Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


கால்நடை தீவன ஊழல் வழக்கு: தீர்ப்பை வெளியிட உச்ச நீதிமன்றம் தடை

Posted: 09 Jul 2013 01:04 PM PDT

கால்நடை தீவன ஊழல் வழக்கில் தீர்ப்பை வெளியிட வேண்டாம் என்று சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமில விற்பனை: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

Posted: 09 Jul 2013 01:03 PM PDT

அமில விற்பனையைக் கட்டுப்படுத்த கொள்கை வகுப்பதில் மெத்தனம் காட்டுவதாக மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

புத்த கயை குண்டுவெடிப்பு வழக்கு: பெண் உள்பட 4 பேரிடம் விசாரணை

Posted: 09 Jul 2013 01:01 PM PDT

புத்த கயைவில் உள்ள மகாபோதி கோவிலில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு தொடர்பான வழக்கில் ஒரு பெண் உள்ளிட்ட மேலும் 4 பேரிடம் தேசிய புலனாய்வு அமைப்பினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உணவுப் பாதுகாப்பு: 13இல் காங்கிரஸ் முதல்வர்கள் கூட்டம்

Posted: 09 Jul 2013 01:01 PM PDT

உணவுப் பாதுகாப்பு மசோதா குறித்து விவாதிப்பதற்காக வரும் 13ஆம் தேதி காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்கள் மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர்களின் கூட்டத்தை அக்கட்சித் தலைவர் சோனியா காந்தி கூட்ட உள்ளார்.

பாலியல் முறைகேடு: மத்தியப் பிரதேச முன்னாள் அமைச்சர் ராகவ்ஜி கைது

Posted: 09 Jul 2013 12:58 PM PDT

பாலியல் முறைகேடு வழக்கில் சிக்கிய மத்தியப் பிரதேச முன்னாள் நிதி அமைச்சர் ராகவ்ஜியை மாநில போலீஸôர் கைது செய்துள்ளனர்.

உத்தரகண்ட்டில் மீண்டும் நிவாரண பணி தொடங்கியது

Posted: 09 Jul 2013 12:46 PM PDT

உத்தரகண்ட் மாநிலத்தில் வானிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து நிவாரணப் பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளன.

கன மழையால் ஸ்தம்பித்தது தில்லி

Posted: 09 Jul 2013 12:46 PM PDT

ில்லியிலும், தேசிய தலைநகர் வலய பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை மாலை சுமார் ஒரு மணி நேரம் பெய்த பலத்த மழையால் முக்கிய இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ஆபாச இணையதளங்களில் தில்லி மெட்ரோ சிசிடிவி பதிவுகள்

Posted: 09 Jul 2013 12:46 PM PDT

தில்லி மெட்ரோ ரயில் நிலைய வளாகத்தில் மறைவான இடங்களில் ஆண், பெண் பயணிகள் சிலர் ஆபாசமாக நடந்து கொண்டது குறித்து, ரயில் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் (சிசிடிவி) பதிவான காட்சிகள் இணையதளங்களில் வெளிவந்துள்ள விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

போலீஸாரை தாக்கியதாக வழக்கு:பாஜக கவுன்சிலருக்கு முன்ஜாமீன்

Posted: 09 Jul 2013 12:45 PM PDT

பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாரை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் பாஜக கவுன்சிலர் பங்கஜ் குமார் சிங்குக்கு முன்ஜாமீன் வழங்கி தில்லி மாவட்டக்  கூடுதல் நீதிபதி ஆர்.பி. சிங் உத்தரவிட்டார். மேற்கு தில்லி குன்வர் சிங் நகரில் கடந்த மாதம் 24-ஆம் தேதி நள்ளிரவில் காவல்துறை  கட்டுப்பாட்டு

தில்லி வழக்குரைஞர்கள் போராட்டம்: 6 மாவட்ட நீதிமன்ற விசாரணை பாதிப்பு

Posted: 09 Jul 2013 12:45 PM PDT

: இரு வழக்குரைஞர்கள் மீது தில்லி போலீஸார் பதிவு செய்த வழக்குகளை வாபஸ் பெற வலியுறுத்தி, தில்லி மாவட்ட நீதிமன்ற வழக்குரைஞர்கள் செவ்வாய்க்கிழமை நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேர்தல் ஏற்பாடுகள்: காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை

Posted: 09 Jul 2013 12:45 PM PDT

நடைபெறவுள்ள தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து பிரதேச காங்கிரஸ் தலைவர்கள் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினர்.

