Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


ஆஸ்திரியாவில் கருணாநிதி படத்துடன் தபால் தலை வெளியீடு

Posted: 21 Jul 2013 10:20 PM PDT

திமுக தலைவர் கருணாநிதியின் 90வது பிறந்த நாளையொட்டி ஆஸ்திரியாவில் அவரது படத்துடன் தபால் தலை வெளியிடப்பட்டுள்ளது. திமுக தலைவர் கருணாநிதி தனது 90வது பிறந்தநாளை கடந்த மாதம் 3ம் திகதி கொண்டாடினார். ஆஸ்திரியாவில் நமக்குப் பிடித்தவர்களின் படத்துடன் தபால் தலை வெளியிட அனுமதி உண்டு. அந்தவகையில் ஆஸ்திரிய தபால் துறைக்கு சிறப்புக் கட்டணம் செலுத்தி நமக்கு பிடித்தவர்களின் முகங்களை தபால் தலையாக வெளியிடலாம். இந்நிலையில் டான் மற்றும் அசோக் ஆகிய இருவரும் சேர்ந்து பொது வாழ்க்கை, சினிமா, [...]

நீர்கொழும்பு மீனவர்கள் இருவர் இராமேஸ்வரத்தில் தஞ்சம்

Posted: 21 Jul 2013 10:02 PM PDT

மீன்பிடி படகில் இன்ஜின் கோளாறு ஏற்பட்டதால் இராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில், சிங்கள மீனவர்கள் இருவர் தஞ்சமடைந்துள்ளனர். இலங்கை நீர்கொழும்புவை சேர்ந்த வர்ணகுல ஜெயபுஷ்பகுமார், 52, வர்ணகுல ஜெலஸ்டின் ஜினோமணி, 34 என்ற இரு மீனவர்களே தஞ்சமடைந்துள்ளனர். நேற்று (21) மாலை, மன்னார் கடற்கரையில் இருந்து, பைப்பர் கிளாஸ் படகில் மீன்பிடிக்க புறப்பட்டு, இந்திய, இலங்கை கடல் எல்லையில் மீன்பிடித்த போது படகில் இன்ஜின் கோளாறு ஏற்பட்டுள்ளது. உடனே, அங்கு மீன்பிடித்த, இராமேஸ்வரம் நாட்டுபடகு மீனவர் உதவியுடன் [...]

கிரிக்கெட்டால் இலங்கை அகதி முகாமில் மோதல்

Posted: 21 Jul 2013 10:01 PM PDT

புதுக்கோட்டை மாவட்டம், தோப்புக் கொல்லை என்னுமிடத்தில் உள்ள இலங்கை அகதி முகாமில் மோதல் ஏற்பட்டுள்ளது. இம் முகாமில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின் காரணமாகவே இரு தரப்பினருக்கிடையே மோதல் நிலை ஏற்பட்டுள்ளது. மோதல் காரணமாக ஏழு பேர் தலையில் காயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இது தொடர்பாக வள்ளத்திராக் கோட்டை பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

14 வயது சிறுவனை வற்புறுத்தி உறவு வைத்த இளம்பெண் சிறையில்

Posted: 21 Jul 2013 09:55 PM PDT

14 வயது சிறுவனை வற்புறுத்தி பாலியல் உறவு வைத்த 22 வயது இளம் பெண்ணுக்கு இங்கிலாந்து நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.இங்கிலாந்தின் டார்லிங்டன் பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுவன் தனது சித்தியின் கிரெடிட் கார்ட் மூலம் கஞ்சா வாங்கியதும், விடுதியில் தங்கியிருந்ததும் அவனது பெற்றோருக்கு தெரியவந்தது. இதனையடுத்து, பெற்றோர் அந்த சிறுவனை மிரட்டி விசாரித்த போது, தனது 22 வயது 'ஆசை நாயகி'யுடன் கஞ்சா போதையில் ஹோட்டலில் தங்கியிருந்ததை ஒப்புக் கொண்டான். அந்த [...]

ஜிமெயில் அறிமுகப்படு​த்தியுள்ள புத்தம் புதிய வசதி

Posted: 21 Jul 2013 09:53 PM PDT

மின்னஞ்சல் சேவையை வழங்குவதில் முன்னணியில் திகழும் ஜிமெயில் ஆனது காலத்திற்கு காலம் புதிய வசதிகளை பயனர்களுக்கு வழங்கி வருகின்றது. இதன் அடிப்படையில் அண்மையில் மின்னஞ்சல்களை உருவாக்குவற்கான புதிய பொப் அப் விண்டோவினை அண்மையில் அறிமுகப்படுத்தியிருந்தது. இந்த விண்டோவானது வலது புற கீழ் மூலையில் சிறிய அளவு விண்டோவாக தோன்றுவதாக காணப்பட்டது. ஆனால் தற்போது குறித்த விண்டோ திரை முழுவதும் தோன்றக்கூடியவாறு(Full Screen Compose Window) மாற்றியமைத்துள்ளது. இந்த வசதியினை பெறுவதற்கு ஜிமெயில் பொப் அப் விண்டோவின் வலது [...]

விண்டோஸிற்கா​க Google அறிமுகப்படு​த்தும் Chrome App Launcher

Posted: 21 Jul 2013 09:51 PM PDT

கூகுள் நிறுவனத்தினால் வழங்கப்பட்டுவரும் பல்வேறு சேவைகளையும் விண்டோஸ் கணனிகள் மூலம் இலகுவாக பயன்படுத்துவற்கு Google Chrome App Launcher எனும் மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முற்றிலும் இலவசமாக தரப்படும் இம்மென்பொருளானது விண்டோஸ் 7, விண்டோஸ் 8 இயங்குதளங்களில் நிறுவிப் பயன்படுத்தக்கூடியவாறு காணப்படுகின்றது. இவ்வாறு நிறுவிய பின்னர் அதிகளவில் பயன்படுத்தப்படும் கூகுள் சேவைகளுக்கான Icon-களை டாக்ஸ் பாரில் அல்லது டெக்ஸ்டொப்பில் வைத்து இலகுவாகவும், விரைவாகவும் பயன்படுத்த முடியும். இந்த மென்பொருளானது குரோம் கணனிகளில் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொழில்நுட்ப உலகில் புதிய புரட்சியை ஏற்படுத்தவு​ள்ள அடுத்தகட்ட பயனர் இடைமுகம் (வீடியோ இணைப்பு)

Posted: 21 Jul 2013 09:34 PM PDT

அபரிமிதமான தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக நாளுக்கு நாள் பல்வேறு புதிய தொழில்நுட்ப சாதனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுக்கொண்டு இருக்கின்றன. இவற்றின் வரிசையில் தற்போது கணனிகளில் பயன்படுத்தப்படும் பயனர் இடைமுகத்தில் iBright எனும் புதிய தொழில்நுட்பம் உட்புகுத்தப்பட்டுள்ளது. இதுவரை படவுருக்களை(Icon) கொண்டும், தொடுதிரை தொழில்நுட்பத்தினைக் கொண்டும் காணப்பட்ட பயனர் இடைமுகமானது தற்போது பயனர்கள் சிந்திப்பதை விசேட சென்சார்கள் மூலம் அறிந்துகொண்டு அதற்கு ஏற்றாற்போல் செயற்படக்கூடியதாக காணப்படும் இப்புதிய பயனர் இடைமுகமானது மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சீனாவில் நிலநடுக்கம்: 3 பேர் பலி

Posted: 21 Jul 2013 09:27 PM PDT

சீனாவின் கன்சு மாகாணத்தில் இன்று காலை ஏற்பட்ட பலத்த நிலநடுக்கத்திற்கு 3 பேர் பலியாகினர். மலைகள் சூழ்ந்த கன்சு மாகாணத்தின் டிங்சி நகரில் சுமார் 27 லட்சம் மக்கள் வாழ்கின்றனர். பெரும்பாலும் பண்ணை விவசாயம் செய்து இங்குள்ள மக்கள் வாழ்க்கையை மேற்கொண்டு வருகின்றனர். உள்ளூர் நேரப்படி, இன்று காலை 7.45 மணிக்கு ரிக்டர் அளவில் 6.6 ஆக ஏற்பட்ட பலமான நிலநடுக்கத்தால் இப்பகுதி மக்கள் அதிர்ந்துப் போயினர். வீட்டின் கதவு, ஜன்னல்கள் அதிர்ந்து மின் விளக்குகள் எல்லாம் [...]

வாக்குப் பலத்தினை சரியாக பயன்படுத்தினால் தமிழர்கள் சகல அதிகாரங்களுடனும் வாழமுடியும்

Posted: 21 Jul 2013 09:26 PM PDT

வடகிழக்கில் உள்ள தமிழ் மக்கள் தமது வாக்கு பலத்தினை சரியான முறையில் முழுமையாக பயன்படுத்துவதன் மூலமே எதிர்காலத்தில் வடகிழக்கில் சகல அதிகாரங்களும் கொண்ட மக்களாக தமிழ் மக்கள் வாழமுடியும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பு கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார். வவுணதீவு பிரதேச செயலகத்துக்குட்பட்ட கரவெட்டி விநாயகர் ஆலயத்துக்கு மாகாண சபை உறுப்பினரான கருணாகரனின் பன்முகப்படுத்தப்பட்ட 75 ஆயிரம் ரூபா நிதியொதுக்கீட்டில் ஒலிபெருக்கி சாதனங்கள் கையளிக்கப்பட்டன. வவுணதீவு, கரவெட்டி [...]

நவநீதம் பிள்ளை இந்த மாத இறுதியில் கொழும்புக்கு விஜயம்

Posted: 21 Jul 2013 09:23 PM PDT

ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை இந்த மாத இறுதியில் கொழும்புக்கு விஜயம் செய்வார் என கூறப்படுகின்றது. அவருடைய வருகை ஒக்டோபர் மாதம் என எதிர்ப்பார்க்கப்பட்டபோதும் முன்கூட்டியே வரக்கூடும் என கொழும்பு அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. ஆனால் அவருடைய வருகை தொடர்பில் உறுதிப்படுத்த முடியவில்லை என எமது கொழும்பு செய்தியாளர் தெரிவித்தார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™