Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


தலைமுறை தழைத்தோங்கச் செய்வோம்...

Posted: 24 Jul 2013 01:31 PM PDT

குழந்தை பாக்கியம் என்பது இறைவன் கொடுத்த வரம் என்பார்கள். என்னதான் படித்த கணவர், கை நிறைய சம்பளம், பதவி, சொந்த வீடு, கார் என வாழ்க்கையில் எல்லாம் இருந்தும், வீட்டில் மழலைக் குரல் கேட்கவில்லை என்றால் அந்தப் பெண் மனதிற்குள் படும் வேதனையைக் கூற வேண்டியதில்லை.

அன்னிய உணவுக்கு அடிமையாகலாமா?

Posted: 24 Jul 2013 01:28 PM PDT

மந்திய அரிசி - குறிப்பாக பாசுமதி, கோதுமை போன்ற உணவு ஏற்றுமதியில் உலக சாதனை என்று மகிழ்ந்து கொள்ளும் வேளையில், பதனம் செய்யப்பட்ட அன்னிய உணவு இறக்குமதி மதிப்பு உயர்ந்து செல்வது வேதனைக்குரிய விஷயம். மணக்க மணக்க உண்ணக் கூடிய இந்திய உணவுக்கு மவுசு குறைந்துவிட்டது.

வெறுமைக் கோடு!

Posted: 24 Jul 2013 01:25 PM PDT

மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தின்படி, தமிழ்நாட்டில் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் ஏழைகள் நூற்றுக்கு பதினோரு பேர் மட்டும்தான்; கிராமத்தில் ஏழைகள் விகிதம் நூற்றுக்கு 15 பேர் என்றால், நகரத்தில் 7 பேர்தான் ஏழைகள்!

முதல்வர் குறித்து தவறான தகவல்: பிரேமலதா, சுதீஷ் மீது அவதூறு வழக்கு

Posted: 24 Jul 2013 01:19 PM PDT

முதல்வர் குறித்து அவதூறாக செய்தி வெளியிட்டது தொடர்பாக கேப்டன் தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவர் பிரேமலதா விஜயகாந்த், மேலாண் இயக்குநர் எல்.கே.சுதீஷ் ஆகியோர் மீது முதல்வர் சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சஷிகாந்த் சர்மா நியமனத்தை எதிர்த்து மனுக்கள்: மத்திய அரசுக்கு தில்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

Posted: 24 Jul 2013 01:18 PM PDT

மத்திய தலைமைக் கணக்குத் தணிக்கையாளராக (சிஏஜி) சஷிகாந்த் சர்மா நியமிக்கப்பட்டதை எதிர்த்து முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் என். கோபால்சாமி உள்பட ஒன்பது பேர் தாக்கல் செய்த பொது நல மனுக்களை தில்லி உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை விசாரணைக்கு ஏற்றது.

படிப்பைத் தொடர தருமபுரி திவ்யா விருப்பம்

Posted: 24 Jul 2013 01:13 PM PDT

ஏற்கெனவே படித்து வந்த நர்சிங் படிப்பைத் தொடர தருமபுரி திவ்யா விரும்புகிறார் என்று உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு முடிவு இன்று வெளியீடு

Posted: 24 Jul 2013 01:09 PM PDT

பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை (ஜூலை 25) நண்பகல் 12 மணிக்கு வெளியிடப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும்

Posted: 24 Jul 2013 01:07 PM PDT

குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து உடனடியாகத் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

2ஜி: குற்றச்சாட்டுகளை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் கனிமொழி மனு

Posted: 24 Jul 2013 01:06 PM PDT

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில், தன் மீது சிபிஐ சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி மனு தாக்கல் செய்துள்ளார்.

மீனவர் பிரச்னை: புதுவை அரசுக்கு கருணாநிதி கண்டனம்

Posted: 24 Jul 2013 12:54 PM PDT

மீனவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று புதுச்சேரி அரசு ஆணை பிறப்பித்துள்ளதற்கு திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

மோனோ ரயில்: தலைமைச் செயலர் தலைமையில் ஆலோசனை

Posted: 24 Jul 2013 12:50 PM PDT

சென்னையில் மோனோ ரயில் திட்டத்தை விரைவுபடுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை (ஜூலை 24) நடைபெற்றது.

இலங்கை வடக்குப் பகுதியில் ராணுவத்தை குறைக்க முடிவு

Posted: 24 Jul 2013 12:35 PM PDT

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த இலங்கை வடக்கு யாழ்ப்பாணப் பகுதிகளில் ராணுவத்தை குறைக்க திட்டமிட்டுள்ளதாக ராணுவத் தரப்பில் புதன்கிழமை அறிவிப்பு வெளியானது.

நக்சல் பாதித்த மாவட்டங்களுக்கு ரூ.1,000 கோடி உதவி

Posted: 24 Jul 2013 12:35 PM PDT

நாடு முழுவதும் மாவோயிஸ்ட் ஆதிக்கம் நிறைந்த மாவட்டங்களில் வளர்ச்சிப் பணிகள் மற்றும் நலத்திட்டங்களை மேற்கொள்வதற்காக மத்திய அரசு கூடுதல் நிதியுதவியாக ஆண்டுக்கு ரூ.1,000 கோடி ஒதுக்க திட்டமிட்டுள்ளது.

