மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- தனி தெலுங்கானா பிரச்சினை: ஆந்திராவில் ராணுவம் குவிப்பு
- மும்பை: கருத்தடை செய்துகொள்ளும் இளம் தம்பதியினர் எண்ணிக்கை அதிகரிப்பு
- சரியாக படிக்காத, 8 வயது சிறுமியை அடித்துக் கொன்ற தந்தை கைது
- ஒரு ரூபாயில் உணவை காஷ்மிர் மக்களுக்கு பரூக் அப்துல்லா வழங்க வேண்டும்: பிரகாஷ் கரத் பேட்டி
- கிரிமினல் குற்றவாளிகளுக்கு 'சீட்' தராதீர்கள்: மாநில காங்கிரஸ் தலைவர்களுக்கு ராகுல் காந்தி அறிவுரை
- பள்ளிக்கு செல்ல வற்புறுத்தியதால் 10 வயது சிறுவன் தீக்குளித்து தற்கொலை
- டாக்டரை கொன்று ‘உறுப்பை’ மனைவிக்கு பார்சல் அனுப்பிய பெண் கைது
- தேசிய கொடியை கிழிந்த நிலையில் ஏற்றிய 4 போலீசார் சஸ்பெண்ட்
- குடும்பத்தாருடன் கைதிகள் வீடியோ காண்ஃபிரன்சிங் மூலம் பேசும் வசதி: இமாச்சல பிரதேசத்தில் அறிமுகம்
- தெலுங்கானா பிரச்சினையில் விரைவில் இறுதி முடிவு: திக்விஜய் சிங்
- உத்தரகாண்ட் வெள்ள பாதிப்பு: மாநில அரசு மீது பா.ஜனதா குழு குற்றச்சாட்டு
- டெல்லியில் மின் கட்டணம் 5 சதவீதம் உயர்வு
- போலி என்கவுண்டர் வழக்கு: குஜராத் போலீஸ் அதிகாரி பாண்டே நேரில் ஆஜராக சுப்ரீம் கோர்ட் உத்தரவு
- கனமழை நீடிப்பு எதிரொலி: மூணாறில் மீண்டும் மண் சரிவு அபாயம்
- பீகாரில் 2-வது நாளாக ஆசிரியர்கள் போராட்டம்: 10 லட்சம் மாணவர்களுக்கு மதிய உணவு இல்லை
- பிரதமர் பதவிக்கு ராகுல்-மோடி இருவருமே தகுதியானவர்கள் அல்ல: ஹசாரே
- எய்ட்ஸ் நோயால் பெற்றோர் மரணம்: அனாதையான 5 சிறுவர்களை சுடுகாட்டில் குடிவைத்த கிராம மக்கள்
- சோலார் பேனல் மோசடி: சரிதாநாயர் ரகசிய வாக்குமூலம்- கேரள மந்திரிகள் கலக்கம்
- குஜராத்தில் கட்டிடம் இடிந்து 5 பேர் பலி
- ஏர் இந்தியா 'டிரீம்லைனர்' விமானத்தில் தீ
| தனி தெலுங்கானா பிரச்சினை: ஆந்திராவில் ராணுவம் குவிப்பு Posted: 26 Jul 2013 10:29 PM PDT ஆந்திராவை 2 ஆக பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் அமைக்க காங்கிரஸ் முடிவு செய்து உள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளிவர இருக்கிறது. மாநிலத்தை பிரிக்க கடலோர ஆந்திரா, ராயல சீமா பகுதியை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். தெலுங்கானா அறிவிப்பு வெளியான பிறகு போராட்டம் பெரிய அளவில் வெடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. |
| மும்பை: கருத்தடை செய்துகொள்ளும் இளம் தம்பதியினர் எண்ணிக்கை அதிகரிப்பு Posted: 26 Jul 2013 08:24 PM PDT மும்பை மாநகராட்சி நடத்தும் சுகாதார மையங்களில் கடந்த 2011-12ஆம் ஆண்டில் கருத்தடை சிகிச்சை செய்துகொண்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் 20லிருந்து 30 வயதுக்குட்பட்டோர் என்று தெரியவந்துள்ளது. சென்ற வருடம் அரசு மையங்களில் 10,770பேர் இந்த சிகிச்சையை |
| சரியாக படிக்காத, 8 வயது சிறுமியை அடித்துக் கொன்ற தந்தை கைது Posted: 26 Jul 2013 04:43 PM PDT சரியாக படிக்கவில்லை என்பதற்காக 8 வயது சிறுமியை பெற்ற தந்தையே அடித்துக் கொன்ற சம்பவம் பெங்களூர் வாசிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரை சேர்ந்த சத்யநாராயண் சிங் என்பவரின் மனைவி சில ஆண்டுகளுக்கு முன்னர் இறந்து விட்டார். |
| ஒரு ரூபாயில் உணவை காஷ்மிர் மக்களுக்கு பரூக் அப்துல்லா வழங்க வேண்டும்: பிரகாஷ் கரத் பேட்டி Posted: 26 Jul 2013 04:30 PM PDT ஒரு ரூபாய் செலவில் கூட ஒருவர் ஒருவேளை சாப்பிட முடியும் என மத்திய மந்திரி பரூக் அப்துல்லா கருத்து தெரிவித்திருந்தார். இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் பிரகாஷ் கரத்திடம் நேற்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். |
| கிரிமினல் குற்றவாளிகளுக்கு 'சீட்' தராதீர்கள்: மாநில காங்கிரஸ் தலைவர்களுக்கு ராகுல் காந்தி அறிவுரை Posted: 26 Jul 2013 03:44 PM PDT டெல்லி, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சதீஸ்கர், மிஜோரம் ஆகிய மாநில சட்ட சபைகளுக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் தேர்தல் நடைபெற உள்ளது. இம்மாநிலங்களை சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் தேர்தல் பணிக்குழு நிர்வாகிகளுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி நேற்று புதுடெல்லியில் தேர்தல் திட்டங்கள் குறித்து ஆலோசனை |
| பள்ளிக்கு செல்ல வற்புறுத்தியதால் 10 வயது சிறுவன் தீக்குளித்து தற்கொலை Posted: 26 Jul 2013 01:06 PM PDT ஒடிசா மாநிலம், கெயோன்ஜர் மாவட்டத்தில் உள்ள தனியா கிராமத்தை சேர்ந்த பழங்குடியின சிறுவன் சஞ்சய் தெஹூரி (10). சஹார்பூரில் உள்ள உறைவிடப் பள்ளியில் தங்கி ஐந்தாம் வகுப்பில் படித்து வந்தான். |
| டாக்டரை கொன்று ‘உறுப்பை’ மனைவிக்கு பார்சல் அனுப்பிய பெண் கைது Posted: 26 Jul 2013 11:57 AM PDT உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் அருகே உள்ள ரணியா பகுதியில் கடந்த 21-ம் தேதி டாக்டர் சத்தீஷ் சந்திரா (42), என்பவர் மர்மமான முறையில் கொல்லப்பட்டார். ரணியா பகுதியில் உள்ள லாட்ஜ் ஒன்றில் கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமான முறையில் அவர் இறந்து கிடந்தார். |
| தேசிய கொடியை கிழிந்த நிலையில் ஏற்றிய 4 போலீசார் சஸ்பெண்ட் Posted: 26 Jul 2013 11:32 AM PDT மேற்கு வங்காள போலீஸ் துறையின் தலைமை செயலகம் கொல்கத்தா நகரில் உள்ளது. இந்த அலுவலகத்தின் மீது நாள்தோறும் சூரிய உதயத்தின் போது தேசிய கொடி ஏற்றப்படும். பின்னர், அஸ்தமனத்தின் போது இறக்கி மறுநாள் காலை உரிய மரியாதையுடன் தேசிய கொடி ஏற்றப்படுவது வழக்கம். |
| குடும்பத்தாருடன் கைதிகள் வீடியோ காண்ஃபிரன்சிங் மூலம் பேசும் வசதி: இமாச்சல பிரதேசத்தில் அறிமுகம் Posted: 26 Jul 2013 10:37 AM PDT சிறையில் தண்டனை பெறும் கைதிகள் தங்கள் குடும்பத்தாருடன் 'வீடியோ காண்ஃபிரன்சிங்' மூலம் பேசும் வசதியை நாட்டில் முதன்முறையாக இமாச்சல பிரதேச மாநில அரசு இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்காக மாநிலத்தில் உள்ள அனைத்து சிறைகளையும் ஒன்றிணைக்கும் நவீன இணையதளத்தை முதல் மந்திரி வீரபத்ர சிங் இன்று தொடங்கி வைத்தார். |
| தெலுங்கானா பிரச்சினையில் விரைவில் இறுதி முடிவு: திக்விஜய் சிங் Posted: 26 Jul 2013 07:58 AM PDT ஆந்திர பிரதேசத்தில் இருந்து தெலுங்கானா பிராந்தியத்தை பிடித்து தனி தெலுங்கானா மாநிலம் அமைக்க வேண்டும் என்று நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. தனி மாநிலம் அமைப்பதாக தேர்தலின்போது வாக்குறுதி அளித்த காங்கிரஸ் கட்சி, உறுதியான முடிவு எடுக்காமல் காலம் கடத்தி வந்தது. |
| உத்தரகாண்ட் வெள்ள பாதிப்பு: மாநில அரசு மீது பா.ஜனதா குழு குற்றச்சாட்டு Posted: 26 Jul 2013 07:12 AM PDT உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த மாதம் பெய்த பெருமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகி உள்ளனர். வெள்ளத்தால் உருக்குலைந்த பள்ளத்தாக்கு பகுதிகளில் நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பேரழிவால் ஏற்பட்ட சேதம் குறித்து மதிப்பிடுவதற்காக பா.ஜனதா சார்பில் |
| டெல்லியில் மின் கட்டணம் 5 சதவீதம் உயர்வு Posted: 26 Jul 2013 06:33 AM PDT டெல்லியில் மின்சாரக் கட்டணம் 5 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட மின் கட்டண விகிதத்தை டெல்லி மின்சார ஒழுங்குமுறை ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி 200 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோர், யூனிட்டுக்கு ரூ.3.90 கட்டணம் செலுத்த வேண்டும். 201 முதல் 400 யூனிட் வரை பயன்படுத்துவோர் யூனிட்டுக்கு ரூ.5.80-ம், 800 யூனிட் மற்றும் அதற்கு |
| போலி என்கவுண்டர் வழக்கு: குஜராத் போலீஸ் அதிகாரி பாண்டே நேரில் ஆஜராக சுப்ரீம் கோர்ட் உத்தரவு Posted: 26 Jul 2013 04:47 AM PDT குஜராத் மாநிலத்தில் 2004-ம் ஆண்டு கல்லூரி மாணவி இஷ்ரத் ஜகான் உள்ளிட்ட 4 பேர் என்கவுண்டரில் கொல்லப்பட்டது தொடர்பாக சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இஷ்ரத் ஜகான் போலி என்கவுண்டரில் கொல்லப்பட்டதாக கூறியிருந்தது. சம்பவம் நடந்த போது அகமதாபாத் இணை கமிஷனராக இருந்த மூத்த போலீஸ் அதிகாரி பாண்டே முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார். இந்த குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ. கோர்ட் விசாரணைக்கு ஏற்றது. |
| கனமழை நீடிப்பு எதிரொலி: மூணாறில் மீண்டும் மண் சரிவு அபாயம் Posted: 26 Jul 2013 04:29 AM PDT கேரள மாநிலம் மூணாறு நகரில் இருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ளது அந்தோணியார் காலனி. இங்கு கடந்த 2005ம் ஆண்டு ஜுலை 25ம் தேதி கனமழை காரணமாக மண் சரிவு ஏற்பட்டது. |
| பீகாரில் 2-வது நாளாக ஆசிரியர்கள் போராட்டம்: 10 லட்சம் மாணவர்களுக்கு மதிய உணவு இல்லை Posted: 26 Jul 2013 04:24 AM PDT பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் உள்ள தரம்சதி கண்டமான் தொடக்கப்பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட பள்ளி குழந்தைகளில் 23 பேர் உயிரிழந்தனர். மதிய உணவில் விஷம் கலக்கப்பட்டதே மாணவர்கள் உயிரிழப்புக்கு காரணம் என்று விசாரணையில் தெரியவந்தது. பீகார் மாநில தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள், மதிய உணவு திட்டப் பணிகளை கண்காணிக்கும் பணியைக் கூடுதலாக மேற்கொள்ள முடியாது என்று போர்க்கொடி தூக்கியுள்ளனர். அந்தப் பணிக்கு தனியாக ஆட்களை |
| பிரதமர் பதவிக்கு ராகுல்-மோடி இருவருமே தகுதியானவர்கள் அல்ல: ஹசாரே Posted: 26 Jul 2013 04:04 AM PDT ஊழலுக்கு எதிராக போராடி வரும் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, ஜன்தந்திரா யாத்திரையில் பங்கேற்பதற்காக இன்று உத்தர பிரதேச மாநிலம் பரூக்காபாத் வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- கண்ணியமான பிரதமர் பதவியை பெற நரேந்திர மோடியும், ராகுல் காந்தியும் தகுதியானவர்கள் அல்ல. அவர்களை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. |
| எய்ட்ஸ் நோயால் பெற்றோர் மரணம்: அனாதையான 5 சிறுவர்களை சுடுகாட்டில் குடிவைத்த கிராம மக்கள் Posted: 26 Jul 2013 03:04 AM PDT உத்தர பிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட தம்பதியர் இறந்துவிட்டனர். இதனால் அவர்களின் பிள்ளைகளுக்கும் அந்த நோய் இருக்கும் என்று அவர்களின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் அஞ்சினர். இதுபற்றி ஊர் பெரியவர்கள் கூடி ஆலோசனை நடத்தினர். |
| சோலார் பேனல் மோசடி: சரிதாநாயர் ரகசிய வாக்குமூலம்- கேரள மந்திரிகள் கலக்கம் Posted: 26 Jul 2013 01:15 AM PDT கேரளாவில் நடந்த சோலார் பேனல் மோசடி வழக்கில் கைதான சரிதா நாயருக்கு காங்கிரஸ் கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் சில மந்திரிகளுடன் தொடர்பு இருப்பதாக பரபரப்பு தகவல் வெளியானது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை கேரள ஐகோர்ட்டில் நடந்தபோது, கேரள போலீசாரின் செயல் பாடுகளையும், அரசின் மெத்தன போக்கையும் ஐகோர்ட்டு கண்டித்தது. இதையடுத்து சரிதாநாயர் எர்ணாகுளம் |
| குஜராத்தில் கட்டிடம் இடிந்து 5 பேர் பலி Posted: 26 Jul 2013 12:07 AM PDT குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் ரானிப் என்ற இடத்தி புதிதாக 3 மாடி கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வந்தது. இந்த நிலையில் ஆமதாபாத்தில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்ததால் கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டன. இன்று காலை மழை விட்டிருந்தது. இதனால் 3–வது மாடியில் கட்டுமான பணியைத் தொடங்கினார்கள். கட்டிடத்தின் ஒரு பகுதி மழை தண்ணீரில் நனைந்து போய் இருந்தது. அதை கட்டுமான தொழிலாளர்கள் கவனிக்காமல் கட்டிடத்தை கட்டும் வேலையை தொடங்கினார்கள். |
| ஏர் இந்தியா 'டிரீம்லைனர்' விமானத்தில் தீ Posted: 25 Jul 2013 11:58 PM PDT அமெரிக்க போயிங் விமான நிறுவனத்தின் டிரீம் லைனர் விமானங்கள் பேட்டரிகள் பிரச்சினை காரணமாக இந்த விமானங்களின் சேவை கடந்த ஜனவரியில் நிறுத்தப்பட்டது. இந்தநிலையில் பேட்டரிகள் சரி செய்யப்பட்டபின் நான்கு மாதங்கள் கழித்து தற்போதுதான் மீண்டும் இந்த விமானங்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. இந்தநிலையில் கடந்த வாரம், லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எதியோப்பிய விமான நிறுவனத்தைச் சேர்ந்த ட்ரீம்லைனர் விமானம் திடீரெனத் தீப்பற்றியது. அதேபோல் டெல்லியிலிருந்து பிராங்க்பர்ட் செல்ல |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |