Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


சிரியா கலவரத்தில் பலி 1 லட்சமாக உயர்வு: ஐ.நா.சபை கவலை

Posted: 25 Jul 2013 10:48 PM PDT

சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கு எதிராக கடந்த 2½ ஆண்டுகளுக்கும் மேலாக பொதுமக்கள் போராடி வருகின்றனர். ஆனால், அவர் பதவி விலக மறுத்து வருகிறார். இதனால் ராணுவமும், மக்களின் ஆதரவு புரட்சி படையும் தொடர்ந்து போரிட்டு வருகிறது. எனவே, தினசரி பலர் உயிழந்து வருகின்றனர். அங்கு தொடர்ந்து கலவரம் நடைபெறுவதால் சுமார் 17 லட்சம் சிரியர்கள் அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். முஸ்லீம் நாடான சிரியாவில் புனித ரமலான் மாதத்திலும் ஆங்காங்கே தொடர்ந்து கலவரங்களும், வன்முறை [...]

முன்னாள் மத்திய மந்திரி அருண் நேரு நேற்றிரவு மரணம் அடைந்தார்

Posted: 25 Jul 2013 10:07 PM PDT

முன்னாள் மத்திய மந்திரி அருண் நேரு நேற்றிரவு 10.47 மணிக்கு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 69. ராஜீவ் காந்தியின் நெருங்கிய உறவினர் இவர். 3 முறை எம்.பி.யாகவும், ராஜீவ் காந்தி மந்திரி சபையில் உள்நாட்டு பாதுகாப்புத்துறை மந்திரியாகவும் இருந்தார். உடல் நலக்குறைவால் டெல்லியை அடுத்த குர்கான் நகரில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் கடந்த 18 நாட்களுக்கு முன்னர் அனுமதிக்கப்பட்டு இருந்தார். சிகிச்சை பலன் இல்லாமல் நேற்றிரவு மரணம் அடைந்தார். அவரது இறுதிச் சடங்குகள் இன்று டெல்லியில் [...]

This posting includes an audio/video/photo media file: Download Now

இந்தியா-ஜிம்பாப்வே அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று

Posted: 25 Jul 2013 10:05 PM PDT

இந்தியா-ஜிம்பாப்வே அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது. ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி அங்கு 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த நிலையில் இந்தியா-ஜிம்பாப்வே அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி ஹராரேவில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. முதலாவது ஆட்டத்தில் இந்திய அணியின் பந்து வீச்சு மற்றும் பேட்டிங் இரண்டும் பாராட்டும்படி [...]

This posting includes an audio/video/photo media file: Download Now

அமெரிக்காவில் போலிஸ் அதிகாரிகளை சுட்டுக் கொன்ற வாலிபருக்கு மரண த‌ண்டனை

Posted: 25 Jul 2013 09:56 PM PDT

ronil

ronilஅமெரிக்காவில் நியூயார்க் பகுதியில் ஸ்டேடன் தீவில் கடந்த 2003-ம் ஆண்டு 2 போலீஸ் அதிகாரிகளை சுட்டுக் கொன்றதாக ரோனில் வில்சன்(31) என்ற வாலிபர் பிடிபட்டார். இவர் மீது தொடரப்பட்ட வழக்கை புரூக்கிலின் கோர்ட்டு விசாரித்து அவருக்கு மரண தண்டனை விதித்தது. பின்னர் அதை ரத்து செய்து அப்பீல் கோர்ட்டு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து நியூயார்க் மாநில கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது. இதை நீதிபதி விசாரித்து வில்சனுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். நியூயார்க் கோர்ட்டு கடைசியாக கடந்த 1954-ம் ஆண்டில் மரண தண்டனை விதித்தது. தற்போது 60 ஆண்டுக்கு பிறகு மீண்டும் மரண தண்டனை விதித்திருக்கிறது. எனவே தற்போது வில்சன் 60-வது மரண தண்டனை கைதியாக இருக்கிறார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

பிரதமர் மன்மோகன்சிங்கின் உடல் நலக்குறைவினால் மத்திய மந்திரிசபை கூட்டம் ஒத்திவைப்பு

Posted: 25 Jul 2013 09:51 PM PDT

பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் நடைபெற இருந்த மந்திரி சபை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. வாரந்தோறும் வியாழக்கிழமை அன்று பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் மத்திய மந்திரி சபை கூட்டம் நடைபெறுவது வழக்கம். இதேபோல் நேற்றும் மந்திரி சபை கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய மசோதாக்கள் பற்றி விவாதித்து முடிவு எடுக்கப்பட இருந்தது. ஊழலை அம்பலப்படுத்துவோருக்கு பாதுகாப்பு அளிக்கும் மசோதாவில் திருத்தங்கள் கொண்டு வருவது பற்றி விவாதிக்க திட்டமிடப்பட்டிருந்தது. இந்த மசோதா கடந்த [...]