தில்லி தேர்தல் பிரசாரம், வாக்குப்பதிவுவிடியோவில் பதிவு நமது நிருபர்

Posted: 09 Jul 2013 12:44 PM PDT

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலின் போது அரசியல் தலைவர்களின் பிரசாரம், வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை ஆகியவை விடியோ பதிவு செய்யப்படும் என்று தில்லி தலைமைத் தேர்தல் அதிகாரி விஜய் தேவ் தெரிவித்தார்.

துப்பரவுத் தொழிலாளர்களின் வருகை இணையதளத்தில் தினமும் வெளியீடு

Posted: 09 Jul 2013 12:44 PM PDT

தெற்கு தில்லி மாநகராட்சிக்கு உள்பட்ட மத்திய மண்டலத்தில் பணியாற்றும் துப்பரவுத் தொழிலாளர்களின் வருகை விவரம் இணையதளத்தில் நாள்தோறும் வெளியிடப்படவுள்ளது.

புதிய துணைநிலை ஆளுநர் பதவியேற்பு

Posted: 09 Jul 2013 12:44 PM PDT

தில்லி துணைநிலை ஆளுநராக நஜீப் ஜங் (62) செவ்வாய்க்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.

காணாமல்போன பிஎஸ்எஃப் அதிகாரியின் மகன் தில்லியில் மீட்பு

Posted: 09 Jul 2013 12:43 PM PDT

அண்மையில் காணாமல் போனதாகக் கூறப்பட்ட எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரியின் மகன் கோபால் துபே தில்லியில் தனது தோழியின் வீட்டில் இருந்தது திங்கள்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது.

தில்லி மாணவர்களுக்கு கட் ஆஃப் மதிப்பெண்களில் 4% குறைக்க  வேண்டும்'

Posted: 09 Jul 2013 12:43 PM PDT

தில்லி பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு தில்லி பல்கலைக்கழக கல்லூரிகளில் கட் ஆஃப் மதிப்பெண்களில் 4 சதவீதம் குறைக்க வேண்டும் என்று பாரதிய ஜனத

கர்ப்பிணி சாவு: ரூ. 4 லட்சம் இழப்பீடு வழங்கதில்லி அரசுக்கு உத்தரவு

Posted: 09 Jul 2013 12:43 PM PDT

அரசு மருத்துவமனையில் பிரசவத்தின் போது வேறு பிரிவு ரத்தத்தை மாற்றிச் செலுத்தியதால் உயிரிழந்த கர்ப்பிணியின் குடும்பத்துக்கு தில்லி அரசு ரூ. 4 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

1,200 பேர் தங்கும் வகையில்ரோஹிணியில் இரவுக் குடில்

Posted: 09 Jul 2013 12:42 PM PDT

சுமார் 1,200 பேர் தங்கும் வகையில், தில்லி ரோஹிணியில் இரவுக் குடில் கட்டுவதற்கு, முதல்வர் ஷீலா தீட்சித் செவ்வாய்க்கிழமை அடிக்கல் நாட்டினார்.

இந்திய எல்லைப் பகுதிக்குள் சீன ராணுவம் மீண்டும் ஊடுருவல்

Posted: 09 Jul 2013 12:42 PM PDT

சீன ராணுவத்தினர் ஜம்மு காஷ்மீரில் உள்ள சுமர் பகுதியில் கடந்த மாதம் மீண்டும் ஊடுருவி, இந்திய சோதனைச் சாவடியில் சேதம் ஏற்படுத்தினர். இந்தச் சம்பவம் ஜூன் 17ஆம் தேதி நடந்துள்ளது.

என்.எல்.சி. தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 09 Jul 2013 12:42 PM PDT

என்எல்சியின் 5 சதவீத பங்கு விற்பனையை கைவிடக் கோரி கடலூரில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடந்தது.

மின்சாரம் பாய்ந்து இறந்த மயில்

Posted: 09 Jul 2013 12:41 PM PDT

சிதம்பரம் அருகே புவனகிரியில் மின்சாரம் பாய்ந்து மயில் ஒன்று செவ்வாய்க்கிழமை இறந்தது.

ஜூலை 10 மின் தடை

Posted: 09 Jul 2013 12:41 PM PDT

ஜார்க்கண்டில் ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஹேமந்த் சோரன்

Posted: 09 Jul 2013 12:41 PM PDT

ஜார்க்கண்டில் ஆட்சி அமைப்பதற்கு ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜே.எம்.எம்.) கட்சி எம்.எல்.ஏ.க்கள் குழுத் தலைவர் ஹேமந்த் சோரன், ஆளுநரிடம் (படம்) உரிமை கோரியுள்ளார்.

இளைஞர் எரித்துக் கொலை

Posted: 09 Jul 2013 12:41 PM PDT

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே பாசன வாய்க்காலில் 30 வயது மதிக்கத்தக்க இளைஞர், தீவைத்து எரித்துக் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

தேசிய அடையாள அட்டை: புகைப்படம் எடுக்க மீண்டும் வாய்ப்பு

Posted: 09 Jul 2013 12:40 PM PDT

தேசிய அடையாள அட்டைக்கு பதிவு செய்து விடுபட்டவர்கள் மட்டுமே இப்போது நடைபெறும் முகாமில் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கண்தானம்

Posted: 09 Jul 2013 12:40 PM PDT

சிதம்பரம் அருகே வளையமாதேவி பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த சாரதாம்பாள் 980) ஞாயிற்றுக்கிழமை காலமானார்.

ஆஸ்திரேலியாவுக்கு தப்ப முயன்ற 17 அகதிகள் பிடிபட்டனர்

Posted: 09 Jul 2013 12:40 PM PDT

ஆஸ்திரேலியாவுக்கு தப்ப முயன்ற இலங்கை அகதிகள் பெண்கள், குழந்தைகள் உள்பட 17 பேரை போலீஸார் கைது செய்தனர். இவர்களை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்ப முயன்ற புரோக்கர் உள்பட 2 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.

அவதூறு பேச்சு: காடுவெட்டி குருவுக்கு சம்மன்

Posted: 09 Jul 2013 12:39 PM PDT

அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மீது அவதூறாகப் பேசியதாக வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குருவுக்கு காஞ்சிபுரம் நீதிமன்றம் சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

எங்களை வாழ விடுங்கள்: அகதிகள் கண்ணீர்

Posted: 09 Jul 2013 12:39 PM PDT

புதிய வாழ்க்கைத் தேடிச் செல்லும் எங்களை அரசே முன்வந்து ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று பிடிபட்ட இலங்கை அகதிகள் தெரிவித்தனர்.

15 கலங்கரை விளக்கங்கள் மேம்படுத்தப்படும்

Posted: 09 Jul 2013 12:39 PM PDT

கடற்கரைப் பகுதியுடன் சேர்த்து 15 கலங்கரை விளக்கங்கள் சுற்றுலாத் தலங்களாக மேம்படுத்தப்படும். சுற்றுலாத் துறையுடன் இணைந்து இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய இணையமைச்சர் மிலிந்த் தியோரா தெரிவித்தார்.

காரைக்காலில் தீவிர சோதனை

Posted: 09 Jul 2013 12:38 PM PDT

பிகார் மாநிலம், புத்தகயையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பைத் தொடர்ந்து, காரைக்கால் கடலோரப் பகுதி மற்றும் தமிழகத்தை ஒட்டியுள்ள எல்லைகளில் திங்கள்கிழமை இரவு முதல் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

விடைபெற்றார் இக்பால் சிங்

Posted: 09 Jul 2013 12:38 PM PDT

புதுச்சேரி மாநில ஆளுநராக வீரேந்திர கட்டாரியா புதன்கிழமை (ஜூலை 10) பதவியேற்

ஆள்வதற்கான தார்மிக உரிமையை நிதீஷ்குமார் இழந்து விட்டார்

Posted: 09 Jul 2013 12:37 PM PDT

பிகாரில் ஆட்சியில் நீடிக்கும் தார்மிக அதிகாரத்தை முதல்வர் நிதீஷ்குமார் இழந்து விட்டார் என்று பா.ஜ.க. குறை கூறியுள்ளது.

டாஸ்மாக் கடையை எதிர்த்து முற்றுகைப் போராட்டம்

Posted: 09 Jul 2013 12:37 PM PDT

காக்குப்பம் பகுதியில் டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை போராட்டம்  நடத்தினர்.

செல்போன் டவரில் பேட்டரிகள் திருட்டு

Posted: 09 Jul 2013 12:37 PM PDT

விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே செல்போன் டவரில் இருந்த 40-க்கும் மேற்பட்ட பேட்டரிகளை மர்மநபர்கள் திருடிச் சென்றனர்.

கேரள முதல்வர் மாற்றமில்லை: ஏ.கே. அந்தோனி

Posted: 09 Jul 2013 12:37 PM PDT

சோலார் மோசடி குற்றச்சாட்டு தொடர்பாக கேரள முதல்வர் மாற்றப்படமாட்டார் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோனி கூறியுள்ளார்.

எஸ்.ஐ. பொறுப்பேற்பு

Posted: 09 Jul 2013 12:37 PM PDT

திருக்கோவிலூர் அருகே மணலூர்பேட்டை காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டராக ப.பன்னீர்செல்வம்  திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.

