Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடிக்கு ஹேமமாலினி ஆதரவு

Posted: 18 Jul 2013 11:06 PM PDT

பாராளுமன்றத் தேர்தலை எதிர் கொள்ள காங்கிரஸ், பாரதீய ஜனதா இரு கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. பா.ஜ.க.வில் பிரசார பொறுப்பை குஜராத் முதல்– மந்திரி நரேந்திர மோடியிடம் ஒப்படைத்துள்ளனர். அவர் பிரசாரத்தை புதுமையான முறையில் செயல்படுத்த 12 குழுக்களை அமைக்க திட்டமிட்டுள்ளார். தேர்தலில் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை முன்நிறுத்த பா.ஜ.க. மூத்த தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

ஆந்திராவில் நர்சிங் மாணவி கடத்தி கற்பழிப்பு

Posted: 18 Jul 2013 10:58 PM PDT

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள தர்சி எனும் கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண் கர்னூல் புறநகர் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் நர்சிங் படிப்பு படித்து வந்தார். 20 வயதான அவரை நர்சிங் இறுதியாண்டு தேர்வில் ஒரு பாடத்தில் மட்டும் தேர்ச்சிப் பெறவில்லை. தோல்வி அடைந்த பாடத்தை மீண்டும் எழுதுவதற்கு விண்ணப்பிக்க அந்த மாணவி நேற்று முன்தினம் கர்னூல் சென்றார். நந்தியால் சாலையில் உள்ள கல்லூரிக்கு சென்று விண்ணப்பம் எழுதி கொடுத்தார்.

ஏர் இந்தியா: விடுமுறையில் சென்று பணிக்கு திரும்பாத 400 விமானப் பணிப்பெண்கள்

Posted: 18 Jul 2013 10:42 PM PDT

ஏர் இந்திய விமான நிறுவனத்தில் வேலைவாய்ப்பினைப் பெறுவதற்காக பெண்கள் கனவுகளுடன் காத்திருந்த காலம் உண்டு ஆனால் தற்போது இந்த நிறுவனத்தில் தொடர்ந்து இருந்துவரும் நிர்வாகச் சீர்கேடுகளால் நிலை தலைகீழாக மாறிவிட்டது. இந்த நிறுவனத்தின் விமான பணிப்பெண்களின் எண்ணிக்கை 3600ஆக இருந்தது. தற்போது, இதில் நீண்டநாள் விடுமுறையில் சென்ற 400

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக ப. சதாசிவம் பதவி ஏற்றார்

Posted: 18 Jul 2013 09:45 PM PDT

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்த அல்டமாஸ் கபீர் நேற்று ஓய்வு பெற்றார். அவருக்குப் பதிலாக தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி ப.சதாசிவம் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

ஒடிசாவில் தேடுதல் வேட்டை: 3 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

Posted: 18 Jul 2013 08:39 PM PDT

இந்தியாவின் வடமாநிலங்களில் நக்சலைட்டுகளின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. நக்சலைட்டுகள் போலீசார் மீதும் பொது மக்கள் மீதும் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். தலைமறைவாக வாழ்ந்து வரும் அவர்களைத் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள்.

உத்தரகாண்டில் பாதிக்கப்பட்ட மக்களை குடியேற்ற வன நிலங்கள் ஒதுக்கப்படும்:ஜெயந்தி நடராஜன் தகவல்

Posted: 18 Jul 2013 07:57 PM PDT

உத்தரகாண்டில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை குடியேற்ற வன நிலங்கள் ஒதுக்கப்படும் என்று மத்திய மந்திரி ஜெயந்தி நடராஜன் கூறினார். மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல்துறை மந்திரி ஜெயந்தி நடராஜன், வெள்ள பேரழிவால் பாதிக்கப்பட்ட உத்தரகாண்ட் மாநிலத்துக்கு சென்றார். அங்கு வெள்ளத்தால் சேதம் அடைந்த உள்கட்டமைப்பு வசதிகளை சீரமைப்பது குறித்து முதல்–மந்திரி விஜய் பகுகுணா, மாநில மந்திரிகள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஜெயந்தி நடராஜன் ஆலோசனை

தந்தை - வளர்ப்பு தாயால் சித்ரவதை செய்யப்பட்ட 5 வயது சிறுவன் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்

Posted: 18 Jul 2013 04:43 PM PDT

கேரள மாநிலம் செங்காராவைச் சேர்ந்தவர் ஷெரீப் (வயது 27). ஐஸ்கிரீம் வியாபாரி. இவருடைய முதல் மனைவி மூலமாக ஷபீன் (7), ஷபீக் (5) என்ற 2 மகன்கள் உள்ளனர். முதல் மனைவி பிரிந்து சென்ற பிறகு, அலீஷா (26) என்ற பெண்ணை ஷெரீப்

சூரிய மின்சக்தி ஊழல் வழக்கு: கேரள அரசு அதிகாரி போலீசில் சரண்

Posted: 18 Jul 2013 04:24 PM PDT

கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சூரிய மின்சக்தி ஊழல் வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளவர், பெரோஸ். மாநில அரசின் செய்தி, மக்கள் தொடர்பு துறையின் இயக்குனராக பணியாற்றியவர். இந்த ஊழலில் சிக்கியதும் சஸ்பெண்டு செய்யப்பட்டார்

காக்பிட் பகுதியில் நடிகையை அனுமதித்த விவகாரம்: ஏர் இந்தியா விமானிகள் சஸ்பெண்ட்

Posted: 18 Jul 2013 08:41 AM PDT

பெங்களூரில் இருந்து ஐதராபாத்துக்கு கடந்த மாதம் ஏர் இந்தியா பயணிகள் விமானம் வந்தது. விமானத்தை ஓட்டிய பைலட்டுகள் ஜெகன் எம்.ரெட்டி, எஸ்.கிரன் ஆகியோர், தங்களுடன் பிரபல நடிகை நித்யா மேனனை காக்பிட்டில் அமர வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பாராளுமன்றத் தேர்தல்: பா.ஜனதாவில் 15 பிரச்சாரக் குழுக்கள் தயார்

Posted: 18 Jul 2013 08:10 AM PDT

பா.ஜனதா கட்சியின் பாராளுமன்ற குழுக் கூட்டம் இன்று டெல்லியில் நடந்தது. இதில், பிரசாரக்குழு தலைவர் நரேந்திர மோடி உள்ளிட்ட 12 மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்கான குழுக்களை அமைப்பது பற்றி விவாதித்தனர்.

காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்: 2 போலீஸ்காரர்கள் சுட்டுக்கொலை-பிரபல இதயநோய் நிபுணர் படுகாயம்

Posted: 18 Jul 2013 06:49 AM PDT

காஷ்மீர் மாநிலம் சோராவில் உள்ள ஷேர்-இ-காஷ்மீர் மருத்துவ அறிவியல் மையத்தின் முன்னாள் இயக்குனரும், பிரபல இருதயநோய் நிபுணருமான டாக்டர் ஷேக் ஜலால் (வயது 64), ஸ்ரீநகர் அருகே உள்ள பாம்பூரில் வசித்து வருகிறார்.

ஜார்க்கண்ட் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு: முதல்வர் ஹேமந்த் சோரன் வெற்றி

Posted: 18 Jul 2013 06:12 AM PDT

ஜார்கண்ட் மாநிலத்தில் பாரதீய ஜனதா அரசுக்கு அளித்து வந்த ஆதரவை சிபு சோரனின் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா வாபஸ் பெற்றதால், அரசு கவிழ்ந்து ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. 6 மாத ஜனாதிபதி ஆட்சிக் காலம் முடியும் தருவாயில், காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம்

உணவில் விஷம் கலந்ததே குழந்தைகள் மரணத்திற்கு காரணம்: டாக்டர்கள் உறுதி

Posted: 18 Jul 2013 05:33 AM PDT

பீகார் மாநிலம் சரன் மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட குழந்தைகள் 23 பேர் உயிரிழந்தது நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அந்த உணவின் மாதிரியை எடுத்து ஆய்வுக்காக கொண்டு சென்றனர்.

காஷ்மீரில் எல்லை பாதுகாப்பு படை துப்பாக்கி சூடு: விசாரணைக்கு உத்தரவு

Posted: 18 Jul 2013 04:47 AM PDT

ஜம்மு காஷ்மீரில் நேற்று இரவு எல்லைப் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டை நடத்தினார்கள். அப்போது ராம்பானில் உள்ள மசூதிக்குள் நுழைந்து சோதனை செய்தபோது, அங்கிருந்த இமானுடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது இமானை பாதுகாப்பு படையினர் தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டது. இமான் தாக்கப்பட்டதாகக் கூறி ஜம்மு காஷ்மீர்

பீகார் சம்பவம் எதிரொலி: மதிய உணவு கண்காணிப்பு குழு அமைக்க மத்திய அரசு முடிவு

Posted: 18 Jul 2013 04:12 AM PDT

பீகார் மாநிலம் சரன் மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் கடந்த செவ்வாய்க்கிழமை மதிய உணவு சாப்பிட்ட குழந்தைகள் வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதில் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தனர். மேலும் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல் மதுபானி, டெல்லி மற்றும் நெய்வேலி ஆகிய இடங்களிலும் மதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது.

இமாலய மலைப்பகுதிகளில் நில நடுக்கம் ஏற்படும்: ஆய்வில் தகவல்

Posted: 18 Jul 2013 03:34 AM PDT

இமயமலையின் பல பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்படக் கூடிய வாய்ப்பு உள்ளதாக தேசிய ஜியோபிசிகல் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது. உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள குமாவோன் கர்வால் பகுதியில் நில அதிர்வினை பதிவு செய்து ஆராய்ந்ததன் மூலம் இது தெரிய வந்துள்ளது என்று இந்த நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி ஷியாம் ராய் தெரிவித்தார்.

மாணவிகளுக்கு பிரசவ கால விடுமுறை: கோழிக்கோடு பல்கலைக்கழகம் அறிவிப்பு

Posted: 18 Jul 2013 01:52 AM PDT

கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு நீண்டகால பிரசவ விடுமுறையை அனுமதித்து கோழிக்கோடு பல்கலைக்கழகம் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. இதன்மூலம் அந்த மாணவிகள் தங்களின் கல்வி ஆண்டு தடைப்படாமல் தொடர்ந்து தேர்வு எழுதலாம் என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இதுபோன்ற வசதியினை மாணவிகளுக்கு ஏற்படுத்தித் தரும் முதல் இந்தியப் பல்கலைக்கழகம் என்ற பெயரினையும் இந்த பல்கலைக்கழகம் பெற்றுள்ளது. இந்தத்திட்டத்தின் மூலம், பிரசவத்திற்காக விடுமுறையில் செல்லும் மாணவிகள் மீண்டும் வரும்போது தொடர்ந்து அந்த

காஷ்மீர்: எல்லைப் பாதுகாப்பு படை முகாம் முற்றுகை - துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலி

Posted: 18 Jul 2013 01:14 AM PDT

எல்லைப் பாதுகாப்புப் படையினர் நேற்று இரவு தேடுதல் வேட்டை நடத்தினார்கள். அப்போது மசூதிக்குள் அத்து மீறி நுழைந்து அங்கிருந்த இமான் மீது தாக்குதல் நடத்தியதாக உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டினர். இதனால் ஆத்திரமடைந்த மக்கள் அந்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரம்பானில் எல்லைப் பாதுகாப்புப் படை முகாமை முற்றுகையிட்டனர்.

மருத்துவ படிப்புக்கு நாடுமுழுவதும் ஒரே நுழைவு தேர்வு கிடையாது: சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

Posted: 18 Jul 2013 01:07 AM PDT

நாடுமுழுவதும் மருத்துவ படிப்புகளில் மாணவர்களை சேர்க்க ஒரே நுழைவு தேர்வை நடத்த மத்திய அரசு முடிவு செய்தது. மத்திய அரசின் இந்த தேசிய நுழைவு தேர்வு (என்.இ.இ.டி) முறையை எதிர்த்து தமிழக அரசு உள்பட 115 பேர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி அல்டாமஸ் கபீர், விக்ரம் ஜித் சென், அனில்கவே ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று விசாரித்தது.

ஆசிட் வீச்சில் பாதிக்கப்படுவோருக்கு ரூ. 3 லட்சம் நஷ்டஈடு: சுப்ரீம்கோர்ட்டு உத்தரவு

Posted: 18 Jul 2013 12:33 AM PDT

ஆசிட் வீச்சால் பாதிக்கப்படுவர்களுக்கு மாநில அரசுகள் ரூ. 3 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. மேலும் 18 வயதுக்கு மேற்பட்டவரே ஆசிட் விற்க வேண்டும் என்றும், அமிலம் வாங்குவோர் தங்களது புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை நகல் விற்பனையாளரிடம் கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஆசிட் வீச்சில் ஈடுபட்டு கைதானவர்களுக்கு


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™