Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


திருமண தகவல் தரும் பள்ளி இணையதளம்

Posted: 05 Jul 2013 11:47 AM PDT

டில்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட வரும் மத்திய அரசு பள்ளியான கேந்திரியா வித்யாலயா பள்ளி இணையதளம், திருமண தகவல் இணைய தளம் போல் செயல்பட்டு வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இப்பள்ளி இணையதளத்தில் பள்ளியில் பணிபுரியும் திருமணம் ஆகாத ஆசிரியர், ஆசிரியைகள் குறித்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவர்களின் தொலைப்பேசி எண்கள் மற்றும் இமெயில் முகவரிகளும் பள்ளி நிர்வாகத்தால் தவறாக பயன்படுத்தப்பட்டு வருவதாக குற்றச்சாட்ட எழுந்துள்ளது.

-- தினமலர்

18000 பதிவுகள் கடந்த பாட்டியை வாழ்த்தலாம் வாங்க ...

Posted: 05 Jul 2013 11:47 AM PDT

18000 பதிவுகளுக்கு  வாழ்த்துகள் பாட்டி ... மேலும் பல்லாயிரம்  பதிவுகள் கடக்கவும் வாழ்த்துகள் ....

Adf.ly வெப் பக்கத்தை அக்செஸ் செய்வது எப்படி ?

Posted: 05 Jul 2013 11:46 AM PDT

adf.ly வாயிலாக தங்களது தரவிறக்க சுட்டிகளை நிறைய வெப்சைட்கள் வைது உள்ளார்கள் ... இந்த தளத்தில் 5 வினாடிகள் காத்திருந்து பின்பு skip ad என்பதை கிளிக் செய்து தரவிறக்க சுட்டிகளை நாம் அணுகுவோம் .. ஆனால் உயர் நீதி மன்ற விதிகளின்படி (என்ன விதி என்று யாராவது சொல்லுங்கப்பா ) இந்த தளம் இந்தியாவில் முடக்கப்பட்டு விட்டது ... ஆனாலும் இதை அணுக முடியும் உதாரணம் : adf.ly/54dsdsd85sd என்று இருப்பதாக வைது கொள்வோம் , இதை அப்படியே  அட்ரஸ் பாரில் இட்டால் உங்களுக்கு வெறும் பக்கம் தான் வரும் .. இதற்க்கு ...

எங்கே நான் தொலைந்து போனேன் ...???

Posted: 05 Jul 2013 11:45 AM PDT

வெகு நாட்களுக்கு முன்
சுவர்க்கத்திலிருந்து ....
நரகத்திளிருந்தும் ....
தூக்கி எறியப்பட்டேன் ....

காலம் என்றால் என்ன ...?
பகலிரவு என்றால் என்ன ...?
'எங்கு தான் இருக்கிறேன் ...?
எல்லாம் கேட்டு ....
தொலைத்துக்கொண்டேன்...!!!

என்னை ஊமையாக்கி
எங்கோ நீ என்னை எறிந்து ...
விட்டதையும் மறந்துவிட்டேன் ...!!!
உன் ஒருவிழி பார்வையால் ...
தொலைந்து போனேன் நீண்டநாள் ..!!!

சின்ன சின்ன காதல் கவிதை ...!!!

Posted: 05 Jul 2013 10:51 AM PDT

'நான்" என்று யாரும் இல்லை
எனக்குள்.
நீதான் நானாகவும் இருக்கிறாய்.

கனவு காணும் இளைய சமுதயாமே

Posted: 05 Jul 2013 09:22 AM PDT

கனவு காணும் இளைய சமுதயாமே வண்ணமில்லா வண்ணத்து பூச்சி - இசையில்லா குயிலோசை ஒயிலில்லா மயிலாட்டம் - எண்ணமெல்லாம் என்னவளே நிறைந்திருக்க - இயற்கை என்னிலிரிந்து மறைந்திருக்க கண்கள் திறந்திருக்க - கனவினை கண்டு தான் நடக்க காணவில்லை திறந்திருந்த பாதாள சாக்கடையை விழுந்தெழுந்ததில் கருவண்ணப் பூச்சியாகி குரலோ பிசிறி கீறல் விழுந்த ரெகார்டாக ஒயிலாட்டமே நொண்டி நடையாக கண் திறந்து பிறர் கண் மறைந்து வீடு வந்து நான் சேர்ந்தேனடி என்னவளே என்னிதயம் கொண்டவளே கொல்லாதே எனை (இந்த இளைய சமுதாயம் எப்பதான் ...

நீ வருவாய் என நான் உணர்ந்தேன்...

Posted: 05 Jul 2013 09:18 AM PDT

நீ வருவாய் என நான் உணர்ந்தேன்...


விழி இருந்தும் நீயின்றி குருடாய்
அலைந்தேன் பார்வையின்றி
வழி மேல் விழி வைத்து காத்திருந்தேன்
என் பார்வை என் பாவை
நீ வருவாயென்று...

உயிர் இருந்தும் நீயின்றி அக்றினையாய்
அலைந்தேன் அகமின்றி
உள்ளத்துள் உயிர் வைத்து வாழ்ந்திருந்தேன்
என் உள்ளம் என் உயிர் என் உணர்வு
நீ வருவாயென்று...

பக்கங்களில் பயணிக்கும் உன் நினைவுகள் .....

Posted: 05 Jul 2013 08:56 AM PDT

வெள்ளை தாள் என்னவோ   வெண்மையாக  தான்  இருந்தது   பெண்மை  உன்னை  பற்றி பேனா மை எழுதாத  வரையில் .... வெள்ளைதாளுக்கும் இந்த   பெண்மையின் மீது  காதலோ  இல்லை பேனா மையின் மீது  காதலோ! வெற்று காகிதம்  கூட வெறித்தனமாக வண்ணமயமானது வெற்றிடங்களில்  நற்று வைத்த நெற்நாற்றுகள் போலவே   நிரம்பிய  பக்கங்கள் ...... சொல்  இருந்தும்  சொல்லாத   சொற்கள் யாவும் உன்னை சொந்தம் கொண்டே சொல்லிட  வந்ததோ  ! பந்தி வைத்தும்  பசியாராத பசி கூட பக்கம்  பக்கமாய் பயணித்த உன் நினைவுகளோடு   பசியாறும் ...

கனவு பலன்கள்

Posted: 05 Jul 2013 08:45 AM PDT

கனவு காணுங்கள் அது நிச்சயம் ஒருநாள் நிறைவேறும் என்றார் திரு.அப்துல்கலாம் அவர்கள். நாம் என்ன நினைக்கிறோமோ அதுவாகவே ஆகிறோம். நமது ஆழ் மனம் எதை நினைக்கிறதோ அதுவே கனவாக வருகிறது. அந்த கனவே நிஜமாகிறது. புழு, குளவியை நினைத்து கொண்டே இருந்தால் புழுவுக்கும் குளவி குணம் வந்துவிடும் என்றார் ஸ்ரீராமாகிருஷ்ண பரமஹம்சர்.  கண்ணகி ஒரு கனவு கண்டு அதிர்ச்சியடைகிறாள். தான் கண்ட கனவை தன் தோழியிடம் கூறுகிறாள். "நானும் என் கணவரும் வேறு ஊருக்கு செல்கிறோம். அந்த நாட்டின் அரசர் என் கணவரை கள்வன் என்று கூறி கொன்று ...

காய் – கனிகள் – புகை – நெருப்பு – மலை இவைகள் கனவில் வந்தால் என்ன பலன்

Posted: 05 Jul 2013 08:32 AM PDT

பழங்களை கனவில் கண்டால் என்ன பலன்   பழங்களை கனவில் கண்டால், சுபநிகழ்ச்சிகள் நடக்கும். லாபகரமான விஷயங்கள் தடையில்லாமல் நடக்கும். குடும்பத்தில் இழந்த நிம்மதி திரும்ப கிடைக்கும். நல்ல நிலைக்கு வரும் நேரம் வெகுதொலைவில் இல்லை என்பதை உணர்வீர்கள்.  பழங்களை மற்றவர்களுக்கு கொடுப்பது போல கனவு கண்டால், உங்கள் சந்தோஷத்தை பங்கு போடவே யாராவது வருவார்கள். எடுக்கும் முயற்சியில் பின்னடைவுகள் உண்டாகும். பண விஷயத்தில் ஏற்ற தாழ்வு ஏற்படும் சண்டை சச்சரவுக்கு போகாமல் இருந்தாலும் உங்களிடம் வீண் சண்டை போடவே சிலர் ...

தயவு செய்து மாற்றுக...

Posted: 05 Jul 2013 08:29 AM PDT

நிர்வாகத்தினர்க்கு, பழைய தள அமைப்பே ஏதுவாக இருந்தது... நான் இப்போதுதான் தமிழ் பற்றியும் , குறுந்தொகையில் சில பாடல்கள் பற்றியும் சொல்லத் துவங்கினேன். பழைய அமைப்பில் வலது மேல் ஓரத்தில் என் இடுகையை எத்தனை பேர் பார்த்தனர் ...பின்னூட்டங்கள் என்ன என்பதைப் போன்ற விவரங்கள் என்னால் உடன் பார்க்க முடிந்தது... ஆனால் இப்போதோ அவ்விடத்தில் கண்ணாடியில் பார்ப்பது போல் ஒன்றும் தெளிவாய் இல்லை... நான் இரண்டு நாட்களாகவே மிகத் தடுமாறிக் கொண்டிருக்கிறேன்...!? விரைவில் ஆவன செய்தால் நல்லது... நன்றியுடன் சுந்தரம்

இளவரசனின் இறப்பு தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை !?

Posted: 05 Jul 2013 08:24 AM PDT

திவ்யாவின் காதல் கணவன் தர்மபுரி இளவரசனின் இறப்பு யாவரும் அறிந்த ஒரு விடயம். இந்த சம்பவத்திற்கு சாதிவெறி முக்கிய காரணம் என்றாலும் ஊடகங்களுக்கும் அதில் பக்கு உண்டு. இதற்கிடையே சூழ்நிலைகளை வைத்துப் பார்க்கும்போது இளவரசனின் இறப்பு கொலையா ? தற்கொலையா ? என்ற ஒரு பெரிய கேள்வி மனதில் குடிகொள்ள காரணங்கள் கண்முன்னே கொட்டிக்கிடக்கிறது. அந்த வகையில் அதைப் பற்றிய எனது பார்வையை மட்டும் பதிவு செய்ய கனத்த மனதுடன் இந்தப் பதிவை எழுதுகிறேன். 1. நீதிமன்ற விசாரணையின் போது இளவரசன் தன்னை வற்புறுத்தி கூட்டிச் சென்றார், ...

மரம் – செடிகள் – கயிறு – நகை இவைகள் கனவில் வந்தால் என்ன பலன்

Posted: 05 Jul 2013 08:20 AM PDT

தோட்டத்தில் இருப்பது போல கனவு கண்டால், இனிமையான தகவல் கிடைக்கும். அதனால் இல்லத்திலும் உள்ளத்திலும் மகிழ்ச்சி ஏற்படும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். நட்பால் நன்மை ஏற்படும்.  பட்டு போன மரத்தை கனவில் கண்டால், சங்கடமான நிகழ்ச்சிகள் நடக்கும். கடன் கொடுத்தவர்கள் அதிகமாகவே உங்களுக்கு தொல்லையும் கொடுக்க ஆரம்பிப்பார்கள். அக்கம் பக்கம் வீடுகளால் மனசங்கடங்கள் உருவாகும்.  முள் செடியில் உங்கள் துணி மாட்டி கொண்டது போல கனவு ...

வேறு குரூப் ரத்தம் ஏற்றியதால் இளம் பெண் பலி: டாக்டர், நர்ஸ் உட்பட 4 பேர் கைது

Posted: 05 Jul 2013 08:19 AM PDT

பெங்களூரில், இரத்த சோகையால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தவறுதலாக வேறு பிரிவு ரத்தத்தை ஏற்றியதால் பரிதாபமாக அவர் பலியானார். மல்லேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 25 வயது ராஜேஸ்வரி, கடந்த 4 ஆண்டுகளாக ரத்தச் சோகையினால் பாதிக்கப் பட்டிருந்தார். இதனால், இவருக்கு அடிக்கடி ரத்தம் ஏற்றப்படுவது வழக்கம். சம்பவத்தன்று, வழக்கம்போல, ரத்தம் ஏற்றிக் கொள்வதற்காக கேசி அரசு மருத்துவமனைக்கு ராஜேஸ்வரியை அழைத்துச் சென்றுள்ளனர் அவரது பெற்றோர். ராஜேஸ்வரிக்கு ரத்தம் ஏற்றப் பட்டுள்ளது. ஆனால், ரத்தம் ஏறும்போது ரத்தப் பாட்டிலை ...

நீதி மன்றம்-நீதிபதி-வக்கீல் கனவில் கண்டால் என்ன பலன்

Posted: 05 Jul 2013 08:10 AM PDT

நீதி மன்றத்தை கனவில் கண்டால், நிதிக்காக எத்தனை வருடம் போராடுனீர்களோ அதற்கு கைமேல் பலன் கிடைக்கும். அது உங்களுக்கு சாதகமாகவும் மன திருப்தியாகவும் அமையும். கோர்ட்டு வழக்க இல்லாதவர்களுக்கு ஏதாவது வழியில் கோர்ட்டு படி ஏறும் நிலை வரும். ஆகவே எச்சரிக்கை உணர்வுடன் நடந்து கொள்வது நல்லது.  நீதிபதியை கனவில் கண்டால், உங்களுக்கு எதிராக வழக்கு தொடுத்தவரே உங்களிடம் சமாதானத்திற்கு வருவார்கள். வழக்குக்கு சம்மந்தம் இல்லாதவர்களிடத்தில் வழக்குக்கான ஆலோசனையை கேட்காமல் இருப்பது நல்லது.  வக்கீலிடம் உரையாடுவது ...

திருவிழா – இறைவனை கனவில் கண்டால் என்ன பலன்

Posted: 05 Jul 2013 08:06 AM PDT

ஆலயத்திற்குள் செல்வது போல கனவு கண்டால், நண்பர்களின் வட்டாரத்தில் அன்பும் ஆதரவும் ஏற்படும். உத்தியோகத்தில் மேன்மை உண்டாகும். குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் விலகி மகிழ்ச்சி ஏற்படும்.  ஆலயத்திற்குள் நுழைய முடியாமல் கூட்டத்தில் மாட்டிக் கொண்டு அவதிப்படுவது போல கனவு கண்டால், எதிர்பார்க்காத பிரச்சனையில் சிக்கி கொண்டு அவதிப்படுவீர்கள். உங்களின் வளர்ச்சியை கெடுக்கவே சிலர் முயற்சிக்கிறார்கள் என்பதை உணருங்கள். இறைவனை மனபூர்வமாக நம்புங்கள். சிக்கல்களிருந்து விடுபடவும், பணவிரயம் ஆகாமல் இருக்கவும் சிந்தித்து ...

மிருகங்கள் – யானை – பாம்பு இவைகள் கனவில் வந்தால் என்ன பலன்

Posted: 05 Jul 2013 07:58 AM PDT

மிருகங்கள் கனவில் வந்தால் என்ன பலன் சிங்கம் உங்களை துரத்தி வருவது போல கனவு கண்டால், அரசாங்கத்தால் பிரச்சனை உண்டாகும். புதிய நபர்களின் ஆதரவினால் பெரிய பாதகத்தில் இருந்து தப்பிப்பீர்கள். நீண்ட நாட்களாக மனதில் இருந்த பயம் போகும்.  சிங்கத்தை தடவிவிடுவது போல கனவு கண்டால், விசேஷ லாப பலன்கள் உண்டாகும். முடியாமல் பல நாட்களாக இழுத்தடித்த வேலைகள் நீங்கள் ஆச்சரியப்படும் அளவுக்கு திருப்தியாக முடியும். அசையும் பொருட்களோ, அசையாத பொருட்களோ வாங்குவீர்கள். மனதில் புதிய உற்சாகமும், தெம்பும் ஏற்படும்.  சிங்கம் ...

இரும்பு – இறந்து போனவர்கள் – துணி இவை கனவில் வந்தால் என்ன பலன்

Posted: 05 Jul 2013 07:51 AM PDT

இரும்பு கனவில் வந்தால் என்ன பலன்  இரும்பை பற்ற வைப்பது போல கனவு கண்டால், உங்களை விட்டு பிரிந்தவர்கள் உங்களை தேடி வருவார்கள். வியபாரத்தில் எதிர்பாராத நன்மையும் லாபமும் ஏற்படும். உங்கள் மனதை மாற்ற சிலர் முயற்சிப்பார்கள். ஆனால் நன்மையுடன் முன்னேறி வரலாம்.  இரும்பை உடைப்பது போல கனவு கண்டால், பல நாட்கள் வாட்டி எடுத்த பிரச்சனை விஸ்வரூபம் எடுக்கும். ஆனால் வெற்றி உங்கள் பக்கமே ஏற்படும். சிந்திக்கும் ஆற்றலும், நிதான போக்கும் உண்டாகும். உடன் இருப்பவர்களால் மனநிம்மதி குறையும்.  இரும்பை வாங்குவது ...

களைப்பாகவும் – பயணம் – தண்ணீர் இவைகள் கனவில் கண்டால் என்ன பலன்

Posted: 05 Jul 2013 06:52 AM PDT

தண்ணீர் கனவில் வந்தால் என்ன பலன் ஒரு இடத்தில் தண்ணீர் இருப்பது போல கனவு கண்டால், பிரச்சனைகள் விலகும். புதிய நண்பர்களால் நன்மை ஏற்படும்.  வறண்ட குளம் இருப்பது போல கனவு கண்டால், புதிய செலவுகள் அதிகம் உண்டாகும். எதிர்பார்த்த இடங்களில் இருந்து நல்ல தகவல்கள், பணம் சம்மந்தபட்ட தகவல்கள் வர தாமதமாகும் அல்லது அதில் ஏதாவது தடைகள் உண்டாகும்.  குளத்தில் அதிக தண்ணீர் இருப்பது போல கனவு கண்டால், பெரிய இடத்தில் இருந்து ஆதரவும் அவர்களாலே பல நன்மைகளும் உண்டாகும். வெகுநாட்களாக இருந்த பிரச்சனைக்கு ஒரு நல்ல ...

பெண்ணாதிக்கம்

Posted: 05 Jul 2013 06:47 AM PDT

தர்மபுரி சம்பவத்தில், அந்தப் பையன், பெண்ணைப் பிடிக்கவில்லை என்று கூறியிருந்தால், என்ன செய்திருக்கும் இந்த சமூகம்? பெண்ணை "ஏமாற்றிய" குற்றத்திற்காக, சிறையில் அடைத்திருக்கும். அதேபோல் அந்தப் பெண்ணையும் தண்டிக்க வேண்டும். ஆணுக்கு ஒரு நீதி, பெண்ணுக்கு ஒரு நீதியா? இதை ஏன் பெண் அராஜகம் என்று கூறக் கூடாது? குறிப்பு: இன்று பெண்கள் மிகப் பெரும்பாலான வீடுகளில் ஒத்துழைப்பாக செயல்படுவதை விட, "ஒத்துழையாமை"யாகத் தான் செயல்படுகிறார்கள். அவர்களிடம் அறிவு இருக்கிறது, திறமை இருக்கிறது, அதை குடும்பம் ...

இளவரசன் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் - திருமாவளவன்

Posted: 05 Jul 2013 06:40 AM PDT

புதுச்சேரி: இளவரசன் அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பதாக எனக்கு நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து தகவல் கிடைத்துள்ளது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி வந்திருந்த திருமாவளவன் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், இளவரசன் மரணத்தில் பல சந்தேகங்கள் எழுந்துள்ளன. இதுதொடர்பாக நீதி விசாரணை தேவை. அந்த நீதிபதி சாதிசார்பற்றவராக பணியில் உள்ளவராக இருத்தல் வேண்டும். காரணம், இளவரசனின் மரணத்தில் பல்வேறு மர்மங்கள் உள்ளன. அவர் அடித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் ...

பல்லி மற்றும் கரப்பை விரட்ட.......

Posted: 05 Jul 2013 06:20 AM PDT

எல்லோருக்கும் வீட்டில் தொந்தரவாக இருப்பது இந்த பல்லி மற்றும் கரப்பு. இவற்றை துரத்த  நிறைய வழிகள் இருக்கு அதில் சிலது இங்கே நான் சொல்கிறேன் , முயன்று பாருங்கள் 1.   Cockroach & Lizard Repellent கடந்த பல வருடங்களாக நான் உபயோகிப்பது இது. தேவையானவை : 100 கிராம் போரிக் பவுடர்  (Boric Powder) நாம காரம்போர்ட் விளையாட உபயோகிப்போமே அதுவே தான் 2 டேபிள் ஸ்பூன் கோதுமை மாவு 2 டேபிள் ஸ்பூன் சர்க்கரை செய்முறை: இதை செய்வதற்கு முன் கைகளைல் கிளவுஸ் போட்டுக்கொள்வது சால சிறந்தது ஏன் என்றால் ...

தொடரும் மொழிப்போர்...

Posted: 05 Jul 2013 06:08 AM PDT

[ ஓரினம் தனது அடையாளத்தை தக்க வைத்துக் கொள்வதற்கு பல வழிகளிலும் போராடத்தான் வேண்டியிருக்கிறது. நாடு, எல்லை என தனக்கான தன்னாட்சி உரிமையைப் பெறுவதற்கும், அதனை தொடர்ச்சியாகத் தக்க வைப்பதற்குமான கலகங்களும், சச்சரவுகளும் உலகெங்கும் நடைபெற்ற வண்ணமிருக்கின்றன. இதில், அவ்வின மொழியின் இருப்பும், முதன்மை பெறுகிறது. "ஒரு இனத்தை அழிக்க வேண்டுமானால், அது பேசுகின்ற மொழியை முதலில் அழித்துவிடு" எனும் வல்லாதிக்க சித்தாந்தத்தை எதிர்கொண்ட மொழிகளுள், தனிச்சிறப்பிற்குரிய இடத்தைப் பெற்றுத் திகழ்கிறது தமிழ். மூவாயிரம் ...

உங்கள் போனுக்கு இலவசமாக ரீசார்ஜ் பண்ணலாம் வாங்க...!

Posted: 05 Jul 2013 06:07 AM PDT

இலவச ரீசார்ஜ் எதற்காக எப்படி வழங்கப்படுகிறது என்பதனை கீழேயுள்ள வீடியோவை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

ஞாபக மறதியைத் (அல்சைமர் நோய்) தடுக்கும் சிறந்த 12 உணவுகள்

Posted: 05 Jul 2013 05:42 AM PDT

நல்ல ஆரோக்கியமான உணவுகளை உண்பதன் மூலம் உடலில் பல நோய்களின் அபாயத்தில் இருந்து விடுபடலாம். அதிலும் நீரிழிவு, இரத்த அழுத்தம், இதய நோய்கள் மற்றும் அல்சைமர் நோய் எனப்படும் ஞாபக மறதி நோய் போன்றவை ஏற்படும் அபாயத்தைக் குறைத்துக் கொள்ளலாம். அண்மையில் உணவுப்பழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறைகளின் மூலம் அல்சைமர் நோயைத் தடுக்க முடியும் என்பதற்கான சில சான்றுகள் உள்ளதாக தேசிய உடல்நல ஆராய்ச்சி மையம் (The National Institutes of Health) தெரிவித்துள்ளது. தற்போது அல்சைமர் நோயானது அனைவருக்கும் தெரிந்த மிகக் கொடிய ...

என்னை என் மண்ணில் புதைத்தாய் பகைவனே! என் மண்ணை எங்கே புதைப்பாய்?

Posted: 05 Jul 2013 03:47 AM PDT

காசி ஆனந்தன் கவிதைகள் மாவீரன்.. இது உயிருக்கு வந்த சாவு அல்ல சாவுக்கு வந்த உயிர்; மண் என்னை என் மண்ணில் புதைத்தாய் பகைவனே! என் மண்ணை எங்கே புதைப்பாய்? பாடம்.. புரட்சியாவது வெங்காயமாவது என்கிறாய் தெரிந்து பேசு காயப்படுத்தியவனின் கண்ணீரை வாங்கும் வெஙகாயம். வீரம்.. உன் கனவில் பாம்பு துரத்துகிறது நீ ஓடுகிறாய் குறவன் அவன் துரத்துகிறான் பாம்பு ஓடுகிறது வீரம் தொழிலாளிக்கு . நிழல்.. எதிரிகளால் அழிக்கப்பட்டன எங்கள் காடுகள் நிமிர்ந்தோம் இன்று-போராளிகளின் நிழலில் மரங்கள் போர்.. ஊரில் ...

மொக்க ஜோக்ஸ்

Posted: 05 Jul 2013 03:23 AM PDT

நண்பர்கள் எல்லாம் தண்ணி அடிச்சிட்டு மொக்க ஜோக் அடிக்கரங்க மச்சான் இன்ன மேலுக்கும் நாம்ப எல்லாரு குடிக்க கூடாது மச்சா சத்தியம் பன்னு மச்சா ஓக்கே மச்சா இன்னுமேலுக்கும் நாம எல்லாம் பச்ச தண்ணி கூட குடிக்க கூடாது மச்சா/ (ராமு) வேர்வை சிந்த உழைக்கிறோம் ஆனா ரத்தம் சிந்த தூங்க வேண்டி இருக்கு ஏன? ஒரே கொசுக்கடியா இருக்குப்பா/ (அரவப்பா) தூங்கும் போது ஏன் தலகாணிக்கு கீழே ஸ்கேல் வச்சிருக்க? ஏனா அளவோடு தூங்கிடத்தான் (மஞ்சுரி) சார் 12 B பஸ் எப்பவரும் 10 /12 க்கு வரும் ...

முகநூலில் ரசித்தவை-2

Posted: 05 Jul 2013 03:07 AM PDT



சரியாக தமிழ் உச்சரிப்பது பற்றிய படம் ..

தேனின் உதவியுடன் புதிய பேசியல்

Posted: 05 Jul 2013 03:03 AM PDT

வேலைக்கு செல்லும் பெண்கள் பார்லர் போக நேரம் இல்லை என்றால் தேனின் உதவியுடன் எப்படி பேசியல் செய்து கொள்ளுவது எப்படி என்று கீழே பாருங்கள் . டோனர் வெள்ளரிக்காய் ஜூஸ் 2 டீஸ்பூன் தேன் 1 டீஸ்பூன் இரண்டையும் நன் றாக மிக்ஸ் செய்து முகத்தில் தடவி 15 நிமிடம் ஊறவைத்து கழுவவும். இப் படி வாரம் இரண்டு முறை செய்து வந் தால் முகத்தில் இருக்கும் போர்ஸ் எல் லாம் போய் முகம் நல்ல மெதுவாக இருக்கும் . ஸ்கிரப் ஒட்ஸ்2 டீஸ்பூன் தேன் 2 டீஸ்பூன் பாதாம் பவுடர் 1 டிஸ்பூன் தயிர் 2 டிஸ்பூன் ஆகிய நான்கையும் நன்றாக ...

சில வீட்டு குறிப்புகள்

Posted: 05 Jul 2013 03:03 AM PDT

* உப்பு கலந்த நீரை சமையலறையில் சுவர்களோரம் தெளித்தால் எறும்புகள் வராதிருக்கும். * வாழைப்பழங்கள், ஆப்பிள்கள் போன்ற பழவகைகளை ஃபுரூட்சாலட்டிற்கு வெட்டி வைக்கும்போது அந்தத் துண்டுகளை எலுமிச்சம் பழச்சாற்றில் புரட்டி எடுத்து வைத்தால் நிறம் மாறாது. * பல்லிகள் வருகை அதிகமிருந்தால் ஆங்காங்கே மயில் இறகை வைப்பது அவற்றின் வருகையை நிறைய குறைத்து விடும். சுவற்றின்மீது கூட அலங்காரமாக ஒட்டி வைப்பது நல்ல பலனைத் தரும். * உருளை, வெங்காயச் சூப்கள் செய்யும்போது சிறிதளவு சீஸ் சேர்த்தால் சூப் சுவையுடன் இருக்கும். * ...

ஒரு பேய்ப் படத்தை...............

Posted: 05 Jul 2013 02:56 AM PDT

ஒரு கதை புத்தகத்கில் படித்தது..... ஒரு அப்பாவும் மகனும் நடு இரவில், ஹோம் தியேட்டரில் சரவுண்ட் சவுண்ட் - சிஸ்டத்தில் படம் பார்ப்பது குறித்து அந்த தாய் சொல்லும் கவிதை இது ரசித்தேன்..... பகிர்கிறேன் "ஒரு பேய்ப் படத்தை ஒரு பேயே தன் சேயுடன் பார்க்கிறதே... அடடா... ஆச்சர்யக்குறி!'

தேன் - தினை மாவு லட்டு

Posted: 05 Jul 2013 02:50 AM PDT

என்னென்ன தேவை? தினை, ரவை - தலா 100 கிராம். நெய் - 100 கிராம், சர்க்கரை - 200 கிராம் (பொடித்தது), பாதாம் பருப்பு அல்லது முந்திரி-தேவைக்கு ஏற்ப, ஏலக் காய் தூள்- சிறிது, தேன் - 100 கிராம். எப்படிச் செய்வது? காதி கடைகளில் தினை அரிசி என்று கிடைக்கும் (உடைத்த ரவை மாதிரி இருக்கும்). தினையை சுத்தம் செய்து வெறும் வாணலியில் போட்டு வாசனை வரும் வரை வறுக்கவும். ரவையையும் வறுக்கவும். பின் ஆற வைத்து ரவை, தினை, ஏலக்காய் சேர்த்து நைசாக அரைக்கவும். பின் சர்க்கரை யையும் சேர்த்து அரைக்கவும். ...

நாலாயிரம் கோடியில் ஒரு சொகுசு கப்பல்!

Posted: 05 Jul 2013 02:49 AM PDT

ஜெர்மன் கப்பல் கட்டும் நிறுவனமான லழ்சன் யோட்டஸ், "அசம்' என்ற மிகப் பெரிய ஆடம்பர கப்பல் ஒன்றை, உருவாக்கி உள்ளது. அரபு மொழியில், "அசம்' என்றால், உறுதி என்று பொருள். இதன் தயாரிப்புக்கு, நான்கு ஆண்டுகள் தேவைப்பட்டுள்ளன. இதில், ஒரு ஆண்டு வடிவமைப்புக்கு மட்டுமே தேவைப்பட்டது. 590 அடி நீளமும், 12 டபுள் டக்கர் பஸ்களின் உயரமும் உள்ள, இக்கப்பலை தயாரிக்க நாலாயிரம் கோடி ரூபாய் செலவாகியுள்ளது. இதன் வேகம், 34.5 நாட்டிக்கல் மைல். அதாவது, 55 கி.மீ., உலக சுற்றுலா பயணிகளை கவருவதற்கான அனைத்து அம்சங்களும், "அசம்' ...

பூஜையறை டிப்ஸ் : ட்வென்ட்டி 20

Posted: 05 Jul 2013 02:29 AM PDT

பூத்தொடுக்க பயன்படுத்தும் நூல், நார் போன்றவற்றை காலி சோப்பு உறை, காலி ஊதுவத்தி அட்டைப் பெட்டிகளில் வைத்தால் வாசனை இல்லாத பூக்களை தொடுத்தாலும் நாரோடு சேர்ந்து பூவும் மணக்கும். ரோஜா, சாமந்தி பூக்களை வாங்கும் போது சில பூக்கள் காம்பில்லாமல் இருக்கலாம். எரிந்த ஊதுவத்தி குச்சியை அதன் நடுவில் செருகி படத்திற்கு வைக்கலாம். பெரிய அகல் விளக்குகள் நான்கைந்தை வாங்கி வைத்தால் மெழுகுவர்த்தி ஏற்றி வைக்க, தசாங்கம், சாம்பிராணிக் கூம்பு ஏற்ற, கையை சுட்டுக் கொள்ளாமல் கற்பூர ஆரத்தி காண்பிக்க என விதவிதமாய் ...

தமிழர்கள் 12 வகை உணவுப் பழக்கம்.

Posted: 05 Jul 2013 02:23 AM PDT

உணவு விஷயத்தில் தமிழர்களின் ரசனையே தனி. பண்டைக் காலத்திலிருந்தே நம்மிடம் 12 வகையான உனவுப் பழக்கங்கள் இருந்திருக்கின்றன என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இதில் நீங்கள் எந்த மாதிரி உணவுப் பழக்கம் உள்ளவர் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். * 1 . அருந்துதல் -- மிகக் கொஞ்சமாக சாப்பிடுவது. * 2 . உண்ணல் -- பசி தீர சாப்பிடுவது. * 3 . உறிஞ்சுதல் -- நீர் கலந்த உணவை ஈர்த்து உண்ணுதல். * 4 . குடித்தல் -- நீரான உணவை பசி நீங்க உறிஞ்சி உட்கொள்ளுதல். * 5 . தின்றல் -- பண்டங்களை மெதுவாக கடித்துச் சாப்பிடுதல். * ...

அப்படியே ஷாக் ஆயிட்டேன் ..!

Posted: 05 Jul 2013 02:23 AM PDT

மணமாகாத ஆண்களுக்கு ஒரு விசேட அறிவிப்பு...உங்கள் எதிர்கால மனைவியின் பெயரை ஓர் புராதன எண் சோதிட முறையின் மூலம் அறியுங்கள்...இதோ...(மணமான ஆண்கள் மனைவியின் பெயரையும் கண்டுபிடிக்கலாம். மணமான பெண்கள் தங்கள் பெயர் தான் தங்கள் கணவனின் பெயருக்கு கிடைக்கிறது எனவும் பரீட்சித்துக் கொள்ளலாம்.)முதலில் இந்த அட்டவணையை அவதானிக்க... தொகுதி 1 A-20 B-30 C-42 D-64 E-74 F-54 G-22 H-32 I-44 J-56 K-60 L-34 M-24 N-46 O-58 P-68 Q-36 R-48 S-26 T-62 U-50 V-70 W-66 X-38 Y-28 Z-98 மேற்படி ...

ஜாமூன் பாஸந்தி

Posted: 05 Jul 2013 02:21 AM PDT

என்னென்ன தேவை? (பாஸந்தி செய்ய) பால் -2 லிட்டர், சர்க்கரை - 1 கப், (ஜாமூன் செய்ய) கோவா - 1 கப், மைதா - 2 டீஸ்பூன், குங்குமப்பூ - சிறிது, சர்க்கரை தேவைக்கேற்ப, நெய் அல்லது எண்ணெய் - பொரிப்பதற்கு. எப்படிச் செய்வது? கடைகளில் விற்கும் சர்க்கரை இல்லாத கோவாவுடன், மைதா சேர்த்து அழுத்திப் பிசையாமல் மெதுவாக (விரல் நுனியில்) பிசைந்து, சிறு சிறு உ ருண்டைகளாக உருட்டி எண்ணெயில் மிதமான தீயில் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும். ஒன்றரை கப் சர்க்கரையை 1 கப் தண்ணீரில் கொதிக்க ...

அவல் மிளகு புட்டு

Posted: 05 Jul 2013 01:46 AM PDT

என்னென்ன தேவை? மிளகு - 10 அல்லது 15, அவல் - 100 கிராம், கறிவேப்பிலை - ஒரு சிறு கொத்து, சீரகம் - 1 டீஸ்பூன், வெள்ளை முழு உளுந்து - 2 டீஸ்பூன், கொத் தமல்லி - சிறிதளவு, கடுகு- சிறிது, உப்பு, எண்ணெய்- தேவைக்கு. எப்படிச் செய்வது? மிளகு, கறிவேப்பிலை, சீரகம், உளுந்து ஆகியவற்றைத் தனித்தனியாக வறுத்து கரகரப்பாக அரைத்து வைத்துக் கொள்ளவும். அவலை அலசி உடனே தண்ணீரை வடித்து வைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, கடுகு, உளுந்து தாளித்து அவல், அரைத்த பவுடர், தேவையான ...

ரமலான் நோன்பு கஞ்சி: 4,000 மெட்ரிக் டன் அரிசி!

Posted: 05 Jul 2013 01:33 AM PDT

ரமலான் நோன்பு கஞ்சி: 4,000 மெட்ரிக் டன் அரிசி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவு ! புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளி வாசல்களுக்கு மொத்த அனுமதி மூலம் 4,000 மெட்ரிக் டன்கள் அரிசி வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கடந்த 2009&ம் ஆண்டு முதல் புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க மொத்த அனுமதி வழங்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டுகளை போலவே இந்த ஆண்டும் அரிசி வழங்க வேண்டும் என்ற இஸ்லாமிய மக்கள் கோரிக்கையை ...

ராஜபக்சேயின் தம்பி பசில் ராஜபக்சே இன்று டில்லி வந்தார்.

Posted: 05 Jul 2013 01:29 AM PDT

இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் அதிகார பரவல் ( 13 ஏ சட்டத்திருத்தம் ) , இருநாட்டு உறவுகள் மற்றும் இலங்கை மேம்பாட்டுக்கு உதவி கோரல்உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேச்சு நடத்த இலங்கை அதிபர் ராஜபக்சேயின் தம்பி பசில் ராஜபக்சே இன்று டில்லி வந்தார். இவர் தமிழர்களின் கலாச்சாரம் மற்றும் அவர்களின் அரசியல் பங்கு உள்ளிட்ட விவகாரத்தில் முட்டுக்கட்டை போடுவதற்கு இந்திய அரசை சமாதானம் செய்யும் நோக்கில் இவரது பயணம் வகுக்கப்பட்டுள்ளதாக இலங்கை தமிழர் அமைப்புகள் தெரிவித்துள்ளன. அதே நேரத்தில் இந்திய அரசு இந்த ...

நாட்களில் எல்லா நாட்களும் நல்ல நாட்களே!

Posted: 05 Jul 2013 12:50 AM PDT

இறைவனின் தொண்டர்களை நாளும், கோளும் என்ன செய்துவிடும்? அவைகளால் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் நாமோ நாளையும் கோளையும் கண்டு நடுநடுங்குகிறோம். நாளும் நட்சத்திரமும் நம்மைக் கோழைகளாக்க அனுமதிக்கிறோம். நட்சத்திரங்களிடமும், கிரக நிழல்களிடம் பிச்சைக் கேட்கும் கேவல நிலையில் இருக்கிறோம். ஒரு கணக்குப் போட்டுக் காண்பித்தால் இது நன்றாக விளங்கும் என்று நினைக்கிறேன். சந்திரனை வைத்துக் கணக்கிடும் மாதங்களுக்கு, மாதத்திற்கு 28 நாட்கள், இந்த 28 நாட்களில் 14 நாட்கள் நல்ல நாட்கள் இல்லை. இந்தப் பதினான்கு நாட்களிலும் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™