Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Daily Thanthi

Daily Thanthi


அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டு அளவுகள் கணக்கீடு

Posted: 12 Jul 2013 02:08 PM PDT

அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கும்போது வீட்டின் அளவுகள் பற்றிய விவரத்தை தெரிந்து கொள்வதில் சிலருக்கு குழப்பம் ஏற்படுகிறது. அதனால் எத்தனை சதுர அடியில் வீடு வாங்கி இருந்தாலும் தனி வீட்டை ஒப்பிடும்போது பார்ப்பதற்கு சிறியதாக இருப்பதுபோல் தோன்றும். அதற்கு காரணம் அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டின் அளவுகள் குறிப்பிட்ட விதங்களில் பிரிக்கப்பட்டு கணக்கிடப்படுகிறது. அதுபற்றிய விவரங்களை ஓரளவு தெரிந்து கொண்டால் வீட்டை வாங்கும்போது தெளிவு பெறுவதுடன் அது சார்ந்த பிரச்சினைகளில் இருந்தும் விடுபடலாம். வீட்டின் அளவுகள் வகைப்படுத்தப்படும் விதம் பற்றி பார்ப்போம்.

கார்பெட் ஏரியா

உள்சுவர் வடிவமைப்பில் புதிய தொழில்நுட்பம்

Posted: 12 Jul 2013 02:03 PM PDT

கட்டிடங்கள் கட்ட செங்கற்களுக்கு மாற்றாக 'பிளைவுட்ஸ்' உள்ளிட்ட மர வேலைப்பாடுகள் கலந்த பலகைகள்  சுவர்களாக எழுந்து நிற்கின்றன. இவை பெரும்பாலும் அலுவலகங்கள், வணிக வளாகங்கள் போன்றவற்றின்  கட்டுமானத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. குறிப்பாக சிறிய சிறிய அறைகளாக பிரித்து எழில் தோற்றத்தை  கொடுக்கும் வகையில் சுவர்களை வடிவமைப்பதற்கு உதவுவதால் இதன் பயன்பாடு குறிப்பிட்டு சொல்லும்  வகையில் உள்ளது.

வீட்டை அலங்கரிக்கும் பர்னிச்சர்கள்

Posted: 12 Jul 2013 02:01 PM PDT

வீட்டின் அறைகளை அலங்காரம் செய்ய நினைப்பவர்கள் அதிகம் கவனம் செலுத்துவது வரவேற்பரையாக தான் இருக்க முடியும். வீட்டுக்கு வருபவர்களின் கவனத்தை ஈர்க்கும் இடம் என்பதால் அதனை அற்புதமாக வடிவமைக்க விரும்புவார்கள். அதிலும் விருந்தினர்களை வரவேற்று அவர்களுடன் அமர்ந்து பேசி கொண்டு இருப்பதற்கு அழகிய பர்னிச்சர்கள் அமைந்திருக்க வேண்டும் என்று எண்ணுவார்கள். அத்தகைய பர்னிச்சர்களை தேர்ந்தெடுப்பதற்கு சில ஆலோசனைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. அது பற்றிய விவரம் வருமாறு:–

 பர்னிச்சர்களை தேர்ந்தெடுக்கும்போது இடவசதிக்கு ஏற்றதாக அவை இருக்கின்றதா? என்பதை பார்க்க வேண்டும்.

கட்டுமான ஒப்பந்தத்தில் இடம்பெற வேண்டிய அம்சங்கள்!

Posted: 12 Jul 2013 01:59 PM PDT

வீடு கட்டுவதற்கு கட்டுமான நிறுவனங்களை நாடும்போது கட்டுமான விவரங்கள் குறித்து பலரும் ஒப்பந்தம் போட்டுக்கொள்கிறார்கள். அதில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்கள்படி வீட்டை கட்டி தந்து விட்டால் பிரச்சினை இல்லை. சில நேரங்களில் காலதாமதமோ அல்லது வேறு ஏதாவது சிக்கலோ ஏற்பட்டால் சிரமத்துக்கு ஆளாக நேரிடும். இந்த சிக்கலில் மாட்டிக்கொள்ளாமல் இருக்க வீடு வாங்கும்போது போடப்படும் ஒப்பந்தத்தில் இடம்பெறவேண்டிய முக்கிய விஷயங்கள் சிலவற்றை பார்ப்போம்.

தந்தி டி.வி.யில் நட்புடன் அப்சரா

Posted: 12 Jul 2013 01:24 PM PDT

குஜராத் கலவரத்தின்போது நான் எடுத்த நடவடிக்கை சரிதான்: நரேந்திர மோடி

Posted: 12 Jul 2013 12:33 PM PDT

ஆமதாபாத்

குஜராத் கலவரத்தின்போது நான் மேற்கொண்ட நடவடிக்கை முற்றிலும் சரியானதுதான் என்று, முதல்–மந்திரி நரேந்திரமோடி கூறினார்.

குஜராத் கலவரம்

இந்திப்பட வில்லன் நடிகர் பிரான் மரணம்

Posted: 12 Jul 2013 12:24 PM PDT

மும்பை

93 வயதான பழம்பெரும் இந்திப்பட வில்லன் நடிகர் பிரான் நேற்று இரவு மும்பையில் மரணம் அடைந்தார். இன்று இறுதி சடங்கு நடக்கிறது.

மரணம்

இந்தி சினிமா உலகில் 60 ஆண்டு காலம் வில்லன் நடிகராக கொடிகட்டி பறந்தவர் பிரான். 93 வயதான அவர் வயது முதிர்வால் உடல் நலம் பாதிக்கப்பட்டார். வீட்டில் இருந்தபடியே அவ்வப்போது சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் ஒரு மாதத்துக்கு முன்பு திடீர் மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவர் மும்பையில் உள்ள லீலாவதி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

3 நாடுகள் கிரிக்கெட்: டோனியின் அதிரடியில் இந்திய அணி ‘சாம்பியன்’ பரபரப்பான ஆட்டத்தில் இலங்கையை வீழ்த்தியது

Posted: 12 Jul 2013 12:21 PM PDT

போர்ட் ஆப் ஸ்பெயின்,

முத்தரப்பு கிரிக்கெட்டின் பரபரப்பான இறுதிஆட்டத்தில் டோனியின் அதிரடி சிக்சர்களால் இந்திய அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.

இலங்கை 201 ரன்

இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை ஆகிய 3 நாடுகள் இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடர் வெஸ்ட் இண்டீசில் நடந்தது. லீக் சுற்று முடிவில் முதல் இரண்டு இடங்களை பிடித்த இந்தியா, இலங்கை அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இறுதி ஆட்டம் போர்ட் ஆப் ஸ்பெயினில் நேற்று முன்தினம் நடந்தது.

இந்திய பெண் உயிர் இழப்பு விளைவு: கருக்கலைப்புக்கு அனுமதி வழங்கும் மசோதா அயர்லாந்து பாராளுமன்றத்தில் நிறைவேறியது

Posted: 12 Jul 2013 12:15 PM PDT

லண்டன்

இந்திய பெண் உயிர் இழந்ததை அடுத்து கருக்கலைப்புக்கு அனுமதி வழங்கும் மசோதா அயர்லாந்து பாராளுமன்றத்தில் நிறைவேறியது. இதற்கு ஆதரவாக 127 ஓட்டுகளும், எதிராக 31 ஓட்டுகளும் கிடைத்தன.

இந்திய பெண் உயிர் இழப்பு

ஐரோப்பா கண்டத்தில் அமைந்துள்ள அயர்லாந்து நாட்டில் கருக்கலைப்பு சட்டவிரோதம் ஆகும். இந்நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அங்கு வசிக்கும் இந்திய பல் டாக்டரான சவீதா(31) என்பவர் கால்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருடைய கருவில் இருந்த 17 வார சிசு சிதைவு ஏற்படலாம் என கருதி கருக்கலைப்பு செய்ய கேட்டுக் கொண்டனர்.

இலங்கை வடக்கு பகுதியில் தேர்தல்: அதிபர் ராஜபக்சே தமிழ் தேசிய தலைவருடன் சந்திப்பு

Posted: 12 Jul 2013 12:13 PM PDT

கொழும்பு

நீண்ட காலமாக விடுதலைப்புலிகளின் தளமாக இருந்து வந்த இலங்கையின் வடக்கு பகுதியை கடைசி கட்ட போரில் விடுதலைப்புலிகளை அழித்து இலங்கை ராணுவம் கைப்பற்றியது. அந்த பகுதியில் மறுசீரமைப்பு மற்றும் குடியமர்த்து பணிகளை மேற்கொண்ட இலங்கை அரசு தற்போது வடக்கு பகுதியில் தேர்தல் நடத்த உள்ளது.

இந்த நிலையில் தமிழ் தேசிய கூட்டணி தலைவர் ராஜவர்த்தி சம்பந்தம் இலங்கை அதிபர் ராஜபக்சேயை இன்று சந்தித்து பேசினார்.

இதுதொடர்பாக அந்த கட்சி நேற்று வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™