குடிபோதையில் ரகளை:  2 போலீஸார் பணி இடைநீக்கம்

Posted: 09 Jul 2013 12:36 PM PDT

திருக்கோவிலூர் அருகே குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட 2 போலீஸார் செவ்வாய்க்கிழமை தற்காலிக பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

கல்வி அலுவலரைத் தாக்கியதாக கவுன்சிலர் மீது ஆசிரியர்கள் புகார்

Posted: 09 Jul 2013 12:36 PM PDT

மேல்மலையனூர் ஒன்றிய தொடக்கக்கல்வி அலுவலர் ஸ்ரீராமுலுவை  தாக்கியதாக மாவட்டக் கவுன்சிலர் மீது வளத்தி காவல் நிலையத்தில் திங்கள்கிழமை புகார் அளிக்கப்பட்டது. டி.எஸ்.பி. அலுவலகம் ஆசிரியர்களால் முற்றுகையிடப்பட்டது.

சோலார் மோசடி: சாண்டி விலகக்கோரி கேரளப் பேரவையில் அமளி

Posted: 09 Jul 2013 12:36 PM PDT

சோலார் மோசடி விவகாரத்தால் கேரள சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமையும் கடும் அமளி ஏற்பட்டது.

மழை வேண்டி முஸ்லிம்கள் தொழுகை

Posted: 09 Jul 2013 12:36 PM PDT

மழை வேண்டி முஸ்லிம்கள் செஞ்சி அல்ஹிலால் பள்ளி மைதானத்தில் சிறப்புத் தொழுகையில்  ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனர்.

மக்கள் மீது தாக்குதலை தொடுக்கும் மத்திய அரசு

Posted: 09 Jul 2013 12:35 PM PDT

மக்கள் மீது  மத்திய அரசு தொடர்ந்து தாக்குதலைத் தொடுத்து வருவதாக மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

15-ல் பொறியியல் படிப்புக்கு 2-ம் கட்ட கலந்தாய்வு

Posted: 09 Jul 2013 12:35 PM PDT

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் படிப்புக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு ஜூலை 15-ம் தேதி பல்கலைக்கழக சாஸ்திரி ஹாலில் நடைபெறுகிறது.

மீன் வலையில் சிக்கிய முதலைக் குட்டி

Posted: 09 Jul 2013 12:35 PM PDT

சிதம்பரம் அருகே மீன் வலையில் சிக்கிய முதலை குட்டி வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

அ.தி.மு.க.வில் தொண்டருக்குகூட உள்ளாட்சி அமைப்புகளில் பதவி

Posted: 09 Jul 2013 12:34 PM PDT

முதல்வர் ஜெயலலிதா அதிமுகவில் சாதாரண தொண்டருக்கு கூட உள்ளாட்சி அமைப்புகளில் பதவி வழங்கியுள்ளார் என சுற்றுச்சூழல் துறை அமைச்சர் எம்.சி.சம்பத்  பேசினார்.

3 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்வு

Posted: 09 Jul 2013 12:34 PM PDT

கடலூர் மாவட்டத்தில், மூன்று அரசு உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

நுகர்பொருள் குடோனில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சோதனை

Posted: 09 Jul 2013 12:34 PM PDT

  பண்ருட்டியில் உள்ள நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் குடோனில் சென்னை லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

மீனவர் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கக் கோரிக்கை

Posted: 09 Jul 2013 12:33 PM PDT

மீனவர் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த கடலூர், விழுப்புரம்

சாலை விபத்து: ஏ.சி. மெக்கானிக் சாவு

Posted: 09 Jul 2013 12:33 PM PDT

விருத்தாசலத்தில் செவ்வாய்க்கிழமை நடந்த சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

விவசாயிகள் சங்க கொடியேற்று விழா

Posted: 09 Jul 2013 12:32 PM PDT

கடலூரில் ஜூலை 24 - 27-ல் நடைபெறவுள்ள அகில இந்திய விவசாயிகள் சங்க மாநாட்டை முன்னிட்டு, சிதம்பரம் நகரில் 4 இடங்களில் சங்கக் கொடியேற்றும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

திருவள்ளூர் ரயில் நிலையத்தில் 16 கண்காணிப்பு கேமிராக்கள்

Posted: 09 Jul 2013 12:30 PM PDT

திருவள்ளூர் ரயில் நிலையத்தில் 16 கண்காணிப்பு கேமிராக்கள் மற்றும் கண்காணிப்பு அறை ஆகியவற்றை தெற்கு ரயில்வே முதன்மை சிக்னல் மற்றும் தகவல் தொடர்பு பொறியாளர் எஸ்.மனோகர் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார்.