விமான நிலையத்திலிருந்து வெளியேற ஸ்னோடெனுக்கு ரஷியா அனுமதி

Posted: 24 Jul 2013 12:34 PM PDT

அமெரிக்காவின் உளவு ரகசியங்களை அம்பலப்படுத்திய எட்வர்டு ஸ்னோடென், மாஸ்கோ விமான நிலையத்திலிருந்து வெளியேற ரஷியாவின் குடிபெயர்வு சேவைத் துறை அனுமதி அளித்துள்ளது.

கொல்லப்பட்டவர்கள் குறித்த தகவல் அளித்தால் ரூ.5 லட்சம்: சிபிஐ

Posted: 24 Jul 2013 12:33 PM PDT

இஷ்ரத் ஜஹான் என்கவுன்ட்டரின் போது அவருடன் உயிரிழந்த இஷான் ஜோஹர், அம்ஜத் அலி ராணா ஆகியோர் தொடர்பாக நம்பகத்தன்மை வாய்ந்த தகவல்களை அளிப்பவர்களுக்கு ரூ.5 லட்சம் அளிக்கப்படும் என்று சிபிஐ அறிவித்துள்ளது.

எல்லையில் ஊடுருவல் கூடாது: சீனாவிடம் இந்தியா கண்டிப்பு

Posted: 24 Jul 2013 12:32 PM PDT

இந்திய எல்லைக்குள் ராணுவம் ஊடுருவதை நிறுத்திக் கொள்ள வேண்டுமென்று சீனாவிடம் இந்தியா வலியுறுத்தியுள்ளது.

ஆப்கன் முதல் பெண் ஆளுநருக்கு மகசேசே விருது

Posted: 24 Jul 2013 12:31 PM PDT

ஆப்கானிஸ்தான் நாட்டின் முதல் பெண் ஆளுநர் ஹபியா சரபி "ஆசியாவின் நோபல் பரிசு' என்று கூறப்படும் மகசேசே விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

வெங்காய ஏற்றுமதிக்குத் தடை விதிக்கத் தேவையில்லை: சரத் பவார்

Posted: 24 Jul 2013 12:28 PM PDT

வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதிப்பதில் தனக்கு உடன்பாடு இல்லை என்றும், தடை விதித்தால் உலகளவில் முன்னணி வேளாண் பொருள் ஏற்றுமதி நாடு என்ற பெயரை இந்தியா இழந்துவிடும் என்றும் மத்திய வேளாண்துறை அமைச்சர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.

"பிகார் பள்ளியில் நிகழ்ந்த துயரச் சம்பவம்: சரத் யாதவுடன் கருத்து வேறுபாடு இல்லை'

Posted: 24 Jul 2013 12:23 PM PDT

மதிய உணவு சாப்பிட்டு 23 குழந்தைகள் இறந்த துயரச் சம்பவம் தொடர்பாக தாம் சார்ந்துள்ள ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவர் சரத் யாதவுடன் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை என்று பிகார் முதல்வர் நிதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.

பெருநகர பெட்ரோல் விற்பனை நிலையங்களில் 5 கிலோ கேஸ் சிலிண்டர்

Posted: 24 Jul 2013 12:16 PM PDT

பெருநகரங்களில் (மெட்ரோ) உள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்களில் 5 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டர் விற்பனைக்கு வர இருக்கிறது.

ஐரோம் ஷர்மிளாவுக்கு 15 நாள் நீதிமன்றக் காவல்

Posted: 24 Jul 2013 12:14 PM PDT

மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த சமூக சேவகி ஐரோம் சானு ஷர்மிளாவை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க இம்பால் நீதிமன்றம் உத்தரவிட்டது.

பிரணாப் முகர்ஜி பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு

Posted: 24 Jul 2013 12:13 PM PDT

குடியரசுத் தலைவராக பிரணாப் முகர்ஜி பொறுப்பேற்று வியாழக்கிழமையுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது. அதே தினத்தில், அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை

Posted: 24 Jul 2013 12:11 PM PDT

பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை என்று கேரள முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார்.

காரை ஏற்றிக் கொன்ற வழக்கு: நடிகர் சல்மான் கானுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதிவு

Posted: 24 Jul 2013 12:09 PM PDT

நடைபாதையில் படுத்திருந்தவர் மீது காரை ஏற்றிக் கொன்றுவிட்டு நிற்காமல் சென்ற வழக்கில் ஹிந்தி நடிகர் சல்மான் கானுக்கு எதிராக மும்பை செஷன்ஸ் நீதிமன்றத்தில் புதன்கிழமை குற்றச்சாட்டுகள் பதிவுசெய்யப்பட்டன.

உத்தரகண்ட் ஹெலிகாப்டர் விபத்தில் இருவர் சாவு

Posted: 24 Jul 2013 12:05 PM PDT

உத்தரகாண்டில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் பைலட் உள்ளிட்ட 2 பேர் உயிரிழந்தனர்.

ஏழைகள் எண்ணிக்கை குறைந்துள்ளதாகக் கூறி சலுகைகளைப் பறிக்க மத்திய அரசு தந்திரம்

Posted: 24 Jul 2013 12:04 PM PDT

வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக மத்திய அரசு கூறியிருப்பது, ஏழைகளுக்கு வழங்கப்படும் சலுகைகளைப் பறிப்பதற்கான தந்திரம் என பாரதிய ஜனதா கட்சி குற்றம் சாட்டி உள்ளது.

