மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- குஜராத் போலி என்கவுன்டர் வழக்கு: சி.பி.ஐ குற்றப்பத்திரிகை இன்று கோர்டில் தாக்கல்
- அமெரிக்கா உளவு பார்த்ததை நியாயப்படுத்துவதா?: சல்மான் குர்ஷிதுக்கு மார்க். கம்யூ கண்டனம்
- புதுடெல்லி: 7ம் வகுப்பு மாணவியை நண்பனின் வீட்டில் அடைத்து வைத்து கற்பழித்த காமுகன் கைது
- மும்பை: நடைபாதையில் வசித்த 8 வயது சிறுமி கற்பழித்து கொலை
- லக்னோ: வேலைக்காரியை அடைத்து வைத்து சித்திரவதை செய்த டாக்டர் மனைவியுடன் கைது
- பிரதமரின் வீட்டை பெருக்கக் கூட தகுதி இல்லாதவர் முலாயம் சிங் யாதவ் : மத்திய மந்திரி கடும் தாக்கு
- பாலில் கலப்படத்தை தடுக்க மத்திய - மாநில அரசுகள் இதுவரை எடுத்த நடவடிக்கை என்ன? சுப்ரீம் கோர்ட் கேள்வி
- உத்தரகாண்ட் வெள்ளத்தில் சிக்கிய 11 ஆயிரம் பேரை காணவில்லை: தேசிய பேரிடர் மேலாண்மை துணை தலைவர் தகவல்
- மோடியின் வளர்ச்சி தனக்கு ஆபத்தாகி விடும் என நிதிஷ் குமார் கருதுகிறார் : பாபா ராம்தேவ்
- மேலாளரை சுட்டுக்கொன்று வங்கிப்பணம் கொள்ளை
- ரெயில்வே லஞ்சபேர வழக்கில் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல்: பன்சால் பெயர் இல்லை
- உத்தரகாண்ட் நிவாரணப் பணிகளுக்கு ஜப்பான் ரூ.1.19 கோடி உதவி
- ஜார்க்கண்டில் மாவோயிஸ்டுகள் தாக்குதல்: மாவட்ட எஸ்.பி. உள்ளிட்ட 5 போலீசார் சாவு
- மேற்கு வங்க பஞ்சாயத்து தேர்தல் அட்டவணையை மாற்ற சுப்ரீம் கோர்ட் மறுப்பு: மம்தா அரசுக்கு பின்னடைவு
- அடைக்கலம் வழங்க முடியாது: ஸ்னோடென் கோரிக்கையை இந்தியா நிராகரித்தது
- சவுதி அரேபியாவின் புதிய சட்டம்; கனவுகளுடன் சென்றவர்கள் கண்ணீருடன் திரும்புகிறார்கள்
- இலங்கை சிறையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் 24 பேரை விடுவிக்க உத்தரவு
- ஐதராபாத் குண்டுவெடிப்பு குற்றவாளிகளை விரைவில் கைது செய்வோம்: ஆந்திர போலீஸ்
- 2ஜி வழக்கில் நேரில் ஆஜராவதை தவிர்க்கும் தயாளு அம்மாள் மனு மீது நாளை விசாரணை
- 2ஜி வழக்கு: தொலைபேசி உரையாடலை சி.பி.ஐ. தாக்கல் செய்யக்கூடாது- டெல்லி கோர்ட்டில் ராசா மனு
| குஜராத் போலி என்கவுன்டர் வழக்கு: சி.பி.ஐ குற்றப்பத்திரிகை இன்று கோர்டில் தாக்கல் Posted: 02 Jul 2013 10:51 PM PDT குஜராத் மாநிலத்தில் கடந்த 2004-ம் ஆண்டு ஜூன் 15-ம் தேதி என்கவுன்டர் நடத்தப்பட்டது. இதில் 19 வயதான இஷ்ரத் ஜகான், ஜாவேத் செய்க் (எ) பிரனேஷ் பிள்ளை, அம்ஜத் அலி ரானா மற்றும் ஜீசன் ஜோகர் ஆகிய நான்கு பேர் கொல்லப்பட்டனர். இந்த என்கவுன்டரை அம்மாநில குற்றப்பிரிவு போலீசார் நடத்தினர். |
| அமெரிக்கா உளவு பார்த்ததை நியாயப்படுத்துவதா?: சல்மான் குர்ஷிதுக்கு மார்க். கம்யூ கண்டனம் Posted: 02 Jul 2013 09:25 PM PDT அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு அமைப்பு இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் தொலைப்பேசி மற்றும் இணைய பரிவர்தணைகளை உளவு பார்த்த தகவல்களை சமீபத்தில் எட்வர்ட் ஸ்னோடென் வெளிப்படுத்தினர். |
| புதுடெல்லி: 7ம் வகுப்பு மாணவியை நண்பனின் வீட்டில் அடைத்து வைத்து கற்பழித்த காமுகன் கைது Posted: 02 Jul 2013 04:54 PM PDT 7ம் வகுப்பு மாணவியை கடத்திச் சென்று 4 நாட்களாக நண்பனின் வீட்டில் அடைத்து வைத்து கற்பழித்த வாலிபனை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். கிழக்கு டெல்லியில் உள்ள கல்யாண்புரி பகுதியில் வசிக்கும் ஒருவர், 7ம் வகுப்பில் படித்து வந்த தனது 16 வயது மகளை |
| மும்பை: நடைபாதையில் வசித்த 8 வயது சிறுமி கற்பழித்து கொலை Posted: 02 Jul 2013 03:15 PM PDT மும்பையின் ஓர்லி பகுதியை சேர்ந்த ஒரு பெண் வீட்டு வேலை செய்துக்கொண்டு தனது 8 வயது மகளுடன் நடைபாதை குடிசையில் வசித்து வந்தார். நேற்று காலை தூங்கி விழித்த அந்தபெண் மகளை காணாமல் தேடினார். குடிசைக்கு அருகாமையில் உள்ள பகுதியில் |
| லக்னோ: வேலைக்காரியை அடைத்து வைத்து சித்திரவதை செய்த டாக்டர் மனைவியுடன் கைது Posted: 02 Jul 2013 02:43 PM PDT வேலைக்காரியை அடைத்து வைத்து சித்திரவதை செய்த டாக்டரையும் அவரது மனைவியையும் போலீசார் கைது செய்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 20 வயது இளம்பெண், லலிதா. இவரது தாயார் கடந்த ஆண்டு இறந்துவிட்டார். இவரது தந்தை மறுமணம் செய்துக்கொண்டு லலிதாவை |
| பிரதமரின் வீட்டை பெருக்கக் கூட தகுதி இல்லாதவர் முலாயம் சிங் யாதவ் : மத்திய மந்திரி கடும் தாக்கு Posted: 02 Jul 2013 01:23 PM PDT சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ்-வின் நெருங்கிய நண்பராக இருந்து காங்கிரசில் இணைந்த மத்திய மந்திரி பேனி பிரசாத் வர்மா உத்தரபிரதேச மாநிலம், பைசாபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நேற்று பங்கேற்றார். அப்போது பேனி பிரசாத் வர்மா பேசியதாவது |
| பாலில் கலப்படத்தை தடுக்க மத்திய - மாநில அரசுகள் இதுவரை எடுத்த நடவடிக்கை என்ன? சுப்ரீம் கோர்ட் கேள்வி Posted: 02 Jul 2013 12:44 PM PDT மக்களின் உயிரை காக்கும் உணவுப் பொருளான பாலில் சோப்புத் தூள் போன்ற ரசாயனங்களை கலந்து கலப்படம் செய்யும் வியாபாரிகளை கட்டுப்படுத்த மத்திய - மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க தவறி வருகிறது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தை |
| உத்தரகாண்ட் வெள்ளத்தில் சிக்கிய 11 ஆயிரம் பேரை காணவில்லை: தேசிய பேரிடர் மேலாண்மை துணை தலைவர் தகவல் Posted: 02 Jul 2013 12:27 PM PDT உத்தரகாண்ட் வெள்ளத்தில் சிக்கிய 11 ஆயிரம் பேரை காணவில்லை என்று தேசிய பேரிடர் மேலாண்மை துணை தலைவர் சசிதர் ரெட்டி கூறியுள்ளார். இதுதொடர்பாக சசிதர் ரெட்டி கூறியதாவது:- தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனத்திற்கு கிடைத்துள்ள தகவலின்படி உத்தரகாண்ட் வெள்ளத்தில் 2 ஆயிரத்து 397 வீடுகளும் |
| மோடியின் வளர்ச்சி தனக்கு ஆபத்தாகி விடும் என நிதிஷ் குமார் கருதுகிறார் : பாபா ராம்தேவ் Posted: 02 Jul 2013 11:59 AM PDT நரேந்திர மோடி வளர்ந்து விட்டால் தனக்கு ஆபத்து என்று பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார் நினைக்கிறார் என்று யோகா குரு பாபா ராம்தேவ் கூறியுள்ளார். பீகார் மாநிலம், முசாபர்பூர் செல்லும் வழியில் தலைநகர் பாட்னாவில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த பாபா ராம்தேவ் கூறியதாவது |
| மேலாளரை சுட்டுக்கொன்று வங்கிப்பணம் கொள்ளை Posted: 02 Jul 2013 08:47 AM PDT பீகார் மாநிலம் சீதாமர்கி மாவட்டத்தில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியின் பிரதான கிளையில் இருந்து இன்று தும்ரியில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு ஒரு வேனில் பணப் பெட்டியை கொண்டு சென்றனர். வேனில் தும்ரி வங்கி மேலாளர் மற்றும் ஊழியர்கள் இருந்தனர். |
| ரெயில்வே லஞ்சபேர வழக்கில் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல்: பன்சால் பெயர் இல்லை Posted: 02 Jul 2013 08:28 AM PDT ரெயில்வே அதிகாரிக்கு பதவி உயர்வு வழங்குவதற்காக ரூ.90 லட்சம் லஞ்சம் வாங்கிய ரெயில்வே மந்திரி பவன்குமார் பன்சாலின் உறவினர் விஜய் சிங்லா மற்றும் இந்த லஞ்ச பேரத்தில் தொடர்புடைய 10 பேரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். தீவிர விசாரணைக்குப் பிறகு சி.பி.ஐ |
| உத்தரகாண்ட் நிவாரணப் பணிகளுக்கு ஜப்பான் ரூ.1.19 கோடி உதவி Posted: 02 Jul 2013 07:40 AM PDT வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் உருக்குலைந்த உத்தரகாண்ட் மாநிலத்தில் மீட்பு மற்றும் புனரமைப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. நிவாரணப் பணிகளுக்காக 2 லட்சம் டாலர் (ரூ.1.19 கோடி) வழங்கப்படும் என்று ஜப்பான் அரசு இன்று அறிவித்துள்ளது. |
| ஜார்க்கண்டில் மாவோயிஸ்டுகள் தாக்குதல்: மாவட்ட எஸ்.பி. உள்ளிட்ட 5 போலீசார் சாவு Posted: 02 Jul 2013 05:33 AM PDT ஜார்க்கண்ட் மாநிலத்தில் மாவோயிஸ்டுகளை ஒடுக்குவதற்கான நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதனால் ஆத்திரமடைந்துள்ள மாவோயிஸ்டுகள், போலீஸ்காரர்களை குறிவைத்து அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். |
| மேற்கு வங்க பஞ்சாயத்து தேர்தல் அட்டவணையை மாற்ற சுப்ரீம் கோர்ட் மறுப்பு: மம்தா அரசுக்கு பின்னடைவு Posted: 02 Jul 2013 04:57 AM PDT மேற்கு வங்கத்தில் பஞ்சாயத்து தேர்தலை நடத்துவது தொடர்பாக மாநில அரசுக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. ஜூலை 2-ம் தேதி தொடங்கி 3 கட்டமாக தேர்தலை நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அட்டவணை வெளியிட்டிருந்தது. |
| அடைக்கலம் வழங்க முடியாது: ஸ்னோடென் கோரிக்கையை இந்தியா நிராகரித்தது Posted: 02 Jul 2013 04:35 AM PDT அமெரிக்காவின் உளவு நிறுவனமான தேசிய பாதுகாப்பு ஏஜென்சியில் பணியாற்றிய எட்வர்ட் ஸ்னோடென், உளவு நிறுவனத்தின் பணிகளை அம்பலப்படுத்தியதால் அவரை கைது செய்ய அமெரிக்கா முயற்சி செய்து வருகிறது. ஹாங்காங்கில் இருந்த ஸ்னோடென் அங்கிருந்து வெளியேறி, ரஷ்யாவிற்குச் சென்றுள்ளார். ஆனால், முறையான ஆவணங்கள் |
| சவுதி அரேபியாவின் புதிய சட்டம்; கனவுகளுடன் சென்றவர்கள் கண்ணீருடன் திரும்புகிறார்கள் Posted: 02 Jul 2013 04:10 AM PDT 'நிதாகத்' இந்த ஒற்றைவரி சட்டம் சவுதி அரேபியாவில் வேலை பார்க்கும் 75 ஆயிரம் இந்தியர்களை நிலைகுலைய வைத்துள்ளது. எண்ணை வளத்தால் செல்வசெழிப்பில் மிதக்கும் சவுதிஅரபியாவுக்கு இப்போது போதாத நேரம். வேளா வேளைக்கு சாப்பாடு... சொகுசான வாழ்க்கை என்று அலைந்த அரேபிய ஷேக்குகள் வாழ்க்கையிலும் ஒரு சின்ன 'ஷேக்'. வேலையில்லா திண்டாட்டத்தால் அவர்கள் வாழ்க்கையும் ஆட்டம் கண்டுள்ளது. எனவே நாட்டு மக்களை காப்பாற்ற அந்த நாட்டு அரசு கொண்டு வந்துள்ள தொழிலாளர் நலச்சட்டம்தான் நிதாகத். இந்த சட்டப்படி |
| இலங்கை சிறையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் 24 பேரை விடுவிக்க உத்தரவு Posted: 02 Jul 2013 03:54 AM PDT ராமேஸ்வரம் மீனவர்கள் 24 பேர் கடந்த மாதம் 5-ம் தேதி கச்சத்தீவு அருகில் மீன்பிடித்துக் கொண்டிந்தபோது, அவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்களை ஜூலை 4-ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். |
| ஐதராபாத் குண்டுவெடிப்பு குற்றவாளிகளை விரைவில் கைது செய்வோம்: ஆந்திர போலீஸ் Posted: 02 Jul 2013 03:43 AM PDT ஆந்திரப்பிரதேச மாநிலத் தலைநகர் ஐதராபாத் தில்சுக் நகரில் கடந்த பிப்ரவரி மாதம் இரவு இரண்டு இடங்களில் குண்டுகள் வெடித்தன. மக்கள் நடமாட்டம் அதிக முள்ள இடங்களில் வெடித்த இந்த குண்டு வெடிப்பில் 17 பேர் கொல்லப்பட்டனர். 100 -க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். |
| 2ஜி வழக்கில் நேரில் ஆஜராவதை தவிர்க்கும் தயாளு அம்மாள் மனு மீது நாளை விசாரணை Posted: 02 Jul 2013 02:30 AM PDT 2ஜி அலைக்கற்றை ஊழல் தொடர்பாக முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கைது செய்யப்பட்டு ஜாமீனில் உள்ளனர். இவ்வழக்கில் முக்கிய ஆதாரமாக அரசியல் தரகர் நீரா ராடியாவின் தொலைபேசி உரையாடலை சேர்க்க சி.பி.ஐ. தீவிரமாக உள்ளது. இது தொடர்பாக கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது. |
| 2ஜி வழக்கு: தொலைபேசி உரையாடலை சி.பி.ஐ. தாக்கல் செய்யக்கூடாது- டெல்லி கோர்ட்டில் ராசா மனு Posted: 02 Jul 2013 02:04 AM PDT 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கு டெல்லியில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய அரசியல் தரகர் நீரா ராடியா பேசிய 65 தொலைபேசி உரையாடல் அடங்கிய சி.டி.க்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று சி.பி.ஐ. மனுத்தாக்கல் செய்துள்ளது. |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |