Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


திகார் சிறையில் ரம்ஜான் நோம்பு இருக்கும் இந்து கைதிகள்

Posted: 13 Jul 2013 10:29 PM PDT

இஸ்லாமியர்களின் புனித மாதமான ரம்ஜான் கடந்த 11-ம் தேதி தொடங்கியது. உலக முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் ரம்ஜான் நோம்பை தொடங்கியுள்ளனர். திகார் சிறையில் உள்ள கைதிகளும் நோம்பு இருக்கின்றனர்.

திருமண ஆசை காட்டி கடத்திய இளம்பெண்ணை கற்பழித்து காரில் இருந்து வீசிய காதலன்

Posted: 13 Jul 2013 10:29 PM PDT

ஒடிசா மாநிலம் கஜ்சம் மாவட்டம் பேஜிபுட் என்ற இடத்தைச் சேர்ந்தவர் சுசாந்த்குமார் ஸ்வைன். இவர் ஒரு பெண்ணை காதலித்தார். போன் மற்றும் எஸ்.எம்.எஸ்.கள் மூலம் காதலை வளர்த்துக் கொண்டனர். இந்த நிலையில் சுசாந்த் குமார் காதலியை அடைய திட்டமிட்டார். இதையடுத்து காதலிக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பி புவனேஸ்வர் வருமாறு அழைத்தார். அவரை நம்பி சென்ற காதலியை சுசாந்த்குமார் காரில் அழைத்துச் சென்றார். வழியில் திருமணம் செய்வதாக ஆசை

முலாயம்சிங் அண்ணன் போன்றவர்: பெனிபிரசாத் வர்மா திடீர் பாசம்

Posted: 13 Jul 2013 10:23 PM PDT

மத்திய மந்திரி பெனி பிரசாத் வர்மா சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவை கடுமையாக விமர்சித்து வருகிறார். முலாயம் சிங் யாதவ் 3–வது அணி அமைக்க முயன்ற போது அவரது திட்டம் நிறைவேறாது என்றும் பிரதமர் கனவில் இருக்கிறார் என்றும் வசை பாடினார். மேலும் உத்தரபிரதேச மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்து விட்டதாக மாநில அரசு மீதும் அடுக்கடுக்கான புகார்களை கூறினார். மத்திய அரசுக்கு முலாயம்சிங் யாதவ் வெளியில் இருந்து

மகாராஷ்டிராவில் நக்சல் தாக்குதல்: முன்னாள் போலீஸ் அதிகாரி சுட்டுக் கொலை

Posted: 13 Jul 2013 09:47 PM PDT

மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள ஏர்காட் கிராமத்தில் முன்னாள் போலீஸ் அதிகாரியை வீடு புகுந்து சுட்டுக்கொன்றனர்.திலீப் நரோடெ, சி.ஆர்.பி.எப் படையில் சிறப்பு போலீஸ் அதிகாரியாக பணியாற்றினர்.

காஷ்மீரில் போலீஸ்காரர் தலை துண்டித்து கொலை: பாகிஸ்தான் தீவிரவாதிகள் அட்டூழியம்

Posted: 13 Jul 2013 09:42 PM PDT

காஷ்மீரில் கடந்த 1931–ம் ஆண்டு ஜூலை 13–ந் தேதி டோரா ராணுவத்தால் 22 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இந்த நினைவு தினம் நேற்று தியாகிகள் தினமாக கடைபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியை சீர்குலைக்கும் வகையில் காஷ்மீர் போலீஸ்காரர் ஒருவர் குப்வாரா மாவட்டத்தில் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டார். அவரது பெயர் சோனவுல்லாக் ஜார்கர் (48). ஹர்துனா என்ற இடத்தில் இவர் வனப்பகுதியில் மனைவி மகளுடன் நடந்து சென்று கொண்டு இருந்தார்.

இணைப்பு விமானத்தை பயணிகள் தவறவிட்டால் விமான நிறுவனமே பொறுப்பு: தேசிய நுகர்வோர் மையம்

Posted: 13 Jul 2013 08:34 PM PDT

கடந்த 2010ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வந்தனா ஜெயின் (58), சுபாஷ் பட்நாகர் (64) என்ற தம்பதியர் ஜெட் ஏர்லைன்சில் ஜெய்ப்பூரிலிருந்து மும்பைக்கும், பின் அங்கிருந்து ஹாங்காங் செல்வதற்கும் முன்பதிவு செய்திருந்தனர். மும்பை விமான நிலையத்திற்கு 10.20 மணிக்கு வந்தபின் அங்கிருந்து 1.50 மணி விமானத்தில் அவர்கள் ஹாங்காங் புறப்பட்டு செல்வதாக இருந்தது. ஹாங்காங் விமானத்திற்கான நுழைவு அனுமதியும் அவர்களுக்கு ஜெய்ப்பூர் விமான நிலையத்திலேயே வழங்கப்பட்டது. ஆனால், விமான நிறுவனத்தினரால் ஏற்பட்ட காலதாமதத்தினால் அவர்களால் மும்பைக்கு குறிப்பிட்ட நேரத்தில்

இமாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆகப் பதிவு

Posted: 13 Jul 2013 08:15 PM PDT

இமாச்சல பிரதேசம் மாநிலத்தில் நேற்று இரவு 11.20 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆகப் பதிவாகியுள்ளது. நிலநடுக்கப் பகுதியில் அமைந்துள்ள கங்ரா மாவட்டத்தை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

நரேந்திர மோடி நாளை மறுநாள் ஒடிசா பயணம் - பூரி சங்கராச்சாரியாருடன் சந்திப்பு

Posted: 13 Jul 2013 03:08 PM PDT

குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடி நாளை மறுநாள் (16ம் தேதி) ஒடிசா செல்கிறார். அங்கு பூரி ஜனநாதர் ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்யும் மோடி, பூரி சங்கராச்சாரியாரை சந்தித்து ஆசி பெறுகிறார். ஒடிசாவின் கஜபதி குல மன்னர் திப்ய சிங் தேப்-பையும் அவர் சந்தித்து பேச ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

160 ஆண்டுகால இந்திய தந்தி சேவைக்கு இன்றுடன் 'மூடுவிழா'

Posted: 13 Jul 2013 02:10 PM PDT

ஆயிரக்கணக்கான மைல் தொலைவில் உள்ளவர்களுக்கும் அவசர செய்திகளை உடனுக்குடன் தெரிவிக்க உதவிய 160 ஆண்டு கால பழைமையான தந்தி சேவை இந்தியாவில் இன்றுடன் முடிவுக்கு வருகிறது. இந்தியாவில் பரீட்சார்த்த(சோதனை) முறையில் 1850ம் ஆண்டு கொல்கத்தாவில் முதன் முதலாக தந்தி சேவை

ராஜீவ் காந்தி பிறந்த நாளான ஆகஸ்ட் 20ம் தேதி உணவு பாதுகாப்பு திட்டத்தை அறிமுகப்படுத்த சோனியா தீவிரம்

Posted: 13 Jul 2013 12:58 PM PDT

நாட்டின் மக்கள் தொகையில் 67 சதவீதம் பேர் (82 கோடி மக்கள்), மாதம்தோறும் மலிவு விலையில் உணவு தானியங்களை பெற வழிவகை செய்து மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசு சமீபத்தில் உணவு பாதுகாப்பு அவசர சட்டம்

'ஹிட்லரின் குரலில் பேசும் மோடி' : மத்திய மந்திரி தாரிக் அன்வர் கடும் தாக்கு

Posted: 13 Jul 2013 12:16 PM PDT

தனியார் தொலைக்காட்சிக்கு சமீபத்தில் பேட்டியளித்த குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடியிடம் 2002ம் ஆண்டு குஜராத் கலவரம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த மோடி, 'நான் காரில் அமர்ந்து செல்லும் போது என் கார் சக்கரத்தில் சிக்கி ஒரு நாய்க்குட்டி அடிப்பட்டால்

மகாராஷ்டிரத்தில் மனைவியை விற்ற கணவன், அவரது நண்பர் கைது

Posted: 13 Jul 2013 09:29 AM PDT

மகாராஷ்டிரா மாநிலம் அகோலா பகுதியை சேர்ந்த ஜல்கான் நஹடே என்ற கிராமத்தை சேர்ந்தவர் பண்ட்லிக் சவான். இவர் தன் மனைவியை, தனது நண்பர் கணேஷ் வாலோட் என்பவருடன் சேர்ந்து மத்தியப்பிரதேசம் மாநிலம் கார்கான் மாவட்டத்தை சேர்ந்த ரமேஷ் ஆசராம் வாலோட் என்பவருக்கு விற்றுள்ளார்.

பஞ்சாப்: கோர்ட் வளாகத்தில் தற்கொலைக்கு முயன்ற வெளிநாட்டு வாழ் இந்தியர்

Posted: 13 Jul 2013 09:09 AM PDT

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள கபூர்தலாவில் செழிப்பான குடும்பத்தில் பிறந்தவர் ராம் பிரதாப் பூரி (வயது 75). இவர் இங்கிலாந்தின் குடியுரிமை பெற்று அங்கு வாழ்ந்து வருகிறார். இவருக்கு சொந்தமான 25 ஏக்கர் நிலத்தை கபூர்தலாவில் வசிக்கும் வக்கீல் ஒருவர் அவருக்குத் தெரியாமல் விற்றுவிட்டார். அந்த நிலத்தின் மதிப்பு ரூபாய் 30 கோடியாகும். இதுகுறித்து ராம் பிரதாப் அந்த வக்கீல் மீது வழக்கு பதிவு செய்திருந்தார். இதன்விளைவாக, அந்த வக்கீல் ராம் பிரதாப் மீது கற்பழிப்பு வழக்கு ஒன்றினைப் பொய்யாக ஜோடித்து அவர் மீது லூதியானா நீதிமன்றத்தில் வழக்கும் பதிவு செய்துள்ளார். நேற்று காலை கபூர்தலாவில் உள்ள மாவட்ட

ஆதார் அட்டை பதிவு: கோவா மாநிலம் விரைவில் 100 சதவீத இலக்கை எட்டும்

Posted: 13 Jul 2013 07:14 AM PDT

நாடு முழுவதும் ஆதார் அடையாள அட்டைக்கான புகைப்படம் மற்றும் பயோமெட்ரிக் தகவல்களை சேகரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணியில் கோவா மாநிலம் 99 சதவீத இலக்கை எட்டியுள்ளது. விரைவில் 100 சதவீத பணிகளும் முடிவடையும் என

இந்தியா-மியான்மர் எல்லையில் குண்டுகள் வெடிப்பு

Posted: 13 Jul 2013 06:13 AM PDT

மணிப்பூர் மாநிலத்தின் சாண்டெல் மாவட்டத்தில் உள்ள இந்தியா-மியான்மர் எல்லையில் இரண்டு குண்டுகள் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தலைநகர் இம்பாலில் இருந்து 130 கி.மீ. தொலைவில் உள்ள

தெலுங்கானா விவகாரம்: இந்த மாத இறுதியில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூடுகிறது

Posted: 13 Jul 2013 05:38 AM PDT

தெலுங்கானா தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி ஆந்திராவில் போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து மத்திய அரசு அதற்கான நடவடிக்கையை துரிதப்படுத்தியுள்ளது. தெலுங்கானா மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தில் காங்கிரஸ் கட்சி உள்ளது. இதுதொடர்பாக டெல்லியில் நேற்று காங்கிரஸ் உயர்மட்டத் தலைவர்கள் தீவிர ஆலோசனை நடத்தினர்.

மோடியை மன்னிப்பு கேட்க சொல்ல காங்கிரசுக்கு தகுதி இல்லை: பா.ஜனதா

Posted: 13 Jul 2013 05:27 AM PDT

குஜராத் மாநிலத்தில் கடந்த 2002ம் ஆண்டு நடந்த கலவரம் தொடர்பாக முதல்வர் நரேந்திர மோடி நேற்று விளக்கம் அளித்தார். அப்போது அவர் கலவரத்தை தடுக்க தனது அரசு போதிய நடவடிக்கை எடுத்ததாக கூறினார். மேலும், எனது காரில் ஒரு நாய்க்குட்டி அடிபட்டு இறந்தால்கூட வருத்தப்படுவேன் என்று கூறினார்.

கங்கையில் வெள்ளம்: அபாய கட்டத்தை தாண்டி ஓடுகிறது

Posted: 13 Jul 2013 05:03 AM PDT

வடக்கு மாநிலங்களான இமாச்சலப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் பகுதிகளில் பலத்தமழை பெய்து வருகிறது. உத்தரப்பிரதேச பகுதியிலும் கன மழை பெய்து வருவதால் கங்கை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. கங்கை ஆற்றின் ஆபத்தான அளவாக கருதப்படும் 113 மீட்டர் என்ற சிவப்பு குறியை தாண்டி வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

காஷ்மீர் பதர்வா பகுதியில் ஒரே நாளில் இருமுறை நிலநடுக்கம்

Posted: 13 Jul 2013 03:59 AM PDT

காஷ்மீர் மாநிலம் பதர்வா பள்ளத்தாக்கு பகுதியில் இன்று அதிகாலை 3 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 4.1 ஆகப்பதிவான இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில் தூங்கிக்கொண்டிருந்த மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடிவந்தனர்.

பிரதமர் வேட்பாளர் போட்டியில் ராகுல் காந்தி இருக்கிறார்: காங்கிரஸ்

Posted: 13 Jul 2013 03:48 AM PDT

பா.ஜனதா கட்சியில் மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க கட்சி தயாராகி வருகிறது. அவருக்கு இணையாக காங்கிரஸ் கட்சியில் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க அனைத்து தலைவர்களும் ஆதரவு தெரிவிக்கின்றனர். ஆனால், இதுவரை காங்கிரஸ் மேலிடம் பிரதமர் வேட்பாளர் பற்றி முடிவு செய்யவில்லை.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™