Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


டெல்லி மெட்ரோ ரெயிலில் நெரிசல் இல்லாத நேரங்களில் 30 சதவீதம் கட்டணம் குறைப்பு

Posted: 15 Jul 2013 10:47 PM PDT

இந்தியாவில் உள்ள மெட்ரோ ரெயில் சேவைகளில் டெல்லி மெட்ரோ ரெயில் சேவை வெற்றிகரமாக செயல்படுகிறது. அங்கு நாள் ஒன்றுக்கு சுமார் 20 லட்சம் பயணிகள் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்கிறார்கள். டெல்லி மெட்ரோ ரெயில்களில் நாளுக்கு நாள் பயணிகள் கூட்டம் அதிகரித்தபடி உள்ளது. அதுவும் காலை, மாலை நேரங்களில் பயணிகள் ஒரே

ஜார்க்கண்டில் 4 மாணவிகள் கடத்தி கற்பழிப்பு: குற்றவாளிகள் 24 மணி நேரத்தில் சரணடைய உத்தரவு

Posted: 15 Jul 2013 10:35 PM PDT

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பகடியா என்ற மலைவாழ் இனத்தினர் அடர்ந்த காட்டுப் பகுதிகளில் வசித்து வருகிறார்கள். அந்த இனத்தைச் சேர்ந்த பெண்கள் கல்வி அறிவு பெற வேண்டும் என்பதற்காக அம்மாநில அரசு உதவியுடன் கிறிஸ்தவ அமைப்பு ஒன்று பகுர் மாவட்டத்தில் உள்ள லிடிபாரா கிராமத்தில் பள்ளிக்கூடம் ஒன்றை நடத்தி வருகிறது.

ஒரு மாதத்துக்கு முன்பே அமர்நாத் பனி லிங்கம் முழுவதும் உருகி விட்டது: பக்தர்கள் தொடர்ந்து பயணம்

Posted: 15 Jul 2013 10:13 PM PDT

காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் இருந்து சுமார் 141 கி.மீ. தூரத்தில் அமர்நாத் புனித தலம் உள்ளது. சுமார் 5 ஆயிரம் ஆண்டு பழமையான இந்த குடை வரை கோவிலில் உள்ள ஆசிரமத்தில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் முதல் ஆகஸ்டு மாதம் வரை பனிக்கட்டிகளால் தானாகவே லிங்கம் ஒன்று உருப்பெறும்.

கொல்கத்தாவில் பிரெஞ்சு பெண் மானபங்கம்: 3 வாலிபர்கள் கைது

Posted: 15 Jul 2013 09:49 PM PDT

மேற்கு வங்க மாநிலம் ஜோத்பூர் பூங்கா வளாகப்பகுதியில் குடியிருக்கும் பிரெஞ்ச் ஜோடி ஒன்று சனிக்கிழமை காலை சென்று கொண்டிருந்தது. அப்போது, அப்பகுதியில் வந்த இளைஞர்கள் ஆபாச வார்த்தைகளை கூறி அவர்களை கிண்டல் செய்தனர். இதனையடுத்து அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

திருப்பதி கோவிலில் ஒரே மாதத்தில் 123 கிலோ தங்கம் குவிந்தது

Posted: 15 Jul 2013 09:35 PM PDT

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் உண்டியலில் தங்க நாணயம், தங்க பிஸ்கட்டுகள் மற்றும் பணத்தை காணிக்கையாக செலுத்துகிறார்கள். இந்த காணிக்கை பொருட்கள் தினம் தினம் எண்ணப்படும். 1 மாதம் உண்டியல் மூலம் கிடைக்கும் தங்கம் சேர்க்கப்பட்டு தேவஸ்தான கஜானாவில் சேர்க்கப்படும். அந்த வகையில் கடந்த ஜுன் மாதம் மட்டும் 123 கிலோ தங்கம் காணிக்கையாக கிடைத்து உள்ளது. கடந்த 2 நாட்களாக விடுமுறை எனபதால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. கடந்த ஞாயிற்றுக்

திருவனந்தபுரத்தில் அரசு பஸ் மீது தனியார் பஸ் மோதல்: 5 பேர் பலி

Posted: 15 Jul 2013 09:31 PM PDT

திருவனந்தபுரத்தில் இருந்து பம்பை நோக்கி நேற்று மாலை கேரள அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் சடையமங்கலம் எம்.ஜி. ரோடு பகுதியில் ஒரு வளைவில் திரும்பியபோது திருவனந்தபுரம் நோக்கி சென்ற ஒரு தனியார் பஸ் வேகமாக வந்து கேரள அரசு பஸ் மீது மோதியது. இதில் அரசு பஸ்சின் ஒரு பகுதி முழுமையாக நொறுங்கியது. இதனால் 2 பஸ்களிலும் இருந்த பயணிகள் அலறினார்கள். கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் அரசு பஸ்சில் இருந்த 4 பெண்கள் உள்பட 5

கல்லூரி மாணவி கற்பழித்து கொலை: சி.பி.ஐ. விசாரணை கோரி ஜனாதிபதியிடம் மனு

Posted: 15 Jul 2013 05:22 PM PDT

மேற்கு வங்காள மாநிலம் கம்துனி கிராமத்தில் கல்லூரி மாணவி கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று அக்கிராமத்தை சேர்ந்த மக்கள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து மனு அளித்தனர். மேற்கு வங்காள மாநிலம் கம்துனி கிராமத்தை சேர்ந்த 20 வயது கல்லூரி

தலைமை கணக்கு தணிக்கை அலுவலராக சசிகாந்த் சர்மா நியமிக்ப்பட்டதை எதிர்த்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி

Posted: 15 Jul 2013 04:58 PM PDT

தலைமை கணக்கு தணிக்கை அலுவலராக சசிகாந்த் சர்மா நியமிக்ப்பட்டதை எதிர்த்த வழக்கை சுப்ரீம் கோர்ட் நேற்று தள்ளுபடி செய்தது. ராணுவத்துக்காக டாட்ரா வாகனங்கள் வாங்கியதில் ஊழல் நடந்ததாகவும், இந்த கொள்முதல் சசிகாந்த் சர்மா பாதுகாப்பு துறை செயலாளராக இருந்தபோது நடந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது

டெல்லி மெட்ரோ ரெயில் சேவை தென்கிழக்கு ஆசியாவில் 2வது இடத்தை பெற்றுள்ளது

Posted: 15 Jul 2013 02:31 PM PDT

புதுடெல்லியில் 2002ம் ஆண்டு 190 கி.மீட்டர் நீள மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்டது. தொடங்கிய 11 ஆண்டுகளில் தென்கிழக்கு ஆசியாவில் அதிக பயணிகளை கையாளும் இரண்டாவது பெரிய ரெயில் சேவையாக டெல்லி மெட்ரோ ரெயில் சேவை சிறப்பிடம் பிடித்துள்ளது. சீனாவின் தய்பெய் மற்றும் சிங்கப்பூரின் மெட்ரோ ரெயில்

மம்தா பானர்ஜியால் மாவோயிஸ்ட் என்று குற்றம் சாட்டப்பட்டவருக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு: மனித உரிமை ஆணையம் உத்தரவு

Posted: 15 Jul 2013 01:29 PM PDT

மம்தா பானர்ஜியால் மாவோயிஸ்ட் என்று குற்றம் சாட்டப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்ட நபருக்கு இழப்பீடாக ரூ.2 லட்சத்தை வழங்கும்படி மேற்கு வங்காள மாநில அரசுக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மேற்கு வங்காள மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி, மேற்கு மிட்னப்பூர் மாவட்டத்தில்

இந்தியாவின் முதல் '11-டி' திரையரங்கம் : ராஞ்சியில் 18ம் தேதி திறப்பு

Posted: 15 Jul 2013 01:03 PM PDT

முப்பரிமாணம் எனப்படும் '3-டி' தொழில்நுட்பத்தில் மை டியர் குட்டிச் சாத்தான் என்ற திரைப்படம் 1984ல் இந்தியாவில் தயாராகி ரசிகர்களை குதூகலப்படுத்தியது. இதனையடுத்து, 4-டி, 5-டி, 7-டி தொழில்நுட்பத்துடன் கூடிய திரைப்படங்களும், திரையரங்குகளும்

ஸ்டெர்லைட் ஆலை தற்காலிகமாக தொடர்ந்து இயங்கலாம்: தேசிய பசுமை தீர்ப்பாயம் இடைக்கால உத்தரவு

Posted: 15 Jul 2013 12:35 PM PDT

தூத்துக்குடியில் கடந்த மார்ச் மாதம் 21-ந்தேதி அன்று நச்சு வாயு பரவியது. இதனால் நகரின் ஒரு பகுதி மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டனர். நச்சுவாயு பரவுவதற்கு காரணமான ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், மார்ச் 30-ந்தேதி அன்று ஸ்டெர்லைட் ஆலையை

இந்தியாவுக்குள் ஊடுருவ 300 பாக். தீவிரவாதிகள் தயார் நிலையில் உள்ளனர்: ராணுவ அதிகாரி 'திடுக்' தகவல்

Posted: 15 Jul 2013 11:51 AM PDT

இந்தியாவுக்குள் ஊடுருவ தகுந்த நேரத்தை எதிர்பார்த்து பாகிஸ்தான் எல்லையில் 300 தீவிரவாதிகள் காத்துக்கொண்டிருப்பதாக இந்திய ராணுவ உயரதிகாரி கூறியுள்ளார். ஜம்மு பகுதியில் முனவர் தவி ஆற்றின் மீது ரூ.12 1/2 கோடி செலவில் கட்டப்பட்ட மேம்பால திறப்பு விழாவின் போது

இந்து - முஸ்லிம்களிடையே பிரிவினையை ஏற்படுத்த பா.ஜ.க. முயற்சி: மம்தா குற்றச்சாட்டு

Posted: 15 Jul 2013 11:32 AM PDT

இந்து - முஸ்லிம் மக்களுக்கிடையே பிரிவினையை ஏற்படுத்த பா.ஜ.க. முயற்சிப்பதாக மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். ஹவுரா மாவட்டத்தில் பஞ்சாயத்து தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மம்தா பானர்ஜி பேசியதாவது

ஐதராபாத்: பூனை இறந்த துக்கத்தில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை

Posted: 15 Jul 2013 10:52 AM PDT

வளர்ப்புப் பூனை இறந்த துக்கத்தில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் ஐதராபாத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐதராபாத் அம்பர்பேட் பகுதியை சேர்ந்தவர் சுவர்ணலதா(25). மிகவும் பிரியமாக ஓர் பூனையை அவர் வளர்த்து வந்தார். உடல்நலம் பாதிக்கப்பட்ட அந்த பூனை 2 நாட்களுக்கு முன்னர் இறந்து விட்டது

மும்பை: பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தவனுக்கு 7 ஆண்டு சிறை

Posted: 15 Jul 2013 10:35 AM PDT

பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த ஜாவீத் மொசாவாலா என்பவனை மும்பை போலீசார் கடந்த 2011ம் ஆண்டு கைது செய்தனர். மும்பையை சேர்ந்த இவன், டெல்லியில் உள்ள பாகிஸ்தான் உயர் தூதரகத்தில் பணியாற்றும் சிலரின் ஆலோசனையின்படி பாகிஸ்தானுக்கு செல்ல விரும்பியவர்களுக்கு பாஸ்போர்ட்

குஜராத்தில் பரவி வரும் காங்கோ காய்ச்சல்: ஒரு வாரத்தில் 7 பேர் பலி

Posted: 15 Jul 2013 08:23 AM PDT

குஜராத் மாநிலம், அமெர்லி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக காங்கோ காய்ச்சல் பரவி வருகிறது. விலங்குகளில் இருந்து இந்த வைரஸ் பரவுகின்றன. இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு உடல் மிகவும் சோர்ந்துவிடுகிறது. ஒரு வாரத்தில் 7 பேர் இந்நோய்க்கு பலியாகி உள்ளனர். 6 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். வைரஸ் தாக்கும் அபாயம் இருந்ததால்

பீகாரில் மாவோயிஸ்டுகளின் மினி துப்பாக்கி தொழிற்சாலை கண்டுபிடிப்பு

Posted: 15 Jul 2013 07:36 AM PDT

பீகாரின் முங்கர் மாவட்டம் பிராமனி வனப்பகுதியில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுக்காக சட்டவிரோதமாக இயங்கி வந்த ஆயுத தொழிற்சாலையை போலீசார் இன்று கண்டுபிடித்தனர். பராரர் காவல் நிலைய போலீசார் நடத்திய இந்த சோதனையில், 80 பிஸ்டல் மேகசின்கள், 20 குழல்கள் மற்றும் உதிரி பாகங்கள், டிரில்லிங் மிஷின்கள் கைப்பற்றப்பட்டன

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஆகஸ்ட் 5-ல் கூடுகிறது

Posted: 15 Jul 2013 07:16 AM PDT

பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் ஆகஸ்ட் 5-ம் தேதி தொடங்கி 20ம் தேதி வரை நடைபெறுகிறது. பாதுகாப்புத்துறை மந்திரி ஏ.கே.அந்தோணி தலைமையிலான பாராளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு இதற்கான முடிவை எடுத்துள்ளது. உணவு பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்ற சமீபத்தில் அவசர சட்டம் கொண்டு வந்ததையடுத்து, அதனை 20-ம் தேதி அமலுக்கு கொண்டுவர காங்கிரஸ் முழுவீச்சில் தயாராகி வருகிறது.

மோடியின் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்க 5 ரூபாய் கட்டணம்: உத்தரகாண்ட் நிவாரண நிதிக்கு வழங்க பா.ஜனதா முடிவு

Posted: 15 Jul 2013 06:00 AM PDT

பா.ஜனதா பிரச்சாரக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அந்த வகையில் ஆகஸ்ட் 11-ம் தேதி ஆந்திர பிரதேச மாநிலம் ஐதராபாத்தில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் உரையாற்ற உள்ளார். அவர் தலைமை பொறுப்பை ஏற்ற பிறகு முதல் முறையாக தென்னிந்தியாவில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதால், அதன் மூலம் கட்சியின் பலத்தை


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™