சகாரா குழும நிறுவனங்களுக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ்

Posted: 24 Jul 2013 12:01 PM PDT

சகாரா குழுமத்தைச் சேர்ந்த சகாரா இந்தியா ரியல் எஸ்டேட் கார்ப்பரேஷன், சகாரா ஹவுஸிங் இன்வெஸ்ட்மெண்ட் கார்ப்பரேஷன் ஆகியவற்றுக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீûஸ உச்ச நீதிமன்றம் அனுப்பியுள்ளது.

"1000 இளைஞர்களை பாஜகவில் சேர்த்தால் மோடியை சந்திக்கலாம்'

Posted: 24 Jul 2013 11:48 AM PDT

ஆயிரம் இளைஞர்கள் அல்லது அதற்கும் மேலாக இளைஞர்களை பாஜகவில் உறுப்பினராக சேர்க்கும் தொண்டர், நரேந்திர மோடியை நேரடியாக சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

"கடித விவகாரத்தில் தொடர்பு இல்லை'

Posted: 24 Jul 2013 11:41 AM PDT

நரேந்திர மோடிக்கு விசா வழங்கக் கூடாது என்று இந்திய எம்.பி.க்கள் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு கடிதம் எழுதியது தனிநபர்களின் பிரச்னை, இதில் தங்கள் கட்சிக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று காங்கிரஸ் கூறியுள்ளது.

காங்கிரஸின் சதியே காரணம்

Posted: 24 Jul 2013 11:40 AM PDT

குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு விசா வழங்கக் கூடாது என்று அமெரிக்காவுக்கு 65 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடிதம் எழுதியதற்கு காங்கிரஸ் கட்சியின் சதியே காரணம் என பாரதிய ஜனதா கட்சி குற்றம் சாட்டி உள்ளது.

மோடிக்கு விசா வழங்க எதிர்ப்பு: ஒபாமாவுக்கு எம்.பி.க்கள் எழுதிய கடிதம் எழுப்பும் சர்ச்சை

Posted: 24 Jul 2013 11:37 AM PDT

குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு விசா வழங்கக் கூடாது என்று வலியுறுத்தி அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு இந்திய எம்.பி.க்கள் 65 பேர் கையெழுத்திட்டு அனுப்பியதாக சொல்லப்படும் கடிதம் தற்போது சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது.

பிகாரில் 23 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம்: பள்ளி முதல்வர் சரண்

Posted: 24 Jul 2013 11:14 AM PDT

பிகாரில் விஷம் கலந்த மதிய உணவு சாப்பிட்டு 23 குழந்தைகள் உயிரிழந்த பள்ளியின் முதல்வர், மாநில போலீஸாரிடம் சரணடைந்தார். அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கங்கையின் கோர தாண்டவம்! மீண்டுவரும் சிவனார் பூமி! (மினி தொடர் - பகுதி 10)

Posted: 24 Jul 2013 11:02 AM PDT

மாலை நேரம் ஆகியும் பிரதான் பூஜாரியை காணாததால் அவரும் தண்ணீரோடு பயணப்பட்டு விட்டதாக பேசிக் கொண்டார்கள். பல சாதுக்களும் கூட தப்பவில்லை. பாரத் சேவா சங்க ஆஸ்ரமம் உள்பட பல வரிகளில் உள்ள பல கட்டிடங்கள் இருந்த சுவடையே காணோம். மறுபடி அறைக்குள் முடங்கினோம். பாட்டில்களில் பிடித்த மழை நீர் இரவு தாகத்திற்கு இருந்தது. உயிர் உத்திரவாதம் இல்லாத கணங்களினால் எதைப் பற்றியும் சிந்தனை எனக்குள் எழவில்லை.

பல்கேரிய நாடாளுமன்றம் முற்றுகை: எம்.பி.க்களை மீட்டனர் போலீஸார்

Posted: 24 Jul 2013 10:53 AM PDT

பல்கேரியாவில் அரசுக்கு எதிரான போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தை செவ்வாய்க்கிழமை மாலை முற்றுகையிட்டனர். உள்ளே சிக்கிக் கொண்ட எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்களை எட்டு மணி நேரத்துக்குப் பிறகு போலீஸார் புதன்கிழமை வெளியே மீட்டு வந்தனர்.

மத்திய மாகாண கவுன்சில் தேர்தல்: போட்டியிட தமிழ்க் கட்சிகள் அடங்கிய புதிய கூட்டணி

Posted: 24 Jul 2013 10:52 AM PDT

இலங்கையில் செம்படம்பர் மாதம் நடைபெறவுள்ள மத்திய மாகாண கவுன்சில் தேர்தலில் போட்டியிட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நான்கு கட்சிகள் அடங்கிய புதிய கூட்டணி (யு.பி.எஃப்) அமைக்கப்பட்டுள்ளது.

மோடிக்கு விசா வழங்க எதிர்ப்பு: இந்திய எம்.பி.க்கள் கடிதத்துக்கு அமெரிக்க இந்தியர்கள் ஆதரவு

Posted: 24 Jul 2013 10:51 AM PDT

குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு விசா வழங்கக் கூடாது என்று அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுதியுள்ள கடிதத்தை மதச்சார்பற்ற இந்திய வம்சாவளி அமெரிக்க குழு நியாயப்படுத்தி உள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு சென்ற படகு கவிழ்ந்து 9 பேர் சாவு

Posted: 24 Jul 2013 10:50 AM PDT

ஆஸ்திரேலியாவை நோக்கி சென்று கொண்டிருந்த படகு கவிழ்ந்ததில் 9 பேர் உயிரிழந்தனர். மேலும் பலரைக் காணவில்லை.

இராக்கில் பயங்கரவாதிகள் தாக்குதல்: 9 போலீஸார் சாவு

Posted: 24 Jul 2013 10:50 AM PDT

இராக்கில் போலீஸ் நிலையம் ஒன்றின் மீது பயங்கரவாதிகள் பீரங்கிகளாலும் தானியங்கி துப்பாக்கிகளாலும் தாக்குதல் நடத்தியதில் 9 போலீஸார் உயிரிழந்தனர்.

சாலமன் தீவுகளில் இருந்து அமைதிப் படை வாபஸ்

Posted: 24 Jul 2013 10:49 AM PDT

சாலமன் தீவுகளில் இருந்து 10 ஆண்டுகளுக்குப் பிறகு அமைதிகாக்கும் படை வாபஸ் பெறப்பட்டுள்ளது.

நிலக்கடலை மகசூலுக்கு உதவும் விதைப்பண்ணை!

Posted: 24 Jul 2013 10:43 AM PDT

தருமபுரி மாவட்டத்தில் நிலக்கடலை பயிரில் விதைப்பண்ணை அமைத்தால் அதிக மகசூல் பெறலாம் என விதைச்சான்று உதவி இயக்குநர் வெ.கிருஷ்ணன் தெரிவித்தார்.

ஆடு வளர்ப்பிலுள்ள பிரச்னைகளும், தீர்வுகளும்!

Posted: 24 Jul 2013 10:42 AM PDT

தற்போதைய சூழலில் ஆடு வளர்ப்புத் தொழிலில் உள்ள பிரச்னைகளும், அதற்கானத் தீர்வுகளும் குறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி நிர்வாகம் பல்வேறு வழிமுறைகளை தெரிவித்துள்ளது.

சீமானுக்கு பிடிவாரண்ட் உத்தரவு தளர்வு

Posted: 24 Jul 2013 10:29 AM PDT

இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசிய வழக்கில் திரைப்பட இயக்குநர் சீமானுக்கு பிறப்பிக்கப்பட்டிருந்த பிடிவாரண்ட் உத்தரவை தளர்வு செய்யப்பட்டது.

மஞ்சுளா உடல் தகனம்

Posted: 24 Jul 2013 10:28 AM PDT

உடல் நலக்குறைவால் காலமான நடிகை மஞ்சுளாவின் (59) உடல் சென்னையில் புதன்கிழமை தகனம் செய்யப்பட்டது.

மேட்டூர் அணை நீர்மட்டம் 82 அடியாக உயர்வு

Posted: 24 Jul 2013 10:27 AM PDT

மேட்டூர் அணையின் நீர்மட்டம் புதன்கிழமை 82.39 அடியாக உயர்ந்தது.

சென்னை அடையாறில் உள்ளது போல நாமக்கலில் கல் பூங்கா அமைப்பு

Posted: 24 Jul 2013 10:26 AM PDT

சென்னை அடையாறில் உள்ள சுற்றுச்சூழல் பூங்காவுக்கு(தொல்காப்பியர் பூங்கா) அடுத்தபடியாக நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலும் கல் பூங்கா அமைக்கப்படுகிறது.

வால்பாறையில் பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

Posted: 24 Jul 2013 08:32 AM PDT

கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதையடுத்து வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை(ஜூலை.25) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்து இயக்க நிர்வாகிகள் கொலைகள்: பயங்கரவாதிகளின் தகவல்களை அளித்தால் ரூ.20 லட்சம் பரிசு

Posted: 24 Jul 2013 08:07 AM PDT

இந்து இயக்க நிர்வாகிகள் கொலை வழக்குத் தொடர்பாக தேடப்படும் 4 பயங்கரவாதிகளை பற்றி தகவல் அளித்தால் ரூ. 20 லட்சம் பரிசு வழங்கப்படும் தமிழக காவல்துறை அறிவித்துள்ளது.மேலும் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

மோடி என்றால் காங்கிரசுக்கு நடுக்கம்:பாஜக

Posted: 24 Jul 2013 07:53 AM PDT

உத்தரப்பிரதேச மாநிலத்தை பார்வையிட நரேந்திரமோடி திட்டமிட்டுள்ளார்.இதனால் அம்மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ்,சமாஜவாதி,பகுஜன் சமாஜ்,உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் மோடியை கடுமையாக விமர்சனம்

விமான நிலையத்திலிருந்து வெளியேற ஸ்னோடெனுக்கு ரஷியா அனுமதி

Posted: 24 Jul 2013 07:33 AM PDT

ரஷியாவின் இந்த நடவடிக்கை, ஸ்னோடெனின் அடைக்கலம் கோரும் விண்ணப்பத்தை பரிசீலித்து வருவதை உறுதிப்படுத்துவதாக உள்ளது. அதேநேரம், எல்லைப் பாதுகாப்புப் படையினர் அனுமதி வழங்கினால் மட்டுமே

கிரிக்கெட்: இந்தியா வெற்றி

Posted: 24 Jul 2013 07:30 AM PDT

5 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக ஜிம்பாப்வே சென்றுள்ள இந்திய அணி இன்று முதல் போட்டியில் பங்கேற்றது. முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கை

டி.இ.டி அறிவுக்கான அரங்கம்: எண்களுக்கான தமிழ் எழுத்துக்கள் அறிவோம்

Posted: 24 Jul 2013 07:08 AM PDT

எண்களுக்கான தமிழ் எழுத்துக்களை அறிந்து பயன்பெறுவோம்

சிதம்பரம் அருகே டிராக்டர் மோதி 5 வயது சிறுமி சாவு

Posted: 24 Jul 2013 06:56 AM PDT

சிதம்பரம் அருகே உள்ள பின்னத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கமர்ஜமால் மகள் ரிபைனாஆஸ்ரின் (வயது.5). பின்னத்தூர் அல்அமீன் பள்ளியில் யுகேஜி படிக்கும் இச்சிறுமி இன்று பள்ளிவாசலில் கஞ்சி வாங்கிக் கொண்டு

விழுப்புரம் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் 2 பேர் நீக்கம்: ஜெயலலிதா நடவடிக்கை

Posted: 24 Jul 2013 06:55 AM PDT

கட்சியின் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும், அவப்பெரும் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்ட காரணத்தால், விழுப்புரம் தெற்கு மாவட்ட வழக்குரைஞர் பிரிவின் பொருளாளர் எஸ்.சின்னதுரை,

2ஜி குற்றச்சாட்டுகளை ரத்து செய்யக் கோரி கனிமொழி மனு: ஆக. 1-இல் விசாரணைக்கு வரும்?

Posted: 24 Jul 2013 06:37 AM PDT

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில், தன் மீது சிபிஐ சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி மனு தாக்கல் செய்துள்ளார். அவரது மனு ஆகஸ்ட் 1-ம் தேதி விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாணவர் காங்கிரஸ் தேர்தல்:வாசன் ஆதரவாளர்கள் அதிகளவில் வெற்றி

Posted: 24 Jul 2013 06:24 AM PDT

மாணவர் காங்கிரஸ் தேர்தலில் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசனின் ஆதரவாளர்கள் அதிகளவில் வெற்றிபெற்றனர்.மாணவர் காங்கிரஸ் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட சுனில் ராஜா 1586 வாக்குகள்

ஊருக்குள் வராத மாநகர பஸ் சிறைபிடிப்பு

Posted: 24 Jul 2013 06:22 AM PDT

பொன்னேரி வட்டம், சோழவரம் ஒன்றியத்தில் புதிய எருமை வெட்டிப்பாளையம், பழைய எருமை வெட்டிப்பாளையம் ஆகிய இரு கிராமங்கள் உள்ளன.இக்கிராமங்களில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட

பிரணாப் முகர்ஜி பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு

Posted: 24 Jul 2013 06:19 AM PDT

இந்த நூலகம் முழுவதுமாக குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது. இங்கு பல்வேறு தகவல்கள் அடங்கிய புத்தகங்கள், செய்தித் தாள்கள், கட்டுரைகள் இடம்பெற்றுள்ளது. மாற்று திறனாளி குழந்தைகள் உள்பட

சிதம்பரத்தில் கோயிலை சுற்றி ஆழ்துளை கிணறுகள் தோண்டப்படுவதால் கோயில் ஸ்திரதன்மை பாதிக்கும்

Posted: 24 Jul 2013 06:08 AM PDT

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலைச் சுற்றியுள்ள வீதிகளில் பல ஆயிரம் அடி ஆழ்துளை கிணறுகள் தோண்டப்படுவதால் கோயிலின் ஸ்திரத்தன்மை பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஆழ்துளை

தேர்தல் கூட்டணிக்காக சுயமரியாதையை விட்டு கொடுக்கமாட்டோம்: வைகோ

Posted: 24 Jul 2013 06:03 AM PDT

தமிழகத்தில் நிலவும் மின்வெட்டுக்கு கூடங்குளம் தீர்வாகும் என்ற தவறான கருத்தை மத்திய அரசு கூறி வருகிறது. கானல் நீரை காட்டி தமிழர்களை ஏமாற்றுகிறார்கள். இடிந்தகரையில் 710 நாள்களுக்கு மேலாக

கனமழை: ஊட்டி,கூடலூர் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

Posted: 24 Jul 2013 05:54 AM PDT

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக நீலகிரி மாவட்டம் ஊட்டி, குந்தா, பந்தலூர், கூடலூர் ஆகிய பகுதிகளில் நாளை பள்ளி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீஆண்டாள் தேரோட்டம்: ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

Posted: 24 Jul 2013 05:50 AM PDT

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் ஆடி்பபூரத் தேர்த்திருவிழா நடைபெறுவதையொட்டி முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் டி.என்.ஹரிஹரன் தலைமையில்

ராஜபாளையம் நகராட்சியில் காலிப் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பரிந்துரை

Posted: 24 Jul 2013 05:46 AM PDT

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் நகராட்சியில் பணி ஆய்வாளர், குழாய் பொருத்துநர், குழாய் திருகுநர், இளநிலை உதவியாளர், ஓட்டுநர், துப்புரவு பணியாளர், துப்புரவு பணி மேற்பார்வையாளர், நகரமைப்பு

