மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- மேல்சபை தேர்தலில் வெற்றி பெற்ற 4 அ.தி.மு.க. எம்.பி.க்கள்– டி.ராஜா பதவி ஏற்றனர்
- காங்கிரஸ் கட்சிக்கு பிச்சைக்காரர் கேள்வி: 5 ரூபாய்க்கு எப்படி சாப்பிட முடியும்?
- பீகாரில் மதிய உணவு திட்டம் புறக்கணிப்பு: 1.5 கோடி பள்ளி குழந்தைகள் பட்டினி
- ஐதராபாத்தில் தாயின் மூட நம்பிக்கைக்கு 6 வயது சிறுமி பலி
- பீகாரில் 2 நாட்களில் 3 பெண்கள் கற்பழிப்பு
- உத்தரபிரதேசம்: 1-ம் வகுப்பு மாணவர்களை பூட்டிவிட்டு திறந்துவிட மறந்த ஆசிரியர்
- முன்னாள் மத்திய மந்திரி அருண் நேரு மரணம்
- பிரதமர் மன்மோகன்சிங் உடல் நலக்குறைவு: மத்திய மந்திரிசபை கூட்டம் ஒத்திவைப்பு
- வாஜ்பாய் கேட்டால் பாரத ரத்னா விருதை திருப்பித் தர தயார்: அமர்த்தியா சென்
- பாட்லா ஹவுஸ் என்கவுண்டர்: இன்ஸ்பெக்டரை கொன்ற ஷாஜத்துக்கு 29-ம் தேதி தண்டனை
- ஆசிரியர்கள் பணி கற்றுக் கொடுப்பதுதான்; சமையல் வேலையை கண்காணிப்பது அல்ல - நீதிமன்றம் கருத்து
- டெல்லியில் 5 ரூபாய்க்கும், மும்பையில் 12 ரூபாய்க்கும் சாப்பாடு கிடைக்கும்: காங்கிரஸ் தலைவர்கள் கருத்து
- ரெயில் மோதி கேரளா வாலிபர்கள் 3 பேர் பலி
- முல்லைப் பெரியாறில் தேவைப்பட்டால் புதிய அணை கட்டுவோம்: தமிழக அரசு வாதம்
- 2ஜி ஊழல் வழக்கில் நாளை நேரில் ஆஜராவதில் இருந்து அனில் அம்பானிக்கு விலக்கு
- மோடியை பிரதமராக எதிர்ப்பு தெரிவித்த அமர்தியாசென் மீது பா.ஜனதா எம்.பி. பாய்ச்சல்
- உ.பி.யில் கற்பழிப்பு குற்றவாளிகளை கோர்ட் வளாகத்தில் அடித்து உதைத்த வழக்கறிஞர்கள்
- கேரள வாலிபருக்கு அரியவகை ரத்தம் வழங்கிய மும்பை
- மேற்கு வங்காளத்தில் கற்பழிக்கப்பட்ட பெண் தூக்கில் தொங்கினாள்
- டெல்லி மாணவி கற்பழிப்பு: சிறுவன் வழக்கில் 5–ந்தேதி தீர்ப்பு
| மேல்சபை தேர்தலில் வெற்றி பெற்ற 4 அ.தி.மு.க. எம்.பி.க்கள்– டி.ராஜா பதவி ஏற்றனர் Posted: 25 Jul 2013 10:55 PM PDT தமிழ்நாட்டில் இருந்து பாராளுமன்ற மேல் சபைக்கு 6 எம்.பி.க்களை தேர்ந்து எடுக்க கடந்த மாதம் தேர்தல் நடந்தது. அதில் அ.தி.மு.க.வை சேர்ந்த டாக்டர் மைத்ரேயன், கே.ஆர்.அர்ஜூனன், ஆர்.லட்சுமணன், டி.ரத்னவேல், இந்திய கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த டி.ராஜா, தி.மு.க.வை சேர்ந்த கனிமொழி ஆகிய 6 பேரும் வெற்றி பெற்றனர். புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்ற விழா இன்று (வெள்ளிக்கிழமை) பாராளுமன்ற வளாகத்தில் உள்ள துணை ஜனாதிபதி அலுவலகத்தில் நடந்தது. அ.தி.மு.க. எம்.பி.க்கள் மைத்ரேயன், அர்ஜூணன், லட்சுமணன், ரத்தினவேல் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு எம்.பி. டி.ராஜா ஆகிய 5 பேரும் |
| காங்கிரஸ் கட்சிக்கு பிச்சைக்காரர் கேள்வி: 5 ரூபாய்க்கு எப்படி சாப்பிட முடியும்? Posted: 25 Jul 2013 10:46 PM PDT வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் தொடர்பான புதிய புள்ளி விவரத்தை சமீபத்தில் திட்டக்கமிஷன் வெளியிட்டது. அதில் இந்தியாவில் ஏழைகளின் எண்ணிக்கை 21.9 சதவீதமாக குறைந்து விட்டதாக கூறப்பட்டுள்ளது. நகர்ப்புறங்களில் வசிப்பவர்களில் தினமும் ரூ.33 செலவு செய்பவர்களும், கிராமப்பகுதிகளில் தினமும் ரூ.28 செலவு செய்பவர்களும் ஏழைகள் அல்ல என்றும் திட்ட கமிஷன் கூறியுள்ளது. |
