புதர்கள், விஷப்பூச்சிகளின் புகலிடமாகவும் திகழ்ந்து வருவதாகக் கூறும் இப்பகுதியினர், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சில கடைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலை, குட்கா போன்றவை விற்பனை செய்யப்படுவதாகவும் புகார் தெரிவிக்கின்றனர். இந்த நிலை மாற மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர் இங்கு மனு கொடுக்க வருபவர்கள். |
| You are subscribed to email updates from புதிய தலைமுறை To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |