Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


காதல்

Posted: 08 Jul 2013 02:00 PM PDT

நிழல் எட்டுதிக்கும் மாறிவரும்- ஆனால் நினைவுகள் என்றும் நீ இருக்கும் திசையில் மட்டுமே!    

5000 மதிப்பீடுகள் அள்ளிய யினியவரை வாழ்த்தலாம் வாங்க .....

Posted: 08 Jul 2013 01:58 PM PDT

5000 மதிப்பீடுகள்  கடந்து  அசத்தி கொண்டு இருக்கும்  உங்களுக்கு  வாழ்த்துகள் அண்ணா  , மேலும்  பல  ஆயிரம் மதிப்பீடுகள் பெறவும் வாழ்த்துகள் ...  

என் பைந்தமிழே ...

Posted: 08 Jul 2013 01:57 PM PDT

நெருஞ்சி முள்ளாய்
நெஞ்சில் குற்றுபவளே...!!!
குறிஞ்சி மலராய்....
கண்டேன் உன்னை ...
குறிஞ்சி ஆண்டில் ...!!!
உறிஞ்சி கொண்டிருக்கிறாய் ..
என் நினைவுகளை ...!!!
முத்தமிழாய் வந்து
உயிரில் பதிந்தவளே!
உன்னை இசைத்தமிழாய்
கண்டேன் உன் மொழியழக்கில் ...
பைந்தமிழாய் கண்டேன் ..
உன் பண்பாட்டில் ...
செந்தமிழாய் கண்டேன் ..
உன் செவ்விதழில்

உனக்காக காத்திருக்கிறது பஞ்சபூதம் ..!!!

Posted: 08 Jul 2013 01:50 PM PDT

உன் முகம் காண
காத்திருக்கிறது (ஆகாய) நிலா...!

உன் மூச்சை இசையாக ..
கேட்க தாத்திருக்கிறது (காற்று )

உன் நிழல் தாங்க
காத்திருக்கின்றது (நிலம்)....!

உன் கோபமுகம் காண
காத்திருக்கின்றது (நெருப்பு) சூரியன் ...!

உன் கண்ணீரை காண
காத்திருக்கின்றது கடல் (நீர் )

காதல் செய் ...காதல் செய் ...

Posted: 08 Jul 2013 01:48 PM PDT

பாரெங்கும்
காதல்
பிறக்கட்டும் ...

காதலால் ..
நாடுகள்
செழிக்கட்டும் ...

செழித்த நாடுகளில்
சமாதானம்
மலரட்டும் ...

காதல் செய் காதல் செய் ..
உலகின் அனைத்தையும்
காதல் செய் ...

அம்மா

Posted: 08 Jul 2013 01:46 PM PDT

கருவறையில் இருந்த-அன்றே
கல்லறைக்கு அனுப்பாமல்
இன்றுவரை
வீட்டில் தவழவிட்டு
மகிழும் என் அன்னையின்
பெருந்தன்மையை
என்னவென்று சொல்வது
கோவில் சுவர்களில்
இருக்கவேண்டியது
கற்சிலைகள் அல்ல-என்
தாயின் திரு உருவம் அன்றோ ?

காலமும் நம் முன்னோர்களும்

Posted: 08 Jul 2013 01:24 PM PDT

காலத்தை பற்றிய நம் முன்னோர்களின் சிந்தனை வியப்பிற்குரியது.அவைகள் இதோ உங்களின் பார்வைக்கு..... காலம் அளவுகள் - தெறிப்பளவு-1 2 கண்ணிமை - 1 நொடி 2 கை நொடி - 1 மாத்திரை 2 மாத்திரை - 1 குரு 2 குரு - 1 உயிர் 2 உயிர் - 1 சணிகம் 12 சணிகம் - 1 விநாடி 60 விநாடி - 1 நாழிகை 2 1/2 நாழிகை - 1 ஓரை 3 3/4 நாழிகை - 1 முகூர்த்தம் 2 முகூர்த்தம் - 1 சாமம் 4 சாமம் - 1 பொழுது 2 பொழுது - 1 நாள் 15 நாள் - 1 பக்கம் 2 பக்கம் (30 நாள்) - 1 மாதம் 6 மாதம் - 1 அயனம் 2 அயனம்(12 மாதங்கள்) - 1 ஆண்டு 60 ஆண்டுகள் ...

தலையாய பிரச்னையாக மாறிவரும் தைராய்டு: சரிசெய்வதற்கான சில குறிப்புகள்

Posted: 08 Jul 2013 11:35 AM PDT

தற்போதைய நிலையில் தைராய்டு பெண்களின் தலையாய பிரச்னையாக மாறிவருகிறது. எந்நேரமும் தூக்கம் தூக்கமா வருது, அடிக்கடி எதையாவது மறந்துட்டு முழிக்கிறேன், கொஞ்சம் தான் சாப்பிடறேன். உடம்புல அதிகமாக வெயிட் போடுது, ரொம்ப சோர்வா இருக்கு, அதோட சின்ன சின்ன விடயத்துக்கு கூட டென்ஷன், எரிச்சல் வந்து படப்படப்பா இருக்கு, என்னை பாத்தா எனக்கே புடிக்கல.. இந்த அறிகுறிகள் இருந்தால் தைராய்டு டெஸ்ட் எடுத்துக் கொள்வது அவசியம் என்கிறார் மகப்பேறு மற்றும் மகளிர் சிறப்பு மருத்துவர் லதா. இது குறித்து அவர் கூறுகையில், ...

மது அருந்தும் பழக்கத்தை எப்படி நிறுத்தலாம்?

Posted: 08 Jul 2013 11:19 AM PDT

அதிகமாக மது அருந்துகிறீர்களா? குடியை விட ஆசை, ஆனால் முடியாமல் போகிறதா? அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள். தற்போது குடி என்பது ஒரு ஃபேஷனாகிவிட்டது. மாணவர்கள், அலுவலக வேலையில் உள்ளவர்கள், தொழிலாளிகள் என்று பலரும் இதை அருந்துகிறார்கள். அதனுடைய பின்விளைவுகளை அறியாது, தானும் கெட்டு, தன் குடும்பத்தையும் நடுத்தெருவுக்கே கொண்டு வந்து விடுகிறார்கள். குடியால் அழிந்த குடும்பங்கள் எத்தனையோ உள்ளன. இதற்கு வீதிக்கு வீதி அமைந்திருக்கும் பார்களும் காரணமாகும். குடியை விட்டு விடலாம் என்று மனவுறுதியோடு இருப்பவர்கள் ...

ஸ்மார்ட்போன் வாங்கும் முன் கவனிக்க வேண்டிய விடயங்கள்

Posted: 08 Jul 2013 11:08 AM PDT

பேசுவதற்கு மட்டும் அலைபேசி என்று இருந்த காலம் எல்லாம் போய், எல்லாவற்றுக்கும் அலைபேசியே போதும் எனும் அளவுக்கு திகட்ட திகட்ட வசதிகளுடன் அலைபேசிகள் வந்துவிட்டன. அப்படிப்பட்ட Smartphoneகளை வாங்கும் முன்பு கவனிக்க வேண்டிய தகவல்கள் என்ன என்பதை பார்ப்போம். ஏன் Smartphone ? உங்களுடைய செயல்கள் அனைத்தையும் ஸ்மார்ட் ஆக செய்ய உதவுகிறது இது. எந்த ஒரு செயலுக்கும் தனித் தனியாக Application என்று கணனி போல இருப்பதால் மிக எளிதாக உங்கள் வேலை முடிந்து விடும். Smartphoneல் பெரும்பாலான பயன்பாடுகள் இணையம் ...

3000 மதிப்பீடுகள் அசத்தும் முஹம்மத்....

Posted: 08 Jul 2013 10:30 AM PDT

3000 மதிப்பீடுகளை கடந்து வெற்றி நடைப் போதும் முத்து முஹம்மத்...

வாழ்த்தலாம் வாங்க






வாழ்த்துகள் முஹம்மத்


ரம்ஜான் முபாரக்



ஏர்செல்லில் கேட்ட ரொம்ப ரொம்ம்ம்ப்ப்ப்ப கஷ்டமான கேள்வி? பதில் சொல்லுங்க...

Posted: 08 Jul 2013 10:16 AM PDT

what type of card is used in mobile phone? A- Credit card B- Sim card sms  A or  B   to 51001 and win CAR, Sports Bike , and LED TV and more @ RS 5/day TNC Apply... Ratoin card   ஏன் விட்டுட்டாங்கணு தெரியல     

கட்டிய புடவையுடன் காத்திருக்கிறாய் ....!!!

Posted: 08 Jul 2013 10:12 AM PDT

உன்னை நினைத்து
இரவு முழுதும்
அழுது முடித்து
உறுதியாய்த்
தீர்மானித்தேன்
உன்னை மறந்து
விடுவதென்று!

காலை எழுந்தேன் ..
கண்டபடி சுற்றினேன் ...
நண்பர்களை காண மறுத்தேன் ...
சாப்பாட்டை மறந்தேன் ...
தண்ணீர் கூட வெறுத்தேன் ...
கைபேசியை நிறுத்தி வைத்தேன் ...
பித்தனை போல் அழைந்தேன் ...

அடி கள்ளி ..
வீட்டில் வந்து பார்த்த போது ..
கட்டிய புடவையுடன்
காத்திருக்கிறாய் ....!!!

அழகு குறிப்புகள்:மரு, கரும்புள்ளியா? கவலையே வேண்டாம்!

Posted: 08 Jul 2013 10:11 AM PDT

தினமும் காலை, மாலை வேளைகளில் 5 நிமிடம் மூச்சுப்பயிற்சி செய்து வந்தால் அன்றைய தினம் முழுவதும் 'ப்ரெஸ்' ஆக காணப்படுவீர்கள். * தினமும் காலையில் எழுந்ததும் ஒரு லிட்டர் தண்ணீர் குடித்து வந்தால் அன்றைய நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வலம் வருவீர்கள். சோர்வு என்பதே எட்டிப்பார்க்காது. * தினமும் காலையில் எழுந்ததும் பழங்கள் சாப்பிடுவது இளமையை அதிகரிக்கும். குறிப்பாக, ஆப்பிள், ஆரஞ்சு, பப்பாளிப் பழங்கள் சாப்பிடுவது நல்லது. * தினமும் காலையில் ஒன்று அல்லது இரண்டு கேரட்டை பச்சையாக சாப்பிட்டு வந்தால் ...

கணனியும் யு.எஸ்.பி போர்ட்டும்

Posted: 08 Jul 2013 10:09 AM PDT

புதிய கணனியில் இப்போதெல்லாம் குறைந்தது நான்கு யு.எஸ்.பி. போர்ட்கள் அமைக்கப்படுகின்றன. இவற்றில் இணைக்கப்படும் சாதனங்களுக்கு, இவை கணனிக்கு கிடைக்கும் மின் சக்தியை வழங்குகின்றன. இந்த சாதனங்களுக்கு வெளியே இருந்து மின்சக்தி இணைப்பு இல்லை எனில், கணனியிலிருந்துதான் மின்சக்தி  தரப்படுகிறது.  இதில் என்ன பிரச்னை என்றால், ஒவ்வொரு யு.எஸ்.பி. போர்ட்டும் அதிக பட்சம் 500 மில்லி ஆம்பியர் கரண்ட் தான் தர முடியும். கணனி ஒன்றுடன், யு.எஸ்.பி. போர்ட் வழியாக,ஒரு சாதனம் இணைக்கப்பட்டால், இதில் பிரச்னை ஏற்பட ...

மூன்றாயிரம் தெறிக்கும் மதிப்பீடுகள் பானு அக்காவை வாழ்த்தலாம் வாருங்கள்.

Posted: 08 Jul 2013 10:08 AM PDT







வாழ்த்துக்கள் அக்கா.

1000 பதிவுகள் கடந்த சாமி அவர்களை வாழ்த்தலாம் வாங்க .....

Posted: 08 Jul 2013 09:29 AM PDT

ஆயிரம்  பதிவுகள் கடந்தமைக்கு  வாழ்த்துகள் ஐயா , மேலும் பல்லாயிரம் பயனுள்ள பதிவுகளை  பதியவும் வாழ்த்துகள் ...

நான் spirulina வளர்ப்பு பற்றி தெரிந்துக் கொள்ள விரும்புகிறேன்

Posted: 08 Jul 2013 09:22 AM PDT

நான் spirulina வளர்ப்பு பற்றி தெரிந்துக் கொள்ள விரும்புகிறேன்

புலிகளிடமிருந்து தப்பிக்க 3 நாட்களாக மரத்தில் வாழும் ஐவர்

Posted: 08 Jul 2013 08:41 AM PDT

இந்தோனேஷியாவில் உள்ள சுமத்ரா தீவிற்கு சென்ற 6 பேர் கொண்ட குழு அங்குள்ள புலிகளிடம் சிக்கி, மரத்தின் மீது உயிருக்கு போராடி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுமத்ரா தீவில் அமைந்துள்ள லெயுசர் வனவிலங்கு பூங்காவிற்கு அகர்வுட் என்னும் பொருளை தேடி கடந்த வாரம் 6 பேர் சென்றுள்ளனர்.இந்த குழு, அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள அந்த வனவிலங்கு பூங்காவுக்குள் நெடுந்தூரம் ஊடுருவிச் சென்றனர். அப்போது உணவுக்காக மான்களுக்கு வலை விரித்து வைத்திருந்தனர். இரவு நேரத்தில் வலைக்குள் மானுக்கு பதிலாக ஒரு புலிக்குட்டி ...

அழகு குறிப்புகள்:பட்டுப் போன்ற மேனிக்காக ஏக்கமா?

Posted: 08 Jul 2013 08:40 AM PDT

சில பெண்களுக்கு எத்தனை வயசானாலும் தோல் சுருங்காது. வழவழவெனச் சின்னப் பெண்ணைப் போலவே இருக்கும்! தோல் வறட்சி, கட்டம் கட்டமாகத் தோலின்மீது மெலிதான வெடிப்பு எதுவுமில்லாத பட்டுப் போன்ற மேனி வேண்டுமா? "ம்ஹும், அதுக்கெல்லாம் கொடுத்து வைக்கணும்பா" - இப்படி ஏக்கப் பெருமூச்சு விடுகிறீர்களா? அம்மணி.... பொறுங்கள். இதைப் படியுங்கள் முதலில்! தண்ணீர் மருந்து "தண்ணி கிடைக்காத காலத்துல மருந்து மாதிரிதான் தண்ணியைக் குடிக்க வேண்டியிருக்கு" - நீங்கள் முனகுவது காதில் விழுகிறது. ஆனால், ஒரு நாளைக்கு ...

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)

Posted: 08 Jul 2013 08:34 AM PDT

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)    - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                   எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி   சென்னை-33  தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,                                                                                    " எழுத்தெனப் படுப   அகரமுதல்  னகர இறுவாய்   முப்பஃது என்ப "        எனக் காண்கிறோம்.                                இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.                             1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ...

அழகு குறிப்புகள்:கவலையளிக்கும் கரு வளையங்களா....?!

Posted: 08 Jul 2013 08:33 AM PDT

அழகுக்கு மேலும் அழகு சேர்க்க சில டிப்ஸ்: ஆள்பாதி ஆடைபாதி என்பார்கள் பெண்களின் அழகில் ஆடையின் பங்கு முக்கியமானது. ஆடை அணிவது முதலில் வசதிக்காகக்தான். உடலை கவ்விப் பிடிக்கும் ஆடைகளை தவிர்ப்பது நல்லது. அதேசமயத்தில் ரிலாக்ஸ்டாக இருக்கிறது என்று ஓவராக தொளதொளவும் வேண்டாம். கச்சிதமாக இருப்பதே அழகு. கம்பீர அழகு வேலைக்கு போகும் பெண்களுக்கு புடவை கம்பீரமாக இருந்தாலும், இன்றைய சூழலில் அதை எப்போதுமே கட்ட முடியாது. சுடிதார், சல்வார் கமீஸ் போன்ற ஆடைகளே சவுகர்யமானது. உடல் உழைப்பு அதிகம் தேவைப்படுகிற ...

ஊழல் செய்த சீன அமைச்சருக்கு மரண தண்டனை

Posted: 08 Jul 2013 08:30 AM PDT

பீஜிங் : சீனாவில், ரயில்வே முன்னாள் அமைச்சருக்கு, ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் செய்ததற்காக, அந்நாட்டு நீதிமன்றம், மரண தண்டனை விதித்துள்ளது. சீன ரயில்வே அமைச்சராக இருந்தவர் லியு ஜிஜுன், 60. இவர், 2003ம் ஆண்டு முதல், 2011ம் ஆண்டு வரை, ரயில்வே அமைச்சராக இருந்தார். இவரின் பதவிகாலத்தில், 50 கோடி ரூபாய் அளவிற்கு சொத்து சேர்த்துள்ளதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இவர் மீதான வழக்கை விசாரித்த, சீன மக்கள் நீதிமன்றம், ஜீஜுங்கிற்கு, இரண்டாண்டு சிறைத் தண்டனைக்குப் பிறகு, மரண தண்டனை வழங்க உத்தரவிட்டது. ...

பச்சை விளக்கு

Posted: 08 Jul 2013 08:26 AM PDT

சாயம் போன கறுப்பு வெள்ளைக் கனவுகளைக் கண்டுகொண்டிருக்கின்றன அவள் சிவப்பு விழிகள் கடிகாரத்தின் அப்போது முடுக்கிய பெண்டுலமாய் அங்குமிங்கும் அலைகிறது ஒவ்வொரு வாகனத்தின் மீதும் பஞ்சு படர்ந்த அவள் பார்வை குழந்தையின் அணைப்பில் இருக்கும் மரப்பாச்சியைப் போல அவள் கையில் உயிர் நிரப்பிய குழந்தை இலையுதிர்க் காலத்து சருகளைப் போல் பட்டுப்போன அம்மா, அய்யா, அக்காக்களை உதிர்க்கிறது அந்த மனித மரத்தின் உலர்ந்த இதழ்கள் அருவருப்புப் பார்வைகளைத் தாண்டி 'சில்லைறை இல்லம்மா போ ...

ஓராயிரம் கவிதை ...

Posted: 08 Jul 2013 08:16 AM PDT

என்னவளே...
கவிதை எழுத பேனா எடுத்தேன்..
கைகள் தானாய்...
கிறுக்குதடி உன் பெயரை..,
என்ன மாயம் செய்தாய்..!!
என் எல்லா கவிதைகளும் ....
உன்னை பற்றியே..!!!
உனது பெயரின் ஒவ்வொரு ...
எழுத்தும் ஓராயிரம் கவிதை ...
தருகிறதடி....!!!

உன் முன்னாடி ...

Posted: 08 Jul 2013 08:16 AM PDT

கண்ணாடி முன் நின்று ..
கடைசியாக ஒரு முறை
சரி செய்யும் புடவையை போல் ..
நீ ஒவ்வொரு முறையும்...
என்னை கண்டவுடன் ...
புடவையை சரிசெய்கிறாய்...
இப்போது விளங்குகிறதா ...???
கண்ணாடிபோல் உன் முன்னாடி ...
நிற்கும் என்னை ...!!!

ஆசைப்படுகிறாயா ...?

Posted: 08 Jul 2013 08:15 AM PDT

உன்னைப்பார்க்க நிலா ஆசைப்படும்
உன்னைப்பார்க்க நட்சத்திரங்கள் ஆசைப்படும்
உன்னைப்பார்க்க முகில்கள் ஆசைப்படும்
உன்னை பார்க்க பூக்கள் ஆசைப்படும் ...
உன்னை பார்க்க நிலவும் ஆசைப்படும் ...
அதுவெல்லாம் இருக்கட்டும் ...
என்னைப்பார்க்க நீ
ஆசைப்படுகிறாயா ...?

காதலில் எதுவும் நடக்குமடி ...

Posted: 08 Jul 2013 08:14 AM PDT

நீ நடந்து வரும் போது ...
வாசலில் போட்ட கோலம்..
வருவதுபோல் இருக்குதடி ...

நீ சிரித்து வரும் போது ...
நட்சத்திரங்கள் நிலத்தில் ...
சிதறிக்கிடப்பது போல் இருக்குதடி ..

நீ அழுதுகொண்டு வந்தால்..
அருவி வானத்தில் தெரியுமடி ...!!!

காதலில் எதுவும் நடக்குமடி ...

ஆசை

Posted: 08 Jul 2013 08:12 AM PDT

கல்வெட்டுகளில்
செதுக்கிய
சுவடுகளாய்
பதிய ஆசை
கோவில் சுவர்களி - அல்ல
உன் நினைவுகளில்...

கறுப்பு பணம் (சிரிப்பு )

Posted: 08 Jul 2013 08:08 AM PDT

" இருந்தாலும் நம்ம தலைவரு
இந்த மாதிரி தேர்தல் வாக்குறுதி
கொடுத்திருக்கக் கூடாது "

"அப்படி என்னங்க சொல்லிட்டாரு "

" நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நாடு
முழுவதும் 'சுவிஸ் ' வங்கி கிளைகளை
திறக்கச் செய்வேன் என்கிறார் "

சிங்கமென சீறிய சூர்யாவின் தீரம்!

Posted: 08 Jul 2013 08:02 AM PDT

சென்னை, மெரினா பீச்சில், இன்று (7/7/13) மாலை ஒரு கொடுமையான சம்பவம். எத்தனை முறை படித்துப் படித்துச் சொன்னாலும்... படிக்கும் பிள்ளைகளின் காதுகளில் மட்டும் ஏறுவதே இல்லை என்பதற்கு உதாரணமாக... கல்லூரி மாணவர்கள் மூன்று பேர் (நான்கு பேர் என்றும் சொல்கிறார்கள்), கடலில் இறங்கி தீவிரமாக குளித்துக் கொண்டிருந்தனர். நீண்ட நேரமாக குளித்துக் கொண்டிருந்தவர்கள், உற்சாக மிகுதியால் கூச்சல் போட்டுக் கொண்டே இருந்தனர். திடீரென்று காப்பாத்துங்க காப்பத்துங்க என்கிற குரல் கேட்க, அதையும் குஷியில் தமாஷாக கூச்சலிடுகின்றனர் ...

மனிதம் எங்கே போகிறது ??

Posted: 08 Jul 2013 08:00 AM PDT

ஜூலை ஒன்றாம் தேதி சென்னை எக்ஸ்பிரஸ் அவன்யூ வில் சண்முகம் என்பவர் மாடியிலிருந்து குதித்து தற்கொலை முயற்சி செய்கிறார். கீழே விழுந்தவர் ரத்த வெள்ளத்தில் மிதக்கிறார். முதல் உதவி ஏதும் கொடுக்காமல், அவரை காப்பாற்ற நினைத்த பொது மக்களையும் நெருங்கவிடாமல் சுமார் 20 நிமிடம் ஷாப்பிங் மால் நிர்வாகம் போலீஸ் வரட்டும் என்று தட்டிக் கழிக்கிறது. பிறகு பொதுமக்களின் நெருக்கடியால் வழிவிடுகிறது அந்த நிர்வாகம். அந்த இளைஞன் யார் என்றே தெரியாத ஒரு பெண்மணி உதவி செய்ய முற்பட்டு மருத்துவமனை வரை செல்கிறார். ஆனால் அந்த ...

அஸ்தமனத்தை நோக்கி செல்லும் Yahoo நிறுவனத்தின் சேவைகள்

Posted: 08 Jul 2013 07:58 AM PDT

இணையத் தேடல் உட்பட பல சேவைகளை வழங்கிவரும் முன்னணி நிறுவனமாகத் திகழும் Yahoo ஆனது அதன் சில சேவைகளை நிறுவத்துவதற்கு முடிவு செய்துள்ளது. இதன் படி Yahoo Axis, Browser Plus, Citizen Sports, Webplayer, FoxyTunes, RSS Alerts மற்றும் AltaVista போன்ற தேடுபொறி ஆகியவற்றினை நிரந்தரமாக நிறுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் டம்ளர் தளத்தினை கொள்வனவு செய்திருந்த நிலையில் தற்போது இந்த அதிரடி முடிவை யாகூ நிறுவனம் எடுத்துள்ளது. இதேபோன்று கூகுள் நிறுவனமானது நேற்றைய தினத்துடன் தனது கூகுள் றீடர்(Google ...

நான் மட்டும் என்ன கோவமாவா பேசுறேன்?

Posted: 08 Jul 2013 07:56 AM PDT

தயவு செய்து எனக்கு உதவி செய்யுங்கள்... உங்ககிட்ட கேக்கணும் போல தோனுச்சு... நேற்று ஒரு அழகான பொண்ணு என்கிட்டே I LOVE YOU என்று சொன்னா..அப்படினா என்னா? ஏதும் புக் பேரா? ---- பச்சபுள்ள சங்கம்....              அய்யாசாமி: ஹலோ யார் பேசுறது? பெண்: நான் செல்லம்மா பேசுறேன்... அய்யாசாமி: நான் மட்டும் என்ன கோவமாவா பேசுறேன்? யாருன்னு சொல்லுமா! பெண்: ?!?            ஆசிரியர்: உலகம் ஒரு நாடக மேடை... அதில் நாமெல்லாம் நடிகர்கள்.... மாணவன்: சார்.. அப்படின்னா எனக்கு ஜோடியா தமன்னாவைப் போடுங்க ...

திருமணமானவர்கள் ­இந்தச் செய்தியைப் படிக்கவேண்டாம்!

Posted: 08 Jul 2013 07:42 AM PDT

திருமணமானவர்கள் ­ கீழே உள்ள செய்தியைப் படிக்கவேண்டாம்: ஒரு பெண்மணி நடு இரவில் தூக்கத்தில் எழுந்து தன் கணவர் அருகில் இல்லாததை உணர்ந்து அவரைத் தேடினார்!. வீடு முழுவதும் தேடி, கடைசியில் அவர் சமையலையறையில் அமர்ந்திருந்ததை­க் கண்டார், அவருக்கு முன்னால் காபி இருந்தது. அவர்ஆழ்ந்த சிந்தனையில் சுவரை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தார். இடையிடையே கண்ணில் வழியும் கண்ணீரைத் துடைத்தபடி காபியை அருந்திக் கொண்டிருப்பதைக் ­ கண்டார். மனம் பதைபதைத்து அவர் அருகில் சென்று, இதமாகக் கையைப் பிடித்து, ...

சூப்பர் 'மெத் மெத்' இட்லியும் நானும் :)

Posted: 08 Jul 2013 07:34 AM PDT

மற்றும் ஒரு அனுபவ கட்டுரை எழுத போகிறேன் இது ரொம்ப வித்தியாசமான அனுபவம் .... நான் இப்படி எழுதுவது  நிறைய பேருக்கு ஆச்சர்யமாக இருக்கும்.... ஆனால் இது உண்மை நான் எவ்வளவோ 'தளிகைகளை' (food items ) அநாயசமாக செய்வேன். ஆனால், எல்லோரும் left and right easy ஆக  செய்யும் இட்லிக்கும்  எனக்கும் போன ஜன்மத்துப்பகை ஆமாம் ... எனக்கு  'மெத் மெத்' இட்லி செய்ய வராது... உங்களுக்கு புரியும்படி  சொல்லணும் என்றால்....." நான் செய்த இட்லி யை எடுத்து அடிச்சா நாயி செத்துப்போகும்" அவ்வளவுதான்.     ஆனாலும் எங்க ...

பன்றிகளுக்கு பதிலாக இந்தியர்களை மருந்து சோதனையில் ஈடுபடுத்தும் பன்னாட்டு கம்பெனிகள்

Posted: 08 Jul 2013 07:28 AM PDT

எந்தவொரு நோய்க்கும் மருந்து கண்டுபிடிக்கிறபோது அந்த மருந்தை 'கிளினிக்கல் டிரையல்' என்ற பெயரில் 'கெய்னியா பிக்' என்ற வகை பன்றிக்கு கொடுத்துத்தான் சோதிக்க வேண்டும்.  ஆனால் தற்போது பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் பலவும் சட்டவிரோதமாக மருந்து பரிசோதனையில் பன்றிகளுக்கு பதிலாக இந்திய மக்களை பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் சுவாஸ்த்ய அதிகார் மஞ்ச் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒரு பொதுநல வழக்கு தொடுத்துள்ளது.  அந்த மனுவில், நாடு முழுவதும் பரவலாக மருந்து ...

மாத்திரைகள் தின்னும் உடம்பு..

Posted: 08 Jul 2013 07:14 AM PDT

ஒரு மாத்திரைப் போடுங்க ஒருநாள் ஆயுள் குறையும் போடாதுபோனால் - வாழ்வின் இரண்டுநாட்கள் குறையும் எது உங்களுக்கு வேண்டுமென்றார் மருத்துவர், உயிர்வேண்டும் உயிர்கூடு வேண்டும் உயிர்கூடு தாங்கும் ஆயுள் சற்று நீளவேண்டுமென்றேன் சர்க்கரைக்கு ஒன்று கொழுப்பிற்கு இரண்டு ரத்தக்கொதிப்பிற்கு மூன்றுவேளைக்கு அரைமாத்திரை ஈரல் பாதிக்கப் பட்டுள்ளது அதற்கொன்று மாத்திரைகளால் வயிறு புண்ணாகாதிருக்க உணவிற்கு முன் காலையும் மாலையும் ஒவ்வொன்று இப்படி நாட்களை மாத்திரைகளால் கழித்துக் கொண்டிருந்தார் ...

நட்பு

Posted: 08 Jul 2013 06:49 AM PDT

இமை மூடினேன்
விடைபெற்றன
கண்நீர்த்துளிகள் - மட்டுமா?
நீயும் தான்
என்னை விட்டு
வெகுதொலைவில்............

அது என் உயிர்.

Posted: 08 Jul 2013 06:43 AM PDT

உன் அன்புதான்
என் இதய வீடு

உன் காதல்
எனக்கு இதய வாசல்

உன் பேச்சு..
எனக்கு இதய வீணை

உன் குரல்..
என் இதய தேடல்

உன் நலம்.
என் இதய நிம்மதி

உன் நிம்மதி.
என் இதய சந்தோசம்

உன் உயிர்...
அது என் உயிர்.

வெட்கத்தை கற்றுவிட்டது ..!!!

Posted: 08 Jul 2013 06:41 AM PDT

நீ எப்போதும்
தலையைக் குனிந்தே
வெட்கப்படுவதால்
பூமி உன்னிடமிருந்து ..
வெட்கத்தை கற்றுவிட்டது ..!!!
தயவு செய்து நிமிர்ந்து ..
நிலாவை பார்த்திடாதே ...!!!
உன் அழகை அது திருடிவிடும் ...!!!

மனிதநேயமுள்ள மணிமாறனை வாழ்த்துவோம்

Posted: 08 Jul 2013 06:35 AM PDT

முகம் மறைக்கும் தாடி, கந்தல் ஆடை, உடல் போர்த்திய அழுக்கு, பக்கத்தில் போனாலே துர்வாடை. எல்லா ஊர் பிளாட்பாரங்களிலும் - பஸ் ஸ்டாண்டுகளிலும் இப்படிப்பட்ட ஆசாமிகளைப் பார்க்க முடியும். நம்மையெல்லாம் அருவருப்புடன் ஒதுங்கிச் செல்ல வைக்கும் இவர்கள்தான் மணிமாறனைப் பொறுத்தவரை செல்லக் குழந்தைகள். இப்படிப்பட்டவர்களுக்கு முடி வெட்டி, குளிப்பாட்டி, ஆடைகள் தந்து அரவணைப்பதையே வாழ்க்கையாக்கிக் கொண்டிருக்கிறார் இந்த 27 வயது இளைஞர். பழனி புது பஸ் ஸ்டாண்ட்... ஊரே பார்த்திருக்க, மனநிலை பாதிக்கப்பட்ட ...

ஏழாவதுசாளரம் ( ஜன்னல்) வேண்டுமா>win7

Posted: 08 Jul 2013 05:46 AM PDT

ஏழாவது யன்னல்  

விண்டோ 7
இதையும்  கண்டேன் பகிர்கிறேன்

பல மொழிகள் வகைகள் ஒரு லிங்க் ல் முழுதாக உள்ளது

சாளரம் ஏழு

இலவச மென்பொருட்கள்

Posted: 08 Jul 2013 05:45 AM PDT

இதோ ஒரு பக்கத்தில் கண்டேன் உங்களுக்காக அந்தப் பக்கம் இங்கே ______________________ 12) Home & OFFICE; CSVed; http://csved.sjfrancke.nl/index.html Everything Search: http://www.voidtools.com/ FileLocator Lite; http://www.mythicsoft.com/Page.aspx?...&page=download FreeOCR; http://www.paperfile.net/ JR Directory Printer; http://www.spadixbd.com/freetools/jdirprint.htm (The JR Directory Printer Utility allows you to print a listing of every file contained within a directory and/or subdirectory(ies).) Microsoft ...

பிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா

Posted: 08 Jul 2013 05:45 AM PDT

* பெயரில்லாதது இவ்வுலகில் ஏது? பெயரில்லாதது ஒன்று உண்டு எனில் அதற்கும் பெயர் வைப்பார்கள் பெயர் உள்ளவர்கள்...! ஒன்றும் இல்லாத ஒன்றை வெற்றிடம் என்று கூறலாம்.. அவ்வெற்றிடத்தின் உள்ளிலும் உள்ளதல்லவா வெறுமை என்னும் ஒன்று...! * கொலைகள் நிகழ்த்தியவன், நிகழ்த்திய பிறகு அதை ரசிப்பதில்லை. வருந்துகிறான் எப்போதாவது எந்த இடத்திலாவது.. ஒரு குரூரன் கூட...! * மனம் பூட்டிய ஆயிரம் விலங்குகளை உடைத்துக் கொண்டு, லட்சம் சிறகுகளை ஏந்தி மேலே உயர்ந்து, சகதியில் புரண்டு, ஆலய வாசலில் துவட்டி, ஆசை மூட்டை ...

இருளும் ஒளியும் (கதை சொல்லும் தொடர் கவிதை) -கிரிகாசன்

Posted: 08 Jul 2013 05:17 AM PDT

இது ஒரு நீண்ட கவிதை. கதை சொல்லும் பாணியிலான கவிதை. இது அண்ணளவாக 10  பகுதிகளை கொண்டிருக்கும். இது ஒரு வித்தியாசமான உணர்வைத் தரும் எனவே தொடர்ந்து வாருங்கள்!        இருளும் ஒளியும்  (தொடர்) 1. மயக்கும் மாலை வானமக ளிதழான முகில்தன்னை வண்ணச் சிவப்பினில் சாயமிட தேனு மினியபொன் மாலையிளங் குளிர் தென்றலலைந் தென்னை தேடிவர ஞானமறை ஓதும் கோவில்களில் மணி யோசை எழுந்து பரவிவர போனதிசையினில் நேர்வழியி லந்தப் புல்வெளிமீது நடைபயின்றேன் தேனை உண்ணமலர் சேரும்வண்டு எனை தீயன் எனஎண்ணித் துள்ளியெழ சேனை ...

"ஸ்டாக் இல்லை" - ரேஷன்கடை இனி ஏமாற்ற முடியாது!

Posted: 08 Jul 2013 05:04 AM PDT

ரேஷன் கடைக்கு செல்வோரில் பல பேருக்கு இந்த அனுபவம் கிடைத்திருக்கும். காலையில் அரிசி, பருப்பு, சர்க்கரை போன்றவைவந்திருக்கும். நாம் மாலையிலோ அல்லது மறுநாளோ சென்றால், அவைகள்இருந்தும் கூட "ஸ்டாக் இல்லை" என்று சொல்லி விடுவார்கள். இனி அப்படி ஏமாற்ற முடியாது. ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பினாலே போதும், அன்றைய சரக்கிருப்பு விவரங்களைப் அறிந்துக் கொள்ளலாம். >எஸ்.எம்.எஸ் அனுப்பும் முறை: குடும்ப அட்டைதாரர்கள் (PDS) இடைவெளி (மாவட்ட குறியீடு) இடைவெளி (கடை எண்) என்ற முறையில் எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும். உதாரணமாக PDS ...

கம்பரும் ஒட்டக்கூத்தரும்!

Posted: 08 Jul 2013 05:01 AM PDT

ஒருநாள் ஒட்டக்கூத்தரும், கம்பரும் ஆற்றங்கரை ஒன்றின் படித்துறையில், கொஞ்சம் தள்ளித் தள்ளி நின்று, கால், முகம் கழுவிக் கொண்டு இருந்தனர். அப்போது தண்ணீர், ஒட்டக்கூத்தர் நின்று கொண்டிருந்த இடத்தில் இருந்து, கம்பர் நின்று கொண்டிருந்த இடம் நோக்கிப் போய்க்கொண்டு இருந்தது. இதைக் கண்ட ஒட்டக்கூத்தர், சற்று குறும்பாக "கம்பரே, நான் கழுவின கழுநீர் தான் உனக்கு வருகிறது பார்த்தீரா?' என்று கேட்டார். அதைக் கேட்ட கம்பர், ""அட! நீரே வந்து என் காலில் விழுந்தால், இது விதிப் பயன், நான் என்ன செய்வது?' என்று ...

நான் ஒரு தமிழன்! - நடிகர் தனுஷ்

Posted: 08 Jul 2013 05:00 AM PDT

நடிகர் தனுஷ் சமீப காலமாக விழாக்களுக்கு வரும்போது வேட்டி கட்டி வருகிறார். இதுபற்றிய கேள்விக்கு அவர் பதில் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், நான் ஒரு தமிழன். வேட்டி, கட்டுவதற்கு சவுகரியமாக இருக்கிறது. சந்தோஷமாக இருக்கிறது. வேறு எந்த விசேஷ காரணமும் கிடையாது, என்று கூறியுள்ளார். அஜீத்துக்கு கோட் சூட் என்றால், தனுஷுக்கு பட்டு வேட்டி பட்டு சட்டை போலிறுக்கிறது. மனுஷன் இப்போதெல்லம் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் வேட்டி கட்டிக்கொண்டு வருகிறார். அப்படிதான் ரஞ்சனா இந்தி படத்தின் தமிழ் டப்பிங்கான ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™