| பீகாரில் மதிய உணவு திட்டம் புறக்கணிப்பு: 1.5 கோடி பள்ளி குழந்தைகள் பட்டினி Posted: 25 Jul 2013 10:36 PM PDT பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் சமீபத்தில் மதிய உணவு சாப்பிட்ட பள்ளி குழந்தைகளில் 23 பேர் உயிரிழந்தனர். மதிய உணவில் விஷம் கலக்கப்பட்டதே மாணவர்கள் உயிரிழப்புக்கு காரணம் என்று தெரியவந்தது. இந்த நிலையில் பீகார் மாநில தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள், மதிய உணவு திட்டப் பணிகளை கண்காணிக்கும் பணியைக் கூடுதலாக மேற்கொள்ள முடியாது என்று போர்க்கொடி தூக்கியுள்ளனர். அந்த பணிக்கு தனியாக ஆட்களை நியமிக்க கோரி நேற்று பீகார் மாநிலம் முழுவதும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் மதிய உணவு திட்டப் பணியை புறக்கணித்தனர். சுமார் 3 லட்சம் ஆசிரியர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். இதனால் சுமார் 70,200 பள்ளிகளில் நேற்று மதிய உணவு சமைக்கப்படவில்லை. |
| ஐதராபாத்தில் தாயின் மூட நம்பிக்கைக்கு 6 வயது சிறுமி பலி Posted: 25 Jul 2013 10:25 PM PDT ஐதராபாத் பஞ்சார ஹில்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் பவுசியாபேகம். கணவரை இழந்த இவருக்கு சாரா பேகம் (வயது4) என்ற மகளும் ரெகான் என்ற மகனும் உள்ளனர். மகள் சாரா பேகத்துக்கு அடிக்கடி வலிப்பு நோய் தாக்குவதுண்டு. வலிப்பு வரும் போதெல்லாம் பவுசியாபேகம் இரும்பு கம்பியால் அடிப்பது உண்டு. உடனே வலிப்பு நின்று விடும். இதுதான் சரியான சிகிச்சை என்று நம்பியிருந்தார். |
| பீகாரில் 2 நாட்களில் 3 பெண்கள் கற்பழிப்பு Posted: 25 Jul 2013 10:15 PM PDT டெல்லி, உத்தரபிரதேசம், பீகார் மாநிலங்களில் கற்பழிப்பு சம்பவங்கள் பெருகி விட்டன. பீகாரில் இந்த வாரம் 2 நாட்களில் 2 பெண்களும், ஒரு சிறுமியும் கற்பழிக்கப்பட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது. முதலாவது சம்பவம் திங்கட்கிழமை இரவு நடந்தது. அர்வால் மாவட்டம் கிண்டார் ரோடு பகுதியைச் சேர்ந்த 25 வயது பெண் கணவர் மீது புகார் கொடுப்பதற்காக கோர்ட்டுக்கு வந்து இருந்தார். |
| உத்தரபிரதேசம்: 1-ம் வகுப்பு மாணவர்களை பூட்டிவிட்டு திறந்துவிட மறந்த ஆசிரியர் Posted: 25 Jul 2013 05:20 PM PDT உத்தரபிரதேசத்தில் உள்ள கோஜ்வா பகுதியில் சரை சுர்ஜன் பிரிவில் ஒரு அரசு ஆரம்பப் பள்ளி செயல்பட்டு வருகின்றது. நேற்று அங்குள்ள ஒன்றாம் வகுப்பின் மாணவர்களான ஆயுஷ், ரதி என்ற குழந்தைகள் வகுப்பு நேரத்தில் மதிய உணவை சாப்பிட்டு இருக்கின்றனர். அதனைக் கண்ட ஆசிரியர் அவர்களைத் தண்டிக்கும் விதமாக ஒரு அறையில் வைத்துப் பூட்டியுள்ளார். |
| முன்னாள் மத்திய மந்திரி அருண் நேரு மரணம் Posted: 25 Jul 2013 02:25 PM PDT முன்னாள் மத்திய மந்திரி அருண் நேரு நேற்றிரவு 10.47 மணிக்கு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 69. ராஜீவ் காந்தியின் நெருங்கிய உறவினர் இவர். 3 முறை எம்.பி.யாகவும், ராஜீவ் காந்தி மந்திரி சபையில் உள்நாட்டு பாதுகாப்புத்துறை மந்திரியாகவும் இருந்தார். உடல் நலக்குறைவால் டெல்லியை அடுத்த குர்கான் நகரில் உள்ள ஒரு |
| பிரதமர் மன்மோகன்சிங் உடல் நலக்குறைவு: மத்திய மந்திரிசபை கூட்டம் ஒத்திவைப்பு Posted: 25 Jul 2013 02:05 PM PDT பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் நடைபெற இருந்த மந்திரி சபை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. வாரந்தோறும் வியாழக்கிழமை அன்று பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் மத்திய மந்திரி சபை கூட்டம் நடைபெறுவது வழக்கம். இதேபோல் நேற்றும் மந்திரி சபை கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. |
| வாஜ்பாய் கேட்டால் பாரத ரத்னா விருதை திருப்பித் தர தயார்: அமர்த்தியா சென் Posted: 25 Jul 2013 09:34 AM PDT இந்தியாவின் பிரதமராக மோடி வருவதை விரும்பவில்லை என்று நோபல் பரிசு பெற்ற பிரபல பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென் கடந்த சில நாட்களுக்கு முன் கருத்து தெரிவித்திருந்தார். |
| பாட்லா ஹவுஸ் என்கவுண்டர்: இன்ஸ்பெக்டரை கொன்ற ஷாஜத்துக்கு 29-ம் தேதி தண்டனை Posted: 25 Jul 2013 08:04 AM PDT டெல்லி தொடர் குண்டுவெடிப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள், பாட்லா ஹவுஸ் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. |
| ஆசிரியர்கள் பணி கற்றுக் கொடுப்பதுதான்; சமையல் வேலையை கண்காணிப்பது அல்ல - நீதிமன்றம் கருத்து Posted: 25 Jul 2013 06:18 AM PDT பீகாரில் மதிய உணவு சாப்பிட்ட பள்ளிக் குழந்தைகள் 23 பேர் இறந்ததையடுத்து நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் மதிய உணவின் தரம் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. |
| Posted: 25 Jul 2013 05:01 AM PDT நாட்டில் வறுமை விகிதம் குறைந்துவிட்டதாக திட்டக்குழு சமீபத்தில் அறிக்கை வெளியிட்டது. கிராமப்புறங்களில் 27 ரூபாய்க்கு அதிகம் செலவு செய்வர்களும், நகர்ப்புறங்களில் 32 ரூபாய்க்கும் அதிகமாக செலவு செய்பவர்களும் வறுமைக்கோட்டுக்கு கீழ் வரமாட்டார்கள் என்று திட்டக்குழு கூறியுள்ளது |
| ரெயில் மோதி கேரளா வாலிபர்கள் 3 பேர் பலி Posted: 25 Jul 2013 04:55 AM PDT பாலக்காடு மாவட்டம் வளையாறு கொய்யாமரக்காட்டில் வசித்து வந்தவர்கள் பிரதீஸ், சதீஸ், ஜெயிம்ஸ். இவர்கள் 3 பேரும் நண்பர்கள். இன்று காலை 9 மணிக்கு கஞ்சிக்கோட்டில் உள்ள பாலக்காடு–கோவை ரெயில் தண்டவாளம் அருகே 3 பேரும் நடந்து சென்றனர். அப்போது அந்த வழியாக கோவை–பாலக்காடு |
| முல்லைப் பெரியாறில் தேவைப்பட்டால் புதிய அணை கட்டுவோம்: தமிழக அரசு வாதம் Posted: 25 Jul 2013 04:17 AM PDT முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்கின் இறுதிக்கட்ட வாதம் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அப்போது கேரள பகுதியில் உள்ள முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது என்றும், உச்சநீதிமன்ற உத்தரவுப் படி தண்ணீரை தேக்கி வைக்க தமிழகத்திற்கு உரிமை உள்ளது என்றும் தமிழகம் |
| 2ஜி ஊழல் வழக்கில் நாளை நேரில் ஆஜராவதில் இருந்து அனில் அம்பானிக்கு விலக்கு Posted: 25 Jul 2013 03:11 AM PDT 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில், அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டெலிகாம் நிறுவனத்திற்கு அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதல் அலைக்கற்றை லைசென்ஸ் பெறுவதற்காக, ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தை பயன்படுத்தியதாக |
| மோடியை பிரதமராக எதிர்ப்பு தெரிவித்த அமர்தியாசென் மீது பா.ஜனதா எம்.பி. பாய்ச்சல் Posted: 25 Jul 2013 03:09 AM PDT பாரதீய ஜனதா கட்சியின் தேர்தல் பிரசாரக்குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ள குஜராத் முதல்– மந்திரி நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளராகவும் அறிவிக்கப்பட இருக்கிறார். நரேந்திர மோடியை பிரதமராக ஏற்க முடியாது என்று நோபல் பரிசு பெற்றவரும், இந்தியாவின் பாரத ரத்னா விருதை பெற்றவருமான மேற்கு வங்காளத்தை சேர்ந்த பொருளாதார மேதை அமர்தியா சென் கருத்து தெரிவித்து இருந்தார். இந்திய குடிமகன் என்ற முறையில் மோடி பிரதமர் ஆவதை விரும்பவில்லை. மோடி தங்களுக்கு பாதுகாப்பாக இருப்பார் என்ற நம்பிக்கையை சிறுபான்மையினரிடம் பெற அவர் தவறி விட்டார் என்று கூறி இருந்தார். |
| உ.பி.யில் கற்பழிப்பு குற்றவாளிகளை கோர்ட் வளாகத்தில் அடித்து உதைத்த வழக்கறிஞர்கள் Posted: 25 Jul 2013 02:31 AM PDT உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில் கடந்த சனிக்கிழமை அன்று பிளஸ் 2 மாணவியை, 4 பேர் கொண்ட ஒரு கும்பல் காரில் கடத்திச் சென்று, ஓடும் காருக்குள் அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அத்துடன் மறுநாள் அந்த பெண்ணின் வீட்டிற்குச் சென்ற அந்த நபர்கள், போலீசில் சொன்னால் கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்துள்ளனர் |
| கேரள வாலிபருக்கு அரியவகை ரத்தம் வழங்கிய மும்பை Posted: 25 Jul 2013 01:02 AM PDT வி.ஆர். ரெஞ்ஜீவ் என்ற 26 வயது வாலிபர் குடல் அறுவை சிகிச்சைக்காக கேரளாவில் உள்ள கொச்சி நகரத்தின் மெடிகல் டிரஸ்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருடைய ரத்தவகை மிகவும் அரியதான 'பாம்பே ஆர்.எச். நெகடிவ்' வகையைச் சேர்ந்தது. பணம் கொடுத்து தனியார் ரத்த சேமிப்பு வங்கிகளில் வாங்கும் அளவிற்கு அவரிடம் வசதி இல்லாத காரணத்தினால், செய்திதாள்கள் மூலமும், இணையதளம் மூலமாகவும் அவர் உதவி கேட்டிருந்தார். இந்த விளம்பரங்களை மும்பையைச் சேர்ந்த 'தின்க் பவுண்டேஷன்' அமைப்பினரான வினய் ஷெட்டி பார்க்க நேரிட்டது. அவர்கள் நோயாளிகளுக்கு ரத்தம் பெற்றுத் தரும் சேவையினை |
| மேற்கு வங்காளத்தில் கற்பழிக்கப்பட்ட பெண் தூக்கில் தொங்கினாள் Posted: 25 Jul 2013 12:40 AM PDT மேற்கு வங்காள மாநிலம் வடக்கு 24 பர்கானா மாவட்டத்தில் நைகாட்டி என்ற இடத்தில் ஒரு வீட்டில் 17 வயது இளம் பெண் சகோதரனுடன் இருந்தாள். அப்போது அதே ஊரைச் சேர்ந்த கவுதம் பஸ்வான் என்ற வாலிபர் வீட்டுக்குள் புகுந்து இளம் பெண்ணின் சகோதரனை வெளியே துரத்தி விட்டு அந்தப் பெண்ணை மானபங்கம் செய்து கற்பழித்தான். இதனால் |
| டெல்லி மாணவி கற்பழிப்பு: சிறுவன் வழக்கில் 5–ந்தேதி தீர்ப்பு Posted: 25 Jul 2013 12:30 AM PDT டெல்லியில் கடந்த ஆண்டு டிசம்பர் 16–ந்தேதி ஓடும் பஸ்சில் 5 பேர் கொண்ட கும்பலால் மருத்துவ மாணவி கற்பழிக்கப்பட்டார். கற்பழிப்புக்கு முன்பு கடுமையாக தாக்கப்பட்டதால் அவர் டிசம்பர் 29–ந்தேதி மரணம் அடைந்தார். இதில் கைதான குற்றவாளிகளில் ஒருவர் 17 வயது சிறுவன் ஆவான். சிறுவன் மீதான வழக்கில் டெல்லி சிறப்பு கோர்ட்டில் இன்று தீர்ப்பு வழங்கப்படுவதாக இருந்தது. ஆனால் |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |