Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


உ.பி.யில் கனமழை: 152 பேர் பலி - 5 லட்சம் பேர் வெளியேற்றம்

Posted: 21 Jul 2013 10:32 PM PDT

உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 152 ஆக உயர்ந்துள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின் பல மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. ஷர்தா, காக்ரா, ராம்கங்கா, கங்கை, யமுனை, பெட்வா, கெய்ன், கோமதி, சாய், சராயு உள்ளிட்ட முக்கிய ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

சோலார் பேனல் மோசடி: கேரள நடிகர்–நடிகைகளுடன் சரிதா நாயருக்கு தொடர்பு

Posted: 21 Jul 2013 10:04 PM PDT

கேரளாவில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் சோலார் பேனல் கருவிகள் அமைத்து தருவதாக கோடிக் கணக்கில் மோசடி செய்ததாக தொழில் அதிபர் பிஜு ராதாகிருஷ்ணன், அவரது 2–வது மனைவி சரிதாநாயர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீதான வழக்கு கேரளாவில் உள்ள திருவனந்தபுரம், கொச்சி கோர்ட்டுகளில் நடந்து வருகிறது. இந்த நிலையில் கொச்சி கோர்ட்டில் நடந்த விசாரணையின்போது சரிதாநாயர் கோர்ட்டில்

திருவனந்தபுரம் அருகே மீன் வியாபாரியிடம் ரூ.36 லட்சம் கொள்ளை: 4 பேர் கைது

Posted: 21 Jul 2013 09:56 PM PDT

திருவனந்தபுரம் அருகே தலஸ்தானம் என்ற இடத்தில் உள்ள ஒரு வங்கிக்கு அந்த பகுதியைச் சேர்ந்த மீன் வியாபாரி ஏசுதாஸ் என்பவர் ரூ.36 லட்சம் பணத்தை டெபாசிட் செய்வதற்காக சென்றார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் அவரிடமிருந்த பணப்பெட்டியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி ஓடி விட்டனர்.பொது மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொள்ளை பற்றி துப்பு துலக்க திருவனந்தபுரம் போலீஸ் கமிஷனர் உத்தரவின்பேரில் தனிப்படை போலீஸ்படை அமைக்கப்பட்டது. அவர்கள் தீவிர விசாரணை நடத்தி கிரிஜோஸ், ராகேஷ்குமார், அனீஷ்சிங், ரஞ்சித்

மங்களூர் விமான நிலையத்தில் தங்கத்தை கடத்திய பெண் கைது

Posted: 21 Jul 2013 04:57 PM PDT

துபாயில் இருந்து மங்களூர் சர்வதேச விமான நிலையத்துக்கு ஏர் இந்தியா விமானம் ஒன்று வந்தது. விமானத்தில் வந்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்து கொண்டு இருந்தனர்.

ஆமதாபாத்தில் நரேந்திர மோடியுடன் நிதின் கட்காரி சந்திப்பு

Posted: 21 Jul 2013 03:18 PM PDT

பாரதீய ஜனதா தேர்தல் பிரசார குழு உறுப்பினராக சமீபத்தில் நியமிக்கப்பட்ட அக்கட்சியின் முன்னாள் தலைவர் நிதின் கட்காரி, பிரசார குழுவின் தலைவரும், குஜராத் முதல்-மந்திரியுமான நரேந்திர மோடியை இன்று சந்தித்து பேசினார்.

அசாமில் புகையிலை பொருட்களுக்கு தடை சட்டசபையில் மசோதா நிறைவேற்றம்

Posted: 21 Jul 2013 02:07 PM PDT

புகையிலை பொருட்களுக்கு தடை விதிப்பது குறித்த மசோதா அசாம் சட்டசபையில் கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்டு, சிறு திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.

அயோத்தியில் ராமர் கோவில் அருகே துப்பாக்கி சண்டையில் ஒருவர் பலி

Posted: 21 Jul 2013 01:32 PM PDT

அயோத்தியில், சர்ச்சைக்குரிய ராமர் கோவில் அமைந்துள்ள இடம் அருகே அனுமன்காரி கோவில் உள்ளது. அந்த கோவிலுக்காக பக்தர்களிடையே திரட்டிய சொத்துகளை சொந்தம் கொண்டாடுவது தொடர்பாக, மகந்த்

டெல்லி விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்திய 2 பெண்கள் கைது

Posted: 21 Jul 2013 12:28 PM PDT

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நைரோபி செல்வதற்காக வந்த 2 தென் ஆப்பிரிக்க பெண்களை மத்திய பாதுகாப்பு படையினர் சோதனையிட்டனர்.

ஒருதலை காதலை ஏற்றுக் கொள்ளாததால் திருமணமான இளம்பெண்ணை ஆசிட் ஊற்றிக் கொன்ற வாலிபன் தலைமறைவு

Posted: 21 Jul 2013 07:50 AM PDT

மத்திய பிரதேச மாநிலம் மோரேனா மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ரூபி (26), திருமணமாகி தனது கணவருடன் போர்சா நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். அவரை ஒருதலையாக காதலித்து வந்த வீட்டின் உரிமையாளர் யோகேந்திரா டோமர் என்பவன் மோரேனா நகருக்கு ரூபியை வற்புறுத்தி

கைதிகளின் தினக்கூலியை உயர்த்துவது தொடர்பாக மகாராஷ்டிரா சிறைத்துறை டி.ஜி.பி. தலைமையிலான குழு அமைப்பு

Posted: 21 Jul 2013 07:26 AM PDT

சிறை கைதிகளின் தினக்கூலியை உயர்த்துவது தொடர்பாக பரிந்துரைக்கும்படி சிறைத்துறை டி.ஜி.பி. தலைமையிலான குழுவினை மகாராஷ்டிரா மாநில அரசு அமைத்துள்ளது. மற்ற மாநில சிறைகளில் கைதிகளுக்கு வழங்கப்படும் தினக்கூலியை விட அம்மாநிலத்தில் உள்ள சிறைகளில் குறைந்த கூலி வழங்கப்படுவதாக

குதிரைகளில் வந்த 50 சீன ராணுவத்தினர் லடாக் பகுதியில் மீண்டும் ஊடுருவல்

Posted: 21 Jul 2013 05:34 AM PDT

இந்திய எல்லைக்குள் சீன ராணுவத்தினர் அவ்வப்போது அத்துமீறி நுழைந்து அட்டூழியம் செய்து வருகின்றனர். கடந்த ஜூன் மாதம் 17-ம் தேதி லடாக் எல்லைப் பகுதியில் உள்ள சுமார் அருகே வைக்கப்பட்டிருந்து இந்திய ராணுவத்தின் கண்காணிப்பு கேமராவை சீன ராணுவத்தினர் எடுத்துச் சென்று விட்டனர்.

குஜராத் கலவரத்தால் தான் இந்திய முஜாகிதீன் தீவிரவாத இயக்கம் தோன்றியது: காங்., பா.ஜ.க. குடுமிப்பிடி சண்டை

Posted: 21 Jul 2013 05:08 AM PDT

குஜராத்தில் 2002-ம் ஆண்டு நிகழ்ந்த மதக் கலவரத்தால் தான் இந்திய முஜாகிதீன் என்ற தீவிரவாத இயக்கம் தோன்றியது என்று தேசிய புலனாய்வு மையம் தனது குற்றப் பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளது. ஆனால், இன்றும் கூட ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. ஆகியவை மதவாத அரசியலை நிறுத்திக் கொள்ள மறுக்கின்றன என்று காங்கிரஸ் தலைவர்

செவ்வாய் கிரக ஆராய்ச்சி திட்டம் பெருமைக்காக மட்டும் அல்ல: இந்திய விண்வெளி ஆய்வு மையம்

Posted: 21 Jul 2013 03:08 AM PDT

செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பா, ஜப்பான், சீனா ஆகிய 5 நாடுகள் ஈடுபட்டுள்ளன. இதில் ஆறாவது நாடாக இந்தியாவும் இணைய உள்ளது. இந்தியா ரூ. 450 கோடி செலவில் செவ்வாய் கிரக ஆராய்ச்சியை இந்த வருடத்தில் தொடங்க உள்ளது. இந்தியாவால் விண்வெளி ஆராய்ச்சிக்கு இந்த அளவு செலவிட முடியுமா? என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.

சத்தீஸ்கர் முதல் மந்திரி ரூ. 1 கோடி லஞ்சம் வாங்கிய 'சி.டி.' ஆதாரம்: காங்கிரஸ் வெளியிட்டது

Posted: 21 Jul 2013 03:07 AM PDT

சத்தீஸ்கர் மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில முதல் மந்திரி ரமண் சிங் ரூ. 1 கோடி லஞ்சம் வாங்கிய சி.டி. ஆதாரத்தை அம்மாநில காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. 2006-ம் ஆண்டு பொதுமக்களின் பணத்தை மோசடி செய்த இந்திரா பிரியதர்ஷினி மகளிர் கூட்டுறவு வங்கியின் உரிமத்தை மத்திய ரிசர்வ்

ஸ்ரீநகரில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது: அமர்நாத் யாத்திரை மீண்டும் துவக்கம்

Posted: 21 Jul 2013 02:32 AM PDT

காஷ்மீர் மாநிலம் அமர்நாத் யாத்திரை செல்ல நாடு முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் ஜம்மு நகருக்கு வந்து தங்கி உள்ளனர். இந்த நிலையில் அங்கு மத பிரமுகர் ஒருவரை போலீசார் பிடித்துச் சென்றதால் கலவரம் ஏற்பட்டது. இதையடுத்து போலீஸ் துப்பாக்கி சூட்டில் 4 பேர் பலியானார்கள்.

7 முக்கிய விமான நிலையங்களை தாக்க தீவிரவாதிகள் திட்டம்: உளவுத்துறை தகவல்

Posted: 21 Jul 2013 02:08 AM PDT

இந்தியாவில் உள்ள 7 விமான நிலையங்கள் மீது தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. டெல்லி, மும்பை, அகமதாபாத், சென்னை, பெங்களூர், ஹைதராபாத் மற்றும் கவுகாத்தி விமான நிலையங்கள் தீவிரவாதிகளின் பட்டியலில் உள்ளதாக அந்த தகவல் தெரிவிக்கிறது

மேற்கு வங்கத்தில் போலீஸ் வேன் - லாரி மோதல்: 7 போலீசார் பலி

Posted: 21 Jul 2013 12:15 AM PDT

மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்தில் இன்று காலை 6.30 மணியளவில் போலீஸ் வேன் ஒன்று விபத்துக்குள்ளானது. இதில் 7 போலீசார் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.

மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தல்: கலவரத்தில் 4 பேர் பலி

Posted: 20 Jul 2013 11:39 PM PDT

மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் 5 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதுவரை 3 கட்ட தேர்தல் (ஜூலை 11, 15 மற்றும் 19) முடிந்து விட்டது. நேற்று முன்தினம் நடந்த 3–வது கட்ட தேர்தலின் போது 3 பேர் பலியானார்கள். 4–வது கட்ட தேர்தல் நாளை நடக்கிறது. இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தின் போது இன்று மீண்டும் வன்முறை வெடித்தது.

காதலுக்கு உடந்தையாக இருந்ததால் பெண்ணை உயிருடன் எரித்து கொன்ற கும்பல்

Posted: 20 Jul 2013 11:20 PM PDT

உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டம் முதாப் கிராமத்தைச் சேர்ந்த ஊர்காவல் படை வீரரின் மகள் கடந்த மாதம் காதலனுடன் வீட்டை விட்டு ஓடிவிட்டாள். 3 நாள் கழித்து அவள் மீட்கப்பட்டாள். இதற்கிடையே அவள் காதலனுடன் ஓடிப்போனதற்கு அதே கிராமத்தைச் சேர்ந்த சுராஜ்சிங் என்பவரது மகள் கிரண் உடந்தையாக இருந்ததாக ஊர் மக்கள் கருதினார்கள். இதனால் இரு குடும்பத்துக்கும் பகை ஏற்பட்டது. நேற்று கிரண் கடைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டு இருந்தாள். அப்போது கிராம மக்கள் 5 பேர் அவளை வழிமறித்து உடலில் மண்எண்ணை ஊற்றி நடுரோட்டில் தீ வைத்து எரித்தனர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™