Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





puthiyathalaimurai.tv online

puthiyathalaimurai.tv online


மன்னார்குடியில் குப்பைக்கிடங்கை மாற்றக்கோரி பொதுமக்கள் போராட்டம்

Posted: 15 Jul 2013 11:04 PM PDT


மன்னார்குடியில் உள்ள நகராட்சி குப்பைக் கிடங்கை வேறு இடத்துக்கு மாற்றக் கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த குப்பைக் கிடங்கில் அடிக்கடி தீப்பற்றி எரிவதாகவும், அதனால் புகை மண்டலம் ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். எனவே குப்பைக் கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போடி அருகே துப்பாக்கித் தோட்டா வைத்திருந்தவர் கைது

Posted: 15 Jul 2013 10:59 PM PDT


போடி அருகே துப்பாக்கித் தோட்டாக்கள் வைத்திருந்த இளைஞர் கைது செய்யப்பட்டார். தேனி மாவட்டம் போடி-குரங்கனி நெடுஞ்சாலையில் போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தோட்டாக்களுடன் சென்ற சூலப்புரம் கிராமத்தைச் சேர்ந்த சந்திரன் கைது செய்யப்பட்டார். அவர் பதுக்கிவைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

புதுக்கோட்டை அருகே ஆட்டோ கவிழ்ந்து விபத்து

Posted: 15 Jul 2013 10:54 PM PDT


புதுக்கோட்டை அருகே ஆட்டோ கவிழந்து விபத்துக்குள்ளானது. இதில் ஒருவர் பலியானார். கெண்டையன்பட்டி என்ற இடத்தில் இந்த விபத்து நிகழந்தது. இந்த விபத்தில் 15 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் புதுக்கோட்டை அரசு மருத்துவமனயில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தேனி மாவட்டத்தில் வீணாகும் குடிநீர்

Posted: 15 Jul 2013 10:46 PM PDT


தேனி மாவட்டம் குமுளி மலையடிவாரத்தில் குடிநீர் விநியோகம் செய்யும் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் தண்ணீர் வீணாகிறது. லோயர் கேம்ப் பகுதியில் இருந்து கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யும் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டது. 10 நாட்கள் ஆகியும் அதிகாரிகள் அதை சரிசெய்யவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் தண்ணீர் வீணாவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.        

சென்னையில் கருணாநிதி தலைமையில் டெசோ கூட்டம்

Posted: 15 Jul 2013 10:43 PM PDT


சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க., தலைவர் கருணாநிதி தலைமையில் டெசோ கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் கூட்டத்தில் திமுக பொருளாளர் ஸ்டாலின், கி.வீரமணி, சுப வீரபாண்டி, ரவிக்குமார், சுபஸ்ரீ ஜெகதீசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். இலங்கை அரசு 13வது சட்டத் திருத்த மசோதாவில் மேலும் மாற்றம் செய்ய இருப்பது குறித்து ஆலோசிக்கப்படுவதாக தெரிகிறது. கடந்த ஏப்ரல் மாதம் நடந்த டெசோ கூட்டத்தில், கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடைர தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஈரோட்டில் டாஸ்மாக் கடையில் ரெளடி ஒருவர் கொலை

Posted: 15 Jul 2013 10:38 PM PDT


ஈரோட்டில் டாஸ்மாக் கடையில்  பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்த ஒரு கும்பல் அங்கு மது குடித்துக் கொண்டிருந்த வெங்கடேஷ் என்பவரை கத்தியால் குத்தியது. இதைத் தடுக்க முயன்ற வெங்கடேஷின் நண்பரையும், அந்த கும்பல் தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வெங்கடேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

நிலத்தடி நீரில் பெட்ரோல்: தண்டையார்பேட்டையில் அதிகாரிகள் ஆய்வு

Posted: 15 Jul 2013 10:23 PM PDT


சென்னை தண்டையார்பேட்டையில் நிலத்தடி நீரில் பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்கள் கலந்துள்ளதாக புதிய தலைமுறையில் செய்தி வெளியிடப்பட்டது. இதனையடுத்து நேற்று எண்ணெய் நிறுவன அதிகாரிகளும், மத்திய மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகளும், தண்டையார் பேட்டை பகுதிகளில் ஆய்வு செய்தனர். தொடர்ந்து இன்று தமிழக மாசுகட்டுப்பாட்டு வாரிய தலைமை இணை பொறியாளர் தலைமையில் 10 அதிகாரிகள் கொண்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். சென்னை தண்டையார்பேட்டை டிஎச் சாலை பகுதியில் சுமார் 400-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதியின் அருகில் உள்ள பெட்ரோலியம் சுத்திகரிப்பு ஆலைக்கு, துறைமுகத்தில் இருந்து குழாய் மூலம் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எண்ணெய் பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன. இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக, நிலத்தடி நீரில், பெட்ரோல், டீசல் உள்ளிட்டவைகள் கலந்ததாக கூறப்படுகிறது.அதனால் அந்த பகுதியில் ஆழ்துளை கிணறுகள் மூலம் எடுக்கப்படும் தண்ணீர் தீப்பிடித்து எரியும் தன்மையில் உள்ளது.இதனால் குடிப்பதற்கும், குளிப்பதற்கும் போதிய தண்ணீர் கிடைப்பதில்லை என்றும் இப்பகுதி நிலத்தடி நீரை பயன்படுத்துவதால் உடல் நலக் குறைவும் ஏற்ப்படுகிறது என்றும் இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றார்கள். "பற்றி எரியும் பச்சை தண்ணீர்" தண்டையார் பேட்டை பகுதி நிலத்தடி நீரில் நனைத்த துணிகளை பற்றவைக்கும் போது அவை பற்றி எரிவதால் மக்கள் மேலும் பீதி அடைந்துள்ளனர். நிலத்தடி நீரில் பெட்ரோல் கலப்பதை தவிர்பதற்கும், சுத்தமான தண்ணீர் வேண்டும் என்றும் இப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றார்கள். அடிக்கடி உடைப்பு சென்னை தண்டையார் பேட்டை பகுதியில் உள்ள பெட்ரோலிய நிறுவனங்களுக்கு துறைமுகத்திலிருந்து குழாய் மூலம் பெட்ரோலிய பொருட்கள் கொண்டு வரப்படுகின்றன. இந்நிலையில் கடந்த 2012 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, நிலத்தில் பெட்ரோல் கலந்தது. இதனையடுத்து, அந்த உடைப்பு சரி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. நிலத்தில் ஊறி இருந்த பெட்ரோல், மழை காரணமாக நிலத்தடி நீரில் கலந்தது.அதுமட்டுமல்லாமல், இந்த உடைப்பு ஏற்படும் சம்பவம் அடிக்கடி ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதுக்குறித்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் புகார் அளித்தாலும், நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்றும் அப்பகுதிவாசிகள் கூறுகின்றனர். இதுப்பற்றி நகரமன்ற தலைவர் கார்த்திகேயன் தெரிவிக்கும்போது, ஏற்கனவே இதுப்போன்று நிகழ்ந்த போது, சம்பந்தப்பட்ட நிருவனத்திடம் புகார் தெரிவிக்கப்பட்டு, பின்னர் தீர்வு காணப்பட்டது. தற்போது, மீண்டும் இந்த பிரச்னை வந்துள்ளதால், நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். கடும் நடவடிக்கை: நிலத்தடி நீரில் எரிபொருள் கலந்துள்ளதால் அதை பயன்படுத்த முடியாத நிலையில் மக்கள் அவதிப்படுவது பற்றிய பிரச்னைக்கான நடவடிக்கை என்ன என்ற கேள்வியுடன் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெயந்தி நடராஜனை புதிய தலைமுறை அணுகியது. எல்லா எண்ணெய் நிறுவனங்களையும் கூட்டி கசிவு குறித்து ஆலோசனை நடத்தியதாகவும், கசிவால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் அறிவுறுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். அதற்கு எண்ணெய் நிறுவனங்கள் போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி யளித்துள்ளதாக தெரிவித்த அமைச்சர், இந்த கசிவு பிரச்னை தொடருமானால், குழாய்களை மூடுவதற்கான உத்தரவை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

சென்னையில் மழை: சேதமடைந்த சாலைகளால் வாகன ஓட்டிகள் பாதிப்பு

Posted: 15 Jul 2013 08:25 PM PDT


சென்னையில் நேற்றிரவு பரவலாக பெய்த மழை காரணமாக, போரூர் பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக சாதாரண நாட்களிலேயே போக்குவரத்து நெரிசல் மிகுந்த மூலக்கடை, போரூர், உள்ளகரம் ஆகிய பகுதிகளில் நேற்று பெய்த கன மழை மேலும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் இன்று காலை தொடங்கி, மழை பாதிப்புகளை பார்த்துவருகிறோம். இதுகுறித்து கவுன்சிலர்களிடம் உரிய அரசு அதிகாரிகளிடமும், தொலைபேசி வாயிலாக விளக்கம் கேட்டது புதிய தலைமுறை. அதற்கு சிலர் பதில் அளிக்க மறுத்துவிட்டனர். சிலரின் தொலைபேசி இணைப்புகள் அணைத்து வைக்கப்பட்டிருந்தன. தொடர்பு கொள்ள முடிந்த சிலர் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.

பெர்முடா முக்கோணத்தின் மர்மம்…!

Posted: 15 Jul 2013 07:32 PM PDT


உலகில் மனித அறிவுக்கு எட்டாத மர்மமான இடங்கள் எத்தனையோ இருக்கின்றன. அந்தப் பட்டியலில் முக்கியமான இடத்தைப் பிடிப்பது பெர்முடா முக்கோணம். கப்பல்களையும் விமானங்களையும் விழுங்கும் இந்த முக்கோணைத்தின் பின் இருக்கும் மர்மம் தான் என்ன?! மர்ம முக்கோணம் ! மரண முக்கோணம் ! பேய் முக்கோணம் என்று அச்சமூட்டம் பெயர்களில் அழைக்கப்படுவது பெர்முடா முக்கோணம். வட அட்லாண்டிக் கடலில் பெர்முடா, மியாமி, பியூர்டொரிகா ஆகிய மூன்று துறைமுகங்களை இணைக்கும் முக்கோண வடிவிலான பகுதிதான் பெர்முடா முக்கோணம். இந்தக் பகுதியில் செல்லும் கப்பல்கள் மற்றும் இந்தப் பகுதிக்கு மேலே பறக்கும் விமானங்கள் மர்மான முறையில் காணாமல் போய்விடுகின்றன. இங்கு இதுவரை 40 கப்பல்களும், 20 விமானங்களும் ஏராளமான சிறு கலன்களும் காணாமல் போயிருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்த விபத்துக்கள் ஏன் ? எப்படி? ஏற்படுகின்றன என்ற கேள்விகளுக்கு விடை தெரியாமல் ஆராய்ச்சியாளர்கள் திகைக்கின்றனர். விபத்துக்கள் ஏற்படுவதற்கு கடலில் ஏற்படும் பயங்கர சூறாவளி, சுனாமி போன்று ஏற்படும் ராட்சத அலைகள் ஆகியவை காரணமாக இருக்கலாம் என்ற ஒரு கருத்து நிலவுகிறது. ஆனால் காணாமல் போகும் பகுதியில், கப்பல்கள் மற்றும் விமானங்களின் சிறு பகுதிகூட கிடைப்பதில்லை. இவை தான் ஆராய்ச்சியாளர்களுக்கு பெரும் சவாலாக விளங்கும் கேள்வி. பூமி கோளத்தில் பெர்முடா பகுதியின் எதிர் பகுதி ஜப்பானின் கிழக்கு கடல் பகுதி. பிசாசுக் கடல் என்று அழைக்கப்படும் இப்பகுதியில் செல்லும் கப்பல்களும் மர்மமான முறையில் காணாமல் போவதாகக் கூறப்படுவதுண்டு. இந்த இரண்டு முனைகளுக்கும் இடையே உள்ள அதீத காந்த ஈர்ப்பு விசையே விபத்துகள் ஏற்படுவதற்கு காரணம் என்று கூறுகின்றனர் சில ஆய்வாளர்கள். 1908-ம் ஆண்டுதான் பெர்முடா முக்கோணத்தில் முதல் விபத்து பதிவு செய்யப்பட்டது. அன்று முதல் இப்பகுதியில் விமானங்கள் மற்றும் கப்பல்கள் காணாமல் போவது வாடிக்கையாகிவிட்டது. 1918 – ம் ஆண்டு அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமான யு.எஸ்.எஸ்., சைக்கிளாப்ஸ் (U.S.S CYCLOPS) என்ற கப்பல் இப்பகுதியில் சென்ற போது காணாமல் போனது. கப்பலில் பயணம் செய்த 306 பேரின் கதி என்னவானது என்று இதுவரை தெரியவில்லை. 1945 – ம் ஆண்டு பெர்முடாஸ் பகுதியில் பறந்த அமெரிக்க கடற்படையின் சிறிய விமானம் காணமல் போனது. இது குறித்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. பெர்முடா முக்கோணத்தின் மர்மத்தை வெளிகொண்டு வரும் நோக்கில் அமெரிக்க ரஷ்ய விஞ்ஞானிகளை கொண்ட குழு ஒன்று அப்பகுதிக்குச் சென்றது. 14 பேர் கொண்ட இக்குழுவினர் எவரும் இதுவரை திரும்ப வரவேயில்லை. இவ்வாறு விமானங்களையும் கப்பல்களையும் உள்வாங்கி கபளிகரம் செய்யும் பெர்முடா முக்கோணம் மனித அறிவுக்கு எட்டாத மர்மமாகவே இன்றும் விளங்கி வருகிறது.

குழந்தைகளுக்கான அறிவுத்திறன் போட்டியில் தமிழ்ச் சிறுமி முதலிடம்

Posted: 15 Jul 2013 07:26 PM PDT


பிரிட்டனில் நடைபெற்ற குழந்தைகளுக்கான அறிவுத்திறன் போட்டியில் தமிழ்ச் சிறுமி முதலிடம் பெற்றுள்ளார். ஸ்ரீநிதி,6ம் வகுப்பு படித்து வரும் இந்தச் சிறுமி பிரிட்டனின் சேனல் -4 மற்றும் மென்சா அமைப்பு இணைந்து நடத்திய புத்திசாலிக் குழந்தையை தேர்வு செய்யும் போட்டியில் முதலிடம் பிடித்துள்ளார். ஆண்டு தோறும் நடத்தப்படும் இந்தப் போட்டியில் இந்த வருடம் 2000 பேர் கலந்து கொண்டனர். நான்கு சுற்றுகளாக நடத்தப்பட்ட இதன் இறுதிப் போட்டிக்கு 21பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் ஸ்ரீநிதி முதலாவதாக வந்து வெற்றி பெற்றுள்ளார். இந்திய வம்சாவளிக்குழந்தை ஒன்று இப்போட்டியில் வெல்வது இதுவே முதல்முறையாகும். ஸ்ரீநிதியின் தந்தை பிரகாஷ் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இந்த போட்டியில் வெல்வதற்காக கடுமையான பயிற்சிகள் எதையும் அளிக்கவில்லை என்று கூறும் ஸ்ரீநிதியின் தாய் சுஜா, சிறு வயதில் இருந்தே போட்டிகளில் கலந்து கொள்வதில் ஸ்ரீநிதி ஆர்வமாக இருந்ததாகவும் கூறினார். மூன்று வயதில் பல்வேறு நாட்டின் கொடிகளை பார்த்தவுடன் கூறும் திறன் படைத்தவராக விளங்கிய ஸ்ரீநிதி, தற்போது 11 வயதில் இங்கிலாந்தில் நடைபெற்ற புத்திசாலிக் குழந்தை போட்டியில் வெற்றி பெற்றிருப்பதன் மூலம் இந்தியாவிற்கு பெருமை சேர்த்திருக்கிறார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™