மோடிக்கு எதிராக எம்.பி.க்கள் கடிதம் காங்கிரஸின் சதியே காரணம் என பாஜக குற்றசாட்டு

Posted: 24 Jul 2013 05:44 AM PDT

மோடிக்கு விசா வழங்க்க கூடாது என வலியுறுத்தி அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு எழுதி உள்ள கடிதத்தில் 40 மக்களவை உறுப்பினர்களும், 25 மாநிலங்களவை உறுப்பினர்களும் கையெழுத்திட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

வெளிநாடுகளுக்கு கடத்தவிருந்த டீசல் பேரல்கள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல்

Posted: 24 Jul 2013 05:43 AM PDT

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே வெளிநாட்டிற்கு அனுப்ப பதுக்கி வைத்திருந்த டீசல், குடி நீர் கேன்கள், சமையல் பொருள்கள், பீடி, சிகரெட் பண்டல்கள் உள்ளிட்ட பொருள்களை  போலீஸார் இன்று(புதன்

சுவாமிஜி பற்றி மிஸஸ் ரைட்

Posted: 24 Jul 2013 05:08 AM PDT

சிகாகோவிற்குப் புறப்படுவதற்கு முன்பு ஒரு வாரம் சுவாமிஜி துரித கதியில் இயங்க வேண்டியிருந்தது.

இந்த நாளில் அன்று: 25 ஜூலை 1995: * ஆர்.எம்.வீ.க்கு எதிராக அறிக்கை வேண்டாம்: அதிமுக

Posted: 24 Jul 2013 05:00 AM PDT

இந்த நாளில் அன்று: 25 ஜூலை 1995: * ஆர்.எம்.வீ.க்கு எதிராக அறிக்கை வேண்டாம்: அதிமுக

பாலக்காடில் இருந்து மங்களூர் தனியாகப் பிரிக்கப்படக் கூடாது: எஸ்.ஆர்.எம்.யூ. பொதுச் செயலர் கண்ணையா

Posted: 24 Jul 2013 04:53 AM PDT

ரயில்வேயில் பல்வேறு நிலைகளில் 2.4 லட்சம் காலிப் பணியிடம் உள்ளது. வரும் 2016ல் 30 முதல் 35 சதவீதம் பணியாளர்கள் பணி ஓய்வு பெறுகின்றனர். இதனால், 4 லட்சம் காலியிடன்கள் உருவாகும்.

கடைகள், வணிக நிறுவன ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: ஜூலை 10-ம் தேதி முதல் அமல்படுத்த உத்தரவு

Posted: 24 Jul 2013 04:38 AM PDT

தமிழகத்திலுள்ள அனைத்து கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அனைத்து கடைகள் மற்றும் வணிக நிறுவன ஊழியர்களுக்கு

குழந்தைகள் பலியான விவகாரம்: பள்ளி தலைமை ஆசிரியர் சரண்

Posted: 24 Jul 2013 04:31 AM PDT

பீகார் மாநிலம் சரண் மாவட்டம் தர்மசதி கண்டவான் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் கடந்த 16–ந் தேதி அன்று மதிய உணவு சாப்பிட்ட 23 குழந்தைகள் பலியானார்கள்.  சம்பவத்தை தொடர்ந்து அந்த

மறியலில் ஈடுபட்ட டிராக்டர் உரிமையாளர்கள் மீது போலீஸார் தடியடி: 35 பேர் கைது

Posted: 24 Jul 2013 04:26 AM PDT

ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தையை மீறி செயல்படும் கோட்டாட்சியர், மற்றும் போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; டிராக்டர் உரிமையாளர்கள் மீது பொய் வழக்கு போடுவதைத் தடுக்க

தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை ஆரம்பம்

Posted: 24 Jul 2013 04:21 AM PDT

தேனி மருத்துவக்கல்லூரியில் மருத்துவபடிப்பிற்கு 100 சீட்டுகள் உள்ளன.இவற்றிற்கு தமிழ்நாடு அரசின் கலந்தாய்வின் மூலம் 85 இடங்களும் மத்தி. அரசின் ஒதுக்கீட்டில் 15 இடங்கள் உள்ளன. தமிழக அரசின் 85

இந்த நாளில் அன்று: 24 ஜூலை 1995: * ரஜினியை எதிர்ப்பதில் அ.தி.மு.க பின்வாங்கல்

Posted: 24 Jul 2013 04:18 AM PDT

இந்த நாளில் அன்று: 24 ஜூலை 1995 :* ரஜினியை எதிர்ப்பதில் அ.தி.மு.க பின்வாங்கல்

ஹெலிகாப்டர் விபத்து: 2 பேர் பலி

Posted: 24 Jul 2013 04:17 AM PDT

உத்தரகண்ட் மாநிம் கேதர்நாத் அருகே கருன்கட்டி பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில் 2 பேர் பலியாகினர்.

ஆப்கான், மியான்மர் பெண்களுக்கு மகசேசே விருது

Posted: 24 Jul 2013 04:13 AM PDT

நோபல் பரிசுக்கு நிகராக கருதப்படும் ஆசியாவின் மகசேசே விருதைப் பெற இந்த ஆண்டு ஆப்கான் மற்றும் மியான்மர் நாட்டைச் சேர்ந்த பெண்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

நெல்லை புறநகர், மாநகர் மாவட்டம் சார்பில் வைகோவிடம் ரூ. 1 கோடி தேர்தல் நிதி

Posted: 24 Jul 2013 04:12 AM PDT

திருநெல்வேலி புறநகர் மற்றும் மாநகர் மாவட்ட ம.தி.மு.க. சார்பில் தேர்தல் நிதியளிப்பு கூட்டம், திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கட்சியின் புறநகர்

சாலையோரத்தில் சிதறிக் கிடந்த ஜூன் மாத தபால் கடிதங்கள்

Posted: 24 Jul 2013 04:10 AM PDT

செய்யாறு பைபாஸ் சாலையில் டாஸ்மார்க் கடை அருகே சாலையோரத்தில் சுமார் 200 க்கும் மேற்பட்ட கடிதங்கள் சிதறிக்கிடந்தன. இவை அனைத்தும் 2013 ஜூன் மாதத்தின் 20,21,24 தேதியிட்ட திருவத்திபுரம் அஞ்சலகம்

பெண் எஸ்.ஐ. கொலை வழக்கில் மேலும் 2 பேர் கைது

Posted: 24 Jul 2013 04:07 AM PDT

காஞ்சிபுரம் மாவட்டம் மேல்மருவத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் கலைவாணி (29). இவருக்கு, கனகம்மாசத்திரம் கிராமத்தைச் சேர்ந்த வக்கீல் குமாஸ்தாவான

பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை: உம்மன் சாண்டி

Posted: 24 Jul 2013 04:04 AM PDT

சோலார் பேனல் மோசடி தொடர்பாக கேரள உயர்நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விசாரணையில் உம்மன் சாண்டி அரசு மீது நீதிபதிகள் கடும் விமர்சனங்களை தெரிவித்தனர். இதனால் அவர்

ஆப்கானின் முதல் பெண் ஆளுநருக்கு மகசேசே விருது

Posted: 24 Jul 2013 03:59 AM PDT

கடந்த 2005-ம் ஆண்டு ஆப்கான் நாட்டிலேயே முதன்முறையாக ஆளுநர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்மணி டாக்டர் ஹபிபா சரபி. பாமியான் மாகாண கவர்னரான அவருக்கு, உள்ளாட்சியமைப்பை

நடிகை மஞ்சுளா உடல் தகனம்

Posted: 24 Jul 2013 03:57 AM PDT

உடல் நலக் குறைவால் நேற்று காலமான நடிகை மஞ்சுளா உடல் இன்று மாலை 3 மணிக்கு போரூரில் உள்ள மின்சார மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.மஞ்சுளா சிதைக்கு அவரது கணவர் விஜயகுமார் தீ மூட்டினார்.

211 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகம் நிறைவு

Posted: 24 Jul 2013 03:50 AM PDT

கடந்த 4 நாட்களாக உயர்வான நிலையில் இருந்த பங்கு வர்த்தகம் புதன்கிழமை மாலை சரிவுடன் நிறைவு பெற்றது.

சிறுநீரக கற்கள் உருவாகாமல் தடுக்கலாம்

Posted: 24 Jul 2013 03:46 AM PDT

சிறுநீரக கற்கள் உருவாவதை சில அறிகுறிகளை வைத்து தெரிந்து கொள்ளலாம் என்று பார்த்தோம்.

காலை உணவை தவிர்க்காதீர்: மாரடைப்பு வருமாம்

Posted: 24 Jul 2013 03:44 AM PDT

காலையில் ஏதேனும் ஒரு உணவை சாப்பிடுபவர்களை விட, காலை உணவை முற்றிலுமாக தவிர்ப்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தியாவுக்கு 229 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஜிம்பாப்வே

Posted: 24 Jul 2013 03:43 AM PDT

5 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக ஜிம்பாப்வே சென்றுள்ள இந்திய அணி இன்று முதல் போட்டியில் பங்கேற்கிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கை தேர்வு

மோடி போட்டியிடுவதைத் தடை செய்ய வேண்டும்: ஆஸ்மி

Posted: 24 Jul 2013 03:40 AM PDT

வரும் 2014 நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி போட்டியிடுவதைத் தடை செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்குக் கடிதம் எழுதியுள்ளார் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் ஆஸ்மி.

இளமையாக இருக்க நன்றாக தூங்குங்கள்

Posted: 24 Jul 2013 03:32 AM PDT

அனைவருமே இளமையாக இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். அதற்காக எத்தனையோ விஷயங்களை செய்வார்கள். ஆனால், இளமையாக இருக்க வேண்டும் என்றால், நன்றாக தூங்குங்கள் என்று சொல்கிறது மருத்துவம்.

ரயில் நிலையத்தில் மூடிக்கிடக்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம், பயணிகள் ஓய்வு அறை

Posted: 24 Jul 2013 03:31 AM PDT

காரைக்காலில் இருந்து வெளிமாநிலங்களுக்கு செல்லும் வகையில் ரயில் எண்ணிக்கை அதிகரிக்கும்போது, நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரமும், ஓய்வு அறையும் மூடிக்கிடக்கிறது. இதோடு டிக்கெட்

பச்சையப்பா கல்லூரி மாணவர்கள் 10 பேர் சஸ்பெண்ட்

Posted: 24 Jul 2013 03:25 AM PDT

சென்னையிலுள்ள பிரசிடென்சி கல்லூரி மாணவர்களுக்கும், பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கும் இடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு மோதல் ஏற்பட்டது இந்த மோதலின் போது, பஸ் கண்டக்டர் மீதும்

ஸ்ரீஜயந்திர சரஸ்வதி சுவாமிகளின் 79 வது ஜயந்தி: காஞ்சியில் விமரிசையாகக் கொண்டாட்டம்

Posted: 24 Jul 2013 03:16 AM PDT

காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஜயந்திர சரஸ்வதி சுவாமிகளின் 79- வது ஜயந்தி உத்ஸவம் புதன்கிழமை நடைபெற்றது. இதனை முன்னிட்டு சங்கரமடத்தில் காலை 5 மணிக்கு ஸ்ரீ ஜயந்திர சரஸ்வதி சுவாமிகளின் விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து சுவாமிகள் காமாட்சியம்மன் கோயிலுக்கு சென்று அங்கு அம்மனுக்கு சிறப்பு பால் அபிஷேகம் செய்து வைத்தார்.

சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 6 அடி உயர்வு: கடனாநதி அணை 2 முறை நிரம்பியது

Posted: 24 Jul 2013 03:14 AM PDT

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் மழை நீடித்துவருகிறது.இன்று காலை நிலவரப்படி பாபநாசம் அணையில் 47 மி.மீ மழையும், பாபநாசம் கீழ்அணையில் 20 மி.மீ மழையும், சேர்வலாறு அணையில்

ரயில் போக்குவரத்து மாற்றம்

Posted: 24 Jul 2013 03:11 AM PDT

திருவெண்ணெய் நல்லூர் மற்றும் பரிக்கால் (விருத்தாச்சலம்) இடையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மதுரையில் இருந்து செல்லும் சில ரயில்களின் போக்குவரத்து 24-ம் தேதி மட்டும் கீழ்க்கண்டவாறு

பிளஸ் 2 துணை தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு

Posted: 24 Jul 2013 03:07 AM PDT

ஜூன் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 துணைதேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படுகின்றன. தேர்வு முடிவுகளை www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.மதிப்பெண் சான்றிதழ்களை வருகிற 30ம்

உத்தர்கண்டில் மீண்டும் கன மழை

Posted: 24 Jul 2013 02:56 AM PDT

பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உத்தர்கண்டில் மீண்டும் கன மழை பெய்து வருகிறது. இதனால் ஏராளமான பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு வீடுகள் தரைமட்டமாகியுள்ளன.

டிக்கெட் கொடுப்பதில் தாமதம்: ரயில்வே நிலைய அதிகாரி மீது தாக்குதல்

Posted: 24 Jul 2013 02:53 AM PDT

கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் ரயில் நிலையத்தில் இன்று டிக்கெட் கொடுப்பதில் ஏற்பட்ட தகராறின் காரணமாக ரயில்நிலைய அதிகாரி திருஞானசம்பந்தன்(23) தாக்கப்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு

சல்மான் கானுக்கு எதிராக குற்றப்பதிவு தயார்

Posted: 24 Jul 2013 02:52 AM PDT

காரை வேகமாக ஓட்டி மரணத்தை ஏற்படுத்திய ஹிந்தி நடிகர் சல்மான் கானுக்கு எதிராக குற்றப்பதிவு தயாரிக்கப்பட்டுள்ளது.

ஆந்திராவிற்கு கடத்த இருந்த 800 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

Posted: 24 Jul 2013 02:51 AM PDT

கும்மிடிப்பூண்டி மார்க்கமாக ஆந்திராவிற்கு சென்னையில் இருந்து காரில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக வந்த தகவலை தொடர்ந்து கும்மிடிப்பூண்டி வட்ட வழங்கல் அலுவலர் புகழேந்தி தலைமையில் அதிகாரிகள்

2ஜி வழக்கில் இருந்து விடுவிக்ககோரி கனிமொழி மனு தாக்கல்

Posted: 24 Jul 2013 02:49 AM PDT

2ஜி வழக்கில், கலைஞர் டிவிக்கு ரூ. 200 கோடி லஞ்சப் பணம் கைமாறியதாக சிபிஐ தரப்பில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.இதனையடுத்து கலைஞர் டி.வி.யின் பங்குதாரர் என்ற அடிப்படையில் கனிமொழி கைது

ராமநாதபுரத்தில் வீட்டின் கதவை உடைத்து ரூ. 15 லட்சம் மதிப்புள்ள நகைகள் திருட்டு

Posted: 24 Jul 2013 02:48 AM PDT

ராமநாதபுரத்தில் மோர்க்கடை ஒன்றாவது தெருவில் வசித்து வருபவர் ரத்தினம் மகன் கார்த்திக். இவர் மூங்கில் விற்கும் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்.

தன்னுயிர் கொடுத்து நண்பர்களைக் காத்த மாணவர்

Posted: 24 Jul 2013 02:36 AM PDT

கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்டவர்களில் இரு மாணவர்கள் ஆபத்தான நிலையில் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். தனது உயிரைப் பொருட்படுத்தாமல் சென்று, சக மாணவர்களைக் காப்பாற்றிய அந்த மாணவர், அலையின் சீற்றத்தில் இருந்து அவரது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை.

உத்தர்கண்டில் வருமானவரி கணக்கை தாக்கல் செய்ய அவகாசம்

Posted: 24 Jul 2013 02:36 AM PDT

கன மழை மற்றும் பெரும் வெள்ளம் பாதித்த உத்தர்கண்டில் வசிப்போர், தங்களது வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™