This posting includes an audio/video/photo media file: Download Now

இன்சாட் 3டி செயற்கைக்கோள் இன்று அதிகாலை வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது

Posted: 25 Jul 2013 09:45 PM PDT

INSAT3D295x200_i3

INSAT3D295x200_i3நவீன தொழில்நுட்பத்தின் மூலமாக வானிலையை துல்லியமாக அறிந்து கொள்வதற்காக இஸ்ரோ அனுப்பிய இன்சாட் 3டி என்ற செயற்கைக் கோள் இன்று அதிகாலை  வெற்றிகரகமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, பருவநிலை மாறுபாடு, தகவல் தொழில்நுட்பம், வானியல் குறித்து ஆய்வு செய்வதற்காக பல்வேறு செயற்கைக்கோள்களை தொடர்ந்து விண்ணில் செலுத்தி வருகிறது. அந்த வரிசையில் இன்சாட்- 3 டி என்ற ‌நவீன செயற்கைக் கோளானது அதிகாலை 1. 23 மணிக்கு பிரான்ஸ் நாட்டின் பிரன்ச் கயானாவில் இருந்து பிரான்ஸ் ராக்கெட்டான ஏரியன் -5 மூலமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்திய நேரப்படி அதிகாலை 1.23 க்கு விண்ணில் ஏவப்பட்ட இந்த ராக்கெட் 37 நிமிடத்தில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டியது, இதனையடுத்து, இந்த திட்டம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஏறத்தாழ 2 ஆயிரத்து 60 கிலோ எடையுள்ள இந்‌த செயற்கைக்கோளில் மிக சக்தி வாய்ந்த டிரான்ஸ்பாண்டர்களும், கேமிராக்களும், இணைக்கப்பட்டுள்ளன. இவை, பூமியிலிருந்து சுமார் 36 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் இருந்து கொண்டு 26 நிமிடங்களுக்கு ஒரு முறை இந்திய பெருங்கடல், அரபிக் கடல், வங்காள விரிகுடா மற்றும் இந்திய நிலப்பரப்பு ஆகிய பகுதிகளில் நிலவும் வானிலையை துல்லியமாக அளவிட்டு தகவல்களை வழங்கும். வானிலை ஆய்வுக்காக பத்தாண்டுகளுக்கு முன்பு விண்ணில் செலுத்தப்பட்ட கல்பனா செயற்கைக்கோளுக்கு மாற்றாக இன்சாட் 3 டி இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

வன்னியை ஆண்ட கடைசி மன்னனான பண்டாரவன்னியனின் நினைவிடத்தில் முஸ்லிம் குடியேற்றம் செய்ய அரசு நடவடிக்கை

Posted: 25 Jul 2013 09:32 PM PDT

pa

paவன்னியை ஆண்ட கடைசி மன்னனான பண்டாரவன்னியனின் நினைவிடமாக ஒதுக்கப்பட்டிருந்த, முல்லைத்தீவு கற்பூரப் புல்வெளியில் 10 ஏக்கர் காணியில் முஸ்லிம் மக்களை குடியேற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. கடந்த சில நாள்களாகக் குறித்த பகுதியில் "பைக்கோ" இயந்திரங்களைக் கொண்டு பெரும் மரங்கள் வேரோடு சரிக்கப்பட்டுத் துப்புரவுப் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

குமுழமுனை தண்ணீரூற்று வீதியில் 4 ஆம் கட்டைப் பகுதியில் கற்பூரப் புல்வெளி என்ற இடத்திலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. பண்டார வன்னியன், வெள்ளையர்களுடன் போரிட்டு வெற்றி கொண்ட இடமாகக் கற்பூரப் புல்வெளி பிரதேசம் காணப்படுகின்றனது. இந்த 10 ஏக்கர் காணி யாருக்கும் வழங்கப்படாமல் அரசுடைமையாக இருந்தது.

இந்தக் காணிக்குப் பின்னால், தமிழ் மக்களுக்கு 1973 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட "பெமிற்' காணிகளையும் முஸ்லிம் மக்களைக் குடியேற்றுவதற்காக அமைச்சர் ஒருவரின் ஆதரவுடன் கையகப்படுத்தும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாகத் தெரியவருகிறது.

தற்போது வீதியின் அருகிலுள்ள 10 ஏக்கர் காணியையும் கைப்பற்றி அங்கு முஸ்லிம் மக்களை குடியேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காகக் குறித்த காணியிலுள்ள பயன்தருமரங்கள் அனைத்தும் "பைக்கோ' இயந்திரத்தின் உதவியுடன் அழிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஜப்பானின் கட்டுப்பாட்டிலுள்ள சர்ச்சைக்குரிய தீவுகளுக்கு அருகே சீனக்கப்பல்கள்

Posted: 25 Jul 2013 09:16 PM PDT

sh

shதனது  தீவுகளுக்கருகில், சீன ராணுவம் மற்றும் கடற்படையின் நடவடிக்கைகள் குறித்தும், தனது வான் எல்லைக்குள் ஒரு சீன போர் விமானம் அத்துமீறி நுழைந்தது குறித்தும் ஜப்பான் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளது.

புதன்கிழமை கிழக்கு சீனக் கடலில் ஜப்பானின் ஓகினாவா தீவுக்கும், அதன் அருகிலுள்ள தீவுக்கும் இடையே, சர்ச்சைக்குரிய பகுதிக்கு மிக நெருக்கத்தில் சீன விமானம் ஒன்று பறந்து சென்றதையடுத்து, அதைக் கண்காணிக்க ஜப்பான் தனது போர் விமானங்களை அனுப்பியது.

அதே நேரத்தில், சீனா தான் உரிமை கோரும் பகுதிகளில் தன் ஆதிக்கத்தை நிலைநாட்டும் நோக்கத்துடன், சர்ச்சைக்குரிய தீவுகளுக்கு அருகில் முதன்முறையாக தனது நான்கு கடலோரக் காவல் படைக் கப்பல்களை அனுப்பியிருந்ததும் ஜப்பானின் பார்வைக்கு வந்தது.

ஜப்பானின் பிரதமர் ஷின்úஸô அபே இதுபற்றிக் கூறும்போது, ""இந்த அத்துமீறல் இதுவரை பார்த்திராத ஒன்று. நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம்" என்று தெரிவித்தார்.

கடலில் சீனாவின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதில் ஒருங்கிணைந்து செயலாற்றுவது பற்றி மலேசியா, சிங்கப்பூர், பிலிப்பின்ஸ் நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அந்நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள புறப்படும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கிழக்கு சீனக் கடலின் சில பகுதிளில் உரிமை கோரி, ஜப்பானுடன் மட்டுமின்றி, பிலிப்பின்ஸ், வியட்நாம் ஆகிய நாடுகளுடனும் சீனா சச்சரவில் ஈடுபட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஆஸ்திரேலியா புறப்பட்ட வடக்கு, கிழக்கைச்சேர்ந்த 73 பேர் காலியில் தடுத்துவைப்பு

Posted: 25 Jul 2013 09:08 PM PDT

aus

ausஅவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக சென்றுக்கொண்டிருந்த போது படகு பழுதானதில் தத்தளித்துக்கொண்டிருந்த 73  பேர் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் அறிவித்துள்ளனர்.

இவர்கள், காலி துறைமுகத்திற்கு இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 7.30 மணியளவில் அழைத்துவரப்பட்டதாகவும் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கடற்படையினர் அறிவித்துள்ளனர். இலங்கையிலிருந்து 290 கடல் மைல் தொலைவில் படகொன்று தத்தளித்துக்கொண்டிருப்பதாக மிரிஸ்ஸ மீன்பிடி துறைமுகத்திற்கு கடந்த 23 ஆம் திகதி தகவல்கள் கிடைத்துள்ளன. அந்த தகவல்களின் அடிப்படையிலேயே இந்த 73 பேரும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மிரிஸ்ஸ மீன்பிடி துறைமுகத்திலிருந்து 70 பேருடன் கடந்த 17 ஆம் திகதி அவுஸ்திரேலியாவுக்கு புறப்பட்டுச்சென்ற சட்டவிரோத படகொன்றே இவ்வாறு தத்தளித்துக்கொண்டிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

'சமின் புத்தா' என்ற படகே இவ்வாறு தத்தளித்துக்கொண்டிருப்பதாகவும் அந்த படகில் வடக்கு கிழக்கைச்சேர்ந்தவர்களே இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இயந்திர கோளாறு காரணமாகவே படகு தத்தளித்துக்கொண்டிருப்பதாக ரேடார் தொடர்புபாடல் மூலமாக கண்டறியப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் இலங்கை கடற்படையினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

This posting includes an audio/video/photo media file: Download Now

2 வயது சிறுவனுக்காக மொட்டை அடித்து கொண்ட முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் எச்.டபிள்யு.புஷ்

Posted: 25 Jul 2013 09:01 PM PDT

cancer_america_boy_002

cancer_america_boy_002அமெரிக்காவில் 2 வயது சிறுவனுக்காக முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் எச்.டபிள்யு.புஷ் மொட்டை அடித்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் இரகசிய உளவு அமைப்பை சேர்ந்த அதிகாரி ஒருவரின் 2 வயது மகன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளான்.

இதற்காக அச்சிறுவன் சிகிச்சை பெற்று வருகிறான். இதன் காரணமாக அச்சிறுவனின் தலைமுடி கொட்டி வருவதால், மிகுந்த சோகத்தில் மூழ்கி இருந்தானாம்.

இவனது சோகத்தை போக்குவதற்காக, அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் எச்.டபிள்யு.புஷ் மொட்டை அடித்து கொண்டுள்ளார்.

இதற்கு காரணம் புஷ்ஷின் 4 வயது மகன் புற்றுநோயால் மரணமடைந்தது தானாம்.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™