Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


இலங்கையை வீழ்த்தினார் தோனி

Posted: 12 Jul 2013 01:29 PM PDT

முத்தரப்பு கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி கோப்பையை வென்றது இந்தியா.

பரிதி இளம்சுருதியை சந்தித்தார் ஸ்டாலின்

Posted: 12 Jul 2013 01:04 PM PDT

புழல் சிறையில் உள்ள பரிதி இளம்சுருதியை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் சந்தித்து நலம் விசாரித்தார்.

"நெடுஞ்சாலைத் திட்டங்களை விரைவாக முடிக்க நடவடிக்கை'

Posted: 12 Jul 2013 01:03 PM PDT

மத்திய நெடுஞ்சாலைத் துறை மூலம் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் நெடுஞ்சாலைத் திட்டங்களை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் ஆஸ்கர் பெர்ணான்டஸ் தெரிவித்தார்.

இளவரசனின் வழக்குரைஞர்கள் விடுதலை: உண்ணாவிரதம் வாபஸ்

Posted: 12 Jul 2013 01:01 PM PDT

தருமபுரியில் போலீஸôரால் கைது செய்யப்பட்ட இளவரசனின் வழக்குரைஞர்கள் வெள்ளிக்கிழமை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். இதையடுத்து, நத்தம்காலனியில் உண்ணாவிரதமிருந்த இளவரசனின் பெற்றோர் போராட்டத்தைக் கைவிட்டனர்.

ஸ்ரீ சபாபதி விநாயகர் கோவிலில் யாகசாலை பூஜைகள் தொடக்கம்

Posted: 12 Jul 2013 01:01 PM PDT

திருச்செந்தூர் அருள்மிகு ஸ்ரீ சபாபதி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக விழாவையொட்டி யாகசாலை பூஜைகள் வெள்ளிக்கிழமை தொடங்கின.

கல்லூரியில் ரங்கோலி போட்டி

Posted: 12 Jul 2013 01:01 PM PDT

:காமராஜர் பிறந்தநாளையொட்டி,தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில்  பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.

உருக்கமான உரையுடன் விடைபெற்றார் நீதிபதி எலிபி தர்மராவ்

Posted: 12 Jul 2013 01:01 PM PDT

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எலிபி தர்மராவ் வெள்ளிக்கிழமை (ஜூலை 12) பதவியிலிருந்து ஓய்வு பெற்றார்.

ரூ.50 ஆயிரம் பான் மசாலாப் பொருள்கள் அழிப்பு

Posted: 12 Jul 2013 01:01 PM PDT

தூத்துக்குடி மாவட்டத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள குட்கா, பான்மசாலா பொருள்கள் வெள்ளிக்கிழமை அழிக்கப்பட்டன.

மாநில கால்பந்து: மதுரை அணி முதலிடம்

Posted: 12 Jul 2013 01:00 PM PDT

தூத்துக்குடியில் நடைபெற்ற மாநில அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டியில் மதுரை தொன்போஸ்கோ மேல்நிலைப் பள்ளி அணி முதலிடத்தைப் பிடித்தது.

சாத்தான்குளத்தில் வீணாகும் குடிநீர்!

Posted: 12 Jul 2013 01:00 PM PDT

சாத்தான்குளத்தில் குடிநீர்க் குழாய் உடைந்து தண்ணீர் அங்குள்ள சாக்கடையில் கலந்து வருவதால் பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

சமத்துவ வளைகாப்பு விழா

Posted: 12 Jul 2013 01:00 PM PDT

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில், கோவில்பட்டியில் சமத்துவ வளைகாப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அடுத்தகட்டப் போராட்டம் குறித்து நாளை முடிவு: கூடங்குளம் போராட்டக் குழு

Posted: 12 Jul 2013 01:00 PM PDT

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்தகட்டப் போராட்டம் குறித்து ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 14) முடிவு செய்யவுள்ளதாக போராட்டக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

விவசாய தொழிலாளர் சங்கக் கூட்டம்

Posted: 12 Jul 2013 01:00 PM PDT

கோவில்பட்டியையடுத்த வெயிலுகந்தபுரத்தில் இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் கூட்டம் நடைபெற்றது.

மாணவர்களுக்கு இலவச கல்வி உபகரணங்கள்

Posted: 12 Jul 2013 12:59 PM PDT

சுண்டங்கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.

"குடிநீரை உறிஞ்சினால் கடும் நடவடிக்கை

Posted: 12 Jul 2013 12:59 PM PDT

நாசரேத் பேரூராட்சி பகுதியில் மின் மோட்டார் மூலம் குடிநீரை உறிஞ்சினால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என்று பேரூராட்சி செயல் அலுவலர் முகம்மது இக்பால் ஷெரிப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பண்ணைக்குட்டை விளக்கக் கூட்டம்

Posted: 12 Jul 2013 12:58 PM PDT

சாத்தான்குளம் ஒன்றிய கூட்ட அரங்கில், பண்ணைக்குட்டை அமைப்பது குறித்து விளக்க கூட்டம் நடைபெற்றது

காயல்பட்டினத்தில் டென்னிஸ் மைதானம் திறப்பு

Posted: 12 Jul 2013 12:58 PM PDT

காயல்பட்டினம் இளைஞர் ஐக்கிய முன்னணி சார்பில் புதுப்பிக்கப்பட்ட டென்னிஸ் மைதான திறப்பு விழா நடைபெற்றது.

ஏ.ஐ.டி.யூ.சி. ஆர்ப்பாட்டம்

Posted: 12 Jul 2013 12:57 PM PDT

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தூத்துக்குடி மாவட்ட ஏ.ஐ.டி.யூ.சி. உள்ளாட்சிப் பணியாளர்கள் சங்கத்தின் கோவில்பட்டி கிளை சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. துப்புரவுப் பணியாளர்களின் புதிய நியமனம் குறித்த அரசு உத்தரவை மாவட்ட மற்றும் நகராட்

ஏழைகளுக்கு நலஉதவிகள்

Posted: 12 Jul 2013 12:57 PM PDT

ிங்கப்பூர் காயல் நல மன்றம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

ஏ.டி.எம். இயந்திரத்தை சேதப்படுத்தி கொள்ளை முயற்சி

Posted: 12 Jul 2013 12:57 PM PDT

மதுரையில் வங்கி ஒன்றின் ஏ.டி.எம். இயந்திரத்தை சேதப்படுத்தி கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.

காயல்பட்டினத்தில் கிராமிய அஞ்சல் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், விபத்தில் பலியானவரின் குடும்பத்திற்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது.

Posted: 12 Jul 2013 12:57 PM PDT

காயல்பட்டினத்தில் கிராமிய அஞ்சல் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், விபத்தில் பலியானவரின் குடும்பத்திற்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது.

தென்திருப்பேரையில் விழிப்புணர்வு விழா

Posted: 12 Jul 2013 12:57 PM PDT

தென்திருப்பேரை அருகே உள்ள மாவடிப்பண்ணை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், வளர்இளம் பெண்களுக்கான ஊட்டச்சத்து மற்றும் சுகாதார விழிப்புணர்வு விழா நடைபெற்றது.

கோவில்பட்டியில் தமிழ்நாடு அரசு ஓய்வூதியர் சங்கக் கூட்டம்

Posted: 12 Jul 2013 12:56 PM PDT

தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க கோவில்பட்டி வட்டக் கிளை கூட்டம் நடைபெற்றது.

சொத்துக் குவிப்பு வழக்குகளில் விடுவிப்பு; திமுக முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக மேல்முறையீட்டுக்கு அனுமதி கோரிய மனு தள்ளுபடி

Posted: 12 Jul 2013 12:56 PM PDT

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகத் தொடரப்பட்ட வழக்குகளில் இருந்து தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக காலதாமதமாக மேல் முறையீடு செய்ய அனுமதி கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ரோட்டரி சங்கத்தினர் நலஉதவி

Posted: 12 Jul 2013 12:56 PM PDT

கோவில்பட்டி ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

ஸ்டெர்லைட் வழக்கு: பசுமைத் தீர்ப்பாய அனுமதியை எதிர்க்கும் தமிழகத்தின் மனு மீது 17-ல் விசாரணை

Posted: 12 Jul 2013 12:56 PM PDT

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் வழங்கிய தாற்காலிக அனுமதியை எதிர்த்து தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை இம்மாதம் 17-ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் தள்ளிவைத்தது.

அபாய நிலையில் வகுப்பறை: திருச்செந்தூரில் மாணவர்கள் அவதி

Posted: 12 Jul 2013 12:56 PM PDT

திருச்செந்தூர் அருள்மிகு செந்திலாண்டவர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியினை சீரமைக்க வலியுறுத்தி தி.மு.க. மாணவரணி சார்பில் இம்மாதம் 24-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இலவச சீருடைகள் அளிப்பு

Posted: 12 Jul 2013 12:55 PM PDT

சாத்தான்குளம் அருகேயுள்ள பொத்தகாலன்விளையில் புனித வின்சென்ட் தே பவுல் சபை சார்பில் மாணவர், மாணவிகளுக்கு இலவச சீருடைகள் மற்றும் நோட்டுபுத்தகம் வழங்கப்பட்டது.   விழாவுக்கு அருள்சகோதரர் டேவிட் தலைமை வகித்தார். சபைத் தலைவர் ஜேம்ஸ் வ

இணையதள நில ஆவணப் பதிவு திட்டத்துக்கு மத்திய அரசு நிதி அளிக்க வேண்டும்

Posted: 12 Jul 2013 12:55 PM PDT

இணையதள வழியிலான நில ஆவணப் பதிவுத் திட்டத்துக்கான நிதியை மத்திய அரசிடம் இருந்து பெற தொடர்ந்து வலியுறுத்துவோம் என்று வருவாய்த் துறை அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாசலம் தெரிவித்தார்.

100 % மானியத்தில் சொட்டு நீர்ப் பாசனம்

Posted: 12 Jul 2013 12:55 PM PDT

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100 சதவிகிதம் மானியத்தில் சொட்டு நீர்ப்பாசனம் அமைத்து கொடுக்கப்படுகிறது.

திருக்குறள் போட்டி:மாணவி சிறப்பிடம்

Posted: 12 Jul 2013 12:55 PM PDT

திருச்செந்தூர் செந்தில் முருகன் நடுநிலைப்பள்ளி மாணவி இரா.ஜெயந்தி  திருக்குறள் தேர்வில் மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

திறனாய்வுத் தேர்வு: மாணவர்கள் வெற்றி

Posted: 12 Jul 2013 12:54 PM PDT

: ஊரகத் திறனாய்வுத் தேர்வில், சாத்தான்குளம் துய இருதய மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 7 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

தக்கலை புனித எலியாசியார் ஆலயத் திருவிழா கொடியேற்றம்

Posted: 12 Jul 2013 12:54 PM PDT

தக்கலை புனித எலியாசியார் ஆலயத் திருவிழா திருக்கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இத்திருவிழா இம்மாதம் 21-ம் தேதி வரை நடைபெறுகிறது.

வேளாண் அலுவலர்களுக்கு பயிர்  மதிப்பீட்டாய்வு புத்தாக்கப் பயிற்சி

Posted: 12 Jul 2013 12:53 PM PDT

நாகர்கோவிலில் வேளாண்மைத் துறை அலுவலர்களுக்கு பயிர் மதிப்பீட்டாய்வு புத்தாக்க பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆற்றூர் பொறியியல் கல்லூரியில் புதுமுக மாணவர் தினம்

Posted: 12 Jul 2013 12:53 PM PDT

ஆற்றூர் மரியா பொறியியல் கல்லூரியில் புதுமுக மாணவர் தின நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆசாரிப்பள்ளம் அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா

Posted: 12 Jul 2013 12:53 PM PDT

நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நடைபெற்றது.  சங்கத் தலைவர் சகாய டெல்வர் விழாவை தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக முன்னாள் ஆளுந

மாவட்ட தொழில் மைய அலுவலக கட்டுமானப் பணி தொடக்கம்

Posted: 12 Jul 2013 12:52 PM PDT

நாகர்கோவிலில் உள்ள மாவட்ட தொழில் மைய அலுவலகத்துக்கு ரூ.1 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள கூடுதல் கட்டடத்துக்கான கட்டுமானப் பணியை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கே.டி. பச்சைமால் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தார். நாகர்கோவில் கோணம் அரசு தொழில்மைய வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர்

எஸ்.ஐ.க்கு மிரட்டல்: இளைஞர் கைது

Posted: 12 Jul 2013 12:52 PM PDT

களியக்காவிளை அருகே மணல் கடத்தலை தடுத்த பெண் உதவி ஆய்வாளரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக  இளைஞரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

முதியோர் உதவித்தொகையை தபால் அலுவலகம் மூலம் வழங்கக் கோரிக்கை

Posted: 12 Jul 2013 12:52 PM PDT

முதியோர், விதவைகள் மற்றும் கணவரால் கைவிடப்பட்டோருக்கு வழங்கப்படும் உதவித்தொகையை தபால் அலுவலகம் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகஸ்தீசுவரம் பேரூராட்சித் தலைவர் சந்தையடி எஸ்.பாலகிருஷ்ணன் ஆட்சியருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். மனுவில் அவர்

மதுக்கடைக்கு எதிர்ப்பு: பொதுமக்கள் போராட்டம்

Posted: 12 Jul 2013 12:51 PM PDT

கொல்லங்கோடு அருகே டாஸ்மாக் மதுக்கடையை திறப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வெள்ளிக்கிழமை கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

"அகஸ்தீசுவரம்-கன்னியாகுமரிக்கு பஸ் வசதி வேண்டும்

Posted: 12 Jul 2013 12:51 PM PDT

கல்லூரி, பள்ளி மாணவர், மாணவிகள் நலன் கருதி அகஸ்தீசுவரம் வழியாக கன்னியாகுமரிக்கு மாலை நேரங்களில் பஸ்களை இயக்க வேண்டும் என தேமுதிக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாகர்கோவிலில் தேசிய கருத்தரங்கம்

Posted: 12 Jul 2013 12:51 PM PDT

கன்னியாகுமரி மாவட்ட ஆழ்கடல் மீன்பிடிப்போர் சங்கம் சார்பில் விசைப்படகுகளில் சூரிய ஒளி மின்சாரம் பயன்படுத்துவது குறித்த தேசிய கருத்தரங்கம் நாகர்கோவிலிலில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட வலியுறுத்தல்

Posted: 12 Jul 2013 12:51 PM PDT

:திருவட்டாறு அருணாசலம் மேல்நிலைப் பள்ளி சார்பில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

முதியோர் தடகளப் போட்டி: ஓய்வுபெற்ற இன்ஸ்பெக்டருக்கு பாராட்டு

Posted: 12 Jul 2013 12:50 PM PDT

பெங்களூரில் நடைபெற்ற தேசிய விளையாட்டுப் போட்டிகளில் முதியோர் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்ற தக்கலையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற காவல்துறை ஆய்வாளரை குமரி மாவட்ட எஸ்.பி. பாராட்டினார்.

கருங்கல்: கரும்புகையை வெளியிடும் மினி பஸ்களை பறிமுதல் செய்யக் கோரிக்கை

Posted: 12 Jul 2013 12:50 PM PDT

கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில்  கரும்புகையை வெளியிட்டு இயக்கப்படும் மினி பஸ்களை பறிமுதல் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேல்புறத்தில்  டிஒய்எப்ஐ ஆர்ப்பாட்டம்

Posted: 12 Jul 2013 12:50 PM PDT

அருமனை அருகே மேல்புறத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தேர்வில் சிறப்பிடம்: பள்ளி மாணவர்களுக்கு பரிசளிப்பு

Posted: 12 Jul 2013 12:49 PM PDT

இடலாக்குடி சதாவதானி செய்குதம்பி பாவலர் அரசுப் பள்ளியில் 10 மற்றும் 12 ஆம் வ

நூல் வெளியீட்டு விழா

Posted: 12 Jul 2013 12:49 PM PDT

நாகர்கோவிலில் நாடக நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கு

Posted: 12 Jul 2013 12:48 PM PDT

தேனியில் வெள்ளிக்கிழமை மாவட்ட தொழில் மையம் சார்பில் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் மேம்பாட்டுத் திட்டம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.

போடியில் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட உணவு பொருள்கள் பறிமுதல்

Posted: 12 Jul 2013 12:47 PM PDT

போடியில் தடை செய்யப்பட்ட சுமார் ரூ. 10 ஆயிரம் மதிப்புள்ள உணவு பொருள்களை, உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஆந்திரத்திலிருந்து கம்பத்துக்கு 36 கிலோ கஞ்சா கடத்தல்

Posted: 12 Jul 2013 12:47 PM PDT

ஆந்திர மாநிலத்திலிருந்து கம்பத்துக்கு கஞ்சா கடத்திய 2 பேர் மீது வழக்குப் பதிந்து, அதில் ஒரு இளைஞரை வடக்குக் காவல் நிலைய போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

பஞ்சமி நிலங்களை மீட்க ஏர் உழும் போராட்டம்: அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையால் ஒத்திவைப்பு

Posted: 12 Jul 2013 12:46 PM PDT

: பஞ்சமி நிலங்களை மீட்கக் கோரி, உழைக்கும் விவசாயிகள் இயக்கம் சார்பில், பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டியில் வெள்ளிக்கிழமை ஏர் உழும் போராட்டம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், சமரசப் பேச்சுவார்த்தையை அடுத்து போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

முத்திரைத் தாள் கட்டணம் வசூல்

Posted: 12 Jul 2013 12:46 PM PDT

தேனி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமை தோறும் சார்பதிவக முத்திரைக் கட்டணம் மற்றும் அபராதத் தொகை வசூல் நடைபெற்று வருகிறது.

அரசு பள்ளிகளில் ஜூலை 15 இல் காமராஜர் பிறந்தநாள் விழா

Posted: 12 Jul 2013 12:46 PM PDT

தேனி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஜூலை 15 ஆம் தேதி காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாட, பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

முகவர் உரிமம் வாங்கிக் தருவதாக மோசடி செய்தவர் கைது

Posted: 12 Jul 2013 12:45 PM PDT

தேனியில், பிரபல மசாலா பொடி தயாரிப்பு நிறுவனத்தின் உற்பத்திப் பொருள்களை விற்பனை செய்வதற்காக முகவர் உரிமம் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் மோசடி செய்ததாக ஒருவரை, வெள்ளிக்கிழமை மாவட்டக் குற்றப் பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

ஜூலை 13 மின் தடை

Posted: 12 Jul 2013 12:45 PM PDT

உத்தமபாளையம் துணை மின்நிலையத்தில் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன.

கேரள முதல்வர் பதவி விலகக் கோரி ஆண்டிபட்டியில் ஆர்ப்பாட்டம்

Posted: 12 Jul 2013 12:45 PM PDT

கேரள முதல்வர் பதவி விலகக் கோரியும், இந்திய மாணவர் சங்க தலைவரை விடுதலை செய்யக் கோரியும், ஆண்டிபட்டி மதுரை காமராஜர் பல்கலைக்கழகக் கல்லூரி முன்பாக, இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

பழனி கோயிலுக்கு 2 ஆவது ரோப் கார் வெளிநாட்டு நிறுவனங்களுடன் உயர்நிலைக் குழு ஆலோசனை

Posted: 12 Jul 2013 12:44 PM PDT

பழனி மலைக் கோயிலுக்கு இரண்டாவது நவீன ரோப் கார் அமைப்பது குறித்து, பழனி ரோப் கார் உயர்நிலைக் குழுவினர், வெளிநாட்டு ரோப் கார் நிறுவனங்களுடன் வெள்ளிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டனர்.

ஒட்டன்சத்திரம் வியாபாரியை கடத்தி பணம் பறித்த 6 பேர் கைது: ரூ.8 லட்சம், கார் மீட்பு

Posted: 12 Jul 2013 12:43 PM PDT

ஒட்டன்சத்திரம் அருகே வியாபாரியை கடத்தி பணம் பறித்த கும்பலைச் சேர்ந்த 6 பேரை, வெள்ளிக்கிழமை போலீஸார் கைது செய்து, அவர்களிடமிருந்து ரூ. 8 லட்சம் ரொக்கம், கார், 2 பைக்குகள் மற்றும் 3 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

திண்டுக்கல் நகரில் தொடரும் வாகனத் திருட்டு

Posted: 12 Jul 2013 12:43 PM PDT

திண்டுக்கல் நகரின் பல இடங்களில் நிகழ்ந்து வரும் வாகனத் திருட்டை தடுப்பதற்கு, போலீஸார் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

ஜூலை 15 பழனியில் ஆக்கிரமிப்பு அகற்றம்

Posted: 12 Jul 2013 12:43 PM PDT

பழனி நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் வரும் 15 ஆம் தேதி (திங்கள்கிழமை) ஆக்கிரமிப்பு அகற்றப்பட உள்ளதாக, நகராட்சி அறிவித்துள்ளது.

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும்: ஆட்சியர்

Posted: 12 Jul 2013 12:42 PM PDT

மது அருந்தி வாகனம் ஓட்டுபவர்களின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும், என மாவட்ட ஆட்சியர் ந. வெங்கடாசலம் எச்சரித்துள்ளார்.

நாகர்கோவில்

Posted: 12 Jul 2013 12:42 PM PDT

நீர் நிலைகளைப் பாதுகாப்போம்

Posted: 12 Jul 2013 12:34 PM PDT

நீரின்றி அமையாது உலகு' என்பது வள்ளுவர் வாக்கு. புவியில் மூன்றில் இரண்டு பங்கு தண்ணீரால் ஆனது. மனித உடலும் ஏறக்குறைய அதே கட்டமைப்பில்தான் செயல்படுகிறது. கோடையில் நீர் நிலைகள் ஆவியாகி வற்றுவதுபோல் மனித உடலுக்கும் நீர் தேவை அதிகரித்து விடுகிறது.

பெருமழைசூழ் கேதாரமே...

Posted: 12 Jul 2013 12:29 PM PDT

குற்றாலம் நீர்வீழ்ச்சியைப் பார்த்தால் மனதில் ஒரு கிளுகிளுப்பு. சாரல் நமது முகத்தில் விழுவதுபோல் உணர்வு ரம்யமானது. பசுமைச் சூழலில் மலையிலிருந்து நெளிந்துவரும் நதி, தெளிந்த நீர்நிறைந்த குளத்தில் பூத்த அல்லி மலர்கள் - இத்தகைய நீர்நிலைகள் எல்லோரது நெஞ்சையும் அள்ளும் காட்சிகள்.

விபரீதங்களுக்கு அச்சாரம்!

Posted: 12 Jul 2013 12:28 PM PDT

தர்மபுரி தலித் இளைஞர் இளவரசன் உடலை அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் (எய்ம்ஸ்) மருத்துவர்களைக் கொண்டு இரண்டாவது உடற்கூறு பரிசோதனை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது துரதிருஷ்டவசமானது.

10 ஆண்டுகளில் எச்.ஐ.வி. தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 50% குறைந்தது'

Posted: 12 Jul 2013 12:24 PM PDT

தில்லியில் கடந்த 10 ஆண்டுகளில் எச்.ஐ.வி. தொற்று பாதிப்பு 50 சதவீதம் குறைந்துள்ளது என்று முதல்வர் ஷீலா தீட்சித் கூறினார்.

மோடியின் கருத்துக்கு டி. ராஜா கண்டனம்

Posted: 12 Jul 2013 12:23 PM PDT

குஜராத் கலவரம் தொடர்பாக அந்த மாநில முதல்வர் நரேந்திர மோடி கூறிய கருத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் டி. ராஜா கண்டனம் தெரிவித்தார்.

ஜெகதீஷ் டைட்லருக்கு எதிரான விசாரணையில் தலையிட முடியாது

Posted: 12 Jul 2013 12:21 PM PDT

சீக்கியர்களுக்கு எதிராக 1984-ல் நடைபெற்ற கலவரம் தொடர்பாக தன் மீது தில்லி நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணையை எதிர்த்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெகதீஷ் டைட்லர் தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.

டீசல் விலை நிர்ணயம்: உச்ச நீதிமன்றத்தில் எண்ணெய் நிறுவனம் மனு

Posted: 12 Jul 2013 12:21 PM PDT

டீசல் விலை நிர்ணயம் தொடர்பாக பல்வேறு மாநில உயர் நீதிமன்றங்களில் தொடரப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தையும் உச்ச நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என்று கோரி இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் மனு தாக்கல் செய்துள்ளது.

நீரா ராடியா தொலைபேசி உரையாடல் பதிவு: ஆதாரமாக சேர்க்கக் கோரிய மனு தள்ளுபடி

Posted: 12 Jul 2013 12:20 PM PDT

நீரா ராடியாவின் தொலைபேசி உரையாடல் அடங்கிய 62 பதிவுகளை 2ஜி அலைக்கற்றை வழக்கின் ஆதாரமாக சேர்க்கக் கோரிய மத்திய புலனாய்வுத் துறையின் மனுவை தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.

ஸ்டெர்லைட் வழக்கு: பசுமைத் தீர்ப்பாய அனுமதியை எதிர்க்கும் தமிழகத்தின் மனு மீது 17-ல் விசாரணை

Posted: 12 Jul 2013 12:20 PM PDT

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் வழங்கிய தாற்காலிக அனுமதியை எதிர்த்து தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை இம்மாதம் 17-ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் தள்ளிவைத்தது.

கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் நர்சரி பள்ளிகள்: தில்லி அரசுக்கு நோட்டீஸ்

Posted: 12 Jul 2013 12:20 PM PDT

கல்வி உரிமைச் சட்ட வரம்பில் நர்சரி பள்ளிகள் வராது என்ற தில்லி அரசின் உத்தரவை தில்லி உயர் நீதிமன்றம் உறுதிப்படுத்தியதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அரசு கல்லூரிகள்: 185 கூடுதல் எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு அனுமதி

Posted: 12 Jul 2013 12:19 PM PDT

சென்னை மருத்துவக் கல்லூரியில் கூடுதல் 85 எம்.பி.பி.எஸ். இடங்கள், அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் கூடுதல் 100 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு இந்திய மருத்துவ கவுன்சில் (எம்.சி.ஐ.) அனுமதி அளித்துள்ளது.

அதிகாரியை நியமிக்க முதல்வருக்கு பிரதமர் கடிதம்

Posted: 12 Jul 2013 12:19 PM PDT

நெய்வேலி நிலக்கரி நிறுவனப் பங்குகள் விற்பனை தொடர்பாக மத்திய பங்குகள் விலக்கல் துறையுடனும், இந்திய பங்குப் பரிவர்த்தனை வாரியத்துடனும் ஒருங்கிணைந்து செயல்பட வசதியாக மூத்த உயர் அதிகாரியை உடனே நியமிக்கும்படி தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிரதமர் மன்மோகன் சிங் கடிதம் எழுதியுள்ளார்.

ராகுலை பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் அறிவிக்காது

Posted: 12 Jul 2013 12:18 PM PDT

எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் கட்சி அறிவிக்காது என்று கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கூறினார்.

தலைநகரில் பரவலாக மழை

Posted: 12 Jul 2013 12:18 PM PDT

தில்லியில் வெள்ளிக்கிழமை காலை முதல் மாலை வரை பரவலாக மழை பெய்தது. மயூர் விஹார், வினோத் நகர், லட்சுமி நகர், ஐ.டி.ஓ., கஷ்மீரி கேட், முனிர்கா, துவாரகா, தௌலகுவான், இந்தியா கேட், ரஃபி மார்க் உள்ளிட்ட பல இடங்களில் மழை பெய்தது. மதிய வேளையில் மழை பெய்ததால் பள்ளி முடிந்து வீடு திரும்பிய குழந்தைகள் ம

சாலைகளில் மழை நீர் தேங்காதிருக்க நடவடிக்கை

Posted: 12 Jul 2013 12:18 PM PDT

ில்லி சாலைகளில் மழை நீர் தேங்காமல் இருக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தில்லி பொதுப்பணித் துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பொதுப்பணித் துறை வெளியிட்டுள்ள செ

"இக்னோ'வில் தேனீ வளர்ப்பு படிப்பு

Posted: 12 Jul 2013 12:18 PM PDT

தேனீ வளர்ப்பு தொடர்பாக, இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் 6 மாத படிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, பல்கலைக்கழகம் வெள்ளிக்கிழமை வெ

காரில் ஹோட்டல் மேலாளர் கொலை

Posted: 12 Jul 2013 12:17 PM PDT

நொய்டாவில் ஹோட்டல் மேலாளர் திலவார் (62) காரில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இது குறித்து, நொய்டா போலீஸார் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

வாடகை கட்டுப்பாடு சட்டத்தை திரும்பப் பெற அமைச்சரவை அனுமதி

Posted: 12 Jul 2013 12:17 PM PDT

1995-ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்டு செயல்படுத்தப்படாமல் உள்ள தில்லி வாடகை கட்டுப்பாடு சட்டத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்துள்ளது. இந்த முடிவை காங்கிரஸ் கட்சியும் வர்த்தகர்களும் வரவேற்றுள்ளனர்.  

தில்லியில் பசுமைக் குடியிருப்புகளை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்

Posted: 12 Jul 2013 12:17 PM PDT

மின்சாரத்தை சேமிக்கும் வகையில், பசுமைக் குடியிருப்புகளை மத்திய பொதுப்பணித் துறை அமைக்க வேண்டும் என்று முதல்வர் ஷீலா தீட்சீத் அறிவுறுத்தினார்.

என்எல்சி பங்கு விற்பனை: கருணாநிதியின் யோசனை குறித்து மத்திய அரசு பரிசீலனை

Posted: 12 Jul 2013 12:17 PM PDT

""என்எல்சியின் ஐந்து சதவீதப் பங்குகளை தனியாருக்கு விற்பது என்ற அடிப்படையில் இல்லாமல், பொதுமக்களுக்கு விற்பது என்ற அடிப்படையில் தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களுக்கு விற்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ள யோசனையை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

காங்கிரஸ் பிரமுகரின் சகோதரர் சுட்டுக் கொலை

Posted: 12 Jul 2013 12:16 PM PDT

தில்லி காங்கிரஸ் கட்சித் தலைவரின் சகோதரர் சலீம் மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டார். இது தொடர்பாக போலீஸார் கூறியது:

பள்ளி மாணவர் தற்கொலை

Posted: 12 Jul 2013 12:16 PM PDT

தில்லி வசந்த் விஹாரில் வெள்ளிக்கிழமை காலை வீட்டில் மின் விசிறியில் தூக்கிட்டு 17 வயது பள்ளி மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.

மெட்ரோ ரயில் பயணிகள் புகார் தெரிவிக்க கூடுதல் வசதி

Posted: 12 Jul 2013 12:16 PM PDT

ரயில் பயணத்தின் போது உடைமைகள் தொலைந்து போனாலோ அல்லது மற்றவர்களின் உடைமைகளைக் கண்டறிந்தாலோ அது பற்றி தெரிவிக்க பிரத்யேக தொலைபேசி எண்களை தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டிஎம்ஆர்சி) அறிவித்துள்ளது.

கூடங்குளம் அணு உலையில் முழுவீச்சில் மின் உற்பத்திக்கான ஆயத்தப் பணிகள்

Posted: 12 Jul 2013 12:15 PM PDT

கூடங்குளம் முதலாவது அணு உலையில் மின் உற்பத்திக்கான ஆயத்தப் பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

"தானே' வீடுகளுக்கு நியாய விலையில் கட்டுமானப் பொருள்கள்

Posted: 12 Jul 2013 12:15 PM PDT

தானே புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள் கட்ட நியாயமான விலையில் கட்டுமானப் பொருள்கள் கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது என்று மாவட்ட ஆட்சியர் வா.சம்பத் தெரிவித்தார். விழுப்புரம் மாவட்டம், மயிலம் ஊராட்சி ஒன்றியப் பகுதியில் தானே புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு

கொலை முயற்சி வழக்கு: முன்ஜாமீன் கோரி விஜயகாந்த் மனு

Posted: 12 Jul 2013 12:15 PM PDT

கொலை முயற்சி வழக்கில் முன்ஜாமீன் கோரி, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வெள்ளிக்கிழமை மனு தாக்கல் செய்துள்ளார்.

மேல்மலையனூரில் 28 சத்துணவு மையங்கள் அமைக்க முடிவு

Posted: 12 Jul 2013 12:15 PM PDT

மேல்மலையனூர் ஒன்றியத்தில் 28 சத்துணவு மையங்கள் அமைக்க ஊராட்சி ஒன்றியக்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இலவச மருத்துவ முகாம்

Posted: 12 Jul 2013 12:14 PM PDT

திருக்கோவிலூர் அருகே மணலூர்பேட்டையில் இலவச பொது மருத்துவ முகாம் அண்மையில் நடைபெற்றது. தமிழ்ப் படைப்பாளர்கள் சங்கம் மற்றும் புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனை சார்பில் நடைபெற்ற இம்முகாமுக்கு சங்கத் தலைவர் தா.சம்பத் தலைமை வகித்தார்.

நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட ஆட்டோ ஓட்டுநர்கள்

Posted: 12 Jul 2013 12:14 PM PDT

: திருக்கோவிலூர் அருகே தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ஆட்டோ நிறுத்தத்தை மீட்கக் கோரி நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தை ஆட்டோ ஓட்டுநர்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனர். திருக்கோவிலூர் 5 முனை சந்திப்பில், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அண்ணல் மகாத்மா காந்தி

ரயிலில் இரு பெண்களிடம் ஏழரை சவரன் செயின் பறிப்பு

Posted: 12 Jul 2013 12:14 PM PDT

: திண்டிவனம் அருகே ரயிலில் இரு பெண்களிடம் ஏழரை சவரன் நகைகளை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆய்வு

Posted: 12 Jul 2013 12:13 PM PDT

விழுப்புரத்தில் வைக்கப்பட்டுள்ள வாக்குப் பதிவு இயந்திரங்களை தேர்தல் பணி வட்டாட்சியர் திங்கள்கிழமை ஆய்வு செய்தார்.

ராஜயோக போதனா சேவாஸ்ரமம் தொடக்கம்

Posted: 12 Jul 2013 12:13 PM PDT

விழுப்புரத்தில் ராஜயோக போதனா சேவாஸ்ரமம் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு தாதாபுரம் ஞானஜோதி சம்பங்கி சுவாமிகள் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக

பணிக்குத் திரும்ப என்.எல்.சி. தலைவர் வேண்டுகோள்

Posted: 12 Jul 2013 12:13 PM PDT

என்எல்சி நிரந்தரத் தொழிலாளர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள் என 25 ஆயிரம் தொழிலாளர்கள் 11 தினங்களாக தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையிலும், நிறுவனத்தின் அனல்மின் நிலையங்களில் மின்னுற்பத்தி என்பது குறையவில்லை.

புதுச்சேரி மீனவர்கள் மீது தாக்குதல்: கடலூர் வியாபாரி கைது

Posted: 12 Jul 2013 12:12 PM PDT

கடலூரில் துறைமுகத்தில் மீன் விற்க முயன்றதாக புதுச்சேரி மீனவர்களை தாக்கிய கடலூர் வியாபாரியை போலீஸார் கைது செய்தனர். புதுச்சேரியில் வம்பாகீரப்பாளை

கோவில்பட்டியில் ரூ.7 கோடியில் ஹாக்கி மைதானம்

Posted: 12 Jul 2013 12:12 PM PDT

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் ரூ.7 கோடியில் ஹாக்கி மைதானம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். மேலும், விளையாட்டுப் பயிற்சியாளர்களுக்கான மாத மதிப்பூதியம் ரூ.15 ஆயிரமாக உயர்த்தி அளிக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

நகை மோசடி: பெண் கைது

Posted: 12 Jul 2013 12:12 PM PDT

கடலூர் தனியார் அடகு நிறுவனத்தில் நகை மோசடி செய்ததாக பெண் ஊழியரை போலீஸார் கைது செய்தனர்.

வடமூர் ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் கொலை

Posted: 12 Jul 2013 12:12 PM PDT

காட்டுமன்னார்கோவில் அருகே தேர்தல் முன்விரோதம் காரணமாக வடமூர் ஊராட்சி மன்றத் தலைவியின் கணவர் வெள்ளிக்கிழமை அதிகாலை கொலை செய்யப்பட்டார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™