பவுத்தர் சங்கங்களின் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

Posted: 09 Jul 2013 12:30 PM PDT

புத்த கையையில் உள்ள மஹாபோதி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தைக் கண்டித்து திருவள்ளூரில் மாவட்ட பூர்வீக பவுத்தர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் திங்கள்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

லாரியில் கடத்த முயன்ற ரூ.5 லட்சம் செம்மரம் பறிமுதல்

Posted: 09 Jul 2013 12:30 PM PDT

திருவள்ளூர் அருகே ஆந்திர மாநிலத்தில் இருந்து திருவள்ளூர் வழியாக லாரியில் கடத்த முயன்ற ரூ. 5 லட்சம் மதிப்பு செம்மரத்தை போலீஸார் மற்றும் வனத்துறையினர் மீட்டனர்.

நூலக விழிப்புணர்வு ஊர்வலம்

Posted: 09 Jul 2013 12:29 PM PDT

உலக புத்தக தினத்தை முன்னிட்டு, திருத்தணி கிளை நூலகம் மற்றும் அரசினர் ஆண்கள் மேனிலைப் பள்ளி இணைந்து நூலக விழிப்புணர்வு பேரணியை திங்கள்கிழமை நடத்தின.

அரசு பஸ்ஸில் பாம்பு: பயணிகள் அலறி ஓட்டம்

Posted: 09 Jul 2013 12:29 PM PDT

: திருத்தணி பஸ் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை, அரசு பஸ்ஸில் பாம்பு புகுந்ததால் பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

கள்ளச்சாராயம் விற்ற 3 பெண்கள் குண்டர் சட்டத்தில் கைது

Posted: 09 Jul 2013 12:29 PM PDT

ிருவள்ளூர் அருகே கள்ளச்சாராயம் விற்பனை செய்த 3 பெண்கள் குண்டர் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

பெண்ணிடம் 5 பவுன் பறிப்பு

Posted: 09 Jul 2013 12:28 PM PDT

பொன்னேரி அருகே உள்ள தசரதன் நகரில் நடந்துச் சென்றுக் கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் இருந்த 5 பவுனை மோட்டார் சைக்கிளில் வந்த கொள்ளையர்கள் பறித்துச் சென்றனர். பொன்னேரியில் உள்ள தசரதன் நகரில் வசித்து வரும் ஆனந்தகுமாரின் மனைவி

2 வீடுகளில் அடுத்தடுத்து நகைக் கொள்ளை

Posted: 09 Jul 2013 12:28 PM PDT

திருத்தணியில் ஞாயிற்றுக்கிழமை இரவு, 2 வீடுகளில் புகுந்து 8 சவரன் நகை மற்றும் பொருள்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். ஒரேநாளில் நடந்த இச்சம்பவங்கள் அப்பகுதி மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.

அரிமா நிர்வாகிகள் பதவியேற்பு விழா

Posted: 09 Jul 2013 12:28 PM PDT

தங்க கோபுரம் அரிமா சங்க புதிய நிர்வாகிகளுக்கு மாவட்டத் தலைவர் உதயசங்கர் வெள்ளிக்கிழமை பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

ஜூலை 10 மின் தடை

Posted: 09 Jul 2013 12:27 PM PDT

மருத்துவம், கலை-அறிவியல் படிப்புகளுக்கு 2-ஆவது நாளாக கலந்தாய்வு

Posted: 09 Jul 2013 12:26 PM PDT

புதுச்சேரியில் மருத்துவப் படிப்புகளுக்கான சென்டாக் பொதுக் கலந்தாய்வும், கலை அறிவியல் படிப்புகளுக்கான கலந்தாய்வும் 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஜிப்மரில் முப்பரிமாண திறன்மிகு ஆய்வகம் தொடக்கம்

Posted: 09 Jul 2013 12:26 PM PDT

ஜிப்மர் மருத்துவமனையில் லேப்ராஸ்கோபிக் அறுவைச் சிகிச்சை தொடர்பான பயிற்சி அளிப்பதற்காக முப்பரிமாண தொழில்நுட்பத்துடன் கூடிய திறன்மிகு  ஆய்வகம் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது. புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை இரைப்பை குடலியல் துறை சார்பில் அறுவைச் சிகிச்சை தொழில்நுட்ப

கலை, அறிவியல் படிப்புக்கான கலந்தாய்வு தொடக்கம்

Posted: 09 Jul 2013 12:26 PM PDT

புதுச்சேரியில் கலை, அறிவியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு பாரதிதாசன் மகளிர் கல்லூரியில் திங்கள்கிழமை தொடங்கியது.

கிராம மக்கள் நல்வாழ்வு  திட்ட முகாம்

Posted: 09 Jul 2013 12:25 PM PDT

புதுச்சேரி கள விளம்பர அலுவலகமும், நெட்டப்பாக்கம் கருணாலயம் கிராம நலச் சங்கமும் இணைந்து நடத்திய கிராம மக்கள் நல்வாழ்வுத் திட்ட முகாம் திங்கள்கிழமை ஏம்பலத்தில் நடைபெற்றது. முகாமைத் தொடங்கிவைத்துப் பேசிய ஏம்பலம் புதுவை பாரதியார் கிராம வங்கி மேலாளர், உங்க

அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர்களை நியமிக்க வலியுறுத்தல்

Posted: 09 Jul 2013 12:25 PM PDT

அரசு பொது மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர்கள், செவிலியர்களை நியமிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி புதுச்சேரி அரசை வலியுறுத்தியுள்ளது.

இளவரசன் மரணம்: சி.பி.ஐ. விசாரணை கோரி ஆர்ப்பாட்டம்

Posted: 09 Jul 2013 12:25 PM PDT

இளவரசன் மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி புதுச்சேரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தருமபுரியில் ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட இளவரசன் மர்மமான முறையில் இறந்துள்

அரசு ஊழியர் நலச்சங்க முப்பெரும் விழா

Posted: 09 Jul 2013 12:24 PM PDT

புதுச்சேரியை அடுத்த கிருமாம்பாக்கம் பேட் அரசு ஊழியர் நலச்சங்கத்தின் சார்பில் முப்பெரும் விழா செவ்வாய்க்கிழமை கமலா முருகையன் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

என்.எல்.சி. பங்கு விற்பனையைக் கைவிட மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் வலியுறுத்தல்

Posted: 09 Jul 2013 12:24 PM PDT

என்.எல்.சி. நிறுவனத்தின் 5 சதவீத  பங்குகளை விற்க முடிவெடுத்துள்ள மத்திய அரசைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) சார்பில் புதுச்சேரி மத்திய தொழிலாளர் அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை ஆர்பாட்டம்  நடைபெற்றது

மலேரியா விழிப்புணர்வுப் பேரணி

Posted: 09 Jul 2013 12:24 PM PDT

பள்ளி மாணவர்களுக்கு மலேரியா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த பேரணி மற்றும் கூட்டம் புதுச்சேரி அரசு கலவை கல்லூரி பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

5000 பண்ணைக் குட்டைகள் அமைக்க நிதி ஒதுக்கீடு

Posted: 09 Jul 2013 12:23 PM PDT

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ஆதிதிராவிட பழங்குடியினர் சிறு, குறு விவசாயிகளின் நிலங்களில் பண்ணைக் குட்டைகள் அமைப்பது தொடர்பான ஆய்வுக் கூட்டம், விழுப்புரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விடுதிக் காப்பாளர்கள் 6 பேர் இடைநீக்கம்: ஆட்சியர் அதிரடி

Posted: 09 Jul 2013 12:22 PM PDT

விழுப்புரம் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் விடுதிகளில், பணிகளை சரிவர செய்யாத 6 விடுதி காப்பாளர்கள் மற்றும் ஒரு காவலர் அதிரடியாக இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

அங்கன்வாடி மையங்களுக்கு நல உதவிகள் வழங்கல்

Posted: 09 Jul 2013 12:21 PM PDT

திருக்கோவிலூர் தொகுதியில் 71 அங்கன்வாடி மையங்களுக்கு சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.4.29 லட்சம் மதிப்பில், எரிவாயு அடுப்பு, குக்கர்கள் அண்மையில் வழங்கப்பட்டன.

15-ல் கோபாலகிருஷ்ணன் கோயில் கும்பாபிஷேகம்

Posted: 09 Jul 2013 12:20 PM PDT

திருக்கோவிலூர் அருகே மணலூர்பேட்டையில் கோபாலகிருஷ்ணன் கோயில் கும்பாபிஷேகம் வரும் 15-ம் தேதி நடைபெறுகிறது.

டயர் வெடித்து கவிழ்ந்தது லாரி

Posted: 09 Jul 2013 12:20 PM PDT

திண்டிவனம்-புதுச்சேரி சாலையில், செவ்வாய்க்கிழமை மொளச்சூர் அருகே சென்ற மினி லாரி, டயர்வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.

ஓய்வுபெற்ற காவலர் சங்கக் கூட்டம்

Posted: 09 Jul 2013 12:19 PM PDT

தமிழ்நாடு ஓய்வுபெற்ற காவல் மற்றும் சீருடை பணியாளர்கள் நலச்சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.ஸ

பஸ்ஸை சிறைப்பிடித்து மாணவர்கள் மறியல்

Posted: 09 Jul 2013 12:18 PM PDT

திருக்கோவிலூர் அருகே நெடுமுடையான் கிராமத்தில், பள்ளி நேரத்தில் பஸ்ûஸ இயக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, செவ்வாய்க்கிழமை பஸ்ûஸ சிறைப்பிடித்து மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஆஷஸ் டெஸ்ட் தொடர் இன்று தொடக்கம்

Posted: 09 Jul 2013 12:17 PM PDT

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா நாட்டு ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் புதன்கிழமை தொடங்குகிறது. வரும் ஆகஸ்ட் 25-ம் தேதி வரை இப்போட்டி நடைபெற உள்ளது.

புலனாய்வு உபகரணங்கள்: எஸ்.பி. ஆய்வு

Posted: 09 Jul 2013 12:17 PM PDT

விழுப்புரம் மாவட்டத்தில் போலீஸாருக்கு வழங்கப்பட்டுள்ள முதல் புலனாய்வு பெட்டி முறையாக பராமரிக்கப்படுகிறதா என்று மாவட்டம் முழுவதும் போலீஸ் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.  விழுப்புரம் மாவட்டத்தில் 53 காவல் நிலையங்கள் உள்ளன. இந்த காவல் நிலையங்களுக்கு வழக்குகளில்

டிராக்டர் மோதி இளைஞர் சாவு

Posted: 09 Jul 2013 12:16 PM PDT

திருக்கோவிலூர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர், கரும்பு ஏற்றிச் சென்ற டிராக்டர் மோதி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.

பெயர்ப் பலகை திறப்பு

Posted: 09 Jul 2013 12:16 PM PDT

திண்டிவனம் வட்டம், தேங்காய்பாக்கம் கிராமத்தில் காட்டு நாயக்கன் சமூக நலச் சங்கம் சார்பில் பெயர்ப் பலகை திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அரிமா நிர்வாகிகள் பதவியேற்பு

Posted: 09 Jul 2013 12:16 PM PDT

செஞ்சி வட்டம் அவலூர்பேட்டை அரிமா சங்க 2013-14-ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விலவூர் பகுதியில் டெங்கு தடுப்பு நடவடிக்கை

Posted: 09 Jul 2013 12:15 PM PDT

விலவூர் பேரூராட்சியில் டெங்கு காய்ச்சலைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காங்கிரஸ், ஐஎன்டியூசி செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பொய் வழக்குகளை வாபஸ் பெற பாஜக கூட்டத்தில் வலியுறுத்தல்

Posted: 09 Jul 2013 12:14 PM PDT

மதுக்கடையை அகற்ற வலியுறுத்தி படந்தாலுமூட்டில் நடைபெற்ற  அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மீது போடப்பட்ட பொய்  வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என, பாஜக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சி.டி. ஸ்கேன் கட்டண உயர்வு முடிவை திரும்பப் பெற வலியுறுத்தல்

Posted: 09 Jul 2013 12:14 PM PDT

அரசு மருத்துவமனைகளில் சி.டி. ஸ்கேன் கட்டணத்தை உயர்த்த அரசு முடிவு எடுத்து இருப்பதை திரும்பப் பெற வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக் கொண்டுள்ளது.

வெள்ளிமலை கோவிலில் மயிலம் பொம்மபுரம் ஆதீனத்துக்கு வரவேற்பு

Posted: 09 Jul 2013 12:14 PM PDT

கன்னியாகுமரி மாவட்டம், வெள்ளிமலை அருள்மிகு பாலசுப்பிரமணிய  சுவாமி திருக்கோவிலுக்கு வந்த மயிலம் பொம்மபுரம் ஆதீனம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகளுக்கு வெள்ளிமலை ஆலய முன்னேற்றச் சங்கம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

திற்பரப்பு அருவிப் பகுதியில் புறக்காவல் நிலையம்: எஸ்.பி. ஆய்வு

Posted: 09 Jul 2013 12:13 PM PDT

திற்பரப்பு அருவியருகே புறக்காவல் நிலையம் அமைப்பது தொடர்பாக கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் செவ்வாய்க்கிழமை பார்வையிட்டார்.

ஓய்வு பெற்ற அதிகாரி வீட்டில் நகை திருட்டு

Posted: 09 Jul 2013 12:13 PM PDT

நாகர்கோவிலில் ஓய்வுபெற்ற விமானப்படை ஊழியரின் வீட்டில் நகை திருடிய மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

திருநந்திக்கரை பள்ளி வளாகத்தில் கணபதி விக்கிரகம் உடைப்பு

Posted: 09 Jul 2013 12:13 PM PDT

குலசேகரம் அருகே பள்ளி வளாகத்தில் திடீரென்று வைக்கப்பட்ட  கணபதி சிலையை மர்ம நபர்கள் திங்கள்கிழமை உடைத்ததையடுத்து, போலீஸார் 4 பேரை விசாரணைக்கு அழைத்து வந்து காவல்

கொல்லங்கோடு அருகே மோட்டார் சைக்கிள் விபத்து: இருவர் காயம்

Posted: 09 Jul 2013 12:12 PM PDT

கொல்லங்கோடு அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் பலத்த காயமடைந்தனர்.

மருங்கூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஜூலை 14 கும்பாபிஷேகம்

Posted: 09 Jul 2013 12:12 PM PDT

மருங்கூர் திருமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்  அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 14) நடைபெறுகிறது.

உலக துப்பாக்கி சுடுதல்: லஜ்ஜா கோஸ்வாமிக்கு வெள்ளி

Posted: 09 Jul 2013 12:12 PM PDT

உலக துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் லஜ்ஜா கோஸ்வாமி, வெள்ளிப் பதக்கம் வென்றார். இப்போட்டித் தொடரில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் பதக்கம் இதுவாகும்.

கொட்டாரம் கிராம அலுவலக பிரிப்புவிவகாரம்: மக்கள் போராடத் திட்டம்

Posted: 09 Jul 2013 12:12 PM PDT

கொட்டாரம் கிராம அலுவலகத்தைப் பிரித்ததில் உள்ள குளறுபடிகளை  நிவர்த்தி செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி சந்தையடி, இடையன்விளை கிராம  மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

உலக செஸ்: அமைச்சர், அதிகாரிகள் ஆலோசனை

Posted: 09 Jul 2013 12:12 PM PDT

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி தமிழகத்தில் நடைபெறுவதை முன்னிட்டு மாநில அரசின் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நாகர்கோவில்

Posted: 09 Jul 2013 12:11 PM PDT

நாகர்கோவிலில் அகில பாரத ஐயப்ப சேவா சங்க மாவட்ட செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.

பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 09 Jul 2013 12:09 PM PDT

தூத்துக்குடி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு பிஎஸ்என்எல் ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடைக்குள் புகுந்து தாக்குதல்:2 பேர் காயம்;10 பேர் மீது வழக்கு

Posted: 09 Jul 2013 12:09 PM PDT

கோவில்பட்டி தினசரி சந்தையில் உள்ள கடைக்குள் திங்கள்கிழமை புகுந்து தாக்கியதில் 2 பேர் காயமடைந்தனர். இதுதொடர்பாக 10 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிந்துள்ளனர். மந்தித்தோப்பைச் சேர்ந்தவர் கருப்பசாமி (40). மாம்பழ வியாபாரி. இவருக்கும், போடியைச் சேர்ந்த

வேன் கவிழ்ந்து 10 பேர் காயம்

Posted: 09 Jul 2013 12:09 PM PDT

கோவில்பட்டி புதிய பேருந்து நிலையம் அருகே செவ்வாய்க்கிழமை வேன் கவிழ்ந்த விபத்தில் 10 பேர் காயமடைந்தனர்.

ஸ்ரீவைகுண்டம்: சமாதான கூட்டம் தோல்வி

Posted: 09 Jul 2013 12:08 PM PDT

ஸ்ரீவைகுண்டத்தில் விவசாயிகள் மறியல் தொடர்பாக, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சமாதான கூட்டம் தோல்வியில் முடிவடைந்தது.

நகைப் பறிப்பு: 3 பேர் கைது

Posted: 09 Jul 2013 12:08 PM PDT

கோவில்பட்டி பகுதிகளில் நகைப் பறிப்பில் ஈடுபட்டதாக 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

மாநில கால்பந்து போட்டி:திருச்சி, தூத்துக்குடி அணிகள் வெற்றி

Posted: 09 Jul 2013 12:07 PM PDT

தூத்துக்குடியில் நடைபெற்று வரும் மாநில அளவிலான கால்பந்து போட்டியின் 6-ம் நாள் ஆட்டத்தில் திருச்சி மற்றும் தூத்துக்குடி அணிகள் வெற்றி பெற